மலையாளத்தில் மோகன்லால் – மீனா நடித்த 'திரிஷ்யம்' படத்தை நடிகர் கமலஹாசன் தமிழில் எடுக்கிறார். இதற்கு பாபநாசம் என பெயரிடப்பட்டு படப்பிடிப்பு நடந்து வருகிறது.
இதில் அவருக்கு ஜோடியாக கவுதமி நடிக்கிறார். முதல் கட்ட படப்பிடிப்பு நெல்லை மாவட்ட பகுதியில் நடந்தது. அடுத்த கட்ட படப்பிடிப்பு கேரளாவில் நடந்து வருகிறது.
சில நாட்களுக்கு முன் கேரளாவில் நடந்த சண்டைக்காட்சி படப்பிடிப்பில் கமல ஹாசன் காயம் அடைந்து ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டதாக தகவல் வெளியானது. கமலின் முகத்தில் கலாபவன் மணி தாக்கும் காட்சி படமாக்கப்பட்டபோது அவர் கமலின் முகத்தில் ஓங்கி குத்தியதில் காயம் ஏற்பட்டு ரத்தம் கொட்டியதாகவும் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டதாகவும் கூறப்பட்டது.
ஆனால் இந்த தகவலை கமல் மறுத்துள்ளார். இது பற்றி அவர் கூறும்போது, ''படப்பிடிப்பில் எனக்கு காயம் எதுவும் ஏற்படவில்லை. மூக்கில் காயம் ஏற்பட்டது போல் சித்தரிக்க சிவப்பு நிறத்தில் ரப்பர் துகள் மூக்கில் வைக்கப்பட்டது. அது கலாபவன் குத்தியதில் தவறுதலாக பட்டு ரப்பர் மூக்கு துவாரத்தில் புகுந்து விட்டது. அதை டாக்டர்கள் உதவியுடன் வெளியே எடுக்க வேண்டியதாகி விட்டது. இதற்காக ஆஸ்பத்திரிக்கு சென்றேன். சண்டை காட்சி என்பதால் என் முகத்தில் போலியான காயங்கள் ஏற்படுத்தப்பட்டன. போலி காயத்துடனேயே ஆஸ்பத்திரிக்கு சென்றதால் தான் பல வகையான செய்திகள் வந்து விட்டதாக நினைக்கிறேன் என்றார்.
எற்கனவே கமலஹாசன் சென்னை ஆஸ்பத்திரியில் உடல் பரிசோதனை செய்து கொண்டது பல வதந்திகளை கிளப்பி விட்டது. அதுபோல் இப்போது காயம் என வதந்தி கிளம்பியிருக்கிறது.
0 comments:
Post a Comment
உங்களது கமெண்ட் என்ன ?