Monday, 28 April 2014

த்ரிஷாவின் மாஸ்டர் பிளான்!

- 0 comments


சில வருடங்களுக்கு முன்புவரை தமிழ், தெலுங்கு இரண்டு மொழிகளிலும் பிஸியாக இருந்தார் த்ரிஷா. முன்னணி ஹீரோக்கள் அனைவருடனும் ஜோடி போட்ட த்ரிஷாவை அண்மைக்காலமாக எல்லா ஹீரோக்களுமே ஒதுக்க ஆரம்பித்துவிட்டனர். எனவே, கன்னடப் படங்களில் நடிக்கும் அளவுக்கு த்ரிஷாவின் மார்க்கெட் கவலைக்கிடமாகிவிட்டது. எனவே இழந்த மார்க்கெட்டை மீண்டும் பிடிக்க வேண்டும் என்பதில் தீவிரமாக இருக்கிறாரம் த்ரிஷா. அதற்காக புதிய டெக்னிக்கையும் கடைபிடிக்க ஆரம்பித்திருக்கிறாராம்.

அதாவது, இளம் ஹீரோக்களை டார்கெட் வைத்து அவர்களை நெருங்கி வருகிறார் த்ரிஷா. அந்த நெருக்கத்தைப் பயன்படுத்தி இளம் ஹீரோக்களின் படங்களில் கதாநாயகியாகி வாய்ப்பை வாங்கிவிடலாம் என்பதே த்ரிஷாவின் திட்டமாம். அதன்படி, அதர்வா, கௌதம் கார்த்திக், விஜய்சேதுபதி, சிவகார்த்திகேயன் ஆகியோரை டார்கெட் வைத்து, வாய்ப்பு கிடைக்கும்போதெல்லாம் அவர்களை வெளிப்படையாக புகழ ஆரம்பித்திருக்கிறார்.

இப்படி புகழ்வதால் என்ன லாபம்?

இருக்கிறது...இளம் ஹீரோக்களை புகழ்வதன் மூலம் அவர்களின் பார்வை தன் பக்கம் திரும்பும், அதை வைத்து அவர்களது படங்களில் கதாநாயகி வாய்ப்பை வாங்கிவிடலாம் என்பதே த்ரிஷாவின் திட்டம்.

யப்பா! என்னமா பிளான் போடுறாங்க பாருங்க!
[Continue reading...]

நயன்தாராவை புலம்ப விட்ட ஹன்சிகா!

- 0 comments


நயன்தாரா செகண்ட் இன்னிங்சில் என்ட்ரியானபோது அவர் மீது எந்த நடிகைகளுக்கும் பயம் இல்லை. இரண்டு படங்களில நடிப்பார். அதோடு காணாமல் போய் விடுவார் என்றுதான் நினைத்தார்கள். ஆனால் அவர் நடித்த ஆரம்பம், ராஜாராணி படங்கள் அடுத்தடுத்து ஹிட்டடித்ததோடு, மீண்டும் சிம்பு, ஜெயம்ரவி என இளவட்ட ஹீரோக்களின் படங்களில் அவர் கமிட்டானபோது, அடுத்த நம்பர்ஒன் நடிகையாகி விடுவாரோ என்கிற அச்சம் ஹன்சிகா, காஜல்அகர்வால் உள்ளிட்ட நடிகைளுக்கு ஏற்பட்டது.

இதில், நயன்தாராவின் வரவினால் அதிகம் பாதிக்கப்பட்டவர் ஹன்சிகாதான். அவர் நடிக்க வேண்டிய ஓரிரு படங்கள் நயன் பாக்கெட்டிற்குள் எகிறிக்குதித்தன. இதனால் விவேகத்துடன் யோசித்த ஹன்சிகா, சிம்புவின் காதலை நிராகரித்த அதே வேகத்தில் சில மேல்தட்டு ஹீரோக்களின் படங்களை அபேஸ் பண்ணிவிட்டார். தற்போது அவர் நடித்துள்ள மான்கராத்தே ஹிட்டடித்திருப்பதால் இறங்குமுகத்தில் இருந்த ஹன்சிகாவின் மார்க்கெட் மீண்டும் ஏறுமுகத்தில் செல்லத் தொடங்கியிருக்கிறது.

இந்த சூழ்நிலையில், தனது காதலரான சிம்புவை தன்னிடமிருந்து அபகரித்த நயன்தாராவுக்கு தகுந்த அட்டாக் கொடுக்க வேண்டும் என்று நினைக்கும் ஹன்சிகா, அவர் பேசிக்கொண்டிருக்கும் சில படங்களை தன் பக்கம் இழுக்கும் அதிரடி முயற்சிகளிலும் ஈடுபட்டுள்ளாராம். இதில் சில வாய்ப்புகள் ஹன்சிகா பக்கம் திரும்பவும் தயாராகிக்கொண்டிருக்கிறதாம்.

இதனால் அதிர்ச்சியடைந்துள்ள நயன்தாரா, மார்க்கெட் நன்றாக போய்க்கொண்டிருந்த நேரத்தில் தேவையில்லாமல் சிம்புவுடன் நடிக்க கமிட்டாகி, வில்லங்கத்தை விலை கொடுத்து வாங்கி விட்டேனே என்று புலம்பிக்கொண்டிருக்கிறார்.
[Continue reading...]

விஷாலை வியக்க வைத்த ஸ்ருதிஹாசன்!

- 0 comments


தமிழ், தெலுங்கு, இந்தி என பரவலாக நடித்து வருபவர் ஸ்ருதிஹாசன். ஏழாம் அறிவு, 3 படங்களுக்குப்பிறகு தெலுங்கு, இந்தி என பிஸியாகி விட்ட அவர் தற்போது ஹரி இயக்கும் பூஜை படத்தின் மூலம் மீண்டும் தமிழுக்கு வந்திருக்கிறார். முக்கோண ஆக்சன் படத்தில் ஒரு சிட்டி கேர்ளாக நடிக்கும் ஸ்ருதிஹாசனுக்கு, ஏழாம் அறிவு படத்தைப்போலவே கதையில் முக்கியத்துவம் உள்ள கேரக்டராம்.

அதன்காரணமாகவே இந்த படத்தை அவர் ஒத்துக்கொண்டதாகவும் கூறப்படுகிறது. மேலும், படப்பிடிப்பு தளத்தில் எப்போதும் சின்சியராக இருந்தாராம் ஸ்ருதி. ஓய்வு நேரங்களில் செல்போனில் கேம் ஆடிக்கொண்டிருந்தாலும், ஷாட் ரெடி என்று உதவியாளர் வந்து சொன்னதும் உடனே, கேரவனை விட்டு வெளியே வந்து கேமரா முன்பு ஆஜராகி விடுவாராம். அதோடு, எத்தனை பெரிய ஷாட்டாக இருந்தாலும் சிங்கிள் டேக்கில் ஓ.கே செய்து கொடுத்தாராம் ஸ்ருதிஹாசன். இதனால், டைரக்டர் ஹரி திட்டமிட்டபடியே விறுவிறுப்பாக படப்பிடிப்பு நடந்ததாம். அந்த வகையில், சமீபத்தில் தொடங்கப்பட்ட பூஜை படத்தின் முதல்கட்ட படப்பிடிப்பு தற்போது முடிந்து விட்டது.

இதையடுத்து, வழக்கம்போல் தனது பட கதாநாயகிகளின் திறமையை புகழ்ந்து தள்ளிக்கொண்டு திரியும் விஷால், தனது அபிமானிகளிடம், ஸ்ருதி இவ்வளவு கற்பூரமாக இருப்பார் என்று நான் நினைக்கவில்லை. ஒவ்வொரு ஷாட்டையும் டான் டான் என்று முடித்துக்கொடுக்கிறார். அவரது நடிப்பைப்பார்த்து ஒரு பக்கம் வியப்பாக இருந்தாலும், இன்னொரு பக்கம், அவரைப்போலவே நாமும் சொதப்பாமல் ஓ.கே பண்ணி கொடுக்க வேண்டுமே என்ற பயமும் மனதளவில் ஏற்பட்டது என்று கூறும் விஷால், ஸ்ருதிஹாசனின் படக்கூலி சற்று ஜாஸ்தியாக இருந்தாலும், அதற்கு அவர் ஒர்த்தபுளான ஆர்ட்டிஸ்டுதான் என்கிறார்.
[Continue reading...]

மீண்டும் பவர்ஸ்டாருடன் கூட்டணி அமைத்த சந்தானம்!

- 0 comments

லத்திகா என்ற படத்தில் நடித்திருந்த பவர்ஸ்டார் சீனிவாசனை கண்ணா லட்டு தின்ன ஆசையா படத்திற்காக தேடிச்சென்று புக் பண்ணினார் சந்தானம். அதோடு, அப்படத்தில் தனக்கு இணையான ரோலை கொடுத்து பவர்ஸ்டாரையும் ஒரு நடிகராக்கி விட்டார். விளைவு, அதன்பிறகு சந்தானத்தின் மார்க்கெட்டையே காலி பண்ணும் அளவுக்கு விஸ்வரூபமாய் வளர்ந்து நின்றார் பவர் ஸ்டார். இதனால் அதன்பிறகு அவருடன் நடித்தால் தனக்கு ஆபத்து என்று அவரை தனது படங்களில் நடிக்க வைப்பதை தவிர்த்து வந்தார் சந்தானம்.

இதற்கிடையே கோர்ட்டு, கேசு என்று அலைந்து கொண்டிருந்த பவர்ஸ்டார் இப்போது மீண்டும் படங்களில் நடித்து வருவதால், தற்போது தான் ஹீரோவாகியுள்ள வல்லவனுக்கு புல்லும் ஆயுதம் படத்தில் பவர்ஸ்டாரை காமெடியனாக நடிக்க வைத்துள்ளார். கதைப்படி தான் ஹீரோ என்பதால் அதிகமான காமெடி காட்சிகளில் நடிக்க முடியாது என்பதால், காமெடி ஏரியாவுக்குள் பவரை இறக்கி விட்டுள்ளாராம் சந்தானம்.

ஆனால், கண்ணா லட்டு தின்ன ஆசையா படத்தின் ஆடியோ விழாவுக்கு 2 லாரிகளில் ஆட்களை கொண்டு இறக்கி விட்டு அரங்கத்தை திணற வைத்து விட்ட பவர்ஸ்டாரை, இந்த படத்துக்கு புக் பண்ணும்போதே, படம் ரிலீசாகும் வரை இந்த படத்தில் நடித்திருப்பது பற்றி மூச் விடக்கூடாது என்று ஆப் பண்ணி வைத்து விட்டாராம் சந்தானம். அதனால்தான் இப்போதுவரை தான் நடித்திருக்கும் விசயத்தை வெளியில் சொல்லி பில்டப் கொடுக்க முடியாமல் பல்லை கடித்துக்கெணர்டு இருக்கிறாராம் பவர்.

மேலும், இதே படத்தில் தேவயானியின் கணவரான சோலார் ஸ்டார் இராஜகுமாரனையும் காமெடி களத்தில் இறக்கி விட்டிருக்கிறார் சந்தானம். ஆக, பவர்ஸ்டார், சோலார் ஸ்டார் என்ற இரண்டு காமெடி புயல்கள் சந்தானத்துக்கு பக்கபலமாக நடித்திருக்கிறார்களாம்.
[Continue reading...]

ரஜினியின் அடுத்தபட தலைப்பு லிங்கா...!

- 0 comments


கோச்சடையான் படத்திற்கு பிறகு, ரஜினி நடிக்கும் புதிய படத்திற்கு லிங்கா என பெயர் வைத்துள்ளனர். எந்திரன் படத்திற்கு பிறகு கே.எஸ்.ரவிக்குமார் இயக்கத்தில், ராணா என்ற படத்தில் கமிட்டானார் ரஜினி. இப்படத்தின் பூஜை நடைபெற்ற அன்றே அவருக்கு உடல்நலம் சரியில்லாமல் போனது. சிங்கப்பூர் வரை சென்று சிகிச்சை பெற்று திரும்பினார். இதனால் அப்படம் கைவிடப்பட்டது. மாறாக அவரது மகள் செளந்தர்யா இயக்கத்தில், கோச்சடையான் எனும் அனிமேஷன் படத்தில் நடித்தார். கிட்டத்தட்ட இரண்டு ஆண்டுகளுக்கு மேலாக உருவாகி வந்த இப்படம் தற்போது ரிலீஸ் தேதியை(மே 9ம் தேதி) நெருங்கிவிட்டது.

இந்நிலையில் கோச்சடையான் படத்திற்கு ரஜினி, கே.வி.ஆனந்த், கே.எஸ்.ரவிக்குமார், ஷங்கர் ஆகிய மூவரில் ஒருவரது படத்தில் நடிப்பார் என தகவல்கள் வெளியான நிலையில், கடந்த சில வாரங்களுக்கு முன் ரஜினி, கே.எஸ்.ரவிக்குமார் இயக்கத்தில் நடிப்பது உறுதிசெய்யப்பட்டது. ரஜினி ஜோடியாக அனுஷ்காவும், இந்தி நடிகை சோனாக்ஷி சின்ஹாவும் நடிக்கின்றனர். சாருலதா படத்தை இயக்கிய, பொன்குமரன் சொன்ன கதையை தான் தற்போது கே.எஸ்.ரவிக்குமார் இயக்க உள்ளார். பொன்குமரன் சொன்ன கதையை ரஜினியிடம், ரவிக்குமார் சொல்ல, ரஜினிக்கு அக்கதை மிகவும் பிடித்து போனதால் இந்தப்படத்தில் நடிக்க சம்மதித்தார்.

ஒருபக்கம் கோச்சடையான் பட ரிலீஸ் வேலைகள் மும்முரமாக நடந்து வந்தாலும், ரவிக்குமார் இயக்கும் படத்திலும், மும்முரமாக கதை விவாதத்தில் மிக ஆர்வமாய் பங்கேற்று வருகிறார் ரஜினி. இதற்கிடையே இப்படத்திற்கு லிங்கா என பெயர் வைத்துள்ளனர். இதனை கில்டு சங்கத்திலும் ரவிக்குமார் முறையாக பதிவு செய்துள்ளார். ரஜினி-ரவிக்குமார் கூட்டணியில் ஏற்கனவே வெளிவந்த படங்களை போன்று, இப்படமும் முழுக்க முழுக்க கமர்ஷியல் படமாக உருவாக இருக்கிறது. ராக்லைன் வெங்கடேஷ் இப்படத்தை பிரமாண்டமாக தயாரிக்கிறார். மே 2ம் தேதி முதல் மைசூரில், லிங்கா படத்தின் படப்பிடிப்பு ஆரம்பமாக இருக்கிறது.

லிங்கா பெயர், நடிகர் ரஜினிகாந்தின் பேரனும், தனுஷ்-ஐஸ்வர்யா தம்பதியரின் மூத்த மகனின் பெயர் என்பது குறிப்பிடத்தக்கது.
[Continue reading...]

பார்த்திபன் படத்தில் சிவகார்த்திகேயன்!

- 0 comments


வித்தகன் படத்திற்கு பிறகு படம் இயக்குவதை தள்ளி வைத்த பார்த்திபன், இப்போது கதை திரைக்கதை வசனம் இயக்கம் என்ற படம் மூலம் மீண்டும் இயக்குனர் நாற்காலியில் உட்கார்ந்திருக்கிறார். ஆனால் இந்த முறை நடிகராக களமிறங்கவில்லை. அதேசமயம், முதலில் இந்த படத்தை முற்றிலும் புதுமுகங்களை வைத்தே இயக்கப்போகிறேன் என்று சொன்னவர், இப்போது ஆர்யா,விஜயசேதுபதி, அமலாபால், டாப்சி,நஸ்ரியா என பலரை நட்புக்காக களத்தில இறக்கி விட்டிருக்கிறார்.


அதோடு, சிம்ரனை முதன்முறையாக ஒரு பாடல் பின்னணி பாட வைத்த பார்த்திபன், ஒரு பாடலுக்கு பிரபுதேவாவை நடனமாட கேட்டிருந்தார். அவரும் கண்டிப்பாக ஆடித்தருகிறேன் என்று சொன்னவர், இப்போது இந்தி படத்தில் தான் பிசியாக இருப்பதாக சொல்லி தனது இயலாமையை கூறுகிறாராம். அதனால், அந்த பாடலுக்கு யாரை நடனமாட வைக்கலாம் என்று யோசித்த பார்த்திபன், சிவகார்த்திகேயனை ஒப்பந்தம் செய்து விட்டாராம்.

சிவகார்த்திகேயனின் மார்க்கெட்டை கருதி, அவரை தனது வேலையில்லா பட்டதாரி படத்தில் ஒரு பாடலுக்கு தனுஷ் நடனமாட வைத்திருப்பது போன்று இப்போது பார்த்திபனும் அவரது வேல்யூ தெரிந்து நடனமாட வைக்கிறார். ஆக,பார்த்திபனின் கதையே இல்லாத படத்துக்கு ஒரு பெரிய கமர்சியல் கூட்டமே சேர்ந்து விட்டது. 
[Continue reading...]

பாண்டிராஜ் இயக்கும் படத்தில் ஜோதிகா ரீ-என்ட்ரி!

- 0 comments


எஸ்.ஜே.சூர்யா இயக்கத்தில் அஜீத் இரட்டை வேடங்களில் நடித்த வாலி படத்தில் அறிமுகமானவர்தான் ஜோதிகா. அதையடுத்து விஜய்யுடன் நடித்த குஷி உள்ளிட்ட சில படங்களில் தொடர் வெற்றி அவரை பிரபல நடிகையாக்கியது. அதோடு, எந்த மாதிரி வேடமாக இருந்தாலும் அதை பிரித்து மேய்ந்து விடும் அளவுக்கு திறமையான நடிகையாகவும இருந்தார் ஜோதிகா. அதன்காரணமாக, மொழி, சந்திரமுகி போன்ற படங்களில் நடித்தமைக்கு சிறந்த நடிகைக்கான அரசு விருதுகளையும் பெற்றார்.

ஆனால், நடிகர் சூர்யாவை காதலித்து கல்யாணம் செய்து கொண்ட பிறகு, எந்த படத்திலும் அவர் தலைகாட்டவில்லை. ஒரு விளம்பர படத்தில் மட்டுமே சூர்யாவுடன் இணைந்து நடித்திருந்தார். இந்த நிலையில், பசங்க பாண்டிராஜ், இது நம்ம ஆளு படத்தையடுத்து இயக்கும் ஒரு படத்தில் ஜோதிகா ரீ-என்ட்ரி ஆகிறாராம்.

பசங்க படத்தை போன்றே குழந்தைகள் பிரச்சினையை மையமாக வைத்து ஒரு படத்தை இயக்குகிறாராம் பாண்டிராஜ். அந்த படத்தில் ஒரு பிரதான ரோலில் நடிப்பதற்கு ஜோதிகாதரப்பை அணுகி கதை சொன்னாராம். அது சூர்யா குடும்பத்தினர் அனைவருக்குமே பிடித்து விட்டதாம். அதனால் மீண்டும் ஜோதிகா நடிப்பதற்கு சூர்யா குடும்பத்தினர் பச்சைக்கொடி காட்டி விட்டார்களாம்.

இந்த சேதி பரவியதையடுத்து, மேலும் சில இயக்குனர்களும் ஜோதிகாவுக்கான வெயிட்டான கதாபாத்திரங்களை தயார் செய்யத் தொடங்கி விட்டனர். ஆனால், இப்போதைக்கு இந்த ஒரு படம்தான். இப்படத்திற்கு பிறகுதான் அடுத்து நடிப்பது பற்றி முடிவெடுக்கப்படும் என்று சூர்யாதரப்பு உறுதியாக அறிவித்து விட்டனர். 
[Continue reading...]

சொந்தக்கதையை படமெடுக்கும் கவர்ச்சி நடிகை ஷகீலா!

- 0 comments


தப்பு என்ற படத்தில் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் நடிகை ஷகீலா. அதனால்தானோ என்னவோ அதையடுத்து அவர் தப்பு தப்பான கேரக்டர்களாகே செலக்ட் பண்ணி நடித்தார். லயம், மாமி, ஆஸ்டல், ராக்கிளிகள், டியர் சினேகா, பருவம் என காமக்கொடூர படங்களாக நடித்து மலையாள சினிமாவில் வீறு நடை போட்டு வந்தார் ஷகீலா. அவர் நடித்த படங்களுக்கு ரசிகர்கள் அலைமோதியதால், ஒவ்வொரு படங்களுமே சூப்பர் டூப்பர் ஹிட் அடித்து வந்தன.

அந்த அளவுக்கு மலையாள இன்டஸ்ட்ரியையே கலக்கிக்கொண்டு வந்தார் ஷகீலா. ஆனால், ஒரு கட்டத்தில் அவரது உடம்பு பூதாகரமாக பெருத்து விட்டதையடுத்து அவரது கவர்ச்சிக்கு மவுசு குறைந்து போனது. அதனால், மீண்டும் தமிழுக்கே வந்து கிளுகிளுப்பான காமெடி கேரக்டர்களுக்கு முதலிடம் கொடுத்து நடித்து வருகிறார் ஷகீலா. அந்த வகையில், சிவா மனசுல சக்தி, பாஸ் என்ற பாஸ்கரன், குரு சிஷ்யன், ஆசாமி என பல படங்களில சமீபகாலமாக அவர் நடித்து வந்தார்.

இந்த நிலையில, தற்போது ஷகீலாவுக்கும் சொந்தமாக படம் இயக்கும் ஆசை ஏற்பட்டுள்ளது. அதனால், புதுமுகங்களை வைத்து ஒரு படத்தை தனது தாய்மொழியான தெலுங்கில் இயக்குகிறாராம்.

இதுபற்றி ஷகீலா கூறுகையில், படம் இயக்க வேண்டும் என்பது எனது கனவு. அந்த வாய்ப்புக்காக நானாக முயற்சி எடுப்பதற்கு முன்பே அதுவாக அமைந்து விட்டது. இப்படத்தில் துளியும் கிளாமர் இருக்காது. ஒரு பெண்ணை மையமாக வைத்து உருவாகும் இந்த படத்தில் இந்த சமுதாயத்தில் அவள் சந்திக்கிற பிரச்னைகள், போராட்டங்களைத்தான் படமாக்குகிறேன்.

மேலும், இந்த படத்தையடுத்து, எனது சொந்த கதையையும் படமாக்கப்போகிறேன் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி என 5 மொழிகளில் அப்படம் தயாராகிறது. அந்தக் கதையில் நானே நாயகியாக நடிப்பேனா இல்லை, வேறு நடிகையை நடிக்க வைத்து விட்டு நான் இயக்குனராக மட்டுமே இருப்பேனா என்பது பற்றி இன்னும் முடிவெடுக்கவில்லை என்கிறார் ஷகீலா.
[Continue reading...]

மீண்டும் ஜோடி சேரும் பிரபு-குஷ்பூ!

- 0 comments




பிரபு-குஷ்பூ இருவரும் ஒரு காலத்தில் ராசியான ஜோடியாக வலம் வந்தவர்கள். தர்மத்தின் தலைவன், மைடியர் மார்த்தாண்டன், சின்னதம்பி, சின்ன வாத்தியார், கிழக்குக்கரை, பாண்டித்துரை, தர்மசீலன் என பல படங்களில் ஜோடியாக நடித்தனர். அந்த சமயத்தில் அவர்களுக்கிடையே காதல் இருப்பதாகவும் நீண்டகாலமாக கிசுகிசுக்கப்பட்டு வந்தது.

ஒரு கட்டத்தில பிரபல பத்திரிகைகளில் பிரபு-குஷ்பூவிற்கு ரகசிய திருமணம் நடந்து விட்டதாக செய்தி வெளியாகி, பெரும் சர்ச்சைக்குள்ளானது. அதையடுத்து, பிரபு-குஷ்பூ இருவரும் இணைந்து நடிப்பதை நிறுத்திக்கொண்டனர். பின்னர், திருமணத்திற்கு பிறகு அவ்வப்போது கேரக்டர் ரோல்களில் நடித்து வந்தபோதும், பிரபுவுடன் எந்த படத்திலும் குஷ்பூ இணைந்து நடிக்கவில்லை.இருவரும் வெவ்வேறு துருவங்களில் பயணித்துக்கொண்டிருந்தனர்.

ஆனால், அப்படி எதிரும் புதிருமாக சென்று கொண்டிருந்த பிரபு-குஷ்பூ இருவரையும் மீண்டும் இணைக்கும் முயற்சியில் தற்போது ஒரு இயக்குனர் இறங்கியிருக்கிறார். அவர் முதலில் கதையை பிரபுவிடம் சொல்லி இதில் உங்களுக்கு ஜோடியாக நடிக்க குஷ்பூவிடம் பேசப்போகிறேன் என்று சொன்னபோது, அவர்கள் நடித்தால் நானும் நடிக்கத்தயார். எனக்கு எந்த ஆட்சேபனையும் இல்லை என்று கூறிவிட்டாராம்.

அதையடுத்து இதுபற்றி குஷ்பூவிடம் பேசியபோது, கதையும், எனக்குரிய கேரக்டரும பிடித்திருக்கிறது. அதனால் நான் நடிக்கிறேன் என்று ஒத்துக்கொண்டாராம். ஆக, நீண்ட இடைவேளைக்குப்பிறகு மீண்டும் பிரபுவும், குஷ்பூவும் ஜோடி சேர்ந்து நடிக்கப்போகிறார்கள்.
[Continue reading...]

சம்பளத்தை உயர்த்திய காஜல் அகர்வால், கைவிட்டுப்போன படங்கள்!

- 0 comments


கதாநாயகி நடிகைகளில் அதிக சம்பளம் வாங்குவது காஜல் அகர்வால்தான். இவரது போட்டியாளர்களான மற்ற நடிகைகள் எல்லாம் லட்சங்களில் சம்பளம் வாங்கியபோது, காஜல்தான் முதன்முதலில் கோடிகளில் சம்பளம் வாங்கி மற்றவர்களுக்கும் கோடி ரூபாய் கனவை விதைத்தார். இத்தனைக்கும் துப்பாக்கி, ஜில்லா இரண்டு படங்கள் தவிர காஜல்அகர்வால் நடித்து எந்தப்படமும் மிகப்பெரிய வெற்றியடையவில்லை. ஆனாலும் படத்துக்குப் படம் தன் சம்பளத்தை உயர்த்திக்கொண்டேபோனார் காஜல் அகர்வால். கடைசியாக, ஒன்றரை கோடியாக இருந்த தன் சம்பளத்தை ஜில்லாவுக்குப் பிறகு இரண்டு கோடியாக உயர்த்தினார். அவரது சம்பள உயர்வை தெலுங்கில் யாரும் பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை. ஆனால் காஜல் கேட்கும் இரண்டு கோடி சம்பளத்தை தமிழில் தர யாரும் தயாராக இல்லை. நண்பேன்டா படத்துக்கு காஜல் அகர்வாலுக்கு அட்வான்ஸ் கொடுத்து கமிட் பண்ணி வைத்திருந்த உதயநிதி ஸ்டாலின், காஜலை நீக்கிவிட்டு நயன்தாராவை புக் பண்ணியதற்கும் கூட இந்த சம்பள உயர்வுதான் காரணமாம்.
[Continue reading...]

என் கேரியரில் இப்படியொரு நடிகையை பார்த்ததில்லை! லட்சுமி மேனனின் அருமை பெருமைகளை சொல்கிறார் விஷால்!!

- 0 comments



நான் சிகப்பு மனிதன் படத்தில்தான் அதுவரை கிளாமர் பக்கமே தலைவைத்து படுக்காமல் இருந்த லட்சுமிமேனனை சற்று கிளாமராக நடிக்க வைத்ததோடு, உதட்டு முத்தக்காட்சியிலும் நடிக்க வைத்து பரபரப்பு கூட்டினார் விஷால். 

ஆனால், யாராவது லட்சுமிமேனன் அந்த படத்தில் கிளாமராக நடித்திருக்கிறார் என்று சொன்னால், டென்சனாகி விடுகிறார்கள். அந்த படத்தில்தான் அவர் சிட்டி பெண்ணாக நடித்தார். அதனால் அதை கிளாமர் என்று சொல்ல முடியாது, சாதாரண பெண்களைப் போல்தான் இருந்தார் என்று சொல்லும் விஷால், என்னைப்பொறுத்தவரை லட்சுமிமேனன் சாதாரண நடிகையல்ல. ரொம்ப வித்தியாசமான நடிகை என்கிறார்.

அதாவது, இந்த படத்துக்காக தண்ணீருக்கு அடியில் நாங்கள் நடிக்க வேண்டிய காட்சியை 8 மணி நேரம் தண்ணீருக்குள் மூழ்கியபடி நடிக்க வேண்டும். நாங்கள் உள்பட கேமராமேன், டைரக்டர் என அனைவருமே உள்ளே இருந்தோம. அப்போது குளிரில் நடுங்கி விட்டார் லட்சுமிமேனன். அதுவும் முத்தக்காட்சியில் முதன்முதலாக நடிக்கிறார். இருப்பினும் அவரிடம் எந்த சலனமும் இல்லை. அந்த கேரக்டராகவே மாறி நடித்தார். அவரை தவிர வேறு எந்த நடிகைகளாக இருந்தாலும் இந்த மாதிரி தண்ணீருக்கு அடியில் முத்தக்காட்சி என்றால் ஒத்துக்கொள்ளவே மாட்டார்கள்.

அதோடு, இன்னொரு காட்சியிலும் அப்படித்தான். நான்கு நாட்களாக கொட்டும் மழையில் நனைந்து கொண்டே நடித்தார். சில சமயங்களில் அவரை அறியாமல் அவரது உடம்பு குளிரினால் நடுங்கும். அப்போது அவரிடம் ரொம்ப கஷ்டமா இருக்கா என்று கேட்டால், அது ஒன்னுமில்லை சார். பரவாயில்ல டேக் போகலாம் என்று சொல்வார். அந்த வகையில் எனது கேரியரில் இந்த அளவுக்கு நடிப்புக்காக எந்த கஷ்டங்களையும் தாங்கிக்கொள்ளக்கூடிய நடிகையை நான் பார்த்ததில்லை என்கிறார் விஷால்.
[Continue reading...]

My Blog List

Popular Posts

Popular Posts

 
Copyright © . தினசரி செய்திகள் - Posts · Comments
Theme Template by BTDesigner · Powered by Blogger