சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் போட்டியில் 2-
வது அரைஇறுதிப்போட்டி இன்று கார்டிபில்
நடைபெற்றது. இதில் இந்தியா -
இலங்கை அணிகள் மோதின. டாஸ் வென்ற
இந்தியா முதலில்
பந்து வீச்சை தேர்வு செய்தது.
இலங்கை அணியில் தொடக்க வீரர்களாக
பெரெரா மற்றும் டில்சன் களமிறங்கினார்கள்.
இதில் பெரெரா 4 ரன்னில் அவுட் ஆனார்.
பின்னர் வந்த வீரர்கள் இந்திய அணியின்
பந்து வீச்சை சமாளிக்க முடியாமல்
இலங்கை வீரர்கள் சொற்ப ரன்களில்
வெளியேறினார்கள்.
இறுதியில் இலங்கை அணி 50 ஓவர் முடிவில்
8 விக்கெட் இழப்பிற்கு 181 ரன்கள்
மட்டுமே எடுத்தது. அணியின் கேப்டன்
மேத்யூஸ் அதிகபட்சமாக 51 ரன்கள்
எடுத்து அவுட் ஆனார்.
இந்தியா தரப்பில் இசாந்த் சர்மா மற்றும்
அஸ்வின் தலா 3
விக்கெட்டுகளை வீழ்த்தினார்கள்.
182 ரன்கள் என்ற எளிதான வெற்றி இலக்குடன்
இந்தியா களமிறங்கியது. தொடக்க வீரர்களாக
தவான் மற்றும் சர்மா களமிறங்கினார்கள்.
இருவரும் நிதானமாக விளையாடி அணியின்
ஸ்கோரை உயர்த்தினர். இவர்கள் ஜோடியில்
இந்திய அணி 77 ரன்கள் பெற்றது.
சர்மா 33 ரன்னிலும், சிறப்பாக
விளையாடி அரைசதம் அடித்த தவான் 68
ரன்னிலும் அவுட் ஆனார்கள்.
பின்னர் வந்த கோலி மற்றும்
ரெய்னா ஜோடி சேர்ந்து அதிரடியாக
விளையாடியதால், இந்திய அணி ( 35 ஓவர்,
182/2) 2
விக்கெட்டுகளை மட்டுமே இழந்து இலங்கையை
எளிதாக வென்றது.
கோலி 58 ரன்னிலும், ரெய்னா 7 ரன்னிலும்
கடைசிவரை ஆட்டமிழக்காமல் இருந்தனர்.
சிறப்பாக பந்து வீசிய இசாந்த் சர்மா ஆட்ட
நாயகனாக தேர்வு செய்யப்பட்டார்.
சாம்பியன்ஸ் டிராபி இறுதிபோட்டியில்
இங்கிலாந்து - இந்தியா வரும
[Continue reading...]