தாய்லாந்தில் நடைபெற்ற உலக திருநங்கையர் அழகு ராணி போட்டியில் பிரேசில் திருநங்கை வெற்றி Bazilian transgender wins international beauty contest
பாங்காக், நவ.4-
உலக ஆணழகன் போட்டி, உலக அழகி போட்டி போன்றே சில ஆண்டுகளாக திருநங்கையர்களுக்கான உலக அழகு ராணி போட்டியும் நடைபெற்று வருகிறது.
அவ்வகையில், தாய்லாந்து தலைநகர் பாங்காக்கில் 9வது உலக திருநங்கையர் அழகு ராணி போட்டி கடந்த வெள்ளிக்கிழமை நடத்தப்பட்டது.
அமெரிக்கா, பிரேசில், ஜப்பான், தென் கொரியா ஆகிய 16 நாடுகளை சேர்ந்த திருநங்கைகள் இந்த போட்டியில் பங்கேற்றனர்.
அவர்களது உடல் மற்றும் முக வசீகரம், அறிவுக் கூர்மை ஆகியவற்றின் அடிப்படையில் பட்டத்துக்குரியவர் தேர்வு செய்யப்பட்டார். இதில் பிரேசில் நாட்டை சேர்ந்த மார்கெலோ ஓஹியா(18) அழகு ராணியாக முடிசூட்டப்பட்டார்.
10 ஆயிரம் டாலர் ரொக்கப்பரிசு மற்றும் தாய்லாந்தின் உல்லாச நகரமான பட்டயாவில் உள்ள விடுதியில் ஓராண்டு வரை இலவசமாக தங்கும் அனுமதி போன்றவையும் அவருக்கு வழங்கப்பட்டுள்ளது.
...
shared via