Home » Archives for 08/15/13
தாவூத்
இப்ராகிமின் கூட்டாளியும் பிரபல போதைப் பொருள் கடத்தல் மன்னனுமான இக்பால்
மிர்ச்சி லண்டனில் மரணம் Dawood Ibrahim aide Iqbal Mirchi dies in
london
மும்பை தொடர் குண்டு வெடிப்பு வழக்கு தொடர்பாக இந்திய அரசால் தேடப்படும் குற்றவாளியாக அறிவிக்கப்பட்டவன், தாவூத் இப்ராகிம்.
இவனுடன் மும்பையில் நிழல்உலக தாதாவாக வலம் வந்தவன் இக்பால் மிர்ச்சி.
1990களில் மும்பையில் இருந்து வெளிநாட்டிற்கு தப்பியோடிய இவனை தேடப்படும்
குற்றவாளியாக மகாராஷ்டிரா போலீசார் அறிவித்துள்ளனர்.
உலகின் மிகப்பெரிய 50 போதைப் பொருள் கடத்தல் மன்னர்களின் பெயர் பட்டியலில் இவனது பெயரும் இடம் பெற்றிருந்தது.
1993ல் நடந்த மும்பை குண்டு வெடிப்பு சம்பவத்திலும், 1994ம் ஆண்டு தனது
கூட்டாளியான அமர் சுவர்னாவை கொன்ற வழக்கிலும் இவனை கைது செய்து தரும்படி
இந்திய உளவுத்துறை சர்வதேச போலீசான ‘இன்டர்போல்’ அதிகாரிகளுக்கு வேண்டுகோள்
விடுத்திருந்தது.
1995-ம் ஆண்டு கிழக்கு லண்டனில் ஸ்காட்லாந்து யார்ட் போலீசார் இக்பால்
மிர்ச்சியை கைது செய்து 1999-ம் ஆண்டு லண்டன் கோர்ட்டில் வழக்கு
தொடர்ந்தனர்.
இந்த வழக்கில் 2001-ம் ஆண்டு வழங்கப்பட்ட தீர்ப்பில் இவன் மீதான
குற்றச்சாட்டுகளுக்கு ஆதாரம் இல்லை என கூறி லண்டன் கோர்ட் விடுதலை செய்தது.
2001 முதல் இங்கிலாந்து பிரஜையாகி லண்டனில் வசித்து வந்த இக்பால்
மிர்ச்சியை இந்தியாவிடம் ஒப்படைக்க வேண்டும் என்ற கோரிக்கை தொடர்ந்து
நிராகரிக்கப்பட்டு வந்தது.
இந்நிலையில், லண்டனில் உள்ள வீட்டின் அருகே நடைபயிற்சிக்கு சென்ற இக்பால்
மிர்ச்சி மாரடைப்பால் மரணமடைந்ததாக அவனது அண்ணன் காதிர் மேமன்
அறிவித்துள்ளார்.
மும்பையில் சாதாரண டாக்சி டிரைவராக வாழ்க்கையை தொடங்கிய இவன், தாவூத்
இப்ராகிமின் தொடர்பு ஏற்பட்ட பின்னர் போதைப் பொருள் கடத்தல் காரனாக மாறி
கடத்தல் மன்னனாக உயர்ந்தான் என்பது குறிப்பிடத்தக்கது.
[Continue reading...]
பாகிஸ்தானில் பின்லேடன் கொல்லப்பட்ட போது சீட்டு விளையாடிய ஒபாமா Bin Laden killed in Pakistan during a card game Obama
அல்கொய்தா தீவிரவாதிகளின் தலைவர் ஒசாமா பின்லேடன் பாகிஸ்தான்
அபோதாபாத்தில் பதுங்கியிருந்த போது அமெரிக்க ராணுவத்தின் ‘நேவிசீல்’ என்ற
அதிரடிபடையால் கொல்லப்பட்டார். இச்சம்பவம் கடந்த 2001–ம் ஆண்டு மே 2–ந்
தேதி நடந்தது.
தாக்குதல் நடத்தி பின்லேடன் சுட்டுக் கொல்லப்பட்ட
போது, அக்காட்சியை அமெரிக்காவின் வெள்ளை மாளிகையில் உள்ள கண்காணிப்பு
அறையில் இருந்து அதிபர் ஒபாமா
[Continue reading...]