Showing posts with label கமல். Show all posts
Showing posts with label கமல். Show all posts

Sunday, 17 February 2013

சென்னை ரைனோஸ் அணி வீரர்களை கவர்ச்சியால் உற்சாகப்படுத்திய கமல் மகள்கள் !!

- 0 comments
ஐதராபாத்தில் நடந்த சிசிஎல் கிரிக்கெட் போட்டியில் சென்னை ரைய்னோஸ் அணியும், கர்நாடக புல்டோசர் அணியும் மோதியது.


சர்வதேச கிரிக்கெட்டில் இந்தியா, பாகிஸ்தான் போல சென்னை-கர்நாடக அணிகள் கருதப்படுகிறது. சென்னை அணியின் தூதராக நடிகை ஸ்ருதிஹாசன் உள்ளார். வீரர்களை உற்சாகப்படுத்த வேண்டியது அவரது கடமை. நேற்று நடந்த போட்டிக்கு அக்கா ஸ்ருதி ஹாசனுக்கு துணையாக தங்கை அக்ஷரா ஹாசனும் வந்திருந்தது அனைவரது கவனத்தையும் கவர்ந்தது.
இருவரும் மைதானத்தை சுற்றி வந்தும், விசில் அடித்தும், ஆட்டம்போட்டும் கலக்கினார்கள். ஆனால் மழை வந்து ஆட்டம் பாதியிலேயே நின்று விட்டதால் இருவரும் கவலையுடன் சென்றனர். அக்ஷராவின் அழகு இன்னும் மெருகேறி இருப்பதாக ஆந்திரவாலாக்கள் பேசிக் கொண்டனர்.
“எத்தனை கோடி கொடுத்தாவது இந்த பொண்ணை நம்ம படத்துல நடிக்கவச்சிடனும்” என்று தெலுங்கில் மாட்லாடிக்கொண்டே சென்றனர்.
[Continue reading...]

Thursday, 31 January 2013

ஜெ’ வுக்கு நன்றி மும்பையில் கமல் மனம்திறந்த பேட்டி

- 0 comments
னக்கு வந்ததைப் போன்று யாருக்கும் பிரச்சினை வரக்கூடாது. கலைஞர்களை அவமதிக்க வேண்டாம் என்று கேட்டுக்கொள்கிறேன். பிரச்சினையை சந்தித்து வரும் நேரத்தில், ஊடகங்கள் எனக்கு ஆதரவாக நின்றது நெகிழ்ச்சி அளிப்பதாக இருந்தது என்று நடிகர் கமல் மனம் திறந்து கூறியிருக்கிறார். 

மும்பையில் பிப்ரவரி 1ல்(இன்று) விஸ்வரூபம் திரைப்படம் ஹிந்தியில் ரிலீஸாகிறது. அதற்காக மும்பை சென்றிருக்கும் அவர் விஸ்வரூபம் பிரச்சனையில் தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் விளக்கம் கூறித்து மகிழ்ச்சி தெரிவித்திருக்கிறார். இதுகுறித்து மும்பையில் பேசிய அவர் :
எனக்கு வந்ததைப் போன்று யாருக்கும் பிரச்சினை வரக்கூடாது. கலைஞர்களை அவமதிக்க வேண்டாம் என்று கேட்டுக்கொள்கிறேன். அவர்களை ஹாலிவுட், பாலிவுட் என வேறுபடுத்தி பார்க்கவேண்டாம். பிரச்சினையை சந்தித்து வரும் நேரத்தில், ஊடகங்கள் எனக்கு ஆதரவாக நின்றது நெகிழ்ச்சி அளிப்பதாக இருந்தது. யாரையும் புண்படுத்தும் நோக்கம் எனக்கு இல்லை. மதத்தில் எனக்கு நம்பிக்கை இல்லை.

விஸ்வரூபம் பிரச்சினையில் முன்வந்து விளக்கம் அளித்த முதல்வர் ஜெயலலிதாவுக்கு நன்றி. சினிமா உலகமும் ரசகிர்கள் கொடுத்த ஆதரவும் உத்வேகத்தைக் கொடுத்துள்ளது. போராட்டத்தில் நான் தனி ஆள் இல்லை. ஆதரவு அளித்த ஊடகங்களுக்கு நன்றிக்கடன் பட்டிருக்கிறேன்.

மிரட்டல் தொடர்ந்தால் நாட்டைவிட்டு வெளியேறுவது பற்றி பரிசீலனை செய்வேன். எனக்கு ஆஸ்கர் விருது தேவையில்லை, தேசிய விருதையே விரும்புகிறேன்.

நான் எதிர்கொள்ளும் எதிர்ப்பு மதரீதியானது அல்ல; அரசியல் ரீதியானது. மற்ற இடங்களில் படத்தைப் பார்த்தவர்கள் சிறப்பாக உள்ளதாக கூறுகின்றனர். விஸ்வரூபம் மூலம் விளம்பரம் தேட நான் முயற்சிப்பதாக கூறுவது மோசமானது. நான் கோபத்தில் பேசவில்லை, காயப்பட்டதால் பேசுகிறேன். நம்ப முடியாத அளவுக்கு எனக்கு இஸ்லாமிய சமுதாயத்தினரிடம் இருந்து ஆதரவு கிடைத்துள்ளது. எனது படத்திற்கு விதிக்கப்பட்ட தடையால் ரூ.30 கோடி முதல் ரூ.60 கோடி வரை இழப்பு ஏற்பட்டிருக்கிறது.

இவ்வாறு கமல்ஹாசன் கூறினார்.
[Continue reading...]

My Blog List

Popular Posts

Popular Posts

 
Copyright © . தினசரி செய்திகள் - Posts · Comments
Theme Template by BTDesigner · Powered by Blogger