நான்: எப்ப வந்தே அருண்?எத்தனை நாள் தங்குவாய்?
அருண்:மூன்று வாரம் விடுப்பு. அதுவே அதிகம்!
நான்:ரெண்டு வருடம் கழித்து வந்திருக்கே!அப்பா,அம்மாவோட கொஞ்ச நாள் இருக்க வேண்டாமா?இங்கு என்ன இல்லை? அமெரிக்கா மாதிரி பெரிய மால்கள் இருக்கின்றன. விலையும் குறைவு.
அருண்: உண்மைதான். நல்ல கடைகள் இருக்கின்றன .விலையும் குறைவுதான் .நல்ல உணவு விடுதிகள் இருக்கின்றன.ஆனால் சாலைகளும், போக்குவரத்தும் படு மோசம்.
நான்:சரிதான்.ஆனால் அது மிகச் சிறிய விஷயம்.கொஞ்சம் அனுசரித்துப் போக வேண்டியதுதான்.
அருண்;நான் ஏன் இந்தப் போகுவரத்து நெரிசலோடும்,மசத்தனமான கூட்டத்தோடும்,குப்பையோடும் அனுசரித்துப் போக வேண்டும்?
நான்: அதை விடு.அப்பா அம்மா எப்படியிருக்காங்க?அம்மாவுக்கு உடம்பு சரியில்லையெனக் கேள்விப்பட்டேனே?
அருண்;பரவாயில்லை.மருத்துவர் மருந்து கொடுத்திருக்கிறார்.அப்பா கவனித்துக் கொள்கிறார்.
நான்:அவருக்கும் வயதாகி விட்டது. எப்படி சமாளிப்பார்?அதுவும் நீ அருகில் இல்லாததே இருவருக்கும் பெரிய குறையாக இருக்கும்.
அருண்:அவர் கொஞ்சம் அனுசரித்துப் போக வேண்டியதுதான்.
நான்: சரி யு.எஸ்.ஸில் எல்லாம் எப்படி இருக்கிறது.உங்கள் சாப்பாடெல்லாம் எப்படி? இதே இட்லி,தோசை,உப்புமாதானே!இதுதான் மிக நல்ல உணவு.
அருண்:இல்லை.தினம் காலை பெட்டியில் அடைக்கப்பட்ட தானிய வகைகள் சாப்பிடுவோம்.மதிய உணவுக்கு இடையீட்டு ரொட்டி எடுத்துச் செல்வேன் இரவு குளிர் பதனப் பெட்டியில் வைக்கப்பட்ட சமைத்த உணவைச் சூடு படுத்திச் சாப்பிடுவோம்!தினம் சமைப்பதெல்லம் முடியாது.வாரம் ஒரு முறைதான் சமையல்.
நான்:இதெல்லாம் உடல் நலத்துக்கு உகந்ததல்லவே?
அருண்;என்ன செய்ய,அனுசரித்துப் போக வேண்டியதுதான். புரதச் சத்துக்காக அவ்வப்போது அசைவமும் சாப்பிடுவோம்.
நான்:நீங்கள் சைவம் ஆயிற்றே!இப்போதெல்லாம் பல அசைவ உணவு சாப்பிடுபவர்களே ,சைவத்துக்கு மாறிக்கொண்டிருக்கிறார்கள்.
அருண்;இருக்கும் இடத்துக்குத் தக்கபடி அனுசரித்துப்போக வேண்டியதுதான்.
நான்:சென்னையிலே வளர்ந்தவன் நீ.அங்குரொம்பக் குளிரோ?
அருண்: ஆமாம்.கடுங்குளிர் ,பனிப்பொழிவு எல்லாம்தான்.ஆனால் வீட்டில் மின் வெப்பமூட்டி இருக்கிறது.அதிகம் வெளியே போக மாட்டோம்.அனுசரித்து நடக்கக் கற்றுக் கொண்டோம்!
நான்: உன் மனைவியும் வேலை பார்க்கிறாளல்லவா?
அருண்:ஆமாம்.இருவரும் சம்பாதித்தால்தான் வசதியாக இருக்க முடியு.வீட்டுக்குக் கடன் வாங்கியிருக்கிறோம்.காலை 8 மணிக்குபோனால் மாலை 6மணிக்கு வருவோம்.பள்ளியில் படிக்கும் எங்கள் மகன் வந்து தொலைக்காட்சி பார்த்துக்கொண்டோ, கணினியில் விளையாடிக்கொண்டோ இருப்பான்.பசித்தால் குளிர் பதனப் பெட்டியிலிருந்து ஏதாவது எடுத்துச் சாப்பிடுவான்.
நான்:அங்கு கலாசாரம் எல்லாம் வேறாயிற்றே.பையன் அந்தக் கலாசாரத்தில் வளர்ந்தால் கவலை இல்லையா?
அருண்:அதெல்லாம் அவன் இஷ்டம்.யாரும் இதைப் பற்றியெல்லாம் கவலைப் படுவதில்லை.அனுசரித்துப் போக வேண்டியதுதான்.
நான்:அங்கு நீ என்ன வேலை பார்க்கிறாய்?இந்தியாவில் இதே மாதிரி வேலை கிடைக்காதா?
அருண்:அங்கு மென் பொருள் துறையில்தான் இருந்தேன்.சமீபத்தில் வேலை போய் விட்டது. இப்போது ஒப்பந்த அடிப்படையில் ஒரு வேலை கிடைத்திருக்கிறது.எப்படியோ அனுசரித்துப்போக வேண்டியதுதான்.
நான்:உனக்கு இந்தியாவிலேயே நல்ல வேலை கிடைக்குமே. இப்போதெல்லாம் நல்ல சம்பளமும் கிடைக்கிறது,மென்பொருள் துறையில்.
அருண்:உண்மைதான்.நல்ல சம்பளம் கிடைக்கும்.அதிகம் சேமிக்கவும் முடியும்.ஆனால் அந்தக் கூட்டம்,போக்குவரத்து நெரிசல் ,குப்பை...சே . நான் ஏன் அனுசரித்துப்போக வேண்டும்?தலை எழுத்தா?
நான்:சரி பார்ப்போம்!
http://cmk-mobilesms.blogspot.com
http://oruwebsite-tamil.blogspot.com