Sunday, 2 November 2014

சளியை உடனடியாகப் போக்கும் மிளகு ரசம் !

- 0 comments

சளியை உடனடியாகப் போக்கும் மிளகு ரசம்!

மழை காலம் வந்துவிட்டால் மக்களின் பெரிய பிரச்சனையே சளி பிடிப்பது தான். சளி பிடித்தால் நம் வீட்டில் இருக்கும் பொருட்களை பயன்படுத்தியே அதனை உடனடியாக குணப்படுத்த முடியும். சளி பிடித்திருந்தால், அப்போது மிளகு ரசம் செய்து சாப்பிட்டால், சளி மற்றும் இருமல் காணாமல் போய்விடும்.

தேவையான பொருட்கள்:

புளி – 1 எலுமிச்சை அளவு

கொத்தமல்லி சிறிது

உப்பு தேவையான அளவு

வறுத்து அரைப்பதற்கு:

மிளகு – 1 டீஸ்பூன்

சீரகம் – 1 டீஸ்பூன்

பூண்டு – 1

வரமிளகாய் – 1

துவரம் பருப்பு – 1 1/2 டேபிள் ஸ்பூன்

தாளிப்பதற்கு

நெய் – 1 டீஸ்பூன்

எண்ணெய் – 1 டீஸ்பூன்

கடுகு – 1 டீஸ்பூன்

கறிவேப்பிலை சிறிது

பெருங்காயத் தூள் – 1 சிட்டிகை

வரமிளகாய் – 2

[Continue reading...]

நெருங்கி வா முத்தமிடாதே திரை விமர்சனம் - Tamil cinema Review

- 0 comments

பெட்ரோல் தட்டுப்பாடு காரணமாகச் சாலைகளில் வாகனங்கள் ஓட முடியாத சூழ்நிலை. அப்போது திருச்சியில் இருந்து காரைக்காலுக்கு ஒரு லாரியில் 2,000 லிட்டர் டீசலை நாயகன் சந்துரு (சபீர்) கொண்டுசெல்கிறார். இதன் பின்னணியில் ஒரு பெரிய சூழ்ச்சி வலை பின்னப்பட்டுள்ளது. இதை அறியாத சந்துரு லாரியை ஓட்டிச் செல்கிறார். வழியில் இரண்டு ஜோடிகள் வேறு அவரிடம் அடைக்கலம் கோருகின்றன. அவர்களையும் தன்னுடன் அழைத்துக்கொள்கிறார். தம்பி ராமையாவும் வழியில் ஏறிக்கொள்கிறார்.

 

பயணத்தின் இடையே ஏற்படும் சம்பவங்களால், தான் ஒரு சூழ்ச்சியில் சிக்கவைக்கப்பட்டுள்ளோம் என்பதை உணர்ந்துகொள்ளும் சந்துரு அதிலிருந்து மீள்கிறாரா, டீசலை எங்கு, எதற்காகக் கொண்டு செல்கிறார், அந்த ஜோடிகள் யார் போன்ற விஷயங்களைத் திடுக்கிடும் காட்சிகளால் சொல்லும் டிராவல் மூவியே 'நெருங்கி வா முத்தமிடாதே'.

 

ஏ.எல்.அழகப்பன் காளீஸ்வரன் என்னும் அரசியல்வாதியாக நடித்துள்ளார். அவரிடம் லாரி டிரைவராக இருக்கிறார் சந்துரு. ஆனால் சந்துருவின் தந்தை சுப்பிரமணியன் (ஒய்.ஜி.மகேந்திரன்) அதே ஊரில் பெட்ரோல் பங்க் நடத்துகிறார். அவருடைய மனைவி அம்பிகா. பணக்கார வீட்டுப் பையனாக இருந்தும் படிப்பில் ஆர்வம் இன்றி அனைவருக்கும் உதவுபவராகச் சுற்றித் திரிகிறார் அவர்.

 

நாயகி மாயா (பியா பாஜ்பாய்) அவரது அம்மா (விஜி சந்திரசேகர்) இருவருக்கும் இடையில் அடிக்கடி பிரச்சினை ஏற்படுகிறது. தன் தாயின் நடத்தை மீது மகளுக்குச் சந்தேகம். ஏனெனில், தந்தை யார் என்பது மாயாவுக்குத் தெரியாது. அதனால் ஏற்பட்ட கோபத்தை வெளிப்படுத்திக்கொண்டே இருக்கிறார். மலேசியாவுக்கு ஓர் இசை நிகழ்ச்சிக்காக மாயாவின் அம்மா செல்கிறார். அன்று இரவு நண்பர்களுடன் ஜாலியாகச் செலவிடும் மாயா இடையில் நண்பன் ராகவுடன் வெளியில் கிளம்புகிறார். போன இருவரையும் காணவில்லை.

 

சமூகத்தின் மேல் அடுக்கில் உள்ள சாதியைச் சேர்ந்த மேகாவுக்கும், ஒடுக்கப்பட்ட சாதியைச் சேர்ந்த பிச்சைக்கும் காதல். இதற்கு எதிர்ப்பு வர இருவரும் ஊரைவிட்டு ஓடுகின்றனர். இதனிடையே தேச விரோத நடவடிக்கைகளில் ஈடுபட்ட ஒருவரைக் காவல்துறையினர் தேடி வருகின்றனர். இந்த அனைத்து அத்தியாயங்களையும் ஒன்றாக இணைத்தபடி செல்லும் லாரி காரைக்கால் சென்று சேரும்போது படம் முடிந்துவிடுகிறது.

 

தேசத் துரோக நடவடிக்கை, கேங் ரேப், சாதி ஒழிப்பு போன்ற சமூகப் பிரச்சினைகள், தாய்-மகள், தந்தை-மகன் ஆகிய குடும்ப உறவுகளிடையே ஏற்படும் சிக்கல்கள் எனப் பல விஷயங்களை ஒரே படத்தில் பேச முயன்றிருக்கிறார் இயக்குநர் லட்சுமி ராமகிருஷ்ணன். ஆனால், அதற்குத் தேவையான உணர்வுபூர்வமான காட்சிகளை உருவாக்குவதில் மிகவும் பின்தங்கிவிட்டார். பெட்ரோல் தட்டுப்பாட்டின் பாதிப்பைப் புரியவைக்க அழுத்தமான காட்சிகள் இல்லை. வெறும் தொலைக்காட்சிச் செய்திகளை வைத்து அதன் வீரியத்தை உணர்த்தும் முயற்சி வெற்றிபெறவில்லை.

 

ரோடு மூவி படங்களில் காணப்படும் விறுவிறுப்பு இப்படத்தில் இல்லை. சுவாரஸ்யமான காட்சிகளோ ரசனையான பாடல்களோ, காட்சிக்குத் தேவையான இசையோ இல்லாததால் பெரிய திரையில் சின்னத்திரைத் தொடரைப் பார்ப்பது போன்ற பிரம்மை ஏற்படுவதைத் தவிர்க்க இயலவில்லை. ஒளிப்பதிவாளர் வினோத் பாரதியின் கைவண்ணத்தில் ஒளிப்பதிவு மட்டும் சில காட்சிகளில் கண்ணுக்குக் குளுமையாக உள்ளது.

 

தம்பி ராமையா, பால சரவணன் ஆகிய இருவரும் நகைச்சுவை என்ற பெயரில் அடிக்கும் லூட்டிகள் சிரிப்புக்குப் பதில் எரிச்சலையே ஊட்டுகின்றன.

 

 

Keywords: நெருங்கி வா முத்தமிடாதே, திரை விமர்சனம், பியா, லஷ்மி ராம்கிருஷ்ணன், தம்பி ராமையா

Topics: தமிழ் சினிமா விமர்சனம்

[Continue reading...]

நோக்கியா தொழிலாளர்கள் சிறப்பு பார்வை

- 0 comments

 

வேலை கிடைக்காது என்று தெரிந்த பிறகு வேறு வழியில்லாமல் நஷ்ட ஈட்டை பெற ஒப்புக் கொண்டோம் என்று மூடப்பட்ட நோக்கியா ஆலையின் தொழிலாளர்கள் வேதனையுடன் கூறியுள்ளனர்.

 

ஸ்ரீபெரும்பூதூரில் 2006-ம் ஆண்டு தொடங்கப்பட்ட நோக்கியா ஆலை, அக்.31-ம் தேதியுடன் மூடப்பட்டது. அதில் கடைசியாக பணிபுரிந்த 851 ஊழியர்களுக்கு நவம்பர் 3-ம் தேதி முதல் 10-ம் தேதிக்குள் நஷ்ட ஈட்டு தொகையை பெற்றுக்கொள்ளுமாறு நோக்கியா நிறுவனம் குறுஞ் செய்தி அனுப்பியுள்ளது.

 

இதன்படி ஊழியர்களுக்கு ரூ. 6 லட்சம் முதல் 10 லட்சம் வரை நோக்கியா நிறுவனம் நஷ்ட ஈடு வழங்குகிறது. ஆனால் இதில் வருமான வரி, நிறுவனத்திடமிருந்து வாங்கிய தனி நபர் கடன் ஆகிய கட்டணங்கள் கழிக்கப்பட்டு கையில் கிடைக்கும் தொகை மிகவும் குறைவாக இருக்கும் என்று தொழிலாளர்கள் கூறுகின்றனர்.

 

நோக்கியா நிறுவனத்தில் 9 ஆண்டுகளாக பணி புரிந்த தொழிலாளி ஒருவர், ''நான் தற்போது ரூ.21,000 சம்பாதித்து வந்தேன். ஆனால், தற்போது அங்கு தொடர்ந்து வேலை கிடைப்பதற்கான எந்த அறிகுறியும் தெரிய வில்லை. அதனால் இந்த நஷ்ட ஈட்டுத் தொகைக்கு ஒப்புக்கொண்டோம். இப்போதும், நவம்பர் 10-ம் தேதிக்குள் ஏதாவது அதிசயம் நிகழ்ந்து வேலை கிடைத்து விடாதா என்று தோன்றுகிறது" என்றார்.

 

பெண் தொழிலாளி சரிதா கூறும்போது, "எனக்கு வேறு எந்த வேலையும் தெரியாது. இந்த வேலையை நம்பி எனது குழந்தையை மெட்ரிக் பள்ளியில் சேர்த்து விட்டேன். எனது கணவருக்கு நிரந்தர வேலை கிடையாது. என்ன செய்வதென்றே தெரியவில்லை" என்றார்.

 

நோக்கியா இந்தியா தொழிலாளர் சங்கத்தின் பொது செயலாளர் பிரபு கூறும்போது, "நோக்கியாவில் பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்தவர்கள் பணிபுரிகின்றனர். லாபம் ஈட்டும் வெளிநாட்டு நிறுவனங்கள் உள்ளே நுழையும் போது ஒப்பந்தம் போடப்படுவது போல், வெளியே செல்லும் போதும் ஊழியர்களை பாதுகாக்கும் வகையில் சட்டங்கள் இயற்றப்பட வேண்டும். நோக்கியா தொழிலாளர்களுக்கு வேலை வாய்ப்பும் கடனுதவியும் தருமாறு அரசை கேட்டு வருகிறோம்," என்றார்.

 

Keywords : நஷ்ட ஈடு, நோக்கியா ஆலை, நோக்கியா தொழிலாளர்கள், ஸ்ரீபெரும்பூதூர் ஆலை

Topics : தமிழகம், சர்ச்சை, விவகாரம்

[Continue reading...]

கணவன் மனைவி அழகான வாழ்க்கை !

- 0 comments

இரவு நேரத்தில் கணவன் உண்டது போக மீதமிருப்பதை உண்ணலாம் என்று காத்திருந்து ...

கணவனும் வந்து ...
அவன் பக்கத்திலிருந்து பரிமாறி ...
பேச்சு சுவாரஸ்யத்தில் கணவன் மிச்சமில்லாமல் உண்டு முடிக்க ...
மலர்ந்த முகத்தோடு பாத்திரங்களை ஒதுக்கி விட்டு வரும் மனைவியிடம் ....

"நீ சாப்பிடவில்லையா ?" என்று கணவன் கேட்க ....

"எனக்கு பசியாக இருந்தது. அதனால் நீங்கள் வருவதற்கு முன்னாலேயே உண்டு முடித்து விட்டேன்" என்று சொல்லும் மனைவியை வரமாகப் பெற்றவன்....

என்ன செய்வான் ?

சட்டையை மீண்டும் மாட்டிக்கொண்டு வெளியே கிளம்பும் கணவனிடம் "இப்போதானே வந்தீங்க. திரும்பவும் எங்க போறீங்க ?" என்று கேட்டவளுக்கு ...

"ஒரு மாத்திரை வாங்க மறந்துவிட்டேன்" என்று கூறிவிட்டு ...

சற்று தூரம் அலைந்து நல்ல ஹோட்டலில் ருசியான உணவு வாங்கி வந்து ... "இந்தா சாப்பிடு..." என்று சொல்லும்போது அவள் கண்கள் லேசாக கசிய...
உண்ணுவாளே....

அதற்குப் பெயர்தான் அழகான வாழ்க்கை !

பிடிச்சா லைக் பண்ணுங்கள்...
ரொம்ப பிடிச்சா ஷேர் பண்ணுங்கள்...
சூப்பரா இருந்தா கமண்ட் பண்ணுங்கள்..

[Continue reading...]

My Blog List

Popular Posts

Popular Posts

 
Copyright © . தினசரி செய்திகள் - Posts · Comments
Theme Template by BTDesigner · Powered by Blogger