அனுஷ்காவை வெட்கப்பட வைத்த பாடல்!
by admin
TamilSpyToday,
தமிழில் 'நான் ஈ' படத்தை இயக்கிய ராஜமௌலி தெலுங்கில் இயக்கி வரும் படம் 'ராணி ருத்ரம்மா தேவி'. பிரம்மாண்ட பட்ஜெட்டில் உருவாகி வரும் இப்படத்தில் ராணி ருத்ரம்மா தேவி வேடத்தில் அனுஷ்கா நடித்து வருகிறார்.
இப்படத்தின் முதல் இரண்டு கட்ட படப்பிடிப்புகளில் அதிரடிக் காட்சிகளை இயக்குனர் படமாக்கினார். இந்த காட்சிகளில் நடிப்பதற்காக ஆயுதம் மற்றும் தற்காப்பு கலைகளை கற்று, நடித்து வந்தார் அனுஷ்கா. தற்போது இப்படத்தின் இறுதிக்கட்டப் படப்பிடிப்பில் பாடல் மற்றும் கிளுகிளுப்பான காட்சிகளை படமாக்கி வருகிறார் ராஜமௌலி.
இதற்காக பிரம்மாண்ட அரண்மனை போன்று செட் போடப்பட்டு, அதில் அனுஷ்கா ஆடிப்பாடும் அந்தப்புர பாடல் காட்சி ஒன்று படமாக்கப்பட்டுள்ளது. இந்த பாடலில் கவர்ச்சி மிகுதியாகவும், அதேவேளையில் தத்ரூபமாகவும் இருப்பதற்காக ஆடைகளை குறைத்து நகைகளை மட்டுமே கொண்டு உடம்பை மறைத்தபடி காட்சியை படமாக்கியிருக்கிறார் இயக்குனர்.
இந்த காட்சியை படமாக்கும்போது ஒட்டுமொத்தப் படக்குழுவும் நின்று அனுஷ்காவின் அழகை வேடிக்கை பார்த்ததால் வெட்கத்தில் கூனிக்குறுகி போய்விட்டாரம் அனுஷ்கா. அந்த காட்சியில் நடிக்க ரொம்பவே தயக்கம் காட்டினாராம். அதன்பிறகு இயக்குனர் வேடிக்கை பார்த்த படக்குழுவினரை வெளியே அனுப்பிவிட்டு இயக்குனர், கேமராமேன் உள்ளிட்ட ஒரு சிலர் மட்டுமே அந்த காட்சியை படமாக்கினார்களாம். அதன்பிறகு அந்த பாடல் காட்சியில் தைரியமாக நடித்தாராம் அனுஷ்கா.
Show commentsOpen link