இரகசியமாக படம்பிடிக்கப்பட்ட அனுஷ்காவின் முதலிரவுக் காட்சி!
by abtamil
Tamil newsYesterday,
குணசேகரின் ருத்ரம்மாதேவி படத்தில் அனுஷ்கா நடித்து வருகிறார். 3D யில் இப்படம் தயாராகி வருகிறது.
காகத்தியா வம்சத்தில் வந்த 13 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த இளவரசி ருத்ரம்மாதேவியை பற்றிய கதை இது. அனுஷ்கா ருத்ரம்மாதேவியாக நடித்துள்ளார். சமீபத்தில் சில காட்சிகள் ஹைதராபாத் அன்னபூர்ணா ஸ்டுடியோவில் படமாக்கப்ப்டது. முக்கியமாக அனுஷ்காவின் முதலிரவுக் காட்சியும், ஒரு பாடல் காட்சியும்.
இதற்காக அன்னபூர்ணா ஸ்டுடியோவில் தோட்டா தரணியின் கைவண்ணத்தில் பிரமாண்டமான அரண்மனை அரங்கும், வண்ணமயமான அந்தப்புரமும் அமைக்கப்பட்டது. முதலிரவுக் காட்சியை படமாக்கப்பட்ட போது படத்தின் இயக்குனர் குணசேகர், கேமராமேன் அஜய் வின்சென்ட் இருவரைத் தவிர மற்றவர்கள் அரங்கிலிருந்து வெளியேற்றப்பட்டனர்.
அனுஷ்காவுடன் நடிகர் ராணாவும் முக்கிய வேடத்தில் நடித்துள்ளார். மகேஷ் பாபுக்கு கெஸ்ட் ரோல். இளையராஜா இசையில் உருவான பாடலை அந்தப்புர அரங்கில் படமாக்கினர். அனுஷ்காவுடன் சாரா ஷா, நடாலியா கவுர் ஆகிய இருவரும் நடனமாடினார்கள். நடனத்தை அமைத்தவர் ராஜு சுந்தரம்.
இந்தப் படத்துக்காக குதிரையேற்றம், வாள் பயிற்சி என பல சண்டைகளை அனுஷ்கா படப்பிடிப்புக்கு முன்பே பயிற்சி செய்தார் என்பது முக்கியமானது.
Show commentsOpen link
0 comments:
Post a Comment
உங்களது கமெண்ட் என்ன ?