Tuesday, 16 July 2013

இளவரசன் தற்கொலை - தனியார் தங்கும் விடுதி ஊழியர் வாக்குமூலம்

- 0 comments
தர்மபுரியில் காதல் கலப்பு திருமணம் செய்து கொண்ட இளவரசன் கடந்த 4–ந்தேதி அரசு கலைக்கல்லூரி பின்புறம் உள்ள ரெயில் தண்டவாளத்தில் பிணமாக கிடந்தார். இளவரசனின் பிரேத பரிசோதனை அடிப்படையில் நடந்த விசாரணை மற்றும் இளவரசன் எழுதிய கடிதம் அடிப்படையில் தற்கொலை என தெரிவித்தனர்.
ஆனால் இளவரசனின் பெற்றோர் கொலை என கூறி வருகின்றனர். இந்த வழக்கில் இளவரசன் தற்கொலை செய்து கொண்டதற்கான சாட்சிகளிடம் இருந்து போலீசார் வாக்குமூலம் வாங்கி வருவதோடு கோர்ட்டிலும் நீதிமன்றத்தில் பதிவு செய்து வருகின்றனர்.
இளவரசன் கடந்த 1–ந்தேதி சென்னையில் உள்ள ஒரு தனியார் லாட்ஜில் அறை எடுத்து தங்கியிருந்தார். அப்போது அவர் பிளேடால் தன் கையை அறுத்து தற்கொலைக்கு
[Continue reading...]

கற்பழிப்பு நகரம் டெல்லி யில் 12 வயது பெண் அத்தை மகனாலும் அண்ணனாலும் கற்பழிப்பு

- 0 comments
வடக்கு டெல்லியில் வசிக்கும் 12
வயது சிறுமியை அவரது அத்தை மகனான 25
வயது வாலிபர் கடந்த வாரம்
கற்பழித்துவிட்டார். இதுதொடர்பாக, அந்த
சிறுமியின் பெற்றோர் அளித்த
புகாரையடுத்து அந்த வாலிபரை போலீசார்
கைது செய்தனர்.
இந்த சம்பவத்தால் ஏற்பட்ட அதிர்ச்சி,
மனவேதனை, உடல் வேதனையில்
இருந்து இன்னும் மீளாத அந்த
சிறுமி நேற்று முன்தினம்
இரவு குடும்பத்தாருடன் வீட்டில் தூங்கிக்
கொண்டிருந்தார். அப்போது, உடன் பிறந்த
அண்ணனான 14 வயது சிறுவன் அந்த
சிறுமியின் வாயை துணியால்
பொத்தி கற்பழித்துவிட்டு பயத்தில்
வீட்டை விட்டே ஓடிவிட்டான்.
தலைமறைவாக இருக்கும் அந்த
சிறுவனை போலீசார் தீவிரமாக
தேடி வருகிறார்கள்.
பட்ட காலிலேயே படும் என்பது அந்த
சிறுமியை பொருத்தவரை சரியாகதான்
உள்ளது என்று அக்கம்பக்கத்தினர்
கவலையுடன் கூறினர்
[Continue reading...]

4 சிறுமிகளை பாலியல் பலாத்காரம் செய்த 8 வாலிபர்கள்

- 0 comments
ஜார்க்கண்ட் மாநிலம் பாக்கூர் மாவட்ட   லித்திபாரா பிளாக்கில் உள்ள ஒரு   பழங்குடியினர் மாணவியர் விடுதியில் கடந்த ஞாயிற்றுக்கிழமை ஒரு முகமூடி கும்பல் ஆயுதங்களுடன் புகுந்தது. பின்னர் கண்ணிமைக்கும் நேரத்தில் அங்கிருந்த 4 சிறுமிகளை கடத்திச் சென்று பாலியல் பலாத்காரம் செய்துள்ளனர்.

மாநிலத்தையே அதிர்ச்சிக்குள்ளாக்கிய இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். குற்றவாளிகள் உடனடியாக சரண் அடையும்படி எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

இந்நிலையில், மாணவிகளை கடத்தி பலாத்காரம் செய்த கும்பலில் 8 பேரை போலீசார் கைது செய்தனர்.

பாலியல் குற்றங்களை தடுக்க கடுமையான சட்டங்கள் கொண்டு வந்தாலும், பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு பாதுகாப்பு இல்லை என்பதையே இதுபோன்ற வழக்குகள் உணர்த்துவதாக சமூக ஆர்வலர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.
[Continue reading...]

எங்கள் உயிருக்கு ஆபத்து : கலப்பு காதல் திருமண ஜோடி போலீசில் தஞ்சம்

- 0 comments
தர்மபுரி மாவட்டத்தில் இளவரசன் என்ற கல்லூரி மாணவரும், திவ்யா என்ற நர்சிங் கல்லூரி மாணவியும் காதலித்து கலப்பு திருமணம் செய்து கொண்டனர். இது தொடர்பாக கலவரம் வெடித்தது. இந்த சம்பவம் தமிழ்நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இந்த நிலையில் இதே போல் ஒரு காதல் கலப்பு திருமண ஜோடி நேற்று தஞ்சை வந்தனர். காதல் கலப்பு திருமணம் செய்த கொண்ட ஜோடியின் பெயர் செந்தமிழ்ச்செல்வி (வயது 19) விமல்ராஜ் (27). இவர்கள் 2 பேரும் வெவ்வேறு சமூகத்தை சேர்ந்தவர்கள் ஆவர். இவர்களது சொந்த ஊர் அரியலூர் மாவட்டம் ஆகும்.
காதல் திருமண ஜோடி பாதுகாப்பு கேட்டு தஞ்சை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு தர்மராஜனிடம் ஒரு மனு கொடுத்தனர். பின்னர் செந்தமிழ்ச்செல்வி நிருபர்களிடம் கூறியதாவது:–
எனது சொந்த ஊர் அரியலூர் மாவட்டம் உடையார்பாளையம் அருகே உள்ள மணக்கரை கிராமம் ஆகும். எனது தந்தை பெயர் செல்வராஜ். நான் கும்பகோணத்தில் உள்ள அரசு
[Continue reading...]

My Blog List

Popular Posts

Popular Posts

 
Copyright © . தினசரி செய்திகள் - Posts · Comments
Theme Template by BTDesigner · Powered by Blogger