தர்மபுரியில் காதல் கலப்பு திருமணம் செய்து கொண்ட இளவரசன் கடந்த 4–ந்தேதி
அரசு கலைக்கல்லூரி பின்புறம் உள்ள ரெயில் தண்டவாளத்தில் பிணமாக கிடந்தார்.
இளவரசனின் பிரேத பரிசோதனை அடிப்படையில் நடந்த விசாரணை மற்றும் இளவரசன்
எழுதிய கடிதம் அடிப்படையில் தற்கொலை என தெரிவித்தனர்.
ஆனால் இளவரசனின் பெற்றோர் கொலை என கூறி வருகின்றனர். இந்த வழக்கில் இளவரசன் தற்கொலை செய்து கொண்டதற்கான சாட்சிகளிடம் இருந்து போலீசார் வாக்குமூலம் வாங்கி வருவதோடு கோர்ட்டிலும் நீதிமன்றத்தில் பதிவு செய்து வருகின்றனர்.
இளவரசன் கடந்த 1–ந்தேதி சென்னையில் உள்ள ஒரு தனியார் லாட்ஜில் அறை எடுத்து தங்கியிருந்தார். அப்போது அவர் பிளேடால் தன் கையை அறுத்து தற்கொலைக்கு
முயன்றுள்ளார். அப்போது உடன் இருந்த தாய் கிருஷ்ணவேணி மற்றும் உறவினர்கள் ஆகியோர் அவரை தடுத்துள்ளனர்.
அந்த லாட்ஜின் ரூம்பாய் ‘பேண்ட் எய்டு’ வாங்கி வந்து கொடுத்துள்ளார். இது குறித்து சிறப்பு தனிப்படை போலீசார் விசாரித்து ஒடிசா மாநிலத்தை சேர்ந்த ரூம்பாய் சந்தோஷ் (18) என்பவரை நேற்று அரூருக்கு அழைத்து வந்தனர்.
பின்னர் அவர் அரூர் குற்றவியல் நடுவர் நீதிமன்ற மாஜிஸ்திரேட்டு முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்டார். அவர் இந்தியில் கூறிய வாக்குமூலத்தை 2 ஆசிரியைகள் மூலம் மொழி பெயர்த்து வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டது.
ஏற்கனவே இளவரசனின் நண்பர்கள் மனோஜ் குமார், கார்த்திக் ஆகியோர் மாஜிஸ்திரேட் முன் வாக்குமூலம் கொடுத்திருப்பது குறிப்பிடத்தக்கது.
இதற்கிடையே இளவரசனின் உடல் மறுபரிசோதனை அறிக்கை நேற்று சென்னை ஐகோர்ட்டில் தாக்கல் செய்யப்பட்டது

0 comments:
Post a Comment
உங்களது கமெண்ட் என்ன ?