Tuesday, 9 July 2013

இயற்கைக்கு மாறாக உறவுகொள்ள வற்புறுத்திய கணவர் நடிகை யுக்தா முகி

இயற்கைக்கு மாறாக உறவுகொள்ள வற்புறுத்தி துன்புறுத்துகிறார் என்று கூறி தன் கணவர் மீது புகார் கொடுத்துள்ளார் நடிகை யுக்தா முகி. 1999-ல் உலக அழகி பட்டம் வென்றவர், பல இந்திப் படங்களில் நடித்தவர் யுக்தா முகி.
தமிழில் அஜீத்துடன் பூவலெல்லாம் கேட்டுப்பார் படத்தில் நடித்துள்ளார். நியூயார்க்கைச் சேர்ந்த தொழிலதிபரும், நிதி ஆலோசகருமான பிரின்ஸ் டுலி என்பவரை அவர் திருமணம் செய்து செட்டிலானார்.
இப்போது கணவர் மீது மும்பை அம்போலி காவல் நிலையத்தில் நேற்று புகார் அளித்துள்ளார்.
தன் கணவர் பிரின்ஸ் தன்னை அடிக்கடி அடித்து உதைத்து கொடுமைப்படுத்துவதாகவும், வரதட்சணை கேட்டு தொந்தரவு செய்வதாகவும் யுக்தா முகி தனது புகாரில் குறிப்பிட்டுள்ளார். அதன் அடிப்படையில்,
கொடுமை மற்றும் துன்புறுத்துதல், இயற்கைக்கு மாறான உறவு கொள்ளுதல் ஆகிய சட்டப் பிரிவுகளில் பிரின்ஸ் டுலி மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
ஆனால் இதுவரை அவர் கைது செய்யப்படவில்லை. புகார் கொடுத்த யுக்தா முகிக்கு மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டுள்ளது.
டுலி மீது ஏற்கனவே அம்போலி காவல் நிலையத்தில் யுக்தா முகி புகார்கள் அளித்திருந்தார். ஆனால், தண்டிக்க இயலாத குற்றத்தின்கீழ் வழக்கு பதிவு செய்ததால், நீதிமன்ற உத்தரவின்றி முதல் தகவல் அறிக்கை பதிவு செய்ய முடியாத நிலை இருந்தது. தற்போது முதல் முறையாக டுலி மீது எப்.ஐ.ஆர். பதிவு செய்யப்பட்டுள்ளது.

1 comments:

  1. இயற்கைக்கு மாறாக எப்படி ?

    ReplyDelete

உங்களது கமெண்ட் என்ன ?

My Blog List

Popular Posts

Popular Posts

 
Copyright © . தினசரி செய்திகள் - Posts · Comments
Theme Template by BTDesigner · Powered by Blogger