Saturday, 19 October 2013

ரஷியா உதவியுடன் கூடங்குளத்தில் 3, 4 வது அணு உலைகள் அமைக்க விரைவில் ஒப்பந்தம்: மன்மோகன்சிங் பேட்டி Manmohan singh says additional Nuclear reactors set up in Koodankulam agreement soon with Russia

- 0 comments

ரஷியா உதவியுடன் கூடங்குளத்தில் 3, 4 வது அணு உலைகள் அமைக்க விரைவில் ஒப்பந்தம்: மன்மோகன்சிங் பேட்டி Manmohan singh says additional Nuclear reactors set up in Koodankulam agreement soon with Russia

புதுடெல்லி, அக்.20-

பிரதமர் மன்மோகன்சிங் இன்று ரஷியா செல்வதையொட்டி, ரஷிய பத்திரிகையாளர்களுக்கு நேற்று டெல்லியில் பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

கூடங்குளம் அணு மின்நிலையத்தில், 3 மற்றும் 4-வது அணு உலைகள் அமைப்பதற்காக ரஷிய நிறுவனங்களுக்கு இடையே பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது. அதற்கான ஒப்பந்தம் இறுதி செய்யப்பட்டு விரைவில் கையெழுத்தாகும் என்று நம்புகிறேன். கடந்த 2010-ம் ஆண்டில் ரஷிய ஜனாதிபதி புதின் இந்தியா வந்தபோது ஏற்பட்ட ஒப்பந்தத்தின் அடிப்படையில், ரஷியா ஒத்துழைப்புடன் அணுமின் உற்பத்தியை மேலும் விரிவுபடுத்த இந்தியா ஆர்வத்துடன் உள்ளது.

கூடங்குளம் முதல் அணு உலை, கடந்த ஜூலை மாதத்தில் மின் உற்பத்தி தொடங்குவதற்கான ஆயத்த நிலையை எட்டியது. அங்கு விரைவில் மின் உற்பத்தி தொடங்கி விடும். 2-வது அணு உலை கட்டுமானப்பணி முன்னேற்றமான கட்டத்தில் உள்ளது.

கூடங்குளத்தை அடுத்து ரஷியா உதவியுடன் அணுமின்நிலையம் தொடங்குவதற்காக மேற்கு வங்காள மாநிலம், ஹரிபூரை தேர்வு செய்து இருக்கிறோம். ஹரிபூரில் அதற்கான சாத்தியம் இல்லை என்றால் மாற்று இடம் தேர்வு செய்து வழங்கப்படும் .

இவ்வாறு மன்மோகன்சிங் கூறினார்.

...

shared via

[Continue reading...]

ரூ.20 லட்சத்தை படுக்கையில் தூவி படுத்து தூங்கிய மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு தலைவர் rs 20 lakh sleep Marxist communist person

- 0 comments

ரூ.20 லட்சத்தை படுக்கையில் தூவி படுத்து தூங்கிய மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு தலைவர் rs 20 lakh sleep Marxist communist person

அகர்தாலா, அக். 19–

திரிபுரா மாநிலத்தை சேர்ந்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு தலைவர்களில் ஒருவர் சமர் ஆச்சார்ஜி. 42 வயதாகும் இவர் பில்டிங் காண்டிராக்டர் தொழில் செய்து வருகிறார்.

திரிபுரா தலைநகர் அகர்தாலாவில் மாநகராட்சி கட்டிட பணிகளை இவர் காண்டிராக்ட் அடிப்படையில் எடுத்து செய்து கொடுத்து வருகிறார். சமீபத்தில் அகர்தாலா மாநகராட்சிக்குட்பட்ட 3 வார்டுகளில் கழிவறை கட்டுவதற்கான ஒப்பந்தம் பெற்றார்.

இந்த பணி மூலம் தனக்கு ரூ.2½ கோடி லாபம் கிடைத்ததாக ஆச்சார்ஜி கூறினார். இந்த நிலையில் பணக்கட்டுகளுடன் சமர் ஆச்சார்ஜி இருப்பது போன்ற வீடியோ படக்காட்சிகள் அங்குள்ள டிவி சானலில் ஒளிபரப்பானது. இது திரிபுராவில் பெரும்பரபரப்பை ஏற்படுத்தியது.

அந்த வீடியோ பட காட்சியில் ஒரு படுக்கையில் பணத்தை தூவி அதன் மீது சமர் ஆச்சார்ஜி படுத்து தூங்குவது போன்ற காட்சியும் இடம் பெற்றிருந்தது. இது பற்றி ஆச்சார்ஜி கூறுகையில், ''பணம் மீது படுத்து தூங்க வேண்டும் என்பது என் நீண்ட நாள் கனவு. இதற்காக வங்கியில் இருந்து ரூ.20 லட்சம் எடுத்து வந்து படுக்கையில் பண நோட்டுக்களை தூவினேன்'' என்றார்.

அவர் மேலும் கூறுகையில், ''கம்யூனிஸ்ட் தலைவர்களில் பலர் பல கோடி சொத்து வைத்துள்ளனர். ஆனால் வெளியில் எளிமையானவர் போல வேஷம் போடுவார்கள். நான் அப்படி வாழ விரும்பவில்லை'' என்றும் தெரிவித்தார்.

சமரின் இந்த கருத்து திரிபுரா மாநில கம்யூனிஸ்டு தலைவர்களிடம் கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. மேலும் ஆளும் கம்யூனிஸ்டு கட்சிக்கு நெருக்கடியையும் ஏற்படுத்தியுள்ளது.

சமர்ஆச்சார்ஜி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று காங்கிரஸ் கட்சி கோரிக்கை விடுத்துள்ளது. 3 வார்டுகளில் கழிவறை கட்டியதன் மூலம் எப்படி ரூ.2½ கோடி சம்பாதிக்க முடியும் என்று காங்கிரஸ் தலைவர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.

இதற்கு திரிபுரா மாநில மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு தலைவர்களால் பதில் சொல்ல முடியவில்லை.

...

shared via

[Continue reading...]

அ.தி.மு.க விற்கு எதிராக திரும்பும் தேவர் இனம் , பாரளுமன்ற தேர்தலில் தோல்வியை தழுவுமா ? News to jeyalalitha

- 0 comments

நெல்லை தாது மணல் கடத்தல் விவகாரத்தில் வைகுண்ட ராஜன் கைது செய்யப்படாததை கணடித்து திருநெல்வேலி நகர் முழுவதும் சுவரொட்டி ஒன்று ஓட்டப்பட்டுள்ளது

அதில் கிராணைட் மோசடில் தேவருக்கு ஒரு நீதி !

தாது மணல் கடத்தலில் நாடாருக்கு ஒரு நீதியா ?

தாது மணல் கடத்தல் தலைவனை கைது செய் !

இல்லை எனில் பாருளுமன்ற தேர்தலில் அதிமுகவின்  ஓட்டு வங்கி திமுக அல்லது தேமுதிமுக  வுக்கு ஆதரவாக வாக்களிக்க தயார்

[Continue reading...]

அத்துமீறி நுழைந்த அமெரிக்க ஆயுத கப்பலுக்கும் தாது மணல் கடத்தல் கும்பலுக்கும் தொடர்பு Thoothukudi engineer suicide attempt in america armed ship

- 0 comments

தூத்துக்குடி கடல் பகுதியில் அத்துமீறி நுழைந்த அமெரிக்க ஆயுத கப்பலில் என்ஜினீயர் தற்கொலை முயற்சி Thoothukudi engineer suicide attempt in america armed ship

தூத்துக்குடி, அக். 20-

அத்துமீறி ஆயுதங்களுடன் வந்த அமெரிக்க கப்பலில் இருந்த கேப்டன் ஒருவரும், என்ஜினீயர் ஒருவரும் நேற்று கைது செய்யப்பட்டனர். இதில் கப்பலில் இருந்த என்ஜினீயர் திடீரென்று தற்கொலைக்கு முயற்சி செய்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

தூத்துக்குடி கடல் பகுதியில் அமெரிக்க நாட்டை சார்ந்த 'சீமோன் கார்டு' என்ற கப்பல் அத்துமீறி நுழைந்தது. இந்த கப்பலை கடந்த 12-ந்தேதி தூத்துக்குடி கடல் படையினர் மடக்கிப்பிடித்தனர். இந்த கப்பலில் 10 மாலுமிகள், 25 சிப்பந்திகள் என மொத்தம் 35 பேர் இருந்தனர். நவீனரக துப்பாக்கிகளும் தோட்டாக்களும் அவர்களிடம் இருந்தன.

தூத்துக்குடியில் இருந்து அந்த கப்பலுக்கு சட்ட விரோதமாக யாரோ சிலர் டீசல் சப்ளை செய்ததும் கண்டுபிடிக்கப்பட்டது.

இதுதொடர்பான வழக்கு கியூ பிரிவு போலீசாருக்கு மாற்றப்பட்டு துருவித்துருவி விசாரணை நடைபெற்றது.

அத்துமீறி ஆயுதங்களுடன் இந்திய கடற் பகுதிக்குள் நுழைந்த குற்றத்திற்காக, கப்பலில் இருந்த 35 பேரில் 33 பேர் நேற்று முன்தினம் அதிரடியாக கைது செய்யப்பட்டு, பாளையங்கோட்டை மத்திய ஜெயிலில் அடைக்கப்பட்டனர்.

கப்பலில் பராமரிப்பு பணிக்காக, கப்பலின் கேப்டன் உக்ரைன் நாட்டை சேர்ந்த டுட்னிக் வாலன்டைன், என்ஜினீயர் சிடோரெல்கோ வாலேரி ஆகிய 2 பேரை மட்டும் கப்பலில் இருக்க அனுமதித்து இருந்தனர்.

நேற்று மதியம் 1 மணி அளவில் கியூ பிரிவு போலீசார் மற்றும் சுங்க இலாகா அதிகாரிகள் அமெரிக்க கப்பலுக்கு சென்றனர். கப்பல் முழுவதும் தீவிர சோதனை நடத்தினார்கள். அங்கு இருக்கும் அறைகள் மற்றும் சாமான்கள் வைத்து இருக்கும் இடம் என அனைத்து பகுதிகளையும் சோதனை செய்தனர்.

மேலும் கேப்டன் டுட்னிக் வாலன்டைன், மாலுமி சிடோரெல்கோ வாலேரி ஆகியோரிடமும் போலீசார் தனித்தனியாக துருவித்துருவி பல கேள்விகளை கேட்டனர்.

அப்போது என்ஜினீயர் சிடோரெல்கோ வாலேரி, வேகமாக கப்பலின் மேல்பகுதிக்கு விரைந்து சென்றார். அங்கு இருந்த கொடிக்கம்பத்தில் கயிற்றை கட்டி தூக்குப்போட்டு தற்கொலைக்கு முயன்று இருக்கிறார். இதைக்கண்ட போலீஸ் இன்ஸ்பெக்டர் அரிஹரன், பாய்ந்து சென்று சிடோரெல்கோ வாலேரி தற்கொலை முயற்சியை தடுத்து நிறுத்திவிட்டார். இதற்குள் அங்கிருந்த போலீசார் சுற்றி வளைத்து தற்கொலைக்கு முயன்ற என்ஜினீயரை பிடித்தனர். இதனால் கப்பலில் திடீர் பரபரப்பு ஏற்பட்டது.

இதைத்தொடர்ந்து என்ஜினீயர் சிடோரெல்கோ வாலேரி மற்றும் கேப்டன் டுட்னிக் வாலன்டைன் ஆகிய 2 பேரையும் போலீசார் கைது செய்தனர்.

அவர்களை தூத்துக்குடி துறைமுகத்தில் உள்ள ஆஸ்பத்திரிக்கு அழைத்து வந்தனர். தற்கொலைக்கு முயன்ற என்ஜினீயர் சிடோரெல்கோ வாலேரிக்கு மருத்துவ பரிசோதனையும், முதல் உதவி சிகிச்சையும் அளிக்கப்பட்டது. பின்னர் 2 பேரையும் முத்தையாபுரம் போலீஸ் நிலையத்துக்கு கொண்டு சென்றனர்.

நேற்று இரவு 7-30 மணி அளவில் தூத்துக்குடி 2-வது மாஜிஸ்திரேட்டு (பொறுப்பு) அகிலாதேவியின் வீட்டுக்கு அழைத்துச்சென்றனர். நீதிபதி முன்னிலையில் 2 பேரையும் போலீசார் ஆஜர்படுத்தினார்கள். அவர்களை வருகிற 31-ந்தேதிவரை காவலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டார். அதைத்தொடர்ந்து 2 பேரும் போலீஸ் வாகனம் மூலம் பாளையங்கோட்டை மத்திய ஜெயிலுக்கு கொண்டு வரப்பட்டனர். அங்கு, ஏற்கனவே கப்பலில் இருந்து கைது செய்யப்பட்ட 33 பேர் அடைக்கப்பட்டு இருந்த பகுதியில் இந்த 2 பேரையும் அடைத்தனர்.

இதற்கிடையே அமெரிக்க கப்பலுக்கு டீசல் சப்ளை செய்ததது தொடர்பாக கியூ பிரிவு போலீசார் விசாரணையை முடுக்கி விட்டு உள்ளனர். தூத்துக்குடி வடக்கு ராஜா தெருவை சேர்ந்த படகு முகவர் மரிய அண்டன் வில்சன் (வயது 25), திரேஸ்புரம் மாதவ நாயர் காலனியை சேர்ந்த படகு டிரைவர் செல்லம், தூத்துக்குடி சிவந்தாகுளம் ரோட்டை சேர்ந்த இடைத்தரகர் வெங்கடேசன் ஆகியோரை கியூ பிரிவு போலீசார் நேற்று பிடித்தனர்.

பின்னர் 3 பேரையும் தனித்தனியாக ரகசிய இடங்களுக்கு அழைத்துச்சென்று விசாரணை நடத்தி வருகிறார்கள்.

தூத்துக்குடியில் எந்தெந்த பெட்ரோல் பங்குகளில் இருந்து டீசல் வாங்கப்பட்டது. அந்த டீசல் எந்த வழியாக? எப்படி கடலுக்குள் கொண்டு செல்லப்பட்டு அமெரிக்க கப்பலுக்கு சப்ளை செய்யப்பட்டது. இதற்காக எவ்வளவு பணம் கை மாறியது. எந்த வகையில் டீசல் பெறுவதற்கு தொடர்புகள் அமைந்தன. இதே போன்ற சம்பவங்கள் இதற்கு முன்னர் நடந்து இருக்கிறதா? இந்த கும்பலுக்கு வெளிநாட்டு சக்திகளுடன் தொடர்பு உள்ளதா? என்று கியூ பிரிவு போலீசார் விசாரணை நடத்தினர்.

3 பேர் அளிக்கும் தகவல்களில் ஏற்படும் முரண்பாடுகளை கொண்டு அடுத்தகட்ட விசாரணை நடத்தப்படும் என்று கியூ பிரிவு போலீஸ் அதிகாரிகள் தெரிவித்தனர். இதையொட்டி 3 பேரையும் கியூ பிரிவு போலீசார் கைது செய்யவும் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.

...

shared via

[Continue reading...]

சென்னை என்ஜினீயரிங் மாணவர் கொலையில் நண்பர் கைது Chennai engineering student murder friend arrest

- 0 comments

சென்னை என்ஜினீயரிங் மாணவர் கொலையில் நண்பர் கைது Chennai engineering student murder friend arrest

பெங்களூர், அக். 19–

சென்னையில் உள்ள ஒரு என்ஜினீயரிங் கல்லூரியில் படித்தவர் ராஜா (26). இவர் பெங்களூரில் உள்ள ஒரு நிறுவனத்தில் 'சாப்ட்வேர்' என்ஜினீயராக வேலை பார்த்து வந்தார்.

ராஜாவின் நண்பர் மந்திரலிங்கம் (26). இவரும் அதே நிறுவனத்தில் என்ஜினீயராக வேலை பார்த்து வந்தார். இருவரும் சென்னையில் ஒரே கல்லூரியில் ஒன்றாக படித்தவர்கள்.

பெங்களூர் புறநகர் பகுதியில் உள்ள ஒயிட்பீல்டு என்ற இடத்தில் வாடகை அறை எடுத்து இருவரும் தங்கி இருந்தனர். இந்த நிலையில் கடந்த மே மாதம் 28–ந்தேதி ராஜா அறையில் இறந்து கிடந்தார். இது குறித்து அவரது நண்பர் மந்திரலிங்கம் போலீசில் புகார் செய்தார்.

முதலில் ராஜா மாரடைப்பால் இறந்ததாக கருதப்பட்டது. சந்தேக மரணம் என்று வழக்குப்பதிவு செய்த போலீசார் அது குறித்து விசாரணை நடத்தி வந்தனர்.

பிரேத பரிசோதனையில் ராஜா மாரடைப்பில் இறக்கவில்லை. உள்காயம் உள்ளது. தலையில் தாக்கப்பட்டதற்கான அடையாளம் உள்ளது தெரிய வந்தது. எனவே அவர் கொலை செய்யப்பட்டுள்ளார் என்று டாக்டர்கள் அறிக்கை அளித்தனர்.

இதையடுத்து போலீசார் ராஜாவின் நண்பர் மந்திர லிங்கத்திடம் தீவிர விசாரணை நடத்தினார்கள். அப்போது மந்திரலிங்கம்தான் தன்னுடன் தங்கி இருந்த நண்பர் ராஜாவை அடித்து கொலை செய்தது தெரிய வந்தது.

மந்திரலிங்கத்துக்கு பெண்களுடன் தொடர்பு இருந்தது. இதை ராஜா கண்டித்தார். இதில் ஏற்பட்ட தகராறில் மந்திரலிங்கம், ராஜாவை தலையில் தாக்கி கொலை செய்துள்ளார். இந்த உண்மை 5 மாதங்களுக்கு பிறகு தெரிய வந்ததையடுத்து நண்பரையே கொலை செய்து விட்டு நாடகம் ஆடிய மந்திரலிங்கத்தை போலீசார் கைது செய்தனர்.

...

shared via

[Continue reading...]

ஷிர்டி சாய்பாபா அருள் வேண்டி ஆரம்பம்…! Ajith aarambam news

- 0 comments

ஷிர்டி சாய்பாபா அருள் வேண்டி ஆரம்பம்…!

சினிமாவில் ஓஹோவென ஒரு காலத்தில் வாழ்ந்தவர்கள் அதற்கப்புறம் நொடித்துப் போவதெல்லாம் சகஜம். இருந்தாலும் விடாமுயற்சியுடன் போராடி விட்ட இடத்தை பிடித்தவர்களும் இருக்கிறார்கள். அப்படி வெற்றிக் கோட்டுக்கு சமீபத்தில் வந்திருக்கிறார் ஏ.எம்.ரத்னம். அஜீத் நடிக்கும் ஆரம்பம் படத்தை நீண்ட இடைவெளிக்கு பிறகு தயாரித்திருக்கும் ரத்னம், இப்படத்தை வெளிக் கொண்டு வருவதற்குள் படாதபாடு பட்டுவிடுவார் போலிருக்கிறது. எதிர்ப்புகள் நாலாபுறத்திலிருந்தும் கடன் ரூபத்தில் வர, கையில் நம்பிக்கை என்னும் பேட்டுடன் அவற்றை விரட்டியடித்துக் கொண்டிருக்கிறார் அவர்.

சனிக்கிழமை தீபாவளி என்பதால் வழக்கம் போல வெள்ளிக் கிழமையில் இந்த வருட தீபாவளிப் படங்கள் வரப்போகிறது. ஆனால் தனது அலுவலகத்திலேயே சாய்பாபாவுக்கு கோவில் கட்டியிருக்கும் ஏ.ஆர்.ரத்னம், வியாழக்கிழமை சென்ட்டிமென்ட் பார்க்கிறாராம். பாபாவுக்கு உகந்த நாளான வியாழக்கிழமையிலேயே ஆரம்பம் வரப்போகிறது. ஒரு நாள் கலெக்ஷனை சுளையாக முதல் நாளே அள்ளிக் கொள்ளும் சூட்சுமம்தான் இது.

எதுவாக இருந்தாலும் தடைகளை கடந்து ஏ.எம்.ரத்னம் வெல்ல வாழ்த்துக்கள்.

shared via

[Continue reading...]

My Blog List

Popular Posts

Popular Posts

 
Copyright © . தினசரி செய்திகள் - Posts · Comments
Theme Template by BTDesigner · Powered by Blogger