Monday, 14 April 2014

குழந்தைக்கு பெயர் வைத்தது எப்படி? சிவகார்த்திகேயன்

- 0 comments


ஹாட்ரிக் வெற்றிக்கு பின், தமிழ் சினிமாவின் முன்னணி நட்சத்திரங்களின் பட்டியலில் இடம் பிடித்துள்ளார், சிவகார்த்திகேயன். அவரின் சந்தோஷத்தை அதிகரிக்கும் வகையில், சமீபத்தில், அவருக்கு பெண் குழந்தை பிறந்தது. இந்த குழந்தைக்கு, ஆராதனா என, பெயர் வைத்துள்ளதாக செய்திகள் வெளியாகி உள்ளன. இந்த பெயரை, நடிகர் தனுஷ் வைத்ததாக கூறப்பட்டது. 

ஆனால், இதுகுறித்து சிவ கார்த்திகேயன் கூறுகையில், என் மனைவி மற்றும் என் பெற்றோர் பெயர்களின் முதல் எழுத்துக்களை திருடி, ஆராதனா என, நானே பெயர் வைத்து விட்டேன். எப்பவுமே, புதிதாக யோசித்து பழக்கப்பட்ட நான், இந்த விஷயத்தில் மட்டும், எழுத்துக்களை திருடி பெயர் வைத்து விட்டேன் என்கிறார். 
[Continue reading...]

ஜூனியர் குஷ்புவா நான்? சந்தோஷத்தில் ஹன்சிகா

- 0 comments


சினிமா உலகத்தைச் சேர்ந்த பலரும் ஹன்சிகாவை, ஜூனியர் குஷ்பு என்கின்றனர். இதை, ஹன்சிகாவின் காதுபடவே சொல்ல, அதைக் கேட்டு மெய்சிலிர்த்துப் போகிறார். ஆனால், இதுகுறித்து, குஷ்புவின் கணவர், சுந்தர்.சி கூறுகையில், ஹன்சிகாவை, சின்ன குஷ்பு என்று சொல்வதை, என்னால் ஏற்க முடியவில்லை. அதே சமயம், சரியான நேரத்துக்கு ஸ்பாட்டுக்கு வருவது, சின்சியராக நடிப்பது போன்ற விஷயங்களில், குஷ்புவை ஒத்துப் போகிறார் என்கிறார். 

ஆனால், இதை அப்படியே ஹன்சிகாவிடம் திருப்பி விட்டால், குஷ்பு மேடம் சாயலில், நான் இருப்பதால், சிலர் என்னை, அப்படி அழைக்கின்றனர். ஒரு பெரிய நடிகையுடன் என்னை ஒப்பிடுவதால், அது, எனக்கு பெரிய சந்தோஷத்தை கொடுத்தது. ஆனால், நான், குஷ்பு போன்று சிறந்த நடிகை இல்லை. என் முன்னோடியான அவரை பின்பற்றுகிறேன். அதுதான் உண்மை என்கிறார் ஹன்சிகா. 
[Continue reading...]

காதல் கல்யாணத்துக்கு தற்காலிக முற்றுப்புள்ளி வைக்கும் ஹன்சிகா!

- 0 comments


Simbu-Hansika


சிம்புவுடனான காதல் செய்திகள் வெளியானபோது தனது மார்க்கெட் ஆட்டம் கண்டு விடும் என்றுதான் பயந்தார் ஹன்சிகா. ஆனால், சிம்புவுடன் காதல் என்றதும், இதெல்லாம் எங்கேநிலைக்கப்போகிறது என்று நினைத்தது விட்டார்களோ என்னவோ, கோலிவுட்டில் ஹன்சிகாவுக்கு வழக்கம்போல் படம் கொடுத்து வருகின்றனர்.

குறிப்பாக, அரண்மனை படத்தில் இதுவரை நடித்திராத அளவுக்கு முக்கியத்துவம் உள்ள வேடத்தில் நடிப்பதால் தனது கதாநாயகி அந்தஸ்து இன்னும உயரப்போவதாக உற்சாகத்தில் இருக்கிறார் ஹன்சிகா. மேலும், மார்க்கெட்டில் பிசியாக இருக்கும் பல ஹீரோக்கள் தங்கள் படங்களுக்கு ஹன்சிகாவை புக் பண்ணுமாறு வெளிப்படையாகவே கூறி வருவதால், தனக்கான மவுசு குண்டு மணி அளவுகூட குறையவில்லை என்று நினைக்கிறாராம் ஹன்சிகா.

அதனால், யாராது காதல் கல்யாணம் பற்றி பேச்செடுத்தால், இப்போது அதைப்பற்றி யோசிக்கவே எனக்கு நேரமில்லை. எனது முழு கவனமும் நடிப்பு மீதுதான் உள்ளது என்கிறாராம். அதோடு, எப்போது வேண்டுமானாலும், காதல் வரும், எப்போது வேண்டுமானாலும் கல்யாணம் செய்து கொள்ளலாம். ஆனால், சினிமாவில் கதாநாயகி வாய்ப்பு என்பது இப்போது மட்டும்தான் கிடைக்கும். அதனால்,. மனசை அலைய விடாமல், இப்போதைக்கு இதைப்பற்றி மட்டும்தான் யோசிக்க வேண்டும். அதை விடுத்து காதல் கல்யாணம் என்று தன்னை மறந்து சுற்றிக்கொண்டிருந்தால், வாழ்க்கையில் செட்டிலாக முடியாது என்று அடுத்த கேள்வி சிம்புவைப்பற்றி அவர்கள் கேட்பதற்கு முன்னமே எதிர்கேள்வி கேட்காமல் இருக்க முற்றுப்புள்ளி வைத்து விடுகிறாராம் ஹன்சிகா.
[Continue reading...]

பாம்பு நடனத்துக்குள் புகுந்த நிஜ பாம்பு!

- 0 comments

முகப்பேர் ஸ்ரீ கனக துர்கா என்ற பக்தி படம் ஒன்று தயாராகி வருகிறது. மகி, சரவணன் என்ற நியூபேஸ் ஹீரோக்களுடன் ஜான்வியும், திவ்யா நாகேசும் நடிக்கிறார்கள். ஜெயபால் சுவாமி டைரக்ட் செய்கிறார். முகப்பேரில் உள்ள கனக துர்கா கோவிலை சுற்றி கடந்த ஒரு மாதமாக ஷூட்டிங் நடந்து வருகிறது.

கடந்த சில தினங்களுக்கு முன்பு ஹீரோயின்கள் திவ்யா நாகேசும், ஜான்வியும் பாம்பு நடனமாடும் காட்சி படமாக்கப்பட்டது. டான்ஸ் மாஸ்டா சம்பத் ஹீரோயின்களை ஆட வைத்தார். "அஞ்சு தலை நாகம்மா கொஞ்சி விளையாடுதம்மா..." என்ற அந்த பாடலில் மகுடி இசை அதிகமாக இருந்தது. படப்பிடிப்பு நடந்து கொண்டிருக்கும்போது கோவிலுக்குள் இருக்கும் புற்றிலிருந்து நிஜ பாம்பு ஒன்று வெளியே வர ஷூட்டிங்கை வேடிக்ககை பார்த்தவர்களும், யூனிட் ஆட்களும் அலறி அடித்து ஓடினார்கள். பின்னர் கோவில் பூசாரி வந்து பாம்பை விரட்டிய பிறகே மீண்டும் படப்பிடிப்பு தொடங்கியது

[Continue reading...]

வெங்கட்பிரபுவிடம் வில்லன் வேடம் கேட்ட அஜீத்-விஜய்!

- 0 comments


அஜீத்தின் 50வது படமான மங்காத்தாவை இயக்கிய பிறகுதான் வெங்கட்பிரபுவுக்கு முன்னணி இயக்குனர் என்ற ஒரு அங்கீகாரம் கிடைத்தது. அதனால் அதை தக்க வைத்துக்கொள்ள வேண்டும் என்பதற்காக அடுத்தடுத்து மேலும் சில முன்னணி ஹீரோக்களை வைத்து படம் இயக்க ஆசைப்பட்டார். ஆனால், அது செட்டாகவில்லை. அதனால் கார்த்தியை வைத்து பிரியாணி படத்தை இயக்கியுள்ளார்.

இந்நிலையில், சமீபத்தில் தனது பிறந்த நாளின்போது அஜீத்தை வெங்கட்பிரபு சந்தித்ததாகவும், அப்போது தனது அடுத்த படத்தில் நடிக்க வேண்டும் என்று அவர் கேட்டுக்கொண்டதாகவும் செய்திக்ள பரவியுள்ளன. இதுகுறித்து வெங்கட் பிரபுவைக்கேட்டால், அவரை சந்தித்தது உண்மை. ஆனால் படம் குறித்து எதுவும் பேசிக்கொள்ளவில்லை என்கிறார்.

மேலும், அஜீத்- விஜய் இரண்டு பேரையும் சேர்த்து ஒரு படம் பண்ண வேண்டும் என்பது எனது நீண்ட நாள் விருப்பம். அதை நான் அவர்களிடம் சொன்னபோது இரண்டு பேருமே வில்லன் வேடத்தில்தான் நடிப்பேன் என்று சொன்னார்கள். ஆனால், அவர்கள் ரெண்டு பேரையும் சரிசமமான ஒரு கதையில் நடிக்க வைக்க வேண்டும் என்பதுதான் என்னுடைய நோக்கமாக உள்ளது. அதனால் அப்படியொரு நல்ல ஸ்கிரிப்ட் அமையும்போது கண்டிப்பா அவர்களிடம் ஓ.கே வாங்கி அதற்கான முயற்சியில் இறங்குவேன் என்கிறார் வெங்கட்பிரபு.
[Continue reading...]

அஜீத்-விஜய் பற்றி கருத்து சொன்ன ரஜினி!

- 0 comments


கோடம்பாக்கத்தில் அடுத்த சூப்பர் ஸ்டார் நடிகர் யார் என்ற போட்டி பலமாக நடந்து கொண்டிருக்க, அந்த போட்டி நடிகர்களான அஜீத்-விஜய் நடித்த படங்களையும், அவர்களது நடவடிக்கைகளையும் கூர்ந்து கவனித்துக்கொண்டிருக்கிறார் ரஜினி.

அதோடு, எந்த விழாக்களில் அவர்களை சந்தித்தாலும் தன் அருகே உட்கார வைத்து தோள் போட்டுக்கொண்டு போஸ் கொடுத்தும் வரும் ரஜினி, அவர்கள் நடித்த படங்களை தவறாமல் பார்த்து விட்டு, உடனே அவர்களுக்கு போன் செய்து தனது விமர்சனங்களையும் சொல்கிறார். இதனால், தங்களது படங்களை ரஜினி பார்த்து விட்டார் என்றால் அவர் தங்களது நடிப்பு பற்றி என்ன சொல்லப்போகிறாரோ என்ற எதிர்பார்ப்பில் இருக்கின்றனர் அஜீத்-விஜய் இருவரும்.

இந்த நிலையில், தமிழ்ப்புத்தாணடு தினமான நேற்று ஒரு சேனலில் பேட்டி அளித்த ரஜினியிடம், விஜய்-அஜீத்திடம் உங்களுக்கு பிடித்த விசயம் என்ன? என்று கேட்கப்பட்ட கேள்விக்கு, விஜய்யின் அமைதியும, அஜீத்தின் வெளிப்படையான பேச்சும் எனக்கு அவர்களிடம் அதிகம் பிடித்தவை என்று குறிப்பிட்டார்.

ரஜினி சொன்ன இந்த கருத்தினை அடுத்து விஜய்-அஜீத் வட்டாரம், ரஜினியை இன்னும் கொண்டாடத் தொடங்கியிருக்கிறது. விளைவு மேற்படி நடிகர்களின் ரசிகர்கள் மத்தியில் கோச்சடையானுககு அமோக வரவேற்பு கிடைக்கும் என்றும் தெரிகிறது.
[Continue reading...]

வாய்ப்பு தேடி அலையும் நடிகை

- 0 comments
Heroin waiting for a chance

உண்மைக்கு எதிரான படத்தில் சிகர இயக்குனரால் அறிமுகப்படுத்தப்பட்ட அந்த நடிகைக்கு கைவசம் படங்கள் எதுவும் இல்லை. ராமாயண ஹீரோவின் பெயரை தன் பெயருக்கு பின்னால் வைத்திருக்கும் நடிகை வாய்ப்பு இல்லாத சோகத்தில் பார்ட்டி பார்ட்டியாக அலைகிறாராம். அழகும், திறமையும் இருந்தும் வாய்ப்பு இல்லாமல் இப்படி ஆகிவிட்டாரே என்று கவலைப்படுகிறார்கள் உறவினர்களும், நண்பர்களும். சினிமா வேண்டாம் திரும்பி வந்துவிடு என்று மகளை அழைத்துக் கொண்டிருக்கிறார்கள் ஆஸ்திரேலியாவில் வாழும் பெற்றவர்கள்.
[Continue reading...]

வாரிசுகளின் காதல்: கமல் கவலை

- 0 comments


கமலஹாசனும், ரதியும் இணைந்து நடித்த ஏக் துஜே கேலியே 80ளில் சூப்பர் டூப்பர் ஹிட்டான இந்திப் படம். தமிழில் உல்லா ச பறவைகள் படத்தில் இணைந்து நடித்தனர். இப்போது இவர்களது வாரிசுகள் காதலித்து வருவதுதான் பாலிவுட்டில் லேட்டஸ்ட் பரபரப்பு

கமலஹாசனின் இளைய மகள் அக்ஷரா மும்பையில் அம்மா சரிகாவுடன் வசித்து வருகிறார். படம் இயக்கும் ஆசையில் உதவி இயக்குனராக பணியாற்றி வந்த அக்ஷரா நடிகையாகிவிட்டார். தற்போது தனுசுடன் இந்தியில் நடித்துக் கொண்டிருக்கிறார்.

இந்த நிலையில் அக்ஷரா, ரதியின் மகன் தனுஜ்வில்வானியை தீவிரமாக காதலித்து வரும் தகவல்கள் வெளியாகி உள்ளது. இந்தி மீடியாக்களில் இந்த செய்தி பரபரப்பாக வெளியான போதும் இதனை இருவருமே இதுவரை மறுக்கவில்லை. இருவரும் ஓட்டல், பார்ட்டி, பங்ஷன் என்று சுற்றி வருவதாக கூறப்படுகிறது.

இவர்களின் காதல் சரிகாவுக்கும், கமலுக்கும் பிடிக்கவில்லை. வளரும் நேரத்தில் காதலில் விழுந்து விட்டாளே என்ற கவலை இருவருக்குமே இருக்கிறதாம். இருவரும் அக்ஷரவை கண்டித்ததாகவும் கூறப்படுகிறது. ஆனால் சரிகா ஸ்ருதிஹாசன் போன்று மென்மையானவர் கிடையாது. தன்னுடைய முடிவில் யாரும் தலையிடக்கூடாது என்ற எண்ணம் கொண்டவர். அதனால் அவர் தன் காதலை தொடர்ந்து கொண்டிருப்பதாக மும்பை தகவல்கள் தெரிவிக்கிறது.



[Continue reading...]

பாலிவுட்டில் மீண்டும் பிசியான அசின்

- 0 comments

கஜினி இந்தி ரீ-மேக் மூலம், பாலிவுட்டில் நுழைந்த அசின், குறுகிய காலத்திலேயே, இந்தி சினிமாவின் பிரபல நடிகையாகி விட்டார். முன்னணி ஹீரோக்களும், அசின் பக்கம் சாய்ந்ததால், அங்குள்ள நடிகைகள், பலத்த அதிர்ச்சியடைந்தனர். ஆனால், பின் அசின் நடித்த சில படங்கள், படுதோல்வி அடைந்தன. அதனால், ஏறிய வேகத்திலேயே, அவரது மார்க்கெட் இறங்கியது. அக்கம் பக்கத்து மாநிலங்களில் தஞ்சம் தேடினார், அசின். எதிர்பாராத விதமாக, இந்தியில், அபிஷேக் பச்சனுடன், ஆல் இஸ் வெல் அக் ஷய் குமாருடன், ஷாகீன் போன்ற பட வாய்ப்புகள் கிடைக்கவே, மீண்டும், அசின் வட்டாரம் பரபரப்படைந்துள்ளது.

[Continue reading...]

இந்தியில் நடிக்க விரும்பாத அனுஷ்கா

- 0 comments



சூப்பர் என்ற தெலுங்கு படத்தில் அறிமுகமான அனுஷ்கா, அதைத் தொடர்ந்து தமிழ், தெலுங்கு படங்களில் மட்டுமே, எட்டு ஆண்டுகளாக நடித்து வருகிறார். தற்போது தான், 'ஜக்குதாதா என்ற கன்னட படத்தில், முதன் முதலாக நடிக்கிறார். இதுபற்றி, அவர் கூறுகையில், 'நான் பிறந்தது கர்நாடகத்தில் உள்ள, மங்களூர் தான் என்றபோதும், இதுவரை கன்னட படங்களில் நடிக்க வாய்ப்பு அமையாதது, மனதளவில் வருத்தமாக இருந்தது. இப்போது, அந்த வாய்ப்பு கிடைத்திருப்பதால் சந்தோஷமாக உள்ளது என்றார். 'அப்படியென்றால், அடுத்து இந்தி சினிமா பிரவேசம்தானா? என்று அனுஷ்காவைக் கேட்டால், 'அப்படியெல்லாம் எதுவும் இல்லை. என்னைப் பொறுத்தவரை தமிழ், தெலுங்கு படங்களில் நடிப்பதே, எனக்கு திருப்தியாக உள்ளது. இந்தி படங்களில் நடிக்க வேண்டும் என, எப்போதும் ஆசைப்பட்டது இல்லை என்கிறார்.

[Continue reading...]

மனீஷா கொய்ராலாவின் வாழ்க்கையும் சினிமாவாகிறது!

- 0 comments





தென்னிந்திய நடிகையான சில்க் ஸ்மிதாவின் வாழ்க்கை கதையை இந்தியில் த தர்ட்டி பிக்சர்ஸ் என்ற பெயரில் படமாக்கினர். ஆரம்பத்தில் கவர்ச்சி நடிகையின் வாழ்க்கையை படமாக்குவதா? என்று எதிர்ப்புகள் எழுந்த நிலையில், அதில் நடித்த வித்யாபாலனையும் சில அமைப்புகள் விமர்சித்தன. ஆனால் எதையும் பொருட்படுத்தாமல் சில்க் வேடத்தில் நடித்த வித்யாபாலனுக்கு சிறந்த நடிகைக்கான தேசிய விருது கிடைத்ததோடு அவரது கேரியரில் அது முக்கியமான படமானது. அதையடுத்து, அப்படத்தை சிலம்பாட்டம் சனாகானின் நடிப்பில் தமிழிலும், மலையாளத்திலும் படமாக்கினர்.


இந்த நிலையில், தற்போது பிரபல இந்தி நடிகையான மனீஷா கொய்ராலாவின் வாழ்க்கையையும் படமாக்கும் முயற்சி நடக்கிறது. இந்தியில் தயாராகும் இப்படம் தமிழ், தெலுங்கில் டப் செய்யப்பட உள்ளதாம்.

மேலும், மனீஷா கொய்ராலா சினிமாவில் நடிகையானது முதல், அவர் 2010ல் சாம்ராட் தஹால் என்ற தொழிலபதிபரை திருமணம் செய்து கொண்டது.பின்னர் இரண்டே வருங்களில் கருத்து வேறுபாடு காரணமாக அவரை விவாகரத்து செய்தது. அதையடுத்து, புற்றுநோயால் பாதிக்கப்பட்ட மனீஷா, அதை எதிர்த்து போராடிக் கொண்டிருப்பது வரையிலான முக்கிய அம்சங்கள் அப்படத்தில் இடம்பெறுகிறதாம். இப்படத்திலும் வித்யாபாலன்தான் நடிப்பார் என்று செய்திகள் பரவியபோதும், இன்னும அது உறுதிப்படுத்தப்படவில்லை.
[Continue reading...]

My Blog List

Popular Posts

Popular Posts

 
Copyright © . தினசரி செய்திகள் - Posts · Comments
Theme Template by BTDesigner · Powered by Blogger