ஆம் நண்பர்களே இது எனது "௪௦௦"வது [[400]] பதிவு....!!! பதிவுலகம் வந்து இரண்டு வருடம் தாண்டிவிட்டேன், இப்போது எனக்கு உலகெங்கும் நண்பர்கள், நெஞ்சம் இனிக்கிறது கண்கள் பனிக்கிறது உங்கள் மேலான ஆதரவுக்கு மிக்க நன்றி, தமிழால் ஒன்றிணைந்தோம் தேன்தமிழுக்காய் வாழுவோம் நன்றி....!!! இன்னும் ஆதரவு தருவீர்கள் என்ற நம்பிக்கையில் தொடர்கிறேன் பதிவுகளை நன்றி...!!!
-------------------------------------------------------------------------------------------------
இந்த வருடத்தில் நான் பெற்ற இன்பம் துன்பங்களை தொடராக எழுதி, அந்த தொடர் அழைப்புக்கு [[விடமாட்டாங்களோ]] என்னையும் அழைத்த நண்பன் ராஜாவும், மற்றும் என் தங்கச்சி ராஜி'யின் அழைப்பையும் ஏற்று இந்தப்பதிவு....
படித்ததில் பிடித்த புத்தகம் : சொன்னால் நம்புங்க ஒரேநாளில் நூறுக்கும் மேற்ப்பட்ட பதிவுகளை படிப்பதால் [[கமெண்ட்ஸ் போடுவதால்]] புத்தகம் சுத்தமாக இந்த வருடம் வாசிக்க முடியாதது வருத்தமே...!!
பிடித்த பாடல் : காஞ்சனா பாடல்கள் எல்லாம்....
ரசித்த படம் : காஞ்சனா, எழாம் அறிவு [[போதி தர்மனை காட்டியமைக்கு]]
[[பன்னிகுட்டி மன்னிச்சு]]
உருகிய படம் : வேலாயுதம் [[அவ்வ்வ்வ்வ் முடியலை]]
[[கீழே போட்டுறாதேடா தங்கத்தை]]
சிரித்த படம் : அதே வேலாயுதம்தான் தமிழனின் தலை எழுத்தை எண்ணி....!!!
சென்ற இடம் : திருநெல்வேலி பதிவர் சந்திப்பும், நண்பன் சிபி, கோமாளி'செல்வாவுடன் சுற்றுலா போன குற்றாலம்.
வாங்கிய பொருள் : அதான் எல்லாருக்குமே தெரியுமே ஹி ஹி அமெரிக்கன் சோனி லேப்டாப்...!!!
புதிய நண்பர்கள் :
பேசியவர்கள் : வீடு"சுரேஷ், நக்கீரன், மனசாட்சி பஜ்ஜிகடை, தங்கச்சி ராஜி, சம்பத், மெட்ராஸ் பவன் [[ஏற்கனவே நண்பனாக இருந்தாலும் போன்ல இப்போதான் பேசினேன்]] இன்னும் நிறைய பேர் இருக்காங்க....
பேசாதவர்கள் : கேபிள் சங்கர் அண்ணன், டைரக்டர் செல்வகுமார், துபாய் ராஜா, பன்னிகுட்டி, டெரர் குரூப்ல கொஞ்சம் பேர் இன்னும் இருக்காங்க......
சாதனை : உலகம் முழுவதும் நண்பர்கள் உதாரணம், போன தடவை நான் ஊர் வந்தபோது எனது போன் நம்பரை பதிவுலக நண்பர்களுக்கு கொடுத்துட்டு, தூங்கமுடியாம நான் பட்ட அன்பு தொல்லை, என் வீட்டம்மா மிரண்டு போனாள் பாவம், உலகெங்கும் இருந்து போன் வந்துட்டே இருந்தது இதில் நண்பன் நிரூபனும் உண்டு, நான் யாருன்னு தெரியுமா...? என்னை யாருன்னு உனக்கு தெரியுமான்னு போட்டு கலாசி எடுத்த நண்பர்களை பெற்றது மகா சாதனை...!!!
மிக பெரிய சந்தோஷம் : ஆபிசரின் நட்பும், நண்பன் கே ஆர் விஜயனின் நட்பும், தங்கை கல்பனாவின் அளவில்லா பாசமும், ராஜி தங்கச்சியின் அன்பும், விக்கி, சிபி, இம்சை அரசன், நிரூபன், காட்டான், சிவகுமார் [[மெட்ராஸ் பவன்]] சம்பத், வீடு' சுரேஷ் யப்பா சொல்லிட்டே போகலாம், என்ன......குடும்ப உறவுகள் போல மனசுக்கு ஆறுதலா இருக்கிறார்கள் அதைவிட வேறென்ன சந்தோசம் வேணும் சொல்லுங்க...?
வருத்தம் : வருத்தம் என்று சொல்வதை விட கவலைன்னு சொல்லலாம், என் நண்பனின் மரணம், என் மகனின் நண்பனின் மரணம், நண்பர்களின் அக்காவும், தங்கையுமான லட்சுமியின் மரணம், எங்கள் சபை போதகரின் மரணம், நம்ம ஆபிசரின் அம்மாவின் இயற்கை எய்தல்.
ஆச்சர்யம் : பதிவுலகில் வந்து இரண்டு ஆண்டுக்குள் இத்தனை நண்பர்களை சம்பாதித்தது....!!!
டிஸ்கி : ஒ தொடர் பதிவுக்கு ஆளை கூப்பிடனுமோ.....ஓகே ஓகே....
கள்ளப்பட்டி கருப்பசாமி
வண்ணார்பேட்டை வணங்காமுடி
ஜெயிலர் ஜென்னிஸ் பவுல்
மும்பை டான் [[ஆமா இவங்கல்லாம் யாரு]]
டிஸ்கி : நான் ரசித்த பதிவர்களுக்கு [[பதிவுகளுக்கு]] நாஞ்சில்மனோ அவார்ட் ரெடி ஆகிக்கொண்டு இருப்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்து கொள்கிறேன், புத்தாண்டு அன்று வெளிவருகிறது முதல் பாகம்....!!!
டிஸ்கி : நாஞ்சில்மனோ 400 என கிராபிக்ஸ் செய்து தந்த நண்பன் "வீடு"சுரேஷ்குமாருக்கு நன்றி...!!!