ஐ.ஏ.எஸ் அதிகாரி வீட்டில் விபச்சாரம் செய்த ஐந்து பிரபல நடிகைகள் அதிரடி கைது. மும்பையில் பெரும் பரபரப்பு.
by abtamil
Tamil newsToday,
மும்பை ஐ.ஏ.எஸ் அதிகாரிக்கு சொந்தமான ஒரு வீட்டில் ஐந்து பிரபல நடிகைகள் விபச்சாரம் செய்ததாக மும்பை போலீஸார் அதிரடியாக கைது செய்த விவகாரம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மும்பையில் உள்ள ஒரு வீட்டில் பாலிவுட் நடிகைகள் சிலர் ஹை கிளாஸ் விபச்சாரத்தில் ஈடுபட்டுவருவதாக மும்பை போலீஸாருக்கு வந்த ரகசிய தகவலை அடுத்து, அதிரடியாக சோதனை செய்த போலீஸார் ஐந்து பிரபல பாலிவுட் நடிகைகளை கைது செய்துள்ளனர். கைது செய்யப்பட்ட நடிஐகள் அனைவரும் டெலிவிஷன் தொடர்கள் மற்றும் போஜ்புரி மொழிகளில் நடித்துவரும் பிரபல நடிகைகள் என தெரியவந்துள்ளது. மும்பையில் உள்ள மீரா டவர் என்ற அபார்ட்மெண்ட் வீட்டில் ஐ.ஏ.எஸ் அதிகாரி ஒருவரின் வீட்டை வாடகைக்கு எடுத்த நடிகைகள் அதில் பெரும் பணக்காரர்களை வரவழைத்து விபச்சாரம் செய்து வந்ததாக விசாரணையில் தெரிய வந்துள்ளது. இந்த ஐந்து நடிகைகளுக்கு இமிதியா கான் என்பவர் புரோக்கராக செயல்பட்டு வந்துள்ளதாகவும் அவரை தேடும் பணி முடுக்கிவிடப்பட்டுள்ளது என்றும் போலீஸார் தெரிவித்தனர். மும்பையில் உள்ள மீரா டவுன் பகுதி முழுவதும் ஐ.ஏ.எஸ் அதிகார்கள் போன்ற உயரதிகாரிகள் வசிக்கும் இடம் என்பதால் விபச்சாரம் செய்ய பாதுகாப்பான பகுதி என முடிவு செய்து அந்த பகுதியில் வீட்டை வாடகைக்கு எடுத்துள்ளனர் அந்த ஐந்து நடிகைகள். அந்த பகுதிக்கு ஒரு வாடிக்கையாளர் போல வேடம் அணிந்து சென்ற போலீஸ் ஒருவரிடம் முதலில் ரூ.1 லட்சம் பேரம் பேசிய நடிகைகள், பின்னர் ரூ.25000க்கு உல்லாசமாக இருக்க ஒப்புக்கொண்டதாக போலீஸார் தெரிவித்தனர். கைது செய்யப்பட்ட நடிகைகள் பெயர் மற்றும் விபரங்களை தெரிவிக்க போலீஸார் மறுத்துவிட்டனர்.
Show commentsOpen link