Wednesday, 21 December 2011

போலியோ வைரஸை பரப்பும் பாகிஸ்தான்!

- 0 comments
 
 
 
பாகிஸ்தானில் இருந்து இந்தியாவுக்கு போலியோ வைரஸ் பரவும் அபாயம் உள்ளதால் அதை தடு்கக நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக மேற்கு வங்க சுகாதாரத் துறை அமைச்சர் சுதிப் பந்தோபத்யாய ராஜ்யசபாவில் தெரிவித்தார்.
 
இந்த ஆண்டு பாகிஸ்தானில் 173 பேருக்கு போலியோ பாதிப்பு ஏற்பட்டுள்ளது. அதற்கு மாறாக இந்தியாவில் ஒரே ஒருவருக்கு போலியோ பாதிப்பு ஏற்பட்டுள்ளது. பாகிஸ்தானில் இருந்து இந்தியாவுக்கு போலியோ வைரஸ் பரவும் அபாயம் உள்ளதா என்று ராஜ்யசபாவில் கேள்வி எழுப்பப்பட்டது.
 
அதற்கு பதில் அளித்த மேற்கு வங்க சுகாதாரத் துறை அமைச்சர் சுதிப் பந்தோபத்யாய கூறியதாவது,
 
பாகிஸ்தான் போலியோ வைரஸை பரப்பி வருவதை உலக சுகாதார அமைப்பு உறுதிபடுத்தியுள்ளது. இந்த ஆண்டு சீனாவில் கண்டறியப்பட்ட போலியோ வைரஸ் தற்போது பாகிஸ்தானில் பரவி வரும் வைரஸ் வகையைச் சேர்ந்ததாகும். பாகிஸ்தானையொட்டியுள்ள அம்ரித்சர், பஞ்சாப், ராஜஸ்தான், ஜம்மு காஷ்மீர் மற்றும் குஜராத்தில் உள்ள சுகாதார மையங்களில் தீவிர சோதனை நடத்தப்பட்டு வருகிறது.
 
இந்திய எல்லைக்குள் வரும் குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து கொடுக்க ஏற்பாடு செய்யப்படுகிறது என்றார்.
 
கடந்த ஆண்டு பாகிஸ்தானில் 134 பேரை போலியோ தாக்கியது. இந்தியாவில் 41 பேருக்கு போலியோ பாதிப்பு ஏற்பட்டது. போலியோ இல்லா இந்தியா என்ற இலக்கை அடைய முயற்சி மேற்கொள்ளப்பட்டு வரும் நிலையில் பாகிஸ்தானில் இருந்து போலியோ வைரஸை பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது.



[Continue reading...]

பெண்களுடன் ஆபாசமாக நடனம்: ஷாருக் மீது கேரள போலீஸ் வழக்கு

- 0 comments
 
 
 
கேரளாவில் நகைக்கடையை திறப்பு விழாவிற்கு சென்ற போது துணை நடிகைகளுடன் ஆபாச நடனம் ஆடியதாக இந்தி நடிகர் ஷாருக்கான் மீது கேரளா போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
 
கேரளாமாநிலம் கொச்சியில் டிசம்பர் 4ம் தேதி ஜவுளிக்கடை திறப்புவிழா நடைபெற்றது. அதில் பங்கேற்ற இந்தி நடிகர் ஷாருக்கான் சமீபத்தில் வெளியான ரா ஒன் பாடல் ஒன்றுக்கு துணை நடிகைகளுடன் இணைந்து ஆடினார். அந்த நடனம் ஆபசமாக இருந்ததாக புகார் எழுந்தது. இதனையடுத்து கேரள போலீசார் ஆபாச நடனம் ஆடிய ஷாருக்கான் மீதும், அந்த ஜவுளிக்கடையின் மீதும் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.



[Continue reading...]

சசியின் அண்ணியை மட்டும் ஜெ. விட்டு வைத்தது ஏன்?

- 0 comments
 
 
 
 
 
சசிகலா குடும்பத்தையே விரட்டி விட்ட முதல்வர் ஜெயலலிதா அவரது குடும்பத்தைச் சேர்ந்த 2 பேரை மட்டும் விட்டு வைத்துள்ளார். அவர்கள் சசிகலாவின் அண்ணி இளவரசி மற்றும் இளவரசியின் சம்பந்தியான கலியபெருமாள் ஆகியோர்தான்.
 
ஜெயலலிதாவின் இந்த விதிவிலக்கு அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது. ஆனால் இதிலும் ஒரு சுவாரஸ்யமான கதை இருக்கிறதாம்.
 
இளவரசிக்கும், சசிகலாவுக்கும் இடையே அவ்வளவாக நெருக்கம் இல்லையாம். அதாவது வழக்கமாக தமிழக குடும்பங்களில் காணப்படும் நாத்தனார் சண்டைதான்.
 
போயஸ்கார்டனில்தான் இளவரசி தொடர்ந்து வசித்து வருகிறார். இவரது பெயரில்தான் சிறுதாவூர் பங்களா உள்ளிட்ட பல சொத்துக்கள் உள்ளதாம். இதுகுறித்து அவருக்கும் சசிகலாவுக்கும் இடையே அவ்வப்போது புகைச்சல் வெடிக்குமாம். மேலும் ஜெயலலிதா இளவரசி மீது தனிப் பிரியம் வைத்திருப்பாராம். இதும் கூட சசிக்குப் பிடிக்காதாம்.
 
சமீபத்தில் கூட பெங்களூர் கோர்ட்டுக்கு சசிகலாவும், இளவரசியும் போனபோது இருவரும் பேசிக் கொள்ளவில்லையாம். இத்தனைக்கும் இருவரும் ஒரேகாரில்தான் போனார்களாம். அதேசமயம், கோர்ட்டுக்கு வந்திருந்த சுதாகரனிடம் மட்டும் சசிகலா நன்றாகப் பேசினாராம்.
 
சசிகலாவை இளவரசிக்குப் பிடிக்காது என்ற ஒரே அம்சம் ஜெயலலிதாவுக்குப் பிடித்துப் போய் விட்டதாம். இதனால்தான் எதிரியின் எதிரியாயிற்றே என்ற ஒரே காரணத்திற்காக இளவரசியை தன்னுடனேயே வைத்துள்ளாராம். அதேபோல இளவரசியின் சம்பந்தியான கலியபெருமாள் மீதும் ஜெயலலிதா நல்ல மதிப்பு வைத்துள்ளார்.
 
காவிரி டெல்டா மாவட்டங்களில் பல முக்கிய கட்சி நிர்வாகிகளை நியமிப்பதில் கலியபெருமாள் ஜெயலலிதாவுக்கு பெருமளவில் உதவியுள்ளாராம். இவருக்கு சசிகலாவைப் பிடிக்காதாம். சசிகலாவின் ஆதிக்கத்தையும் மீறி செயல்பட்டு வந்தவர் என்பதால் இவருக்கும் ஜெயலலிதாவிடமிருந்து விதி விலக்குக் கிடைத்துள்ளதாம்.
 
அதேபோல தினகரின் மனைவியான அனுராதா மீதும் இதுவரை நடவடிக்கை எதுவும் பாயவில்லை. இவர்தான் ஜெயா டிவியின் நிர்வாக இயக்குநராக இருக்கிறார். இவர் மீது ஏன் நடவடிக்கை பாயவில்லை என்று தெரியவில்லை.



[Continue reading...]

சசிகலா நீக்கம் எதிரொலி - சோவின் துக்ளக் அலுவலகத்துக்கு போலீஸ் பாதுகாப்பு!!

- 0 comments
 
 
 
 
 
அதிமுகவிலிருந்தும் போயஸ் தோட்டத்திலிருந்து சசிகலா வெளியேற்றப்பட்டதைத் தொடர்ந்து மூத்த பத்திரிகையாளர் சோ எஸ் ராமசாமியின் அலுவலகத்துக்கு கூடுதல் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
 
ஜெயலலிதாவிடமிருந்து சசிகலாவைப் பிரித்து வெளியேற்றியதில் துக்ளக் ஆசிரியர் சோவின் பங்கு பெரிது என மீடியாவில் வெளிப்படையாகவே விவாதிக்கப்பட்டு வருகிறது.
 
இதுகுறித்து சமீபத்தில் அவரிடம் நாளிதழ் ஒன்று கேள்வி எழுப்பிய போதும், அதை மறுக்கவில்லை சோ. "என் பங்களிப்பு இருந்திருந்து, அது நல்லதென்றால் பாராட்டுங்கள். கெடுதல் என்றால் திட்டிக் கொள்ளுங்கள்," என்றே கூறியுள்ளார்.
 
சசிகலா போயஸ் தோட்டத்திலிருந்து வெளியேற்றப்பட்டபோது வேதா இல்லத்தில் சோவும் இருந்தார் என்றும் ஒரு தரப்பினர் கூறுகின்றனர்.
 
இதனால் சசிகலா ஆதரவாளர்கள் கோபம் முழுவதும் சோ மீது திரும்பியுள்ளதாகக் கருதப்படுகிறது.
 
சென்னை கிரீன்வேஸ் சாலையில் உள்ளது சோவின் துக்ளக் அலுவலகம். கடந்த திமுக ஆட்சியில் இந்த அலுவலகம் எந்தப் பரபரப்புமின்றி அமைதியாகக் காணப்பட்டது. ஆட்கள் நடமாட்டம், போலீஸ் தலைகள் எதையும் அங்கே பார்க்க முடியாது.
 
ஆனால் ஜெயலலிதா ஆட்சிக்கு வந்ததும், சோவின் அலுவலகத்துக்கு விசேஷ அந்தஸ்து கிட்டியது. புதிதாக போலீஸ் பாதுகாப்பு தரப்பட்டது. இரண்டு காவலர்கள், ஒரு அதிகாரி என மிதமான பந்தோபஸ்து அளிக்கப்பட்டது.
 
முதல்வர் பதவியேற்பு விழா, முக்கிய நிகழ்ச்சிகளில் சோவும் உடன் இருந்தார். எனவே, ஆளுங்கட்சியின் முக்கிய பிரமுகர்கள் அவ்வப்போது வந்து போகும் இடமாக சோ அலுவலகம் காட்சியளிக்கத் தொடங்கியது.
 
இப்போது சசியின் வெளியேற்றத்தின் பின்னணியில் முழுக்க முழுக்க சோவே இருப்பதாக கருதப்படுவதால், அவரது அலுவலகத்துக்கு கூடுதல் போலீஸ் பாதுகாப்பு அளிக்கப்பட்டுள்ளது.
 
இதுகுறித்த துக்ளக் ஆசிரியர் சோஅளித்த பதில்:
 
"போலீஸ் பாதுகாப்பு அதிகப்படுத்தப்பட்டிருப்பது உண்மைதான். ஆனால் அதன் பின்னணி என்று ஒன்றுமில்லை. அதிமுக ஆட்சிக்கு வந்தபிறகு துக்ளக் அலுவலகத்துக்கு போலீஸ் பாதுகாப்பு கொடுத்தார்கள். இப்போது ஓரிரு அதிகாரிகள் கூடுதலாக வருகிறார்கள் என்று நினைக்கிறேன். இதில் விசேஷமாக ஒன்றுமில்லையே!" என்றார்.



[Continue reading...]

பிரதியூஷா கற்பழித்துக் கொல்லப்பட்ட வழக்கு: மாட்டுவாரா சித்தார்த் ரெட்டி ?

- 0 comments
 
 
பிரபல தெலுங்கு நடிகை பிரதியூஷா கற்பழித்துக் கொல்லப்பட்ட வழக்கில் விசாரணை முடிந்து தீர்ப்பு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. இந்த வழக்கில் பிரதியூஷாவை கொலை செய்ததாக குற்றம்சாட்டப்பட்ட சித்தார்த் ரெட்டிக்கு தண்டனை கிடைக்குமா என்ற கேள்வி எழுந்துள்ளது.
 
தமிழில் முரளி ஜோடியாக மனுநீதி, கடல் பூக்கள் படங்களில் நடித்தவர் பிரதியூஷா. கடந்த 2002-ல் பிரதியூஷா ஐதராபாத்தில் காரில் பிணமாக கிடந்தார். அவர் தற்கொலை செய்து கொண்டதாக போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.
 
மருத்துவ பரிசோதனையில் பிரதியூஷா பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டிருந்தது தெரிய வந்தது. இதையடுத்து அதை கொலை வழக்காக மாற்றினார்கள். கற்பழித்து பிரதியூஷாவை கொன்று இருப்பதாக கூறப்பட்டது.
 
பிரதியூஷாவுடன் கவலைக்கிடமான நிலையில் அவரது காதலன் சித்தார்த் ரெட்டி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். பிரதியூஷாவை சித்தார்த் கொலை செய்து விட்டதாக செய்திகள் வெளியாகின. ஆனால் சித்தார்த் குணமாகி வீடு திரும்பினார்.
 
இந்த வழக்கில் மற்ற விவரங்கள் இதுவரை தெரியாமல் இருந்தது. பிரதியூஷா கொலை செய்யப்பட்டதாகவும் கொலையாளிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரியும் அவரது தாயார் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார்.
 
இந்த வழக்கில் தொடர்ந்து விசாரணை நடந்து வந்தது. இரு தரப்பினரிடம் விசாரணை நடத்தப்பட்டது. தற்போது விசாரணைகள் முடிந்து தீர்ப்பை நீதிபதி நிறுத்தி வைத்து உத்தரவிட்டுள்ளார்.
 
பிரதியூஷா கொலையில் சித்தார்த் மாட்டுவாரா என்பது இந்தத் தீர்ப்பில் தெரியவரும்.



[Continue reading...]

கேரளத்தவர்களுக்கும் சிங்களவர்களுக்கும் என்ன வித்தியாசம்?-நாஞ்சில் சம்பத் கேள்வி

- 0 comments
 
 
தேவிகுளம், பீர்மேடு முன்பு தமிழகத்தில் இருந்ததை பிரதமர் நேரு கேரளாவிற்கு கொடுக்கும்படி சொன்னதால், அது பிரித்துக்கொடுக்கப்பட்டது. அங்கே லட்சணக்கணக்கில் தமிழர்கள் வாழ்கிறார்கள். ஆனால் கேரள அரசோ, 119 சிறைச்சாலைகளில் உள்ள கைதிகளை கொண்டு வந்து, அங்கு குடியேற்றியது. உனக்கும் சிங்களவனுக்கும் என்ன வித்தியாசம். நீங்கள் விரதம் இருந்த ஐயப்ப சாமிகளை அடித்து தாக்குகின்றீர்களே, இந்தியாவில் இதுபோல் எங்காவது நடந்தது உண்டா என்று கேட்டுள்ளார் மதிமுக கொள்கை விளக்க அணி செயலாளர் நாஞ்சில் சம்பத்.
 
செங்கோட்டையில் இன்று கேரளா செல்லும் பாதையில் 500க்கும் மேற்பட்டோர் முற்றுகைப் போராட்டத்தில் ஈடுபட்டனர். முன்னதாக செய்தியாளர்களிடம் பேசிய நாஞ்சில் சம்பத் பேசுகையில்,
 
தேவிகுளம், பீர்மேடு முன்பு தமிழகத்தில் இருந்ததை பிரதமர் நேரு கேரளாவிற்கு கொடுக்கும்படி சொன்னதால், அது பிரித்துக்கொடுக்கப்பட்டது. ஆனால் அங்கே லட்சணக்கணக்கில் தமிழர்கள் வாழ்கிறார்கள். ஆனால் கேரள அரசோ, 119 சிறைச்சாலைகளில் உள்ள கைதிகளை கொண்டு வந்து, அங்கு குடியேற்றியது. உனக்கும் சிங்களவனுக்கும் என்ன வித்தியாசம்.
 
நீங்கள் விரதம் இருந்த ஐயப்ப சாமிகளை அடித்து தாக்குகின்றீர்களே, இந்தியாவில் இதுபோல் எங்காவது நடந்தது உண்டா. ஒரு எப்ஐஆர் போட்டது உண்டா.
 
இந்தியாவே உள்துறை அமைச்சர் கட்டுப்பாட்டில் தான் இருக்கிறது. கேரளாவில் என்ன நடக்கிறது என்று கேட்டாயா. உச்சநீதிமன்றத்தை மதிக்கவில்லையே. இதைப்பற்றி ஒரு வார்த்தையாவது மத்திய அரசு கேட்டிருக்குமா.
 
சிந்து நதிநீர் பங்கீட்டில் இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் எந்த பாகிஸ்தான் தெரியுமா இந்தியாவின் கட்டுமானத்தையே அசைக்க நினைத்த அந்த பாகிஸ்தானுக்கும் இந்தியாவுக்கும் சிந்து நதிநீர் பங்கீட்டில் எந்த பிரச்சனையும் இல்லை.
 
சபரிமலை சாஸ்தாவை பிரபலப்படுத்தியவரே பி.டி.ராஜன் என்கிற தமிழர்தான். தமிழகத்தில் 30 லட்சம் கேரள மலையாளிகள் ஆரோக்கியமாகவும், பாதுகாப்பாகவும் இருக்கிறார்கள். அவர்கள் அன்றாடம் பயன்படுத்தும் அந்த தண்ணீர் அளவையாவது கொடுங்கள்,.
 
நாங்கள் கேட்பது எங்கள் உரிமையைத்தான். சாது மிரண்டால் காடு கொள்ளாது. நாங்கள் சாக்கடை புழுக்கள் அல்ல. சரித்திர சக்கரங்கள். அதை உனக்கு உணர்த்துவோம் என்றார் சம்பத்.



[Continue reading...]

'...அப்படியென்றால் ஜெ ஒன்றும் தெரியாதவரா?'

- 0 comments
 
 
 
 
 
எந்த காரியத்துக்கும் ஒரு காரணம் இருக்கும்... எந்த வினைக்கும் ஒரு எதிர்வினையுமிருக்கும்.
 
அப்படி கிளம்பியிருக்கும் எதிர்வினை...
 
''சசிகலா மோசமானவர்... மோசடியானவர் என்பதாகவே இருக்கட்டும்.... 25 ஆண்டுகள் அந்த மோசடிக்காரருடன் சேர்ந்திருந்ததால், சசிகலாவின் மோசடிகள் அனைத்துக்கும் முதல்வர் ஜெயலலிதாவும் பொறுப்பாளர்தானே?
 
என்னமோ ஜெயலலிதா ஒன்றுமே தெரியாத அப்பாவி போலவும், சசிகலா மற்றும் குடும்பத்தினரால்தான் அவர் முழுமையாக மோசடி செய்யப்பட்டதாகவும் கூறுவது எத்தனை அபத்தம். அப்படிப் பார்த்தால் ஜெயலலிதாவுக்கு உண்மையிலேயே ஒன்றுமே தெரியாதா?...''
 
-என்பதுதான் சசிகலாவுக்கு ஆதரவாகக் கிளம்பியிருக்கும் வாதம்!
 
இன்னொரு பக்கம் இப்போதைய ஜெயலலிதா நடவடிக்கையை வைத்து ஜெயலலிதாவை புனிதராக்கவும் சசிகலாவை வில்லன் கேரக்டர் போலவும் மாற்றும் முயற்சியில் சசிகலா எதிர்ப்பு ஊடகங்கள் மும்முரமாக இருப்பதாகவும் ஒரு தரப்பு அரசியல் விமர்சகர்கள் கருத்து வெளியிட்டுள்ளனர்.
 
இவர்கள் எழுப்பும் கேள்விகளுக்கு ஜெயலலிதாவால் மட்டுமல்ல, அவரது மந்திராலோசனையில் பிரதானமாக இடம் பெற்றுள்ள அந்த மூத்த பத்திரிகையாளராலும் கூட பதில் சொல்ல முடியாது!.
 
சசிகலா தவறானவர் என்பது 25 வருடங்கள் கழித்துதானா முதல்வர் ஜெயலலிதாவுக்கு தெரிந்தது?.
 
அப்படியெனில் 1991-ம் ஆண்டு ஆட்சிக்கு வந்ததிலிருந்து இருவரும் இணைந்தே செய்த தவறுகளுக்கு யார் பொறுப்பேற்பது? சொத்துக் குவிப்பு வழக்கு என்பது சசிகலா குடும்பத்தினர் மீது மட்டுமில்லையே... அதில் பிரதான குற்றவாளியே முதல்வர் ஜெயலலிதாதானே!.
 
சசிகலாவுடன் இணைந்து ஜெயலலிதா வாங்கிக் குவித்த சொத்துக்கள் எந்த கணக்கில் சேரும்? சிறுதாவூர், கொடநாடு, பையனூர்... எஸ்டேட்டுகள் என அத்தனை சொத்துக்களும் சசிகலா பெயரில் அல்லது அவரது உறவினர்கள் பெயர்களில் பதிவு செய்யப்பட்டது எதனால்? ஜெயலலிதாவின் நம்பிக்கையானவராக அவர் இருந்ததால் தானே?.
 
கொடநாடு எஸ்டேட் யாருடையது என்று கேட்டால், அது சசிகலாவுக்குச் சொந்தமானது என்கிறார் முதல்வர் ஜெயலலிதா. ஒருவேலையும் செய்யாத, முன்னாள் வீடியோ கடை உரிமையாளர் ஒருவருக்கு இத்தனை பெரிய எஸ்டேட், அரண்மனைக்கு நிகரான எஸ்டேட் பங்களா எப்படி சொந்தமானது? அந்த பங்களாவை தமிழக அரசின் தற்காலிக தலைமைச் செயலகமாகவே மாற்றி வைத்துள்ளது எப்படி?.
 
ஜெ-சசி இருவரும் இணைந்தே அனைத்து காரியங்களையும் செய்தனர். அதற்காகவே சசிகலாவை கணவரிடமிருந்து பிரித்து தன்னுடனே வைத்துக் கொண்டார் ஜெயலலிதா. அதிமுக செயற்குழு உறுப்பினர் பதவி தொடங்கி, யாருடன் கூட்டணி வைக்கலாம், யார் யாரை கட்சிக்குள் இழுக்கலாம் என்பதில் முதன்மை ஆலோசகர் பதவி வரை! இத்தனையும் செய்ய தேவைப்பட்ட சசி, இப்போது மட்டும் சதியாளரா?.
 
'ஜெயலலிதா மீண்டும் முதல்வராக அனைத்துவித உபாயங்களையும் கையாண்டது சசிகலாவின் மன்னார்குடி கோஷ்டிதான். விஜயகாந்துடன் பேரம் பேசியதிலிருந்து அடிப்படை வேலைகளைச் செய்ததும் இவர்கள்தான். அந்த உரிமையை அவர்கள் ஆட்சியில் நிலைநாட்டப் பார்ப்பதைப் பொறுக்காத குறிப்பிட்ட சிலர் தான் இப்போதைய நிலைக்குக் காரணம்' என்றும் சிலர் கருத்து தெரிவித்துள்ளனர். இதில் நிறையவே உண்மைகளும் உள்ளது குறிப்பிடத்தக்கது.
 
"முதல்வர் ஜெயலலிதாவின் தவறுகளுக்கெல்லாம் மூல காரணம் சசிகலா குடும்பம்தான் என்றால், சமச்சீர் கல்வி குளறுபடிகள், தலைமைச் செயலக மாற்றம், அண்ணா நூலக இடமாற்றம், பஸ் கட்டண உயர்வு, பால் விலை உயர்வு, கவனிப்பற்ற தமிழக சாலைகள், ஆட்சிக்கு வந்த ஆறே மாதங்களில் திறமையற்ற நிர்வாகி என பெயரெடுத்தது போன்றவற்றுக்கும் சசிகலாதான் காரணம் என்று கூற முடியுமா?.
 
ஜெயலலிதாவை போற்றிப் பாதுகாக்க சில ஊடகங்கள் முனைகின்றன... அது இன்னும் சில தினங்களில் பல்லிளிக்க ஆரம்பித்துவிடும்," என்கிறார்கள் சசிகலா ஆதரவு தரப்பினர்.
 
ஆனால் இதெல்லாம் தற்காலிகமே என்கின்றனர் நடுநிலைப் பார்வையாளர்கள்.
 
"ஜெயலலிதா - சசிகலா இருவராலுமே, இப்போது மட்டுமல்ல, இனி எப்போதுமே பிரிய முடியாது.
 
ஜெயலலிதா தன்னை விரட்டிவிட்டாரே என்ற கோபத்தில் அவருக்கு எதிராக எதையும் செய்யக்கூடியவரல்ல சசிகலா. இதற்கு முன்பு ஜெயலலிதா அவரை விரட்டியபோதும் விசுவாசமாகவே நடந்து கொண்டார். சசியின் குடும்பத்தினரும் அப்படியே. அதேபோல வெளிப்படையாக அவர்களை விலக்கி வைத்தாலும், மீண்டும் எந்த நேரத்திலும் அவசியம் அல்லது நெருக்கடி கருதி ஜெயலலிதா அவர்களைச் சேர்த்துக் கொள்வது சாத்தியமே.
 
அவர்கள் இருவரின் நட்பும் பிரிவும் அவர்களுக்கு எந்த வகையில் நன்மை பயக்கிறதோ தெரியாது... ஆனால் சசிகலா நீக்கத்துக்காக நடத்தப்படும் கொண்டாட்டமும் சரி, புலம்பலும் சரி அர்த்தமற்றவை!".
 
-இது பிரபல தேசிய ஆங்கிலப் பத்திரிகையின் ஒரு மூத்த பத்திரிகையாளர் சொன்ன கருத்து.
 
ஜெ. சொத்து குவிப்பு வழக்கு ஒத்திவைப்பு:
 
இந் நிலையில், முதல்வர் ஜெயலலிதா மீதான சொத்து குவிப்பு வழக்கை ஜனவரி 18ம் தேதிக்கு ஒத்திவைப்பதாக பெங்களூர் சிறப்பு நீதிமன்றம் அறிவித்துள்ளது.
 
இந்த வழக்கில் சசிகலாவின் மேல்முறையீடு மனு மீதான விசாரணை ஜனவரி 12ம் தேதி நடைபெறுவதால் ஜெயலலிதாவின் வழக்கு ஒத்திவைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.



[Continue reading...]

தொடங்கியது கோச்சடையான்... ஹீரோயின் அனுஷ்கா இல்லை!

- 0 comments
 
 
 
 
 
ரஜினியின் 3 டி அனிமேஷன் படத்தின் வேலைகள் முழுவீச்சில் தொடங்கிவிட்டன. முதல் கட்டமாக, கடந்த இரு தினங்களாக சில காட்சிகளை ஸ்டுடியோவில் வைத்து எடுக்கவும் ஆரம்பித்துவிட்டார்கள்.
 
ரஜினியின் உடல் அசைவுகள், ஸ்டைல்களை இதில் படமாக்கி வருகின்றனர். இந்தக் காட்சிகள் பின்னர் மோஷன் கேப்சரிங் மூலம் அனிமேஷன் ரஜினிக்கு மாற்றப்படும்.
 
இந்தப் படத்தில் ரஜினிக்கு ஜோடியாக அனுஷ்கா நடிப்பார் என்று கூறப்பட்டது. அவரும் பேசிக் கொண்டிருப்பதாக தெரிவித்திருந்தார்.
 
இடையில் அசின் பெயரெல்லாம் கூட அடிபட்டது. ஆனால் இப்போது அனுஷ்காவும் இல்லை, அசினும் இல்லை. கத்ரீனா அல்லது தீபிகா நடிக்கக் கூடும் என்கிறார்கள்.
 
இந்த வாரம் படத்தின் நடிகர் நடிகைகள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்கள் குறித்த விவரங்களை அறிவிப்பதாக சௌந்தர்யா கூறியிருந்தார். இன்று அல்லது நாளை இதுகுறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு வரவிருக்கிறது.
 
இதற்கிடையே, ரஜினிக்கு ஷங்கர் சொன்ன கதை குறித்த விவாதம் நடந்து வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன!



[Continue reading...]

My Blog List

Popular Posts

Popular Posts

 
Copyright © . தினசரி செய்திகள் - Posts · Comments
Theme Template by BTDesigner · Powered by Blogger