Friday, 4 January 2013

சிங்கப்பூரில் மரணமடைந்த மாணவியின் நண்பர் பேட்டி

- 0 comments

சிங்கப்பூரில் மரணமடைந்த மாணவியின் நண்பர் பேட்டியை ஒளிபரப்பிய டி.வி. மீது வழக்குப் பதிவு செய்ய டெல்லி போலீசார் முடிவு     
டெல்லியில் ஓடும் பஸ்சில் கற்பழிக்கப்பட்ட மருத்துவ கல்லூரி மாணவி, கடந்த மாதம் 29-ம் தேதி சிங்கப்பூரில் மரணமடைந்தார். அவருடன் சம்பவம் நடந்த பஸ்சில் பயணித்த நண்பர், அவைந்திரா பிரதாப் பாண்டே (28) என்பவர் தனியார் டி.வி. ஒன்றுக்கு அளித்த பேட்டி நேற்று ஒளிபரப்பானது.
<br /><br />
இதனையடுத்து, இந்திய குற்றவியல் சட்டம் 228 (ஏ) பிரிவின் கீழ் கற்பழிப்பு போன்ற குற்றங்களில் பாதிக்கப்பட்டவர்களிள் அடையாளங்களை வெளிப்படுத்திய குற்றத்திற்காக மாணவியின் நண்பர் அளித்த பேட்டியை ஒளிபரப்பிய தனியார் டி.வி. நிறுவனத்தின் மீது டெல்லி போலீஸ் துறையின் சார்பில் நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கப்படும் என டெல்லி போலீஸ் செய்தி தொடர்பாளர் ராஜன் பகத் கூறியுள்ளார்.

[Continue reading...]

டெல்லி மாணவி இறப்பு உண்மையான காரணம் என்ன ?

- 0 comments

இந்திய மருத்துவமனையில் நன்றாக தேரிவந்த மாணவி சிங்கப்பூரில் இறந்ததன் உண்மையான காரணம் என்ன ? அந்த பெண் சிங்கப்பூரில் சிகிச்சை பலனின்றி இறந்தாளா? அல்லது சாகடிக்கப்பட்டாளா? இது பற்றிய சச்சரவுகளை இந்திய மருத்துவர்கள் எழுப்பக்கூடும் என்பதனால் தான் எமர்ஜென்சி காலத்தை போன்ற கட்டுப்பாடுகளுடன் அவசர கதியில் அப்பெண்ணின் உடல் தகனம் செய்யப்பட்டதா? இந்திய அரசே சிங்கப்பூரில் சாகடித்து நாடகம் ஆடுகிறதா ? இந்த பெண் இறந்தால் தான் அதன் அனுதாப அலையில் ஆண்களை ஒடுக்கும் கடுமையான சட்டங்களை உருவாக்க முடியும் என்ற திட்டமா ? இத்தகைய சட்டங்கள் ஆபாச பெண்களால் போலியாக பயன்படுத்தப்பட்டு ஆண்கள் மிரட்டப்படுவார்களா? இவை அணைத்தும் ஆபாச பெண்களை தங்களின் முக்கிய நுகர்வோராக என்னும் பன்னாட்டு நிறுவனங்களை வாழவைப்பதர்க்காகவா ? இந்தியாவில் பன்னாட்டு நிறுவனங்களுக்கு சந்தையை பெற்றுவிட்ட ஐ.நா அமைப்புகள் இதே பன்னாட்டு நிறுவனங்களுக்கு நுகர்வோர்களை உருவாக்கவே நம் தாய் திரு நாட்டில் ஊதாரி மக்களை திட்டமிட்டு உருவாக்கி வருகிறதா ? அதற்காகவே இந்தியாவில் இத்தகைய போராட்டங்களை ஐ.நா அமைப்புகள் தூண்டிவிடுகிறதா?

[Continue reading...]

அருந்ததி ராய்க்கு எதிராக விஷத்தை கக்கும் ஊடகங்கள் !!!

- 0 comments

அருந்ததி ராய்க்கு எதிராக விஷத்தை கக்கும் ஊடகங்கள் !!!
பிரபல சமூக ஆர்வலரும் பத்திரிக்கை பிரமுகருமாகிய அருந்ததிராய் டெல்லி கற்பழிப்பு பற்றி கூறிய சில கருத்துக்கள...ை மிகைப்படுத்தி சில ஊடகங்கள் அவர்மீது அவதூறுகளை பரப்பிவருகிறது...
அவர்கூறிய வார்த்தைகள்...
கற்பழிப்பு எங்கு நடந்தாலும் அவை கண்டிக்கப்படவேண்டியவை என்பதில் மாற்றுக்கருத்து இல்லை.ஆனால் எல்லா விஷயங்களையும் போன்று இந்த
விஷயத்திலும நம்நாட்டில் பாரபட்சம் காட்டப்படுகிறது.குஜராத்தில் பலநூறு முஸ்லீம் பெண்களின் கற்புகள் காவிகொடூரர்களால் சூரயடபட்டப்போது இந்த ஊடகங்கள் ஏன் அமைதிகாத்தன?
காஷ்மீரில் அபலைபெண்கள் இந்தியரானுவத்தினரால் சீரழிக்கப்படும்போது அவர்களை தூக்கிலடவேண்டும் என்று கோரிக்கைவைக்கபடாதது ஏன்?
சட்டீஸ்கரில் ஆதிவாசிபெண் சோனி சோரி போலீசாரால் கற்பழிக்கப்பட்டு அவளுடைய மர்மஉருப்பு கற்களால் சேதபடுத்தபட்டபோது ஏன் இவர்கள் வாயை திறக்கவில்லை?
இப்போது டெல்லியில் கர்ப்பழிக்கபட்டப்பெண் பஸ்சிலிருந்து நிர்வாணமாக தூக்கிவீசபட்டப்போது நூற்றுகனக்கானோர் வேடிக்கைபார்த்து கொண்டிருந்தனரே தவிர அவளுக்கு தன்னுடைய சட்டையை கழட்டிதரக்கூட யாரும் முன்வரவில்லை..
கர்ப்பழிக்கபட்டது எந்த ஜாதியாகவும்,மதமாகவும் இருந்தாலும் பாகுபாடில்லாமல் அதனை எதிர்க்கவேண்டும் இதுவே என்னுடைய கோரிக்கை என்று கூறியுள்ளார்.
சமீபகாலமாக ஆதிவாசிகளுக்கும், தலித்துகளுக்கும், முஸ்லீம்களுக்கும்,ஆதரவாக கருத்து தெரிவுக்கும் அருந்ததிராய்க்கு எதிராகஅவரை தேசதுரோகி எனவும் அவரை தாக்கவேண்டும் என்றும் ஏசியாநெட் போன்ற காவிஊடகங்கள் மக்களை உசுப்பெத்திவிட்டுள்ளனர்..

[Continue reading...]

குற்றப்பத்திரிகையில் பெயர் சேர்க்கப்படாததால் மரண தண்டனையில் இருந்து மைனர் தப்பிக்க வாய்ப்பு

- 0 comments

குற்றப்பத்திரிகையில் பெயர் சேர்க்கப்படாததால் மரண தண்டனையில் இருந்து மைனர் தப்பிக்க வாய்ப்பு 
name avoid from chargesheet minor person chance to escape


டெல்லியில் மருத்துவ மாணவியை கற்பழித்து கொலை செய்த ராம்சிங், முகேஷ் சிங், பவன், வினய், அக்ஷய் ஆகிய 5 பேர் மீது போலீசார் நேற்று குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தனர்.
மிக கொடூரமான குற்றம் செய்துள்ளதால் 5 பேருக்கும் மரண தண்டனை கொடுக்க வேண்டும் என்று டெல்லி போலீசார் குற்றப்பத்திரிகையில் வலியுறுத்தியுள்ளனர். எனவே 5 குற்றவாளிகளுக்கும் அதிகபட்ச தண்டனை கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
6-வது குற்றவாளிக்கு 17 வயதே ஆவதால் அவன் மைனர் என்பதால் பெயர் உள்ளிட்ட எந்த விவரமும் வெளியிடப்படவில்லை. இதற்கிடையே அவனது உண்மையான வயதை கண்டுபிடிக்க அவனுக்கு எலும்பு மஜ்ஜை சோதனை நடத்தப்பட்டுள்ளது. அந்த சோதனை அறிக்கை இன்னும் வரவில்லை.
அவன் 18 வயதை பூர்த்தி செய்து மேஜர் ஆக இன்னும் 5 மாதம் இருப்பதாக தெரிகிறது. இது அந்த மைனருக்கு சாதகமான ஒரு சூழ்நிலையை மாற்றியுள்ளது.
தற்போதைய நிலையில் சிறுவர் குற்ற சட்டப்படி மாணவியை கற்பழித்த 17 வயது மாணவருக்கு அதிக பட்சமாக 3 ஆண்டுகள் வரைதான் ஜெயில் தண்டனை கொடுக்க முடியுமாம். இந்த காலக்கட்டத்தில் அவனுக்கு 18 வயது பூர்த்தி ஆகிவிட்டால், அவன் ஜெயிலில் இருந்து விடுவிக்கப்பட்டு விடுவான்.
18 வயதுக்கு பிறகு அவனை சீர்திருத்த பள்ளியில் வைத்திருக்க இயலாது. மேலும் மேஜர் என்று சுட்டி காட்டி தண்டனை அளிக்கவும் இயலாது என்கிறார்கள். சட்டத்தில் உள்ள இந்த சில பிரிவுகளினால் மைனர் சிறுவன் உயிர் தப்ப வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.
மாணவியை கற்பழித்த 6 பேரில் இந்த மைனர்தான் மிக, மிக கொடூரமாக நடந்து கொண்டவன். மாணவியை 2 தடவை பலாத்காரம் செய்த அவன் அவர் வயிற்றில் கம்பியால் குத்தி மரணத்துக்கும் காரணமாக உள்ளான்.
இத்தகைய கொடூர மைனர் சில மாதங்களில் சுதந்திரமாக வெளியில் வந்து விடுவான் என்பதை பலராலும் ஜீரணிக்க இயலவில்லை. எனவேதான் அவனது உண்மையான வயதை உறுதி செய்ய டெல்லி போலீசார் பல்வேறு முயற்சிகளில் ஈடுபட்டுள்ளனர்.
[Continue reading...]

My Blog List

Popular Posts

Popular Posts

 
Copyright © . தினசரி செய்திகள் - Posts · Comments
Theme Template by BTDesigner · Powered by Blogger