Sunday, 22 January 2012

வேட்டை விமர்சனம��

- 0 comments




பயந்தாங்கோலி அண்ணன். அடி வாங்கவும் அடி கொடுக்கவும் அசராத வீரமான தம்பி. அவர்களுடைய போலீஸ் தந்தை இறந்தவுடன் அந்த வேலை அண்ணனுக்கு கிடைக்கிறது. அண்ணனுக்கு பதிலாய் தம்பி குற்றவாளிகளை அடித்து துவைத்து காயப் போட்டு கிளிப் மாட்டி அண்ணனுடைய போலிஸ் வேலையை ரகசியமாய் செய்து அவருக்கு பெயர் வாங்கி கொடுத்து, கடைசியில் அண்ணனுக்கு வீரத்தையும் எப்படி வரவழைக்கிறார் என்பதை காமெடியாய் சொல்லியிருக்கிறார்கள்.

ஆபிசில் ஏதாவது வேலை இருந்தால் பொறுமையாய் முடித்து விட்டு படத்திற்கு அரைமணிநேரம் கழித்து தாமதமாகவே செல்லலாம்.

படம் ஆரம்பித்து சில நிமிடங்களில் ஹீரோஸ் intro சாங். பின்னணியில் தாவணி அணிந்த பெண்கள். அடுத்த சில நிமிடங்களில் ஹீரோயின்ஸ் intro சாங். ரெண்டு பாட்டுமே அவ்வளவு மொக்கை. தமிழ் பெண்கள் தாவணியை பல நூற்றாண்டுக்கு முன்னரே கொலை செய்து புதைத்து விட்டனர். ஆனால் செத்து போன தாவணி, லிங்குசாமி படம் ரிலீஸ் ஆகும் போதெல்லாம் தாவணி (மம்மி) ரிட்டர்ன்ஸ் ஆகிறது. தாவணிக்கும் இயக்குனருக்கும் பல ஜென்ம பந்தம் இருக்கலாம். உயிருக்கு உயிராய் நேசித்த காதலி இறந்ததை ஏற்க முடியாமல் அவள் இன்னும் வாழ்ந்து கொண்டிருப்பதாய் எண்ணி தனியாய் அவளுடன் பேசி கொண்டிருக்கும் 7G ரவி கிருஷ்ணா போல, தாவணியின் மறைவை லிங்குசாமியால் ஏற்று கொள்ளவே முடியாதிருக்கலாம். Come to real world லிங்கு.

ஆர்யா, பாஸ் என்கிற பாஸ்கரனில் அரியர் வைத்துக் கொண்டு வெட்டியாய் சுற்றிகொண்டிருக்கும் அதே வேலையை இந்த படத்திலும் தக்க வைத்துக் கொள்கிறார். எக்ஸ்ட்ராவாக சண்டை போடுகிறார். விஜய் மாதிரி பஞ்ச டயலாக் பேசி பயம் காட்டுகிறார். ஆர்யாவை சிங்கம் சிங்கம் என்று அடிக்கடி சொல்லுகிறார்கள். ஆனால் மீசை தாடி இல்லாமல் சூப்பர் சேவ் செய்து படம் முழுதும் அலைகிறார். தமிழ் சினிமாவில் ஒரே ஒருத்தர் தான் தன்னை சிங்கம் என்று சொல்லிக்கொள்ள முடியும்.
அவர் யார்? டி.ஆர்.
முகத்தில் எவ்வளவு முடி!!!

மாதவனும் ஓகே.

சமீரா ரெட்டி காஞ்சு போன ரொட்டி மாதிரி இருக்காங்க. அவருடைய act நமக்கு ஏனோ "யக்கா" என்பவர்களை ஞாபக படுத்துகிறது. தங்கச்சி அமலா பால் சமீராவை அடிக்கடி அக்கா அக்கா என்று அழைத்து கொண்டே இருப்பது அதற்கு வலு சேர்க்கிறது. அமலா பால் மேக் அப் முகத்தை விட பெரிய கண்கள் தான் திகிலூட்டுகிறது. வேறு ஹீரோயின்களை போட்டிருக்கலாம்.

படத்தை எடுத்த பெருமிதத்தில் லிங்குசாமி ஒரு சீனில் தன் தலையை வேறு காட்டுகிறார். நம்ம

இசை, இந்த படத்துக்கு இது போதும்ன்னு யுவன் எண்ணியிருக்கலாம்.

குறைகள் நிறைய இருந்தாலும் சகித்துக் கொண்டு ஒரு முறை அசால்ட்டாய் இந்த படத்தை பார்க்கலாம். லிங்கு சாமியின் படத்தில் லாஜிக்கை தேடினால் முட்டாள் தனம். பாட்டுக்கள் மட்டும் இல்லாமல் இருந்திருந்தால் இன்னொரு முறை பார்க்க முடியும்.

பிரபல பதிவர்களின் விமர்சனத்தை கண்டுக்காதிங்க. ஆனந்த விகடன், குமுதம் விமர்சனம் போல அதையெல்லாம் அலட்சியமாய் கடந்து செல்லலாம். தமிழ் படங்களை ஓட்டி ஓவராய் சீன் போடும் என்னாலேயே இந்த படத்தை ஜாலியாய் பார்க்க முடிந்தது.



http://girls-tamil-actress.blogspot.com



  • http://mobilesexpicture.blogspot.com

  • [Continue reading...]

    இலங்கையில் சுயா��ீனமான சர்வதேச விசாரணை அவசியம்!- ஹ��வர்ட் பெர்மன்

    - 0 comments


    இலங்கையில் இடம்பெற்ற மனித உரிமை மீறல்கள் மற்றும் போர்குற்றங்கள் குறித்து ஒரு சுயாதீனமான சர்வதேச விசாரணை அவசியமென அமெரிக்காவின் குடியரசுக் கட்சியின் சட்டசபை உறுப்பினர் ஹோவர்ட் பெர்மன் தெரிவித்துள்ளார்.

    மனித உரிமைகளை மீறுவோர் மீது பொறுப்புக்கூற வைக்கவேண்டும் கடப்பாடு சிறிலங்கா அரசுக்கு இருக்கின்றதெனவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

    செனட்சபையின் வெளிநாட்டு விவகாரச் செயற்குழுவில் இடம்பெறும் உயர்நிலை குடியரசுக் கட்சியின் சட்டசபை உறுப்பினராக விளங்குகின்ற ஹோவர்ட் பெர்மன் அவர்கள் சிறிலங்காவின் நல்லிணக்க ஆணைக்குழுவின் அறிக்கை தொடர்பில் தனது கூற்றை வெளியிட்டுள்ளார்.

    'நான் நல்லிணக்க ஆணைக்குழுவின் அறிக்கை பகிரங்கமாக வெளியிடப்பட்டதனை வரவேற்கும் அதேவேளை, அந்த அறிக்கையில் பரிந்துரைக்கப்பட்டுள்ள அதிகரப்பரவலாக்கம், மொழிக்கொள்கை, ஆளுமைச் சட்டம், பேச்சுச் சுதந்திரம் போன்றவற்றை உடனடியாக அமுல் செய்யுமாறு சிறிலங்கா அரசை வற்புறுத்துகிறேன்.

    அதே வேளை, ஐ.நா. நிபுணர் குழுவின் அறிக்கையில் கூறப்பட்ட இலங்கை அரசுக்கும் எல். டி.டி. ஈ. க்கும் எதிரான குற்றச்சாட்டுக்கள் விசாரிக்கப்படாததனையிட்டு கவலை கொண்டுள்ளேன்.

    கடந்த முப்பது வருட கொந்தளிப்பின் போது நடந்ததாகச் சொல்லப்பட்டுள்ள போர்க் குற்றங்களையும், மனித உரிமை மீறல்களையும் விசாரிப்பதற்கு தனிப்பட்ட சுயாதீன பன்னாட்டு பொறிமுறை ஒன்றை அனுமதிக்க வேண்டுமென்று சிறிலங்கா அரசைக் கேட்டுக் கொள்கிறேன்'

    இவ்வாறு ஹோவர்ட் பெர்மன் கூற்று அமைந்துள்ளது.


    http://tamil-cininews.blogspot.com



  • http://tamil-actress-photo.blogspot.com

  • [Continue reading...]

    பெப்ரவரி-4 பிரான்சில் ஒன்று கூடுவ���ம்!

    - 0 comments


    எமது இனம் சுதந்திரமாக வாழ செய்த தியாகங்கள் 21ஆம் நூற்றாண்டின் மாபெரும் இனப்படுகொலைக்கு பிறகு தமிழர்களின் உரிமையென்று ஏதோ கொடுத்து விட்டு சர்வதேசத்தை சிறி லங்கா அரசு திருப்தி படுத்த போகிறது.

    இந்த நேரத்தில் நியாயத்தை நாம் தட்டி கேட்கவேண்டும்.சிறி லங்காவில் நடைபெறும் அரசியல் நாடகத்தை பார்த்துகொண்டு நாம் இருக்க முடியாது.சிறி லங்கா சுதந்திர தினத்தன்று நாம் சர்வதேசத்திடமும் தமிழர்களின் சுதந்திரத்தை வலியுறுத்துவோம் நாம் தமிழர்கள் பெப்ரவரி 4 ஆம் திகதி பிரான்சில் சிறி லங்கா தூதரகம் முன் ஒன்று கூடுவோம் வாருங்கள்எமது தாய் மண்ணில் நடைபெறும் கொடுமைகளை நாம் பார்த்து கொண்டு இருக்கப்போகிறோமா? வாருங்கள் படையாய் இனியும் பார்த்துக்கொண்டு இருக்க முடியாது.




    http://tamil-cininews.blogspot.com



  • http://tamil-actress-photo.blogspot.com

  • [Continue reading...]

    பொன்சேகாவின் கு��்றச்சாட்டை யாழ்.கட்டளைத் தளபதி ம���ுப்பு

    - 0 comments


    வடக்கில் இடம்பெறுகின்ற ஆட்கடத்தல்களின் பின்னால் இலங்கையின் படையினர் செயற்படுவதாக முன்னாள் இராணுவத்தளபதி சரத் பொன்சேகா தெரிவித்தமைக்கு, யாழ்.கட்டளைத் தளபதி மஹிந்த ஹத்துருசிங்க மறுப்பு தெரிவித்துள்ளதுடன் குறித்த கருத்துக்கு கண்டனத்தையும் வெளியிட்டுள்ளார்.

    மேலும், ஜே.வி.பி கிளர்ச்சிக்குழுவின் இரண்டு தமிழ் உறுப்பினர்களான லலித்குமார் வீரராஜ் மற்றும் குகன் ஆகியோர் கடந்த டிசம்பர் 9 ஆம் திகதி முதல் காணாமல் போனமை தொடர்பில் கருத்துரைத்த ஹத்துருசிங்க, அவர்களை கண்டுபிடிக்க பொலிஸாருக்கு படையினரும் உதவிவருவதாக தெரிவித்துள்ளார்.

    இதேவேளை, யாழ்ப்பாண கட்டளை தளபதி ஹத்துருசிங்கவே வடக்கில் இடம்பெறுகின்ற ஆட்கடத்தல்களுக்கு பொறுப்புக் கூறவேண்டும் என்றும் தமிழீழ விடுதலைப்புலிகளிடம் மாதம் ஒன்றுக்கு 30ஆயிரம் ரூபாவை கப்பமாக பெற்றுவந்ததாகவும் சரத் பொன்சேகா குற்றம் சுமத்தியிருந்தார்.


    http://tamil-cininews.blogspot.com



  • http://tamil-actress-photo.blogspot.com

  • [Continue reading...]

    யாழில் மாணவி தற்���ொலை - தந்தை காயங்களுக்கு உள்ளான ந���லையில் வைத்தியசாலையில்

    - 0 comments


    யாழ்.கோப்பாய் பிரதேச செயலாளர் பிரிவிற்கு உட்பட்ட கலையொளி கிராமத்தைச் சேர்ந்த பாடசாலை மாணவி ஒருவர் நேற்று தற்கொலை செய்துகொண்டுள்ளதாக கோப்பாய் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

    தற்கொலை செய்த மாணவியை அவரது தந்தை உடனடியாகக் கோப்பாய் வைத்தியாசாலையில் அனுமதித்த போதிலும், மேலதிக சிகிச்சைக்காக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார்.

    எனினும், இன்று அதிகாலை இரண்டு மணியளவில் சிகிச்சை பலனளிக்காத நிலையில் உயிரிழந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது

    பாடசாலையில் தரம் 11இல் கல்வி கற்கும் மாணவியே நேற்று இவ்வாறு தற்கொலை செய்துகொண்டவர் ஆவார்.

    இதேவேளை, இந்த மாணவியைக் காப்பாற்றுவதற்காகச் சென்ற தந்தை வயிறு மற்றும் நெஞ்சுப் பகுதிகளில் காயங்களுக்கு உள்ளான நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

    இத்தற்கொலைச் சம்பவம் குறித்து கோப்பாய் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருவதாக தெரிவித்துள்ளனர்.


    http://tamil-cininews.blogspot.com



  • http://tamil-actress-photo.blogspot.com

  • [Continue reading...]

    பேச்சுவார்த்தைப் பொறிக்குள் சிக���கியுள்ளது தமிழ் கூட்டமைப்பு - தே��ராஜ்

    - 0 comments


    அரசியல் தீர்வுக்கான அதிகாரப் பரவலாக்கல் குறித்து தொடர்ச்சியாக இப்பத்தியில் வலியுறுத்தி வருகிறோம். தமிழ் மக்களைப் பொறுத்து அவர்களுடைய இருப்பு, பாதுகாப்பு, சுய கௌரவம் உரிமை குறித்த அதிகாரப்பரவலாக்கலுடன் கூடிய அரசியல் தீர்வே முக்கியமானதாக கருதுகின்றனர்.

    தமிழ் மக்களின் இந்த உள்ளக்கிடக்கை மீண்டும் ஒருமுறை தகர்ந்து விடக்கூடாது என்ற எதிர்பார்ப்பிலேயே தொடர்ச்சியாக இப்பத்தியில் அரசியல் தீர்வு குறித்து பேசப்படுகின்றது.

    அதேவேளையில் கடந்த அறுபது வருட கால அரசியல் பயணத்தில் தமிழ் மக்கள் தமது அரசியல் அபிலாஷை குறித்த எண்ணப்பாட்டிலிருந்து இம்மியளவும் விலகியதாகவோ அல்லது விட்டுக் கொடுக்கும் மனப்பான்மையுடனோ இருக்கவில்லை.

    போருக்குள் சிக்கி சின்னா பின்னமாகி உறவுகளையும், உடைமைகளையும் இழந்து அநாதையாக நின்ற பொழுதும் கூட தமது அரசியல் அபிலாஷை குறித்த எண்ணப்பாட்டை மாற்றிக் கொள்ளத் தயாராக இல்லை என்பதை நடந்து முடிந்த அனைத்து தேர்தல்களிலும் நிரூபித்துள்ளனர்.

    தமிழ் மக்களின் இந்த உள்ளக் கிடக்கையை மீண்டும் மீண்டும் வெளிப்படுத்துவதற்காகவே இந்தப் பத்தியில் பதிவுகளாக வந்து கொண்டிருக்கின்றன.

    இதற்குமப்பால் தமிழ் மக்களின் வாழ்வாதாரம் குறித்தும் நிறையவே பேச வேண்டியுள்ளது.

    அரசியல் தீர்வுக்கப்பால் வாழ்வாதார மேம்பாடு அபிவிருத்தி பற்றி பேசுபவர்கள் கூட பேச்சுக்களாலேயே வசந்தத்தை தூவி விட்டுச் செல்கின்றனர்.

    தமிழர் விடுதலைக் கூட்டணியின் செயலாளர் நாயகம், முன்னாள் எதிர்க்கட்சித் தலைவருமாக இருந்த அப்பாப்பிள்ளை அமிர்தலிங்கம் அவர்கள் ஒருமுறை பேசும்பொழுது, "அகப்பை அவன் கையில்'' என்று குறிப்பிட்டார்.

    அதாவது அகப்பை எமது கைக்கு வந்தாலே எமக்குத் தேவையானதை எம்மால் பெற்றுக் கொள்ள முடியும் என்பது அவரது கருத்தாக அவ்வேளையில் ஒலித்தது

    இன்றும் அக்கூற்று யதார்த்தமாகவே உள்ளது என்பது இன்றைய சம்பவங்களும் சாட்சியாக எம்முன் உள்ளன.

    இதனை கருத்தில் கொண்டுதான் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அரசாங்கத் தரப்புடன் பேச்சுவார்த்தைக்கு செல்லும்பொழுது தீர்வுப் பொதியுடன் செல்ல வேண்டும். தீர்வுப் பொதியினை முன்வைத்து பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என்று தமிழ் மக்களின் சார்பில் தொடர்ச்சியாக இப்பத்தியில் கோரிக்கை விடுக்கப்பட்டது.

    அது உரிய முறையில் சம்பந்தப்பட்டவர்களால் செவி சாய்க்கப்படாததன் விளைவையே இன்று தமிழ் மக்கள் அனுபவித்துக் கொண்டிருக்கின்றனர்.

    அரசாங்கத் தரப்புக்கும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிற்கும் இடையில் கடந்த ஒரு வருடமாக இடம்பெற்ற பேச்சுவார்த்தைகள் இறுதியில் பூஜ்யமாக முடிவடைந்துள்ளன.

    கடந்த வாரம் வீரகேசரி வார வெளியீட்டுக்கு கருத்துத் தெரிவித்த கூட்டமைப்பின் பேச்சாளர் சுரேஷ் பிரேமச்சந்திரன் எம்.பி. அவர்கள், "ஒரு வருடமாக நடைபெற்ற பேச்சுவார்த்தைகளில் தீர்வு குறித்து ஒரு அங்குலம் கூட நகரவில்லை என்று தெரிவித்துள்ளார்.

    உண்மையில் இந்த ஒரு நிலை உருவாகும் என்பது ஏற்கனவே இப் பத்தியில் மிகத் தெளிவாக பதிவு செய்யப்பட்டிருந்தது.

    கூட்டமைப்பு பேச்சுவார்த்தை குறித்து வெளிப்படைத் தன்மையுடன் நடந்து கொண்டிருந்தால் அரசாங்கத் தரப்பின் நிலைப்பாட்டை எப்பொழுதோ தோலுரித்துக் காட்டியிருக்கலாம்.

    அது மாத்திரமல்ல, கூட்டமைப்பு பேச்சுவார்த்தை நடத்தும் அரசு தூதுக் குழு சாமான்யமானதல்ல என்பது குறித்தும் இப்பத்தியில் குறிப்பிட்டிருந்தோம்.

    ஒரு வருட பேச்சுவார்த்தையின்பின் நடைபெற்ற பேச்சுவார்த்தைகள் சதந்திரக் கட்சிக்கும் கூட்டமைப்புக்கும் இடையிலான பேச்சுவார்த்தை என அரசாங்கத் தரப்பு கூறியதுடன், நாடாளுமன்ற தெரிவுக் குழுவில் கூட்டமைப்பினர் பங்குபற்றுவதன் மூலமே இன விவகாரத்துக்கான தீர்வைக் காண முடியும் என அறிவித்துவிட்டது.

    இந்த அறிவிப்பை இந்திய வெளியுறவுத் துறை அமைச்சர் எஸ்.எம். கிருஸ்ணா அவர்களின் மூலம் பிரகடனப்படுத்தியுள்ளது.

    அத்துடன் 13 பிளஸ்ஸை ஜனாதிபதி தருவதாக உடன்பட்டிருப்பதாகவும் இந்திய வெளியுறவுத் துறை அமைச்சர் தனது பிரகடனத்தில் குறிப்பிட்டுள்ளார். மறுபுறம் கூட்டமைப்பினரை நாடாளுமன்றத் தெரிவுக் குழுவில் பங்குபற்றுமாறும் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

    அரசாங்கம் தனது நிலைப்பாட்டை இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் மூலமாக மிக இலாவகமாக காய்களை நகர்த்தி நிறைவேற்றிக் கொண்டுள்ளது.

    மீனுக்கு வாலும் பாம்புக்கு தலையும்'' காட்டும் இலங்கையின் இராஜதந்திரம் மிக வெற்றிகரமாக இன்னொருமுறை முன்னெடுக்கப்பட்டுள்ளது. அத்துடன் இதன் மூலம் கூட்டமைப்பை ஒரு பொறிக்குள்ளும் சிக்க வைத்துள்ளது.

    கூட்டமைப்பைப் பொறுத்து ஜனாதிபதிக்கும் தமக்கும் இடையிலான இணக்கப்பாட்டின் அடிப்படையிலேயே பேச்சுவார்த்தைக்கு சென்றதாக கூறுகின்றது.

    ஜனாதிபதியுடனான இணக்கப்பாட்டின்படி பேச்சுவார்த்தையில் எட்டப்படும் முடிவுகள் நாடாளுமன்றத் தெரிவுக் குழுவில் நிறைவேற்றப்படும என்ற ஜனாதிபதியின் உறுதிமொழியுட னேயே பேச்சுவார்த்தைக்குச் சென்றதாகவும், ஆனால் கடந்த ஒருவருடமாக இடம்பெற்ற பேச்சுவார்த்தைகளில் இணக்கப்பாடோ அல்லது தீர்வோ காணப்படாத நிலையில் நாடாளுமன்ற தெரிவுக் குழுவுக்கு போவதில் அர்த்தமில்லை என்றும் தற்பொழுது கூட்டமைப்பு வியாக்கியானம் செய்து கொண்டிருக்கின்றது.

    ஏற்கனவே இப்பத்தியில் கூட்டமைப்பு "பேச்சுவார்த்தைப் பொறிக்குள்'' சிக்கக்கூடாதென்று எழுதியதை இங்கு நினைவுபடுத்த விரும்புகிறோம்.

    உண்மையில் கூட்டமைப்பை அரசாங்கத் தரப்பு பேச்சுவார்த்தைப் பொறிக்குள் சிக்க வைத்துவிட்டது என்பதையே இன்றைய அரசியல் நிகழ்வுகள் உணர்த்தி நிற்கின்றன என்ற கசப்பான உண்மையை ஏற்றுக் கொள்ள வேண்டும்.

    இன்றைய இந்த அரசியல் நிகழ்வுகள் அனைத்தும் அரசாங்க தரப்புடன் பேச்சுவார்த்தை நடத்துவதற்கான வல்லமையையோ அல்லது நிபுணத்துவத்தையோ தமிழர் தரப்பு பெற்றிருக்கவில்லை என்பதையும் தமிழர் தரப்பு உணர்ந்தாக வேண்டும்.

    கடந்த ஒரு வருடகால பேச்சுவார்த்தையில் 13 ஆவது திருத்தச் சட்டத்தைக் கூட தமிழர் தரப்பால் காப்பாற்றிக் கொள்ள முடியாது போய்விட்டது.

    ஜனாதிபதி கூறுகின்ற 13 ஆம் 13 பிளஸும் என்பது 13 ஆவது திருத்தச் சட்டத்தில் காணப்படுகின்ற காணி, பொலிஸ் அதிகாரமற்ற திருத்தத்துடனான 13 பிளஸ்ஸாகவே தீர்மானிக்கப்பட்டு விட்டது.

    அரச தரப்பின் அந்த திருத்தத்துடனான தீர்வாகவே நடைமுறைக்கு வருமா என்பது கேள்விக்குரியதாகும். வட்டுக்கோட்டை பிரகடனத்தில் இருந்து மாவட்ட அபிவிருத்தி சபைக்கு சென்றதை விட மோசமான நிலைக்கு தமிழினம் இன்று தள்ளப்பட்டு விட்டது.

    அரசாங்கத்தைப் பொறுத்து எதிர்வரும் மார்ச் மாதம் ஐ.நா. மனித உரிமைகள் சபையின் கூட்டத் தொடர்கள் முடிவடையும்வரை தீர்வு குறித்த நகர்வை இழுத்துச் செல்லும் நிகழ்ச்சி நிரலுடன் செயற்பட்டுக் கொண்டிருக்கிறது.

    இன்றைய நிலையில் பேச்சுவார்த்தையை குழப்பியதாகவோ அல்லது முறித்துக் கொண்டதாகவோ யார் யார் மீது பழிபோடுவது அல்லது பொறுப்பு சுமத்துவது என்பதில் தான் அரசாங்கத் தரப்புக்கும் கூட்டமைப்புக்கும் இடையிலான பனிப்போராக இருக்கின்றது.

    கூட்டமைப்பு தன் மீது அந்தப் பழி வந்துவிடக் கூடாது என்பதில் கவனமாக இருக்கின்றது.

    அரசாங்கம் இதை விட மேலான கவனத்துடன் காய்களை நகர்த்திக் கொண்டிருக்கிறது.


    http://tamil-cininews.blogspot.com



  • http://tamil-actress-photo.blogspot.com

  • [Continue reading...]

    இந்திய - இலங்கை ந��ன்கள் ஒரு புள்ளியில் சந்திக்கும�� கிருஸ்ணாவின் வருகை!- இதயச்சந்திரன்

    - 0 comments


    பேரினவாதத்தின் மரபு வழிச் சிந்தனை முறைமையில் மாற்றம் ஏற்படுவது போல் தெரியவில்லை. எப்பாடுபட்டாவது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை நாடாளுமன்றத் தெரிவுக் குழுவிற்குள் இழுத்து இன்னும் இரண்டு வருடங்களுக்கு பேச்சுவார்த்தை நாடகத்தை நீடிப்பதையே அரசு விரும்புகிறது.

    கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவின் அறிக்கையை கூட்டமைப்பு நிராகரித்தவுடன் நாடாளுமன்றத் தெரிவுக் குழு குறித்தான அரசின் கடும்போக்கு தீவிரமடைந்து செல்வதை அவதானிக்கலாம்.

    மத்திய மாகாண சபைகளுக்கான உறவுப் பாலமாக "செனட் சபை' அமையுமென்கிறார் அரசின் உத்தியோகபூர்வ பேச்சாளர் அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல.

    இரண்டாவது சபையொன்று அமைக்கப்பட வேண்டுமென நல்லிணக்க ஆணைக்குழு தெரிவித்த பரிந்துரையையே செனட் சபை என்கிறார் அமைச்சர்.

    அதேவேளை, இந்திய வெளிநாட்டமைச்சர் கிருஸ்ணாவின் விஜயத்தோடு அரசின் நிலைப்பாடு இறுக்கமடைவதைக் காணலாம்.

    இலங்கை இந்திய உறவு ஆழமானது. அகலமானதென நீட்டி முழக்கும் இலங்கை வெளிநாட்டமைச்சர் ஜீ.எல். பீரிஸ், இந்தியா தம்பக்கம் இருப்பதாக சர்வதேசத்திற்குப் புரிய வைக்க முயற்சிக்கிறார் போலிருக்கிறது.

    கிருஸ்ணனின் இந்த தூது, பாண்டவர்களுக்கு ஐந்து ஊர், ஐந்து வீடுகள் பெற்றுத் தருவதற்காக மேற்கொள்ளப்படவில்லை.

    மாறாக 5 பில்லியன் டொலர்களை எட்டியுள்ள இருதரப்பு வர்த்தகத்தை அதிகரிக்க மார்ச் மாதம் உருவாக்க உத்தேசித்துள்ள "சீபா' ஒப்பந்தத்தை எவ்வாறு நிறைவேற்றுவது என்பதற்கான விஜயமாகவே பார்க்க வேண்டும்.

    இலங்கை இந்தியாவிற்குமிடையிலான இருதரப்பு உறவானது வரலாற்று ரீதியாகவும் பூகோள ரீதியாகவும் மிகவும் முக்கியத்துவம் வாயந்ததெனக் கூறும் எஸ்.எம். கிருஸ்ணா, பொருளாதார ஒத்துழைப்பிற்கான பரந்துபட்ட கட்டமைப்பொன்று அவசியமென்கிறார்.

    மேலும், நல்லிணக்க ஆணைக்குழுவின் அறிக்கையில் பயனுள்ள பரிந்துரைகள் இருப்பதாகவும் நாடாளுமன்றத் தெரிவுக் குழு நல்லதொரு நகர்வென்றும் கூறுகின்றார்.

    அதேவேளை, அலரி மாளிகையில் தைப்பொங்கலைக் கொண்டாடிய அமைச்சர் கிருஸ்ணா, வட பகுதிக்கும் சென்றுள்ளார்.

    கிளிநொச்சி மாவட்ட வைத்தியசாலை ஒன்றிற்கான உபகரணங்கள் கையளிப்பு, பாடசாலை மீள் திறப்பு, இடம்பெயர்ந்தோருக்கு சைக்கிள்கள் அன்பளிப்பு, நிர்மாணிக்கப்பட்ட வீடுகளை வழங்குதல் போன்ற நீண்ட நிகழ்ச்சி நிரலோடு அவர் தனது தமிழருடனான உறவினை மேம்படுத்தியுள்ளார்.

    இவை யாவும் தமிழ் மக்கள் மீதான இந்தியாவின் உறவினை வெளிப்படுத்தும் வழமையான சடங்குகளே.

    ஆனாலும் இலங்கை அரசோடு இந்தியா மேற்கொண்ட ஐந்து புரிந்துணர்வு (MOD) ஒப்பந்தங்களை நோக்கினால் அவை சீனாவுடனான ஒப்பந்தங்களை விட மிகச்சிறியளவு பெறுமதிமிக்கதாக இருந்தாலும் சைக்கிள்களை வழங்குவதைவிட பெரிதாகவே தென்படுகிறது.

    350 மீற்றர் உயரமான தொலைத்தொடர்புக் கோபுரம், அனல் மின் நிலையம், எண்ணெய் சேமிப்பு குதம், இரண்டாவது சர்வதேச விமான நிலையம், கொழும்பு கட்டுநாயக்க அதிவேக நெடுஞ்சாலை, வட பகுதி வீதிப் புனரமைப்பு மற்றும் கொழும்புத் துறைமுகத்தில் பண்டங்களைக் கையாளும் வசதிகள் போன்ற சீனாவின் உதவிகளோடு ஒப்பிடுகையில், தம்புள்ளையில் 633 மில்லியன் டொலர் செலவில் இந்தியா மேற்கொள்ளவிருக்கும் நீர் விநியோகத் திட்டம், கையளவு என்றே கூற வேண்டும்.

    இந்தியாவோடு ஏற்படுத்தப்பட்ட புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் தொலைத்தொடர்பு, விவசாயம், வட பகுதி ரயில் சேவைக்கான பாதை அமைத்தல் என்பன உள்ளடங்குகின்றன. ஆனாலும் ரயில் சேவையில் ஈடுபடுத்தப்படும் 13 டீசல் இயந்திரங்களை சீனா வழங்கப் போகிறது.

    ஏற்கெனவே "சீபா' ஒப்பந்தத்திலுள்ள பல முதலீட்டுக்கான துறைகள், பாரியளவில் சீனாவிடம் சென்றடைந்து விட்டமை குறிப்பிடத்தக்கது.

    அதாவது 13 ஆவது திருத்தச் சட்டத்திலுள்ள பல சரத்துகளை 18 ஆவது சட்டம் விழுங்கியது போன்று, முழுமையான இருதரப்பு பொருளாதார உடன்பாடானது (CEPA), அரைகுறையான இருதரப்பு பொருளாதார உடன்பாடு என்கிற நிலைக்குத் தாழ்ந்து விட்டதை இதிலிருந்து புரிந்து கொள்ளலாம். இருப்பினும் தனது இறுதி முயற்சியை இந்தியா கைவிடவில்லை. இருப்பதையாவது பெற்றுக் கொள்ள வேண்டுமென கங்கணம் கட்டிச் செயற்படுகிறது.

    இந்நிலையில், தமிழர் தரப்பின் நியாயபூர்வமான அரசியல் அபிலாஷைகளை நிறைவேற்றுமாறு இலங்கை அரசின் மீது அழுத்தங்களை இந்தியா மேற்கொள்ளுமா என்கிற கேள்வி எழுகிறது.

    அத்தோடு யாழ். மாவட்ட பேராயர் தோமஸ் சௌந்தரநாயகம் அடிகளார் விடுக்கும் மூன்றாம் தரப்பு மத்தியஸ்தம் என்கிற வேண்டுகோளை, இந்தியா பரிசீலிக்குமா எனத் தெரியவில்லை.

    இந்தியாவின் பிராந்திய மற்றும் பூகோள நலன்களைத் தெளிவாகப் புரிந்து கொண்டால் இன முரண்பாட்டுத் தளத்தில் மூன்றாம் தரப்பாக அது வருமா என்பதை தெரிந்து கொள்ளலாம்.

    அதேவேளை, மாகாண சபைக்கு, காணி, காவற்துறை அதிகாரம் வேண்டுமெனக் கேட்டால் தேசிய பாதுகாப்புக்கு அது அச்சுறுத்தலாக அமையும் என்கிறது அரசு.

    இந்த இலட்சணத்தில் 13 ஆவது திருத்தச் சட்டத்திற்கு அப்பால் சென்று தீர்வு வழங்குவேன் என இந்திய அமைச்சரிடம் வாக்குறுதி வழங்கியுள்ளார் ஜனாதிபதி.

    அதனை வரவேற்ற கூட்டமைப்பு எம்.பி. ஒருவர், இந்தியாவிடம் அரசு உறுதியளித்துள்ளதால் 13 ஆவதிலுள்ள காணி, காவல்துறை பற்றிப் பேசாமல் 13+ பற்றி அரசுடன் பேசுவோமென வியாக்கியானமளிக்கிறார்.

    ஆகவே, உள்ளக சுய நிர்ணய உரிமை, சமஷ்டி என்பன மாகாண சபையோடு சமரசம் செய்துவிடும் போல் தெரிகிறது.

    சிற்றூழியர் ஒருவரைக் கூட நியமிக்கும் அதிகாரமற்ற கிழக்கு மாகாண சபை போன்ற தொரு கட்டமைப்பை வடக்கிலும் உருவாக்கவே அரசு முனைவதைக் காணலாம்.

    தீர்வு காண வேண்டுமென்கிற அக்கறை இலங்கை அரசுக்குமில்லை. அதற்கான அழுத்தத்தைக் கொடுக்க வேண்டுமென்கிற எண்ணம் இந்தியாவிற்குமில்லை.

    அத்தோடு கூட்டமைப்பினன் அமெரிக்க மற்றும் தென்னாபிரிக்கப் பயணங்கள், இலங்கை அரசிற்கு மேலும் பல நெருக்கடிகளை உருவாக்கியுள்ளதென்கிற விடயத்தை அவதானிக்கும்போது இந்தியாவிற்கும் அது சிக்கலை ஏற்படுத்துமென்பதைப் புரிந்து கொள்ளலாம்.

    இலங்கை அரசைப் பொறுத்தவரை, ஆசிய பசுபிக் பிராந்தியத்தில் தமது கழுகுப் பார்வையை திருப்பப் போகிறோமென அண்மையில் அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா கூறிய விடயம் இந்திய அரசோடு அதிகம் இணைந்து செல்ல வேண்டிய நிர்ப்பந்தத்தை அதற்கு ஏற்படுத்தியுள்ளது எனலாம்.

    இருப்பினும் நல்லிணக்க ஆணைக்குழுவின் அறிக்கையை நிராகரிக்கும் கூட்டமைப்பானது, சுயாதீன போர்க்குற்ற விசாரணை தேவையென அழுத்திக் கூறுவதும், பேச்சு மூலம் அரசு எம்மை ஏமாற்றினால் சாத்வீக வழியில் மக்களை அணி திரட்டி போராடப் போவதாக மட்டக்களப்பு நாடாளுமன்ற உறுப்பினர் அரியநேத்திரன் அறைகூவல் விடுப்பதும் அரசின் கோபத்தை கிளறிவிட்டதென ஊகிக்க இடமுண்டு.

    பேச்சுவார்த்தை மேசையில் காத்திருந்த தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினரைச் சந்திக்காமல் அரசு தவிர்த்த விடயத்தில் நாடாளுமன்றத் தெரிவுக் குழு விவகாரத்தோடு போர்க்குற்ற விசாரணை குறித்தான கருத்துக்களும் வெளிநாட்டு விஜயங்களும் அடங்கும்.

    அதேவேளை, வடக்கிலிருந்து படை முகாம்களை அகற்றமாட்டோமெனக் கூறும் அரசு அதிகாரப் பரவலாக்கம், அதிகாரப் பகிர்வு என்கிற எத்தகைய சொல்லாடல்களும் தமிழ் மக்கள் தரப்பிலிருந்து பேசப்பட்டால் அதனை விடுதலைப் புலிகளின் கோரிக்கையாகப் பார்கக்கும் போக்கினை கடைப்பிடிக்கின்றது.

    ஆகவே தனது பிராந்திய நலனைக் கைவிட்டு ஒடுக்குமுறைக்குள்ளாகும் தமிழ் பேசும் தரப்பிற்காகப் பேச அல்லது அவர்களின் உரிமையை மீட்டெடுக்கும் போராட்டத்தை ஆதரிக்க இந்தியா முன்வருமா?

    புலிகளின் தூரப் பார்வையற்ற தன்மையால் தான் இந்தியா எம்மிடமிருந்து விலகி இலங்கை அரசோடு கைகோர்த்து நிற்கிறது என்று எவராவது கற்பிதம் கொண்டால் இந்திய நலன் குறித்த புரிதல் குறைபாடாகவே அப் பார்வை இருக்கும்.

    இரு தினங்களுக்கு முன்பாக தமிழ் நெட் இணையத்திற்கு பிலிப்பைன்ஸ் கம்யூனிஸ்ட் கட்சியின் ஸ்தாபகர்களில் ஒருவரும் புதிய மக்கள் இராணுவத்தை (NPA) கட்டியமைத்தவருமான பேராசியர் ஜோசே மயா சென் (Jose Maria sison) வழங்கிய நேர்காணலில் ஒரு முக்கிய விடயத்தைக் குறிப்பிட்டிருந்தார்.

    அதில் தமிழ் தேசமானது தமது இறைமையை வென்றெடுப்பதற்காகத் தொடர்ச்சியாகப் போராட வேண்டும் என்பதே அந்தப் போராட்ட அனுபவமிக்க மனிதனின் கோரிக்கையாக இருந்தது.

    ஆகவே, சைக்கிளும் வீடும் தந்து தூதரகத்தையும் வங்கியையும் திறந்து தமிழர் பிரச்சினையைத் தீர்க்கலாமென இந்தியா எத்தகைய நகர்வுகளை மேற்கொண்டாலும் அல்லது நாடாளுமன்ற தெரிவுக் குழுவிற்குள் செல்ல வேண்டுமென கூட்டமைப்பை நிர்ப்பந்தித்தாலும் இறுதியில் இந்தியாவை பகைக்கக் கூடாது. ஆனால், நம்பக் கூடாது என்கிற முடிவிற்கே தமிழ் மக்கள் செல்வார்கள்.


    http://tamil-cininews.blogspot.com



  • http://tamil-actress-photo.blogspot.com

  • [Continue reading...]

    யேர்மனி வுப்பெற��றால் நகரில் நடைபெற்ற கேணல் கிட்ட��� நினைவு வணக்கநி��ழ்வு (படங்கள் இண��ப்பு)

    - 0 comments


    கேணல் கிட்டு மற்றும் அவருடன் வீரச்சாவெய்திய போராளிகளின் 19ம் ஆண்டு நினைவு வணக்கநிகழ்வு 21.01.2012 இன்று யேர்மனி வுப்பெற்றால் நகரில் நடைபெற்றது.

    நிகழ்வில் பொதுச்சுடரினை தமிழர் ஒருங்கிணைப்புக்குழுவின் செயற்பாட்டாளர் கிருபா அவர்கள் ஏற்றிவைத்தார். அதனைத் தொடர்ந்து, கேணல் கிட்டுவின் திருவுருவப்படத்திற்கு வுப்பெற்றால் நகரப் பரப்புரைச் செயற்பாட்டாளர் பீட்டர் அவர்கள் மலர்மாலை அணிவித்தார். அதன்பின் அணிவகுத்து வந்த உறவுகள் மலர்வணக்கத்துடன் கூடிய சுடர்வணக்கம் செலுத்தியதும், இளஞ்சூரியன் இசைக்குழுவினரின் இசைவணக்கம் நடைபெற்றது.

    தொடர்ந்து கவிவணக்கம் மற்றும் நடனநிகழ்வுகள் நடைபெற்றன. நிகழ்வின் இறுதியில் யேர்மனி ஈழத்தமிழர் மக்களவையின் கொள்கை முன்னெடுப்புச்செயலாளர் திரு.சங்கர் அவர்கள் , ஈழத்தமிழர் மக்களவையின் அவசியம் பற்றியும், அதன் செயற்பாடுகள் பற்றியும் விளக்கமளித்தார். இறுதியாக, தமிழீழ உறவுகளின் உறுதிமொழியுடன் 21.00 மணியளவில் நிகழ்வு இனிதே நிறைவுபெற்றது.







    http://tamil-cininews.blogspot.com



  • http://tamil-actress-photo.blogspot.com

  • [Continue reading...]

    My Blog List

    Popular Posts

    Popular Posts

     
    Copyright © . தினசரி செய்திகள் - Posts · Comments
    Theme Template by BTDesigner · Powered by Blogger