இலங்கையில் இடம்பெற்ற மனித உரிமை மீறல்கள் மற்றும் போர்குற்றங்கள் குறித்து ஒரு சுயாதீனமான சர்வதேச விசாரணை அவசியமென அமெரிக்காவின் குடியரசுக் கட்சியின் சட்டசபை உறுப்பினர் ஹோவர்ட் பெர்மன் தெரிவித்துள்ளார்.
மனித உரிமைகளை மீறுவோர் மீது பொறுப்புக்கூற வைக்கவேண்டும் கடப்பாடு சிறிலங்கா அரசுக்கு இருக்கின்றதெனவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
செனட்சபையின் வெளிநாட்டு விவகாரச் செயற்குழுவில் இடம்பெறும் உயர்நிலை குடியரசுக் கட்சியின் சட்டசபை உறுப்பினராக விளங்குகின்ற ஹோவர்ட் பெர்மன் அவர்கள் சிறிலங்காவின் நல்லிணக்க ஆணைக்குழுவின் அறிக்கை தொடர்பில் தனது கூற்றை வெளியிட்டுள்ளார்.
'நான் நல்லிணக்க ஆணைக்குழுவின் அறிக்கை பகிரங்கமாக வெளியிடப்பட்டதனை வரவேற்கும் அதேவேளை, அந்த அறிக்கையில் பரிந்துரைக்கப்பட்டுள்ள அதிகரப்பரவலாக்கம், மொழிக்கொள்கை, ஆளுமைச் சட்டம், பேச்சுச் சுதந்திரம் போன்றவற்றை உடனடியாக அமுல் செய்யுமாறு சிறிலங்கா அரசை வற்புறுத்துகிறேன்.
அதே வேளை, ஐ.நா. நிபுணர் குழுவின் அறிக்கையில் கூறப்பட்ட இலங்கை அரசுக்கும் எல். டி.டி. ஈ. க்கும் எதிரான குற்றச்சாட்டுக்கள் விசாரிக்கப்படாததனையிட்டு கவலை கொண்டுள்ளேன்.
கடந்த முப்பது வருட கொந்தளிப்பின் போது நடந்ததாகச் சொல்லப்பட்டுள்ள போர்க் குற்றங்களையும், மனித உரிமை மீறல்களையும் விசாரிப்பதற்கு தனிப்பட்ட சுயாதீன பன்னாட்டு பொறிமுறை ஒன்றை அனுமதிக்க வேண்டுமென்று சிறிலங்கா அரசைக் கேட்டுக் கொள்கிறேன்'
இவ்வாறு ஹோவர்ட் பெர்மன் கூற்று அமைந்துள்ளது.
http://tamil-cininews.blogspot.com
http://tamil-actress-photo.blogspot.com
0 comments:
Post a Comment
உங்களது கமெண்ட் என்ன ?