Monday, 7 October 2013

பஹ்ரைன்: காதல் தோல்வியால் இந்திய தூதரக வளாகத்தில் தற்கொலைக்கு முயன்ற இந்திய வாலிபர் Indian attempts suicide at Bahrain Indian Embassy premises

- 0 comments

பஹ்ரைன்: காதல் தோல்வியால் இந்திய தூதரக வளாகத்தில் தற்கொலைக்கு முயன்ற இந்திய வாலிபர் Indian attempts suicide at Bahrain Indian Embassy premises

Tamil NewsYesterday,

துபாய், அக்.8-

உயிருக்கு உயிராக காதலித்த பெண் வேறொருவரை திருமணம் செய்துகொள்வதாக கூறியதில் விரக்தி அடைந்த இந்திய வாலிபர் பஹ்ரைனில் உள்ள இந்திய தூதரக வளாகத்தில் தற்கொலைக்கு முயன்றார்.

பஹ்ரைன் தலைநகர் மனாமாவில் உள்ள இந்திய தூதரக வளாகத்தில் நுழைந்த பாலாஜி பாஸ்கரன்(21) என்பவர் யாரும் எதிர்பாராத வேளையில் கத்தியால் தனது கை மணிக்கட்டில் உள்ள நரம்பை அறுத்துக்கொள்ள முயன்றார்.

அப்போது, அங்கிருந்தவர்கள் பாய்ந்து சென்று அவரை வளைத்துப் பிடித்து அசம்பாவிதம் ஏதும் நேராதபடி தடுத்தனர். இருப்பினும், கையில் பலத்த வெட்டு காயம் ஏற்பட்டு ரத்தம் வழிந்ததால் உடனடியாக அவரை சல்மானியா ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர்.

பாலாஜி பாஸ்கரன் இதற்கு முன்னரும் பல முறை தற்கொலை செய்து கொள்ள முயற்சித்ததாக சக பணியாளர்கள் கூறியதால் அவருக்கு மனநல சிகிச்சை வழங்கவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
...
Show commentsOpen link

[Continue reading...]

டெல்லி கல்லூரி முதல்வர் மீது பாலியல் குற்றச்சாட்டு கூறி தீக்குளித்த பெண் உயிரிழந்தார் DU Employee harassed by principal dies of burns

- 0 comments

டெல்லி கல்லூரி முதல்வர் மீது பாலியல் குற்றச்சாட்டு கூறி தீக்குளித்த பெண் உயிரிழந்தார் DU Employee harassed by principal dies of burns

Tamil NewsYesterday,

புதுடெல்லி, அக்.8-

டெல்லியில் உள்ள அம்பேத்கர் கல்லூரி முதல்வர் தனக்கு பாலியல் தொந்தரவு தந்ததாக கூறி டெல்லி அரசு தலைமை செயலகத்தின் முன்பு தீக்குளித்த பவித்ரா பரத்வாஜ்(40) சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

2010ம் ஆண்டிலிருந்தே அந்த கல்லூரி முதல்வர் எனக்கு பாலியல் தொந்தரவு தந்து வந்தார். இதுதொடர்பாக கல்லூரி நிர்வாகத்திடமும், டெல்லி போலீசாரிடமும் நான் புகார் அளித்ததால் பொய் குற்றச்சாட்டுகளை சுமத்தி அவர் என்னை வேலையில் இருந்தும் நீக்கி விட்டார்.

எனவே, அவர் மீது உரிய நடவடிக்கை எடுப்பதற்காக அரசின் கவனத்தை ஈர்க்க நான் தற்கொலை செய்ய முயற்சித்தேன் என போலீசாரிடம் பவித்ரா வாக்குமூலம் அளித்திருந்தார்.

டெல்லி ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டிருந்த அவர் சிகிச்சை பலனின்றி நேற்று உயிரிழந்தார்.
...
Show commentsOpen link

[Continue reading...]

மனைவியின் பாராட்டில் மகிழ்ந்து போன ஷாம்! Actor sham cinema news

- 0 comments

மனைவியின் பாராட்டில் மகிழ்ந்து போன ஷாம்!

by admin
TamilSpyYesterday,

12பி படத்தில் தனது சினிமா கேரியரை தொடங்கியவர் ஷாம். நடிக்க வந்து கிட்டத்தட்ட 10 ஆண்டுகளுக்கு மேலாகி விட்டபோதும், இன்னமும் அவர் சாக்லேட் ஹீரோ அந்தஸ்திலேயே இருக்கிறார்.

அதோடு தமிழில் நடித்த படங்கள் தொடர் தோல்வியை கொடுக்கவே தெலுங்குக்கு சென்று வில்லனாக அவதரித்தார். ஆனபோதும் அவருக்கு அதில் திருப்தி இல்லை.

அதனால், மீண்டும் தமிழுக்கு வந்து 6 மெழுகுவர்த்திகள் என்ற படத்தை தானே தயாரித்து நடித்தார்.

அந்த படத்துக்காக 2 வருடங்களாக தனது உடம்பை வருத்தி நடித்திருந்தார் ஷாம்.

படமும் பேசப்பட்டது என்றபோதும் அவர் எதிர்பார்த்தபடி ரசிகர்களின் ஆதரவு பெரிய அளவில் கிடைக்கவில்லை.

என்றாலும் திருப்தியாகவே இருக்கிறது என்கிறார் ஷாம்.

மேலும், இந்த படத்தில் ஷாமின் நடிப்பைப்பார்த்த அவரது மனைவி முதன்முறையாக மனதார பாராட்டியுள்ளாராம்.

அதோடு மீண்டும் சாக்லேட் ஹீரோ கதைகளில் நடிக்காமல் இதே மாதிரி நல்ல கதைகளாக தேடிப்பிடித்து நடியுங்கள்.

வருடத்துக்கு ஒரு படம் வந்தாலும் போதும் என்று கருத்து சொல்லியிருக்கிறாராம்.

மனைவியின் பாராட்டுதலோடு கூடிய கருத்தினையும் ஏற்றுக்கொண்டுள்ள ஷாம், இனி அழுத்தமான கதைகளில் மட்டுமே நடிப்பது என்று முடிவெடுத்திருக்கிறார்.

அதையடுத்து தன்னை புதிய கோணத்தில் வெளிப்படுத்தும் கதைகளுக்காக தினமொரு டைரக்டர் வீதம் தனது அலுவலகத்துக்கு வரவைத்து தீவிரமாக கதை கேட்டுக்கொண்டிருக்கிறார்.

Show commentsOpen link

[Continue reading...]

மடோனா கத்திமுனையில் பாலியல் பாலாத்காரம் செய்யப்பட்ட பாடகி madona sex news

- 0 comments

கத்திமுனையில் பாலியல் பாலாத்காரம் செய்யப்பட்ட பாடகி மடோனா

by கதிர்
சிரிப்பு Archives | Tamil

அமெரிக்காவின் நியூயார்க் நகரில் கத்திமுனையில் தான் பாலியல் பாலாத்காரம் செய்யப்பட்டதாக பொப் பாடகி மடோனா அதிர்ச்சி தகவலை தெரிவித்துள்ளார்.

பிரபல அமெரிக்கப் பத்திரிகை ஒன்றுக்கு எழுதிய சிறப்புக் கட்டுரை ஒன்றில் அவர் இதனை தெரிவித்துள்ளார்.

மடோனா பாப் பாடகியாக பிரபலமாகும் முன் அவர் நியூயார்க் நகரில் வைத்து கத்தி முனையில் பாலியல் பாலாத்காரம் செய்யப்பட்டதாகஅவர் தெரிவித்தார்.

வெறும் 35 டாலர்களுடன் நியூயார்க் வந்த தான், தனது விடா முயற்சியால் இன்று அமெரிக்காவின் முன்ணணி செல்வந்தர்களில் ஒருவராக மாறியுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

The post கத்திமுனையில் பாலியல் பாலாத்காரம் செய்யப்பட்ட பாடகி மடோனா appeared first on Tamilsway.

Show commentsOpen link

[Continue reading...]

இடுப்புக்கு டூப்பு போட்ட இயக்குநர் : நடிகை நஸ்ரியா கண்ணீர் – தனுஷ் ஆதரவு dupe for nasriya hip

- 0 comments

இடுப்புக்கு டூப்பு போட்ட இயக்குநர் : நடிகை நஸ்ரியா கண்ணீர் – தனுஷ் ஆதரவு

by admin
TamilSpyToday, 02:39

நேரம் படம் மூலமாக தமிழ் சினிமாவில் அறிமுகமாகிய நடிகை நஸ்ரியா,அண்மையில் வெளியான ராஜா ராணி படத்தில் அசத்தலாக நடித்து தனது திறமையை வெளிப்படுத்தியிருந்தார். இவர் தனுஷ் ஜோடியாக நடித்த நையாண்டி படம் மிக விரைவில் திரைக்குவர இருக்கிறது.

இந்நிலையில் நையாண்டி படத்தின் தயாரிப்பாளர் மற்றும் இயக்குனர் சற்குணம் மீதும் நஸ்ரியா நடிகர் சங்கத்தில் பரபரப்பு புகார் அளித்துள்ளார். இது தொடர்பாக நஸ்ரியாவை தொடர்பு கொண்டு பேசிய போது , தான் படம் பிடிக்க மறுத்த இடுப்பை அணைக்கும் காட்சி ஒன்றை தனது அனுமதி இன்றி வேறு ஒரு பெண்ணை வைத்து படமாக்கி அதை தனது முகத்துடன் இணைத்து படத்தின் போஸ்டர்களில் வெளியிட்டு தன்னை தவறாக சித்தரித்துவிட்டனர் என கண்ணீருடன் கூறியுள்ளார்.

இந்த பிரச்சனையில் நடிகர் தனுஷ் தனக்கு ஆதரவாக இருப்பதாக கூறியுள்ளார் நஷ்ரியா.

Show commentsOpen link

[Continue reading...]

ஆட்சியை பிடிக்க கொள்ளை அடித்த பணத்திலிருந்து இலவச செல்போன்: மத்திய அரசு வழங்குகிறது 2 and half crore people Federal Government provides India Cellphone

- 0 comments

இந்தியா முழுவதும் 2½ கோடி பேருக்கு இலவச செல்போன்: மத்திய அரசு வழங்குகிறது 2 and half crore people Federal Government provides India Cellphone

Tamil NewsYesterday,

புதுடெல்லி, அக்.7-

இந்தியாவில் 5 மாநிலங்களில் சட்டமன்ற தேர்தல் தேதியை தேர்தல் கமிஷன் அறிவித்திருக்கும் இந்த நிலையில் மத்திய அரசு நாடு முழுவதும் 2½ கோடி பேருக்கு இலவச செல்போன்களை வழங்க முடிவு செய்திருக்கிறது. மின்னணு மயமாவதில் உள்ள இடைவெளியை பூர்த்தி செய்யும் வகையில் குறைந்த விலையில், அதே சமயம் தரமான செல்போன்கள் வழங்கப்படுகிறது.

கிராமப்புறங்களில் வசிப்பவர்களுக்கு செல்போன்கள் வழங்குவதன் மூலம் சமுதாய பொருளாதாரம் மேம்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த திட்டத்திற்கு ரூ.4,850 கோடி செலவாகும் என்றும், இந்த நிதியை 'யூனிவர்சல் சர்வீஸ் ஆப்ளிகேஷன் பண்டு' (யு.எஸ்.ஓ.எப்) வழங்கும்.

இதன் மூலம் கிராமப்புற மக்களுக்கு விவசாயம், சுகாதாரம், கல்வி, நிதி சேவை, திறன் மேம்பாடு, வேலைவாய்ப்பு ஆகிய தகவல்கள் எஸ்.எம்.எஸ். மூலம் அளிக்கப்படும். இதன் காரணமாக அவர்களின் வாழ்க்கை தரம் உயரும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

மேலும் இது கிராமப்புற தொலைபேசி சேவைகளை அதிகரிப்பதால் நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தியிலும் இதன் தாக்கம் தெரியும். பொருளாதார, சமுதாய சேவைகள் வழங்குவதன் மூலம் அவர்களது வறுமை நிலையும் படிப்படியாக மறையும். அடுத்த 4 ஆண்டுகளில் இந்த செல்போன்கள் வழங்கப்படும்.

முதல் ஆண்டில் 25 லட்சம் பயனாளிகளுக்கும், 2-வது ஆண்டில் 50 லட்சம் பயனாளிகளுக்கும், 3-வது ஆண்டில் 75 லட்சம் பேருக்கும், 4-வது ஆண்டில் ஒரு கோடி பேருக்கும் வழங்கப்படும். செல்போனின் விலை ரூ.2,240. இதில் உப பொருட்கள், 3 வருட உத்தரவாதம், சிம் கார்டு ஆகியவற்றுக்காக ரூ.1200 அடங்கும்.

நிர்வாகம் மற்றும் விநியோக செலவு ரூ.320. இதில் பயனாளிகளின் பங்களிப்பாக ரூ.300 வழங்க வேண்டும். எஸ்.எம்.எஸ்., குரல் தகவல் ஆகிய வசதிகள் இதில் இருக்கும். இந்த பயனாளிகளை மாநில அரசுகள் தான் தேர்வு செய்யும். வீட்டுக்கு ஒருவருக்கு தான் இவை வழங்கப்படும்.

பெண்களுக்கு குறிப்பாக மகாத்மா காந்தி ஊரக வேலை உறுதி திட்ட பயனாளிகளுக்கு தான் இந்த செல்போன்கள் வழங்கப்பட இருக்கிறது. செல்போன்கள் வழங்கப்பட்ட பிறகு மாதந்தோறும் ரூ.30-க்கு ரீசார்ஜ் வீதம் 2 வருடங்களுக்கு இந்த சேவை இருக்கும்.

இந்த திட்டத்தை பி.எஸ்.என்.எல். நிறுவனம் செயல்படுத்தும். இந்த திட்டத்தின் முக்கிய நோக்கங்களில் ஒன்று கிராமப்புறங்களில் 2017-ம் ஆண்டில் 70 சதவீதம் தொலைபேசி வசதியும், 2020-ம் ஆண்டில் 100 சதவீதம் எனவும் உயர்த்துவது தான் என்றும் அதிகாரிகள் கூறியுள்ளனர்.
...
Show commentsOpen link

[Continue reading...]

My Blog List

Popular Posts

Popular Posts

 
Copyright © . தினசரி செய்திகள் - Posts · Comments
Theme Template by BTDesigner · Powered by Blogger