Monday, 20 January 2014

ஆசிரியர் தகுதி தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு சான்றிதழ் சரிபார்க்கும் பணி தொடங்கியது teacher qualifying exam verifying started working

- 0 comments
சென்னை, ஜன. 21-

தமிழ்நாட்டில் உள்ள அரசு பள்ளிகளில் காலியாக கிடக்கும் பணியிடங்களை நிரப்புவதற்காக ஆசிரியர் தேர்வு வாரியம்
ஆசிரியர் தகுதி தேர்வை நடத்தியது. அதில் அதிக மதிப்பெண் எடுத்தவர்களுக்கு ஆசிரியர் பணி வழங்க பள்ளி
கல்வித்துறை முடிவு செய்தது.
இடைநிலை ஆசிரியர் பயிற்சி முடித்தவர்களுக்கு தனியாகவும், பட்டப்படிப்புடன் பி.எட். படித்தவர்களுக்கு தனியாகவும்
ஆசிரியர் தகுதி தேர்வு நடத்தப்பட்டு முடிவு அறிவிக்கப்பட்டது. நீதிமன்ற உத்தரவின் அடிப்படையில் விடைத்தாள்கள்
மறு மதிப்பீடு செய்யப்பட்டு முடிவு வெளியிடப்பட்டது.
இந்த நிலையில் ஆசிரியர் தகுதி தேர்வில் தேர்ச்சி பெற்ற அனைவருக்கும் சான்றிதழ் சரிபார்ப்பு அந்தந்த
மாவட்டங்களில் 20–ந் தேதி முதல் 27–ந் தேதி வரை நடத்தப்படும் என்று ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவித்து
இருந்தது.
அதன்படி நேற்று தமிழ்நாடு முழுவதும் சான்றிதழ் சரிபார்ப்பு தொடங்கியது. சென்னையில் அசோக் நகர் அரசு மகளிர்
மேல்நிலைப்பள்ளியில் சான்றிதழ் சரிபார்த்தல் நடைபெற்றது.
தமிழ் வழியில் படித்தவர்களுக்கு சலுகை வழங்கப்படுகிறது. எனவே அவர்கள் அதற்கான சான்றிதழை படித்த
நிறுவனத்தில் இருந்து பெற்று சமர்ப்பிக்க வேண்டும்.
இது குறித்து ஒரு பட்டதாரி கூறுகையில், நான் பட்டப்படிப்பை ஆங்கிலத்தில் படித்தேன். பி.எட். படிப்பை தமிழில்
படித்தேன். அதற்கு மதிப்பெண் உண்டா, சலுகை உண்டா என்ற விவரத்தை ஆசிரியர் தேர்வு வாரியம் விளக்கமாக
தெரிவிக்கவில்லை என்று புகார் கூறினார். 
[Continue reading...]

ஆனைமலை அருகே காதலிக்க மறுத்ததால் பெண்ணை கடத்தி கற்பழித்த கார் டிரைவர் கைது love refused to girl youth molested near aanimalai

- 0 comments
ஆனைமலை. ஜன.17–
ஆனைமலையை அடுத்துள்ள செட்டிமல்லன் புதூரை சேர்ந்தவர் கருப்பசாமி. இவரது மகள் அங்காள பரமேஸ்வரி (வயது 18). மில் தொழிலாளி. இவரை அதே பகுதியை சேர்ந்த கார் டிரைவர் ஹரிசங்கர் (25) என்ற வாலிபர் ஒருதலையாக காதலித்து வந்தார்.
தனது காதலை அங்காள பரமேஸ்வரிடம் பலமுறை சொன்னார். ஆனால் அங்காள பரமேஸ்வரி மறுப்பு தெரிவித்தார். ஆனாலும் தினமும் காலையும், மாலையும் அங்காள பரமேஸ்வரி வேலைக்கு செல்லும்போது ஹரி பின் தொடர்ந்து வந்து காதல் தொல்லை கொடுத்து வந்தார்.
இதுகுறித்து அங்காள பரமேஸ்வரி தனது பெற்றோரிடம் புகார் தெரிவித்தார். இதைகேட்டு கோபமடைந்த கருப்பசாமி தனது மகளுக்கு காதல் தொல்லை கொடுத்த ஹரி சங்கரை கண்டித்தார். ‘‘என் மகளுக்கு இனிமேல் தொல்லை செய்தால் நடப்பதே வேறு’’ என்று எச்சரித்தார்.
இதனால் ஹரிசங்கர் ஆத்திரமடைந்து அங்காள பரமேஸ்வரியை அடைய நினைத்தார். இதற்காக சரியான சந்தர்ப்பத்தை எதிர்பார்த்து காத்திருந்தார். நேற்று இரவு அங்காள பரமேஸ்வரி வீட்டில் இருந்து தோட்டத்திற்கு சென்றார்.
அப்போது அவரை பின் தொடர்ந்து சென்ற ஹரிசங்கர் ஆள் நடமாட்டம் இல்லாத பகுதியில் அங்காள பரமேஸ்வரின் வாயை பொத்தி அருகிலுள்ள காட்டுக்குள் கடத்தி சென்றார். அங்கு வலுக்கட்டாயமாக அங்காள பரமேஸ்வரியை கற்பழித்தார்.
ஹரிசங்கரின் பிடியில் இருந்து தப்பிக்க அங்காள பரமேஸ்வரி கடுமையாக போராடினார். ஆனால் அவரால் எதுவும் செய்ய முடியவில்லை.
நீண்ட நேரமாகியும் வெளியில் சென்ற மகள் வீடு திரும்பாததால் சந்தேகமடைந்த கருப்பசாமி தனது உறவினர்களுடன் மகளை தேடி அந்த பகுதிக்கு வந்தார். அப்போது அங்கு ஹரிசங்கரின் பிடியிலிருந்த அங்காள பரமேஸ்வரி கதறி அழுத சத்தம் கேட்டது.
பதறியடித்த கருப்பசாமி சத்தம் போட்டபடியே அங்கு வந்தார். கருப்பசாமியும் அவரது உறவினர்களும் அங்கு வருவதை பார்த்த ஹரிசங்கர் அங்கிருந்து தப்பியோடினார். மகள் அலங்கோலமாக கிடப்பதை கண்டு கருப்பசாமி பதறினார்.
மகளை மீட்டு சிகிச்சைக்காக கோவை அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இது குறித்து கருப்பசாமி ஆனைமலை போலீசில் புகார் செய்தார். போலீஸ் இன்ஸ்பெக்டர் சுப்ரமணியம் மற்றும் சப்–இன்ஸ்பெக்டர் செல்வராஜ், தனிப்பிரிவு சப்–இன்ஸ்பெக்டர் கதிர்வேல் ஆகியோர் அடங்கிய தனிப்படை போலீசார் ஹரிசங்கரை காட்டுப்பகுதியில் தேடினர்.
இன்று காலை சிங்கா நல்லூர் காட்டுப்பகுதியில் பதுங்கியிருந்த ஹரிசங்கர் கைது செய்யப்பட்டார். மருத்துவ பரிசோதனைக்காக கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு ஹரிசங்கர் அழைத்து செல்லப்பட்டார். அங்கு அவருக்கு மருத்துவ பரிசோதனை முடிந்ததும் ஆனைமலை போலீஸ் நிலையத்துக்கு போலீசார் அழைத்து வந்தனர். அங்கு அவரிடம் தொடர்ந்த விசாரணை நடைபெற்று வருகிறது
[Continue reading...]

My Blog List

Popular Posts

Popular Posts

 
Copyright © . தினசரி செய்திகள் - Posts · Comments
Theme Template by BTDesigner · Powered by Blogger