Friday, 2 May 2014

திருமணத்தை மறைத்ததால் தெலுங்கு படத்திலிருந்து அமலாபால் நீக்கம்!

- 0 comments

நடிகை அமலாபால் விரைவில் இயக்குனர் விஜய்யை திருமணம் செய்து கொள்ள இருக்கிறார். இதனால் தான் நடிக்க ஒப்புக் கொண்டிருந்த சமுத்திரக்கனியின் படத்திலிருந்து விலகி விட்டார். அதோடு புதிய படங்கள் எதையும் ஒப்புக்கொள்ளப்போவதில்லை என்றும் அறிவித்துவிட்டார். இந்த நிலையில் திருமணத்தை மறைத்து தங்கள் படத்தில் நடிக்க ஒப்புக் கொண்டார் என்று குற்றம் சாட்டி வாஸ்தா நீ வேணுகா என்ற தெலுங்குப் படத்திலிருந்தும் அமலா அதிரடியாக நீக்கப்பட்டுள்ளர்.

இதுகுறித்து படத் தயாரிப்பு நிறுவனம் கூறியிருப்பதாவது: இந்தப் படம் காதலை மையமாக கொண்டது. அமலா திருமணம் செய்து கொண்டு நடித்தால் அது படத்தை பாதிக்கும், படம் வியாபாரமாகது. திருமணத்தை இப்போது வெளிப்படையாக அறிவித்திருந்தாலும் முன்னரே முடிவு செய்துதான் வைத்திருந்துள்ளார். அதனை மறைத்து நடிக்க ஒப்புக் கொண்டிருக்கிறார். இதனால் படத்தின் இயக்குனர் ரமேஷ் வர்மா மிகுந்து கவலை கொண்டுள்ளார். முதல் கட்டமாக வெளிநாட்டில் பாடல் காட்சி எடுக்க திட்டமிட்டிருந்தோம். இப்போது அதனை கேன்சல் செய்து விட்டோம். படத்துக்காக வாங்கிய அட்வான்சை திருப்பி கேட்டிருக்கிறோம் என்கிறார்கள்.

இதுகுறித்து அமலா பால் கூறியிருப்பதாவது: இந்த நிறுவனம் என்னை முதலில் தொடர்புக் கொண்ட போது மார்ச் முதல் மே மாதம் வரை உள்ள கால கட்டத்தில் 45 நாட்கள் ஒதுக்க வேண்டும் என்று கூற, நானும் அதற்கு உட்பட்டு அதற்கு அத்தாட்சியாக ஒரு பத்திரத்திலும் நாங்கள் பரஸ்பரம் கை எழுத்திட்டுக் கொண்டோம் .படப்பிடிப்புக்கான நாட்கள் நெருங்கி வரும் சூழ்நிலையில் அவர்களை தொடர்பு கொள்ள பல்வேறு முறைகளில் முயற்சி செய்தேன் .தொடர்பில் வந்தாலும் திருப்திகரமான பதில் வரவில்லை .வெளி நாட்டில் படமாக்க போகிறோம் என்று கூறிக் கொள்ளும் அந்த பட நிறுவனத்தினர் அந்த முயற்சியை மேற்கொள்ளவில்லை .
இந்த நிலையில் என்னுடைய திருமணத்தை பற்றி முன்னரே அவர்களுக்கு தெரிவிக்கவில்லை என்ற குற்றச்சாட்டு என்னை காயப்படுத்துகிறது.

நான் அவர்களுக்கு கொடுத்தது மார்ச் முதல் மே வரை குறிப்பிட்ட கால கட்டத்துக்குள் 45 நாட்கள் மட்டுமே . இதில் ஜூன் மாதம் நடைபெற வேண்டிய திருமணத்தை பற்றி அவர்களுக்கு கூற வேண்டிய அவசியம் என்ன ? கூறப்பட்ட காலத்துக்குள் படப்பிடிப்பு நடத்த முடியாமல் இருப்பதற்கு பல்வேறு உண்மையான காரணங்கள் இருக்க, என் திருமணத்தை சுட்டி காட்டி அவர்கள் புழுதி இறைப்பது அநாகரீகமானது .திருமண பந்தம் என்பது ஒவ்வொருவரின் வாழ்விலும் நடக்க வேண்டிய ஒரு அரிய நிகழ்ச்சி ஆகும், எனக்கும் அப்படி தான் . தங்களது தவறுகளை மறைக்க என் மீதும் என் திருமண சடங்கின் மீதும் குற்றஞ்சாட்டுவது மிகவும் வருத்தத்துக்குரியது . நான் இதுவரை எந்த தயாரிப்பாளருக்கோ , இயக்குனருக்கோ இடையூறாக இருந்ததே இல்லை, இருக்கவும் மாட்டேன் , இந்த விளக்க உரை கூட யாரையும் குற்றம் சாட்டவோ, குறை கூறவோ இல்லை . என்னை அறிந்தவர்களுக்கும் தெரிந்தவர்களுக்கும் உண்மை நிலை கூறுவதுதான் .

இவ்வாறு அமலாபால் கூறியுள்ளார்.
[Continue reading...]

மும்பை இளைஞருடன் காதல்? இல்லை என்கிறார் தமன்னா!

- 0 comments

தன்னை அடிக்கடி சந்திக்கவரும், மும்பை இளைஞர்ஒருவருடன், தமன்னா, காதல் வயப்பட்டிருப்பதாகவும்,அதன் காரணமாக, இருவரும் அடிக்கடி வெளிநாடுகளுக்கு, ஜாலி டூர் சென்று வருவதாகவும், பரபரப்பு செய்திகள்பரவியுள்ளன. ஆனால் இந்த செய்தியை மறுத்துள்ளார் தமன்னா. எனக்கு, நண்பர்கள் இருப்பது உண்மை தான். ஆனால், யார் மீதும் எனக்கு காதல் இல்லை. அதற்குபோதிய நேரம் இல்லை என்றுகூட சொல்லாம் என்கிறார். மேலும், திருமணத்திற்கான நேரம் இன்னும் வரவில்லை. வரும்போது, நீங்கள் முடிவுசெய்யும்
மாப்பிள்ளையை, திருமணம் செய்து கொள்கிறேன் என, பெற்றோரிடம் கூறி விட்டேன் என்கிறார்.
[Continue reading...]

நயன்தாரா நடிக்க தடைதெலுங்கு திரையுலகம் அதிரடி

- 0 comments


மரத்தை சுற்றி, டூயட் பாடிக் கொண்டிருந்த நயன்தாராவை, ஆக் ஷன் ஹீரோயினாகவும்,
ஆன்மிக ஹீரோயினாகவும் மாற்றிய பெருமை, தெலுங்கு பட உலகிற்கு சேரும். ஆனால், அனாமிகா என்ற தெலுங்கு படத்தில் நடித்து வரும் நயன்தாரா, அந்த படத்தின் விளம்பர
நிகழ்ச்சிகளில் பங்கேற்காமல் புறக்கணிப்பதாக புகார் எழுந்துள்ளது.இதனால், ஆத்திரம்
அடைந்துள்ள அந்த படத்தின் இயக்குனரும், தயாரிப்பாளர்களும், நயன்தாராவை, புதிதாக எந்த தெலுங்கு படத்துக்கும் ஒப்பந்தம் செய்யக் கூடாது என, போர்க்கொடி துாக்கினர். இதையடுத்து, நயன்தாரா, ஓர் ஆண்டுக்கு தெலுங்கு படங்களில் நடிக்க தடை விதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
[Continue reading...]

அஜீத்தை வைத்து படம் தயாரிக்க ஆசைப்படும் ஜீவா!

- 0 comments


சூப்பர் குட் பிலிம்ஸ் தயாரித்த பூவே உனக்காக, லவ் டுடே, துள்ளாத மனமும் துள்ளும், ஷாஜகான், திருப்பாச்சி ஆகிய படங்களில் நடித்த விஜய் கடைசியாக ஜில்லா படத்திலும் நடித்திருந்தார். அந்த வகையில் ஆர்.பி.செளத்ரியின் கம்பெனி ஆர்ட்டிஸ்ட் போன்று அவர்கள் எப்போது கால்சீட் கேட்டாலும் உடனே கொடுத்து விடுவார் விஜய்.

ஆனால் அதே சூப்பர் குட் பிலிம்ஸ் தயாரித்த நீ வருவாய் என, உன்னைக்கொடு என்னைத்தருவேன் ஆகிய படங்களில் நடித்துள்ள அஜீத், சமீபகாலமாக அவர்கள் பேனரில் எந்த படத்திலும நடிக்கவில்லை. அதனால் விரைவில் தல அஜீத்தை வைத்து படம் தயாரிக்க வேண்டும் என்ற ஆசை எங்களது சூப்பர் குட் பிலிம்சுக்கு உள்ளது என்று நடிகர் ஜீவா தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து மேலும் அவர் கூறுகையில், எங்கள் நிறுவனத்தில் படம் பண்ணுவதற்காக டைரக்டர்கள் கதை சொன்னதும், அந்த கதையில் யாரை நடிக்க வைத்தால் பொருத்தமாக இருக்கும் என்று பரிசீலனை செய்த பிறகே சம்பந்தப்பட்ட நடிகர்களை அணுகுவோம். அந்த வகையில், எங்களிடம்வரும் கதையில் அஜீத்துக்கு பொருத்தமான கதை வருகிறபோது கண்டிப்பாக அவரை வைத்து மீண்டும் எங்கள் நிறுவனம் படம் தயாரிக்கும் அந்த படம் பிரமாண்டமானதாகவும் இருக்கும் என்கிறார்.
[Continue reading...]

24 கோடியில் தயாரான ஜெயம் ரவியின் பூலோகம்!

- 0 comments
நிமிர்ந்து நில் படத்தை அடுத்து ஜெயம்ரவியின நடிப்பில் வெளியாக தயாராகி வரும் படம் பூலோகம். ஆஸ்கர் பிலிம்ஸ் தயாரிக்கும் இப்படத்தில் த்ரிஷா நாயகியாக நடித்திருக்கிறார். வடசென்னையைச்சேர்ந்த பாக்சராக ஜெயம் ரவி நடிக்கும் இப்படத்தில் ஹாலிவுட் வில்லன் நாதன்ஜோன்சும் ஒரு பாக்சராக நடித்திருக்கிறார்.

கிட்டத்தட்ட இரண்டரை ஆண்டுகளாக வளர்ந்து வரும் இந்த படத்துக்காக முறைப்படி பாக்சிங் பயிற்சி எடுத்ததோடு, உடல்கட்டையும் மாற்றி நடித்துள்ளார் ஜெயம்ரவி. ஏற்கனவே எம்.குமரன் சன் ஆப் மகாலட்சுமி என்ற படத்திலும் பாக்சராக அவர் நடித்திருந்தபோதும், இந்த படத்துக்காக இன்னும் கூடுதல் பயிற்சி பெற்று நடித்துள்ளார்.

மேலும், இப்படத்தில் நடித்திருக்கும் நாதன்ஜோன்ஸ்க்கு சில நாட்கள் படப்பிடிப்பில் கலந்து கொள்ள மட்டுமே ஒன்றரை கோடி சம்பளம் கொடுத்துள்ளார்களாம். ஆக, 15 கோடிக்குள் முடிக்க போடப்பட்ட பட்ஜெட் இப்போது 24 கோடியில் போய் நிற்கிறதாம். ஜெயம்ரவியின் வியாபார வட்டத்தைப்பார்க்கையில் இது பெரிய தொகை என்கிறார்கள். தற்போது படம் சென்சாருக்கு சென்று வந்துவிட்ட நிலையில், வியாபாரம் பேசப்பட்டு வருகிறது. கோச்சடையான் ரிலீசைத் தொடர்ந்து மே மாதத்தில் பூலோகம் திரைக்கு வருகிறதாம்.
[Continue reading...]

My Blog List

Popular Posts

Popular Posts

 
Copyright © . தினசரி செய்திகள் - Posts · Comments
Theme Template by BTDesigner · Powered by Blogger