Wednesday, 13 August 2014

கத்தி படத்தில் இருந்து சூப்பர் ஸ்டார் ஆகிறார் விஜய்?

- 0 comments

சூப்பர் ஸ்டார் பட்டம் யாருக்கு? என்ற சர்ச்சை கோடம்பாக்கத்தில் கொழுந்து விட்டு எரிந்து கொண்டிருக்கும் நிலையில், வருகிற ஆகஸ்ட் 15ம் தேதி மதுரையில் பிரமாண்ட விழா எடுத்து விஜய்க்கு அந்த பட்டத்தை சூட்டுவது என்று முடிவெடுக்கப்பட்டிருப்பதாக செய்திகள் வந்து கொண்டிருக்கின்றன.

அதோடு, அப்படியொரு விழா நடந்தால், அதில் ரசிகர்கள் மட்டுமின்றி, அதை ஆதரித்து பேசுவதற்கு திரையுலக பிரமுகர்களும் வேண்டுமே என்பதால், விஜய்தரப்பில் இருந்து தென்னிந்தியா மட்டுமின்றி, பாலிவுட் ஹீரோக்கள் வரை அழைப்பு விடுக்கப்பட்டு வருகிறதாம்.

இந்த நிலையில், தற்போது விஜய்யை வைத்து கத்தி படத்தை இயக்கியுள்ள ஏ.ஆர்.முருகதாஸ், அப்படத்தின் டைட்டில் கார்டில் இதுவரை இளைய தளபதி விஜய் என்றே போட்டிருப்பவர், படம் திரைக்கு வரும்போது சூப்பர் ஸ்டார் விஜய் என்று போடவும் முடிவு செய்திருக்கிறாராம்.

ஆனபோதும், அந்த பட்டத்தை சம்பந்தப்பட்டவர்கள் முறைப்படி அறிவித்து விட்டால், தனக்கு பிரச்னை இல்லை என்று நினைக்கிறாராம். அதனால் இந்த சூப்பர் ஸ்டார் விவகாரத்தில் கத்தி யூனிட்டும் அதிக ஆர்வம் காட்டி வருவதாக கூறப்படுகிறது.

 
[Continue reading...]

My Blog List

Popular Posts

Popular Posts

 
Copyright © . தினசரி செய்திகள் - Posts · Comments
Theme Template by BTDesigner · Powered by Blogger