Tuesday 13 December 2011

வள்ளுவர் கோட்ட விழா.. குவியும் ரசிகர்கள்.. வருவாரா ரஜினி?

- 0 comments
 
 
 
ரஜினி பிறந்த நாள் விழா இன்று பிரமாண்டமாகக் க டிசம்பர் 13-ம் தேதி நடக்கும் பிரமாண்ட ரஜினி பிறந்த நாள் விழாவுக்காகக் கொண்டாடப்படுவதையொட்டி, வள்ளுவர் கோட்டத்தில் திரளான ரசிகர்கள் குவிந்துள்ளனர்.
 
காலையிலிருந்தே வள்ளுவர் கோட்டம் பகுதி அமர்க்களப்பட்டுக் கொண்டிருக்கிறது. எங்கும் ரஜினி பேனர்கள். அந்த வழியே செல்லும் யாரும் நின்று சில நிமிடங்கள் பார்த்து விசாரித்துவிட்டுத்தான் செல்கிறார்கள்.
 
ஒரு முதல்வர் பங்கேற்கும் நிகழ்ச்சிக்கே உரிய அளவுக்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. வள்ளுவர் கோட்டத்தின் அனைத்து வாயில்களிலும் பலத்த காவல் போடப்பட்டுள்ளது. அழைப்பிதழ் மற்றும் பாஸ் உள்ளவர்களுக்கு மட்டுமே அனுமதி அளிக்கப்படுகிறது.
 
மாலை 4 மணிக்கு தொடங்கும் இந்த விழாவில் முதலில் கலை நிகழ்ச்சிகளும் பின்னர் நலத்திட்ட உதவி நிகழ்ச்சியும் நடக்கிறது.
 
எஸ்பி முத்துராமன், கலைப்புலி தாணு, டிஜி தியாகராஜன் பங்கேற்று உதவிகளை வழங்குகிறார்கள். நிகழ்ச்சியில் எந்த நேரத்திலும் ரஜினி வருவார் என்பதால் ரசிகர்கள் மிகுந்த பரபரப்புடன் காணப்படுகின்றனர்.
 
இரவு 8 மணிக்குள் நிகழ்ச்சி முடிக்கப்பட வேண்டும் என்று ரஜினியே தன் மன்ற நிர்வாகிகளுக்கு உத்தரவிட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.



[Continue reading...]

மாத்திரைகளும் மனிதர்களும்

- 0 comments
 
 
 
பலசரக்குகடைகளில்,காய்கறி கடைகளில் நிற்கும் மக்கள் கூட்ட்த்தை விட அலை மோதுகிறார்கள்.சமீபகாலமாக மருந்துக்கடைகள் நிரம்பி வழிகின்றன.முன்பெல்லாம் மருத்துவமனை,மருத்துவர்அருகில் இருந்தால்தான் ஃபார்மஸி விற்பனை இருக்கும் என்று நம்பினார்கள்.இப்போதுஅப்படியில்லை.
தானாகவே மாத்திரைபெயர் சொல்லி வாங்குபவர்களும்,தொந்தரவை சொல்லி வாங்கிக் கொள்பவர்களும் அதிகரித்துவிட்டார்கள்.இது தொடர்பாக எனது முந்தைய பதிவுகள் மாத்திரைகள் சாப்பிடுவதுண்டா? உஷார் மற்றும்உடல்நலம்-உயிரைக்குடிக்கும் பழக்கங்கள். அலோபதி கடைகள் என்றில்லாமல்சித்தா,ஆயுர்வேத மருந்துகளும் சக்கைப்போடு போடுகின்றன.
எனக்கு வேறொருசம்பவம் நினைவுக்கு வருகிறது.உறவினர் ஒருவருக்கு சரியாக தூக்கம் வருவதில்லை என்றுமருத்துவரிடம் போனார்.அவரும் மாத்திரைகள் கொடுத்தார்.அப்புறம் மருத்துவரிடம்போகாமலே கடையில் மாத்திரை வாங்கி சாப்பிட்டு வந்திருக்கிறார்.ஒரு கட்ட்த்தில்மாத்திரை இல்லாவிட்டால் தூக்கமில்லை என்ற நிலை வந்து விட்ட்து.
வீட்டில் இருப்பவர்கள் மிகத்தாமதமாகவே இதை அறிந்திருக்கிறார்கள்.மீண்டும் மருத்துவரிடம் அழைத்துப்போய்விஷயத்தைச்சொன்னால் பழைய மருந்து சீட்டு அல்லது மாத்திரை அட்டை ஏதாவது இருக்கிறதா?என்று கேட்டிருக்கிறார்.பரிந்துரை சீட்டு கிடைக்காவிட்டாலும் மாத்திரை அட்டையைகொண்டுபோய் காட்டினார்கள்.
மாத்திரையைபார்த்தவுடன் மருத்துவருக்கு புன்னகை.அது தூக்கத்தை வரவழைக்கும் மாத்திரை அல்ல!ஆனால் வலி நிவாரணி.உடலில் ஏதோ வலி இருப்பதாக சொன்னதால் இது தூக்கத்திற்கு என்றுகாட்டி அப்போதைக்கு கொடுத்துவிட்டார்.வலி நிவாரணியை அதிகம் பயன்படுத்துவதுஆபத்தானது.சிறுநீரகம் ஆபத்தில் சிக்கிக் கொள்ளும்.
இப்படி இன்றுநிறைய பேர் இருக்கலாம் என்று தோன்றுகிறது.தூக்கத்திற்கு என்றில்லாமல்உடல்வலி,வயிற்றில் அமிலம் சுரத்தல் என்று மாத்திரை போட்டால்தான் ஆகிறது என்றுஆகிவிட முடியும்.மாத்திரைகளுக்கு அடிமையான நிலைதான் இது.சில உடல்நலக்குறைவுகளுக்கு தொடர்ந்து மாத்திரை உட்கொள்பவர்கள் மனதளவில் இப்படிஆகிவிடுவதுண்டு.
இம்மாதிரியானநிகழ்வுகளில் மாத்திரைகள்தான் மீண்டும் பரிந்துரைப்பார்கள்.படிக்காத ஆளாகஇருந்தால் வைட்டமின் மாத்திரைகளை கொடுப்பார்கள்.விஷயம் தெரிந்த படித்தவராகஇருந்தால் அதற்கும் மாத்திரை இருக்கிறது.சிலரை ஏமாற்ற முடியாது.அவர்களுக்குஆலோசனைதான் தீர்வு.
மருந்துக்கடைகளில் அலைமோதும் கூட்ட்த்தில் மேலே சொன்னவாறு இருக்கவும்வாய்ப்புள்ளது.நம் குடும்பத்திலோ,தெரிந்தவர்களோ யாரேனும் இருந்தால் எடுத்துச்சொல்லுங்கள்.ஒரே மாத்திரையை மீண்டும் மீண்டும் நாமாகவே வாங்கிப் பயன்படுத்துவதுபிரச்சினையை வளர்க்கும்.
[Continue reading...]

காதலும் காமமும்

- 0 comments
 
 
 
காதல்,இளமைஉணர்ச்சிகள் என்பவை நாம் அவ்வளவாக கவனம் செலுத்தாத விஷயங்கள்.இருண்ட பக்கமாகவேஇன்னமும் இருந்து கொண்டிருக்கிறது. இளமை ஒரு முக்கியமான காலகட்டம்.வாழ்வின்அடித்தளமாக,திசைமாற்றும் புயலாக,வேகம்,மூர்க்கம் என்று விதவிதமாக விரியும்பொழுது.ஆனால் யாரும் பொருட்படுத்துவதில்லை.சங்கடமான விஷயங்களை சிந்திக்க மறுக்கும்போக்கு தொடர்ந்து கொண்டிருக்கிறது.
தன்னுடையமகன்களோ,மகள்களோ அப்படி இல்லை என்று மனம் தப்பித்துக்கொள்ள விரும்புகிறதா?பள்ளியில் படிக்கும் மாணவர்கள் காதல் போட்டியில் கொலை செய்கிறார்கள்.காதலைஏற்றுக்கொள்ளாத மாணவியை கார் ஏற்றி கொல்கிறார்கள்.ஒன்பதாம் வகுப்பு மாணவி காதல்தோல்வியால் தற்கொலை செய்து கொள்கிறார்.
ஒரு மாணவி தற்கொலைசெய்து கொண்டார்.காரணம் என்னவென்று அவரது பெற்றோர்களுக்கு தெரியாது.என்தற்கொலைக்கு நானே காரணம் என்று கடிதம் மட்டும் இருக்கிறது.இறுதிவரை என்ன காரணம்என்று யாராலும் கண்டுபிடிக்க முடியவில்லை.கேலி,கிண்டல் செய்தால் கூட உயிரைமாய்த்துக்கொள்கிறார்கள்.
உலகமே நம்மைமதித்து போற்றவேண்டுமென்று அதிகமாக நினைக்கும் வயது.தான் அழகில்லை,வசதியில்லைஎன்று மன அழுத்த்த்தில் இருக்கும்போது கேலி செய்தால் செத்துப்போக முடிவெடுத்துவிடுகிறார்கள்.நாட்டின் மக்கள் தொகையில் அதிகம் உள்ள இளைஞர்கள் மனக்குழப்பத்தில்தவிக்கிறார்கள். அரசாங்கமோ,பெரிய மனிதர்களோ கவலைப்படவேயில்லை.இதெல்லாம் ஹார்மோன் பிரச்சினை.சிந்திக்கஒன்றுமில்லை என்று கருதக்கூடும்.
அவர்களைத்திட்டுகிறோம்,சபிக்கிறோம்.சீரழிவதாககுற்றம் சாட்டுகிறோம்.சரியாக வளர்க்கப்படவில்லை என்று சொல்கிறோம்.நண்பர்கள்கெடுத்துவிட்டார்கள் என்று நம்புகிறோம்.அவர்கள் சரியில்லை.அவ்வளவுதான்.நம் வேலைமுடிந்துவிட்ட்து.அவர்களுக்கு கடுமையாக தண்டனை தரவேண்டும்.
நாளிதழ்களில் வரும்செய்திகள் குறைவென்று எனக்குத் தோன்றுகிறது.பல வக்கிரங்கள் மூடிமறைக்கப்பட்டுவிடுகின்றன.தற்கொலைகள் குடும்ப மானம் கருதி திசை திருப்பி நோயால்ஏற்பட்ட மரணமாகின்றன.போதைக்கு அடிமையாவது,இயற்கைக்கு மாறான செயல்களில்ஈடுபடுவதென்று வெளித்தெரியாத விஷயங்களே அதிகம்.
ஒரு இளைஞன்அல்லது இளம்பெண் உணர்ச்சி சார்ந்த பிரச்சினைகளை எப்படி எதிர்கொள்வது? அவர்களுக்குஏதாவது செய்திருக்கிறோமா? எனக்கு ஆத்திரமாக இருக்கிறது,தற்கொலை செய்து கொள்ளலாம்என்று தோன்றுகிறது,கொல்ல வேண்டும் என்று எண்ணம் வருகிறது,துக்கமாக இருக்கிறதுஎன்று அவர்கள் யாரிடம் சொல்வார்கள்.
காதல்,காம்ம்உள்ளிட்ட பிரச்சினைகளை பெற்றோரிடம் கூறி ஆலோசனை பெறமுடியுமா? நண்பர்களிடம்சொன்னால் உரிய வழிகாட்டும் திறன் படைத்தவர்களாக இருக்க வாய்ப்பிருக்கிறதா? இதற்காகஒரு வழி காண முடியாதா? உலகத்தை கவனித்தால் வழி இல்லாமல் இல்லை.
சீனாவில்கல்லூரிகளில் காதலும் காம்மும் பாடமாக வைக்கப்பட்டிருக்கிறது.மாணவர்கள் தங்கள்பிரச்சினைகளை சொல்லி ஆலோசனை பெற முடியும்.துக்கம்,ஆத்திரம்,கோபம் போன்ற உணர்ச்சிகளைநம்பிக்கையுள்ள ஒருவரிடம் பகிர்ந்து கொள்வதன் மூலம் பிரச்சினைகளில் இருந்துவெளியேவர முடியும்.இப்போதாவது சிந்திக்கவேண்டிய அவசியம் நமக்கு இருக்கிறது.
[Continue reading...]

தம்பதிகள் தொலைத்த உணர்ச்சி

- 0 comments
 
 
கணவனும் மனைவியும் ஒன்றாக வருவார்கள்..ஏராளமான தம்பதிகளை சில ஆண்டுகளாக சந்தித்து பேசும் வாய்ப்பு கிடைத்தது.அவர்கள் பேசுவதை முழுமையாக கேட்டுக்கொண்டிருப்பேன்.உற்று கவனித்தவாறு இருப்பேன்.இரண்டு பேரையும் யாரோ கயிறு கொண்டு கட்டிப் போட்டது போல எனக்கு தோன்றும்.
 
பெரும்பாலான தம்பதிகள் இந்த எண்ணத்தை என்னிடம் தோற்றுவித்தார்கள்.திருமணம் என்ற நிறுவனம் இன்று ஆட்டம் கண்டு வருகிறது.கூட்டுக் குடும்பம் சிதறி தனிக்குடித்தனமாகி அதுவும் காணாமல் போய்விடுமோ என்ற எண்ணம் முளை விடுகிறது.
 
இன்றைய தம்பதிகள் பிணைக்கும் எதையோ தொலைத்து விட்டார்களா? அவர்கள் ஒருவர் மீது ஒருவர் குறை கூறினார்கள்.இவர் செய்வது சரியில்லை என்றார்கள்.பதிலுக்கு கணவன் இவளுக்கு என்ன தெரியும் ?உலகம் தெரியாது என்றார்.வீட்டில் குழந்தைகளை கவனித்துக்கொண்டு சமையல் செய்து கொண்டு டி.வி பார்த்துக் கொன்டிருந்தால் எல்லாம் தெரிந்து விடுமா? மனைவி பதிலுக்கு சொன்னார்,"நீங்க கிழிச்சது ஒண்ணுமில்ல! எங்க தங்கச்சி வீட்டுக்காரரு இவர விட சின்னவரு வீடு கட்டிட்டாரு!"
 
அவர்கள் ஒருவர் பேசிக்கொண்டிருக்கும்போது அடுத்தவர் பேசுவதை தடுக்க முயற்சித்தார்கள்.அப்போது குரல் உயரும்.அவர் பேசட்டும் கேட்போம் இருங்கள்! பிறகு நீங்கள் பேசலாம்.என்று குறுக்கிட வேண்டியிருக்கும்.தன் வீட்டு உறவுகளை மதிப்பதில்லை என்பது பெரும்பாலானவர்களின் ஆதங்கம்."என் மாமா உடல் நிலை சரியில்லாதபோது போய் பார்க்கலாம் என்றால் வேலை இருக்கிறது'' என்று சொல்லிவிட்டார்.நான் மட்டும் அவருடைய உறவினர்கள் என்றால் கவனிக்கவேண்டுமா?
 
அவர்கள் சண்டையிட்டுக் கொண்டார்கள் ஒரே பையனை ஒழுங்கா வளர்க்க முடியல,அவன் ஒழுங்காக படிப்பதில்லை.எனக்கு எங்கே நேரம் இருக்கிறது என்றார் கணவர்." ''நான் என்னமோ அவன படிக்காதன்னு சொன்ன மாதிரி " என்கிறார் பதிலுக்கு மனைவி.தன்னை குறை சொல்லும்போது,குடும்பத்தினர் பற்றி பேசும்போது மனைவிக்கு ஆத்திரம் பொங்கியது.வேதனையாக உணர்வதாக பட்டது.மற்றவர்களுடன் ஒப்பிடும்போது கணவனுக்கு கண்ணில் ரத்தம் பாய்ந்தது.
 
அவர்கள் ஒவ்வொருவரும் தான் சொல்வது மட்டுமே சரியானது என்று திரும்பத் திரும்ப சொல்லிக் கொண்டிருந்தார்கள்.குழந்தைகளுக்காக பார்க்கிறேன் என்று சிலர் சொன்னார்கள்.சில பெண்கள்" நான் அப்போதே என் பெற்றோரிடம் மேலும் படித்து வேலைக்குப் போகவேண்டும் என்று சொன்னேன்.ஆனால் என் பேச்சை கேட்காமல் கட்டி வைத்து விட்டார்கள்" என்றார்கள்.
 
கணவர்களின் பெரும்பாலான கூற்று இது " வீட்டில் எல்லாமும் வாங்கி போட்டிருக்கிறேன் இல்லாத பொருள் எதுவுமில்லை.வாசிங் மெஷின்,கிரைண்டர்,டி.வி.,வருஷமானால் பட்டுப்புடவை.எதுவும் செய்யாமல் இல்லை. ஆனால் வீட்டில் இல்லாத ஒன்று இருந்தது.எனக்கு அவர்கள் ஒரு உணர்ச்சியை தொலைத்து வருவதாக தோன்றுகிறது.அந்த உணர்ச்சி அன்பு.
[Continue reading...]

தல தளபதி அதிரடி முடிவு

- 0 comments
 
 
 
வரும் தைத்திருநாளில் நண்பன் படம் வெளியாகும் என இயக்குனர் ஷங்கர் தெரிவித்துள்ளார்.
விஜய் ,ஸ்ரீகாந்த் ,ஜீவா நடிப்பில் உருவாகியிருக்கும் நண்பன் படத்தின் இடைவெளியில் பில்லா 2 டிரெய்லர் ஒளிபரப்படும் என்று அஜித்தும் விஜய்யும் முடிவு செய்துள்ளனர்.
தல தளபதி இருவரும் நல்ல நண்பர்கள்.அதேபோல் ரசிகர்கள் இருவரும் நல்ல நண்பர்களாக இருக்க வேண்டும் என்பது அவர்களின் ஆசை.ரசிகர்கள் இருவரும் இணைந்து செயல்பட வேண்டும் என்று தெரிவித்திருக்கிறார்.
[Continue reading...]

பிசி, எம்பிசி மாணவர்களுக்கு மாதந்தோறும் கல்வி உதவித் தொகை: ஜெ. உத்தரவு

- 0 comments
 
 
 
பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட, சீர்மரபினர் வகுப்பைச் சேர்ந்த மாணவ-மாணவியருக்கு பள்ளிக் கல்வி உதவித்தொகைத் திட்டத்தின்கீழ் மாதந்தோறும் உதவித் தொகை வழங்க முதல்வர் ஜெயலலிதா ரூ.11 கோடியே 32 லட்சம் வழங்கியுள்ளார்.
 
இது குறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது,
 
சமூகநீதியை நிலைநாட்டுவதில் முன்னோடியாகத் திகழும் முதல்வர் ஜெயலலிதா பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையின மக்களின் கல்வி மற்றும் பொருளாதார மேம்பாட்டிற்காக ஏராளமான திட்டங்களை முனைப்புடன் செயல்படுத்தி வருகிறார்.
 
இதன் அடிப்படையில் பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட, சீர்மரபினர் வகுப்பைச் சார்ந்த மாணவ-மாணவியருக்கு பள்ளிக் கல்வி உதவித்தொகைத் திட்டத்தின்கீழ், விடுதியில் தங்காமல் 1ம் வகுப்பு முதல் 5ம் வகுப்பு வரை பயிலும் மாணவ/ மாணவியர்களுக்கு மாதம் ரூ.25/- வீதம் 10 மாதங்களுக்கும், 6ம் வகுப்பு முதல் 8ம் வகுப்பு வரை பயிலும் மாணவ/ மாணவியர்களுக்கு மாதம் ரூ.40/-வீதம் 10 மாதங்களுக்கும், 9ம் வகுப்பு முதல் 10ம் வகுப்பு வரை பயிலும் மாணவ/மாணவியர்களுக்கு மாதம் ரூ.50/- வீதம் 10 மாதங்களுக்கும் கல்வி உதவித் தொகை வழங்கப்படும்.
 
இதேபோன்று விடுதியில் தங்கி 3ம் வகுப்பு முதல் 8ம் வகுப்பு வரை பயிலும் மாணவ-மாணவியர்களுக்கு மாதம் ரூ.200/- வீதம் 10 மாதங்களுக்கும், 9ம் வகுப்பு முதல் 10ம் வகுப்பு வரை பயிலும் மாணவ- மாணவியர்களுக்கு மாதம் ரூ.250/- வீதம் 10 மாதங்களுக்கும் கல்வி உதவித்தொகை வழங்கப்படும்.
 
இது தவிர தனி மானியமாக ஆண்டொன்றுக்கு ரூ.500/- வழங்கப்படும். ஒன்றாம் வகுப்பு முதல் 10ம் வகுப்பு வரை கல்வி பயிலும் பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட, சீர்மரபினர் இனத்தைச் சார்ந்த மாணவ/மாணவியர் இதனால் பயனடைவார்கள். இதற்கென ரூ.11 கோடியே 32 லட்சம் ஒப்பளிப்பு வழங்கி முதல்வர் ஜெயலலிதா உத்திரவிட்டுள்ளார் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.



[Continue reading...]

முல்லை பெரியாறு : கூடங்குளம் பிரச்சினையை திசை திருப கேரள அரசொறு சேர்ந்து மத்திய அரசு சதி

- 0 comments
 
 
 
நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் டைரக்டர் சீமான் கும்பகோணத்தில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அவர் கூறியதாவது:-
 
உச்சநீதிமன்றம் முல்லைப் பெரியாறு அணையின் நீர்மட்டத்தை 142 அடியாக உயர்த்தி கொள்ளலாம் என்று உத்தரவிட்டு உள்ளதே அந்த அணை பலமாக உள்ளதை காட்டுகிறது.
 
ஆனால் கேரள அரசும் அங்குள்ள கட்சிகளும் சுயலாபத்துக்காக முல்லைபெரியாறு அணை பிரச்சினையை கிளப்பி உள்ளனர். கேரள அரசும் உச்சநீதிமன்ற தீர்ப்பை மதிக்காமல் தமிழகத்துக்கு தரவேண்டிய நீரையும் தரமறுக்கிறது.
 
முல்லைப்பெரியாறு அணை தமிழர்களால் தமிழ்நாட்டுக்காக கட்டப்பட்டது ஆகும். ஆனால் கேரள அரசு நமது உரிமையில் தலையிட்டு அதுவும் உரிமை கொண்டாடுகிறது.
 
கேரள அரசு புதிதாக அணை கட்ட வேண்டும் என்றால் இப்போது உள்ள அணைக்கு உள்பக்கமாக கட்டிக் கொள்ளலாம் வெளிப்பக்கமாக அல்ல. முல்லைபெரியாறு அணை பிரச்சினையில் தமிழக அரசின் அணுகுமுறை சரியாக உள்ளது.
 
ராஜபக்சே போர்குற்றவாளி என்று தமிழகத்தில் அனைவரும் கூறி வந்தனர். மேலும் 3 பேரின் தூக்கு தண்டனையை ரத்து செய்ய வேண்டும் என்று கூறிய போது மத்திய அரசு கூடங்குளம் பிரச்சினையை ஆரம்பித்து மக்களை திசை திருப்பியது. தற்போது கூடங்குளம் பிரச்சினை பேரியதானவுடன் முல்லைபெரியாறு அணை பிரச்சினையை தூக்கி விட்டு கூடங்குளம் பிரச்சினையை திசை திருப்புகிறது.
 
கேரள மத்தியிலும், மாநிலத்திலும் காங்கிரஸ் ஆட்சி செய்வதால் அவர்களால் இந்த பிரச்சினையை தீர்க்க முடியும். தமிழகத்தில் இருந்து மற்ற மாநிலங்களுக்கு அதிக அளவு மின்சாரம் வழங்கப்படுவதால் தமிழகம் 8 மணி நேரம் இருளில் மூழ்குகிறது.
 
முல்லைபெரியாறு பிரச்சினையில் மத்திய அரசு தீர்வு காணவும் உச்சநீதிமன்ற உத்தரவை அமல்படுத்த கோரியும் வருகிற 17-ந்தேதி ஆண்டிப்பட்டியில் இருந்து தேனிக்கு பேரணியாக செல்ல உள்ளோம்.
 
இவ்வாறு சீமான் கூறினார்.



[Continue reading...]

கோச்சடையானில் ஆசின் நடித்தால் ரஜினி வீட்டை முற்றுகையிடுவோம்

- 0 comments
 
 
 
 
 
 
மலையாள நடிகையான ஆசின், கோச்சடையான் படத்தில் நடிக்கக் கூடாது. மீறி நடிக்க வைத்தால் ரஜினிகாந்த் வீட்டை முற்றுகையிட்டுப் போராட்டம் நடத்துவோம் என்று இந்து மக்கள் கட்சி மிரட்டியுள்ளது.
 
ரஜினி நடிக்க கோச்சடையான் என்ற பெயரில் ஒரு படம் உருவாகிறது. ரஜினியின் மகள் செளந்தர்யா இயக்குகிறார். இதில் ஜோடியாக நடிக்க யாரைப் போடலாம் என்று பெரிய டிஸ்கஷனே நடக்கிறதாம். சினேகாவைத் தங்கையாக நடிக்க வைக்கவுள்ளனர் என்று தகவல்கள் கூறின.
 
அதேசமயம், ஹீரோயினாக நடிக்க ஆசினை முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகின. ஆனால் தற்போது ஆசினை நடிக்க வைக்க கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது.
 
இதுகுறித்து இந்து மக்கள் கட்சியின் அமைப்புச் செயலாளர் கண்ணன் கூறுகையில், நடிகை ஆசின், தமிழர்களின் உணர்வுகளை மதிக்காமல் இலங்கை சென்று வந்தார். அப்போதே கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. அவரை தமிழ் சினிமாப் படங்களில் நடிக்க அனுமதிக்கக் கூடாது என்று கோரப்பட்டது. ஆனால் நடிகர் சங்கம் குறுக்கிட்டுப் பஞ்சாயத்துப் பேசி அமைதியாக்கி விட்டது.
 
தற்போது முல்லைப்பெரியாறு பிரச்சினை ஏற்பட்டுள்ள இந்த நேரத்தில் மலையாள நடிகையான ஆசினை ரஜினி ஜோடியாக்க கூடாது. மீறி செய்தால் படப்பிடிப்புகளில் போராட்டம் நடத்துவோம். ரஜினி வீட்டிலும் முற்றுகை போராட்டம் நடத்துவோம் என்று எச்சரித்தார்.
 
இதனால் ஆசினை கோச்சடையான் ஹீரோயினாக்க சிக்கல் எழுந்துள்ளதாக தெரிகிறது. ரஜினியின் தங்கையாக சினேகா நடிக்கவிருப்பதால் அவருக்கு ஜோடியாக நடிக்க நடிகை அனுஷ்கா தயங்கியதைத் தொடர்நதே ஆசினை கோச்சடையான் குழு அணுகியதாக ஒரு தகவல் உள்ளது குறிப்பிடத்தக்கது.



[Continue reading...]

மறுபிறவி எடுத்த ரஜினியின் 62 வது பிறந்தநாள் உலகெங்கும் கொண்டாட்டம்

- 0 comments
 
 
 
 
 
ஸ்டைல் மன்னன் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் 62 வது பிறந்தநாளை உலகம் முழுவதும் உள்ள அவரது ரசிகர்கள் உற்சாகத்துடன் கொண்டாடி வருகின்றனர்.
 
உடல் நலமின்றி சிங்கப்பூர் சென்று சிகிச்சை பெற்று திரும்பியுள்ள ரஜினி புதிதாய் பிறந்த வருடம் இது என்றால் மிகையல்ல. அதனால்தான் 61 ஆண்டுகளுக்கும் இல்லாத மகத்துவம் இந்த ஆண்டு கிடைத்துள்ளது. மறுபிறவி எடுத்துள்ள ரஜினியின் பிறந்தநாளை அதீத உற்சாகத்துடனும் மகிழ்ச்சியுடனும் உலகமெங்கும் உள்ள ரசிகர்கள் இந்த பிறந்த நாளைக் கொண்டாடுகின்றனர்.
 
1950 ஆம் ஆண்டு டிசம்பர் 12 நாள் பிறந்த சிவாஜிராவ் கெய்க்வாட் என்ற சாதாரண மனிதர் பெங்களூரு நகரில் பேருந்து நடத்துனராக தனது பணியை தொடங்கினார். அதற்கு முன்பு அவர் போர்ட்டராகவும் இருந்துள்ளார். பின்னர் இயக்குநர் பாலசந்தரின் கண்களில் சிக்கி இன்று உலக ரசிகர்கள் போற்றும் உன்னத நடிகராக உயர்ந்திருக்கிறார்.
 
உலகளாவிய சிறந்த நடிகர்களுள் ஒருவராக ரஜினி பார்க்கப்படுவதற்குக் காரணம் அவர் ஏற்கும் கதாபாத்திரத்திற்கு தன்னை மாற்றிக்கொள்வதுதான். அபூர்வராகங்களில் தொடங்கிய ரஜினியின் திரையுலக வாழ்க்கை எந்திரன் வரை 36 ஆண்டுகாலம் சினிமா வெற்றி தோல்விகளுக்கப்பால் தமிழ் திரைப்பட ரசிகர்களின் நெஞ்சில் அவரை மண்ணின் முடிசூடா மன்னனாக வலம் வர வைத்துள்ளது.
 
ஸ்டைல் மன்னன்
 
ரஜினிகாந்த் தான் நடிக்கும் திரைப்படங்களில் புகுத்திய ஸ்டைல் அனைவரையும் கவர்ந்தது. அதற்காகவே அவருக்கு ஒரு தனி ரசிகர்வட்டம் உருவானது.
 
நினைத்தாலே இனிக்கும், முரட்டுக்காளை, மனிதன், ராஜாதிராஜா அண்ணாமலை,தளபதி உள்ளிட்ட படங்களும், இன்றைய எந்திரன் வரை ரஜினியின் ஸ்டைல் மற்றும் பஞ்ச் வசனத்திற்காகவே தியேட்டருக்கு வந்த ரசிகர்கள் இருக்கின்றனர்.
 
உலகளாவிய ரசிகர்கள்
 
ரஜினி மீது அதீத அன்பு கொண்டுள்ளவர்கள் அவரது ரசிகர்கள் மட்டுமல்ல அவரை திரைத்துறை என்பதையும் தாண்டி ரசிக்கும் ஏராளமான மக்கள் என்பது தற்போது ரஜினிக்கு உடல்நலமில்லாமல் போனபோது தான் உண்மையாக அறியமுடிந்தது. அந்த அளவிற்கு அனைவரின் நெஞ்சங்களிலும் நீங்காத இடம்பிடித்துள்ளார் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் என்றால் மிகையாகாது.
 
அடுத்த ஆண்டு ரஜினிகாந்த் பிறந்தநாள் உலக பிரசித்தி பெற்ற நாளான 12-12-12 அன்று வருவதை ஒட்டி மிகச்சிறப்பான முறையில் கொண்டாட ரஜினி ரசிகர்களும், அவருடைய குடும்பத்தினரும் இப்போதே திட்டமிட்டு வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.



[Continue reading...]

தமிழகத்தில் 6 மணி நேரம் மின் தடை: மின்துறை அமைச்சர் ஒப்புதல்!

- 0 comments
 
 
 
தமிழகத்தில் சுமார் 6 மணி நேரம் மின் தடை இருந்து வருகினறது. இருப்பினும் வரும் மார்ச் மாதத்திற்குள் மின்தடை அகன்று விடும் என்று தமிழக மின்துறை அமைச்சர் நத்தம் விஸ்வநாதன் தெரிவித்துள்ளார்.
 
தமிழகத்தில் கடந்த திமுக ஆட்சியில் தான் மின்தடை தாறுமாறாக இருந்தது. அதிமுக ஆட்சிக்கு வந்தால் மின்தடையின்றி சுகமாக இருக்கலாம் என்று நினைத்து மக்கள் வாக்களித்தனர். ஆனால் தற்போது 6 மணி நேரம் மின் தடை ஏற்படுகிறது. இதனால் மக்கள் அதிருப்தியடைந்துள்ளனர். இந்நிலையில் தமிழகத்தில் 6 மணி நேரம் மின் தடை ஏற்படுகிறது என்பதை மின்துறை அமைச்சர் நத்தம் விஸ்வநாதன் ஒப்புக் கொண்டுள்ளார்.
 
இது குறித்து அவர் ராமேஸ்வரத்தில் செய்தியாளர்களிடம் கூறியதாவது,
 
தமிழகத்தின் மின் தேவை, தற்போதைய நிலவரப்படி 12,000 மெகாவாட் ஆகும். ஆனால் தற்போது தமிழகத்திற்கு 9,000 மெகாவாட் மின்சாரம் மட்டுமே கிடைக்கிறது. இதனால் தமிழகம் முழுவதும் 6 மணி நேரம் மின் தடை செய்யப்படுகிறது.
 
கூடங்குளத்தில் மின் உற்பத்தி துவக்கினால் தமிழகத்திற்கு கூடுதலாக சுமார் 930 மெகாவாட் மின்சாரம் கிடைக்கும். இதன் மூலம் மின் பற்றாக்குறையை ஓரளவு சமாளித்துவிடலாம். எனவே, வரும் மார்ச் மாதத்திற்குள் தமிழகத்தில் மின்தடை இருக்காது என்றார்.



[Continue reading...]

Fw: வில்லன் ஆனது ஏன்?

- 0 comments
 
 
 
வில்லன் வேடத்தில் நடிக்கும் விவேக் கூறியதாவது: தமிழ் மற்றும் கன்னடத்தில் உருவாகும் 'வழிப்போக்கன்' படத்தில் வில்லனாக நடிக்கிறேன். இதை நடிகர் மிதுன் தேஜஸ்வி தயாரிக்கிறார். படத்தின் ஹீரோவும் அவர்தான். திடீரென்று வில்லனாக நடிப்பது ஏன் என்கிறார்கள். என் கேரக்டர் வித்தியாசமாகவும், இதுவரை நான் நடிக்காத கோணத்திலும் அமைந்திருந்ததால் ஏற்றேன். பெங்களூரில் அடுத்த வாரம் ஷூட்டிங் தொடங்குகிறது. கன்னடத்தில் வசனம் பேச வேண்டியிருப்பதால், அதற்கான பயிற்சி பெறுகிறேன்.
 

 


[Continue reading...]

விஜயகாந்த் தலைமையில் தே.மு.தி.க. ஆர்ப்பாட்டம்: நாளை மறுநாள் தேனியில் நடைபெறுகிறது

- 0 comments
 
 
 
 
 
 
தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
 
முல்லைப் பெரியாறு நீர்த்தேக்க பிரச்சினையில் கேரள அரசின் தான்தோன்றித்தனமான போக்கின் காரணமாக முல்லைப் பெரியாறு பகுதியில் கலவரம் ஏற்படும் அபாயச் சூழ்நிலை உருவாகி வருகிறது. நீர்மட்டத்தை 142 அடியாக உயர்த்தலாம் என்ற உச்சநீதிமன்ற தீர்ப்பையும் கேரள அரசு மறுத்து வருகிறது.
 
மேலும் அணை பலவீனமானது என்றும், புதிய அணை கட்டப்போவதாகவும் தன்னிச்சையாக கூறிவருகிறது. தமிழ்நாட்டில் இருந்து சென்ற அய்யப்ப பக்தர்களை தாக்கியும், பேருந்துகளில் சென்ற பொதுமக்களை தாக்கியும், பேருந்துகளை சேதப்படுத்தியும் அங்குள்ள சமூகவிரோதிகள் எத்தகைய வன்முறைகளில் ஈடுபட்டாலும், அவற்றை கேரள போலீஸ் கண்டுகொள்ளாமல் இருப்பதும் கடந்த சில தினங்களாக நடைபெற்று வருகின்றன.
 
கேரள சட்டமன்றம் கூடி அனைத்துக் கட்சியினரும் சேர்ந்து புதிய அணையை கட்ட வேண்டும் என்றும், ஏற்கனவே இருக்கிற முல்லைப் பெரியாறு அணையின் நீர் மட்டத்தை 120 அடியாக குறைக்க வேண்டும் என்றும் தீர்மானம் நிறைவேற்றி உள்ளனர்.
 
இவற்றின் விளைவாக தங்களுக்கு இழைக்கப்படும் அநீதியை எதிர்த்து தமிழ்நாட்டைச் சேர்ந்த அப்பகுதி வாழ் மக்கள் கேரளத்திற்கு செல்லும் போக்குவரத்தை நிறுத்தியும், தமிழ்நாட்டில் இருந்து விளை பொருட்கள் அங்கு செல்லக்கூடாது என்று தடுத்தும், ஆர்ப்பாட்டங்களிலும், பேரணிகளிலும் ஈடுபட்டு வருகின்றனர்.
 
இதனால் தமிழ்நாடு அரசு அந்த பகுதியில் 144 தடை உத்தரவை பிறப்பித்துள்ளது. முல்லைப் பெரியாறு பிரச்சினையில் இவ்வாறு இரண்டு பக்கங்களிலும் கலவரச் சூழ்நிலை ஏற்பட்டிருப்பதையும், இது இன்னும் அதிகரிப்பதற்கான அபாயகரமான சூழ்நிலை உருவாகி வருவதையும், இந்திய அரசு கைகட்டிக் கொண்டு வேடிக்கை பார்த்து வருகிறது.
 
உச்சநீதிமன்றத்தால் நியமிக்கப்பட்ட அதிகாரம் அளிக்கப்பட்ட குழு, முல்லைப் பெரியாறு அணையின் பாதுகாப்பை ஆராய 23-ந் தேதி நிபுணர் குழுவை அனுப்பி வைக்க உள்ளது. தமிழ்நாடு மற்றும் கேரள மாநிலங்களுக்கு இடையே பற்றி எரிகிற தீயை இந்திய அரசு மேலும் வளர்க்கிற போக்கைக் கண்டித்து தேனியில் 14-ந் தேதி (புதன்கிழமை) காலை 11 மணியளவில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் எனது தலைமையில் நடைபெறும். இந்த ஆர்ப்பாட்டத்தில் கட்சி தொண்டர்கள் பெருவாரியாகக் கலந்து கொள்ள வேண்டுமென்று கேட்டுக்கொள்கிறேன்.
 
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.



[Continue reading...]

My Blog List

Popular Posts

Popular Posts

 
Copyright © . தினசரி செய்திகள் - Posts · Comments
Theme Template by BTDesigner · Powered by Blogger