முல்லை பெரியாறு அணை பிரச்சினை காரணமாக கடந்த ஒரு வாரமாக தேனி மாவட்டம் கம்பம், கூடலூர் பகுதிகளில் போராட்டம் நடந்து வருகிறது. தேனி மாவட்டத்தில் இருந்து கேரளா செல்லும் போடி மெட்டு, கம்பம் மெட்டு, குமுளி வழியாக போக்கு வரத்து முழுமையாக தடை செய்யப்பட்டு உள்ளது.
தமிழகத்தில் இருந்து கேரளாவுக்கு தினமும் 50 ஆயிரம் கிலோ காய்கறிகள், 50 லட்சம் லிட்டர் பால் அனுப்பப்பட்டு வந்தது. ஆனால் தற்போது நடந்து வரும் போராட்டம் காரணமாக காய்கறிகள், பால் சப்ளை கடந்த 6 நாட்களாக தடைபட்டு உள்ளது. இதனால் கேரளாவில் காய்கறிகளின் விலை 5 மடங்கு உயர்ந்து உள்ளது. கத்தரிக்காய், தக்காளி, சாம்பார் வெள்ளரி ஆகியவை கிலோ 120 முதல் 150 வரை விற்கப்படுகிறது. 10 ரூபாய்க்கு விற்ற பூசணிக்காய், புடலங்காய் கிலோ 60 முதல் 80 ரூபாய் வரை சில்லறையில் விற்கப்படுகிறது.
கேரளா, இடுக்கி மாவட்டத்தில் ஒரு லட்சத்து 50 ஆயிரம் ஏக்கரில் ஏலக்காய் சாகுபடி நடக்கிறது. இதில் குறிப்பிட்ட அளவு எஸ்டேட்கள் தமிழகத்தை சேர்ந்தவர் களிடம் உள்ளன. முல்லை பெரியாறு பிரச்சினையால் தமிழக கூலி தொழிலாளர்கள் யாரும் வேலைக்கு செல்ல வில்லை. இதனால் செடி களில் பழுத்த பழங்கள் அழுகி வீணாவதால் விவசாயிகளுக்கு பல கோடி ரூபாய் நஷ்டம் ஏற்பட்டு உள்ளது. வாகன போக்குவரத்து தடைப்பட்டு உள்ளதால் ஏல மையங்களில் 10 லட்சம் கிலோ ஏலக்காய் விற்பனை யாகாமல் தேங்கி உள்ளது. இதனால் 50 கோடி ரூபாய் வர்த்தகம் பாதிக்கப்பட்டு உள்ளது.
முல்லை பெரியாறு அணை விவகாரத்தில் கேரள அரசை கண்டித்து கேரளா வுக்கு அனுப்பப்படும் காய் கறிகளை அனுப்புவதை நிறுத்தி வைக்க தமிழக வியாபாரிகள் முடிவு செய்தனர். இது தொடர்பாக ஒட்டன்சத்திரம் காந்தி காய்கறி மார்க்கெட் சங்கம் சார்பாக செயற்குழு கூட்டம் கூடியது. கூட்டத்தில் நாளை (திங்கட்கிழமை) ஒரு நாள் மட்டும் கடை விடுமுறை விட வேண்டும்.
இதனால் கேரளாவிற்கு அனுப்ப கூடிய சுமார் 1000 டன் காய்கறிகளை நிறுத்த வேண்டும் என முடிவு செய்யப்பட்டது. இதனால் அன்று ஒருநாள் மட்டும் சுமார் 3 கோடி ரூபாய் வர்த்தகம் பாதிப்படையும் நிலை ஏற்பட்டு உள்ளது
0 comments:
Post a Comment
உங்களது கமெண்ட் என்ன ?