Wednesday, 23 October 2013

தீவிரவாதிகள் பக்ருதீன், பிலால் மாலிக் முன் சாட்சிகள் அணிவகுப்பு: வேலூர் ஜெயிலில் நாளை நடக்கிறது police bakarudin bilal malik behind witness parade

- 0 comments

தீவிரவாதிகள் பக்ருதீன், பிலால் மாலிக் முன் சாட்சிகள் அணிவகுப்பு: வேலூர் ஜெயிலில் நாளை நடக்கிறது police bakarudin bilal malik behind witness parade

வேலூர், அக்.24–

வேலூரில் இந்து முன்னணி மாநில செயலாளர் வெள்ளையப்பன் படுகொலை செய்யப்பட்டார். இந்த வழக்கில் போலீசாரால் தேடப்பட்டு வந்த போலீஸ் பக்ருதீன், பிலால் மாலிக், பன்னா இஸ்மாயில் ஆகியோரை சிபிசிஐடி போலீசார் கைது செய்துள்ளனர்.

இந்த வழக்கு தொடர்பாக பிலால் மாலிக், போலீஸ் பக்ருதீன் ஆகியோரை சிபிசிஐடி போலீஸ் காவலில் எடுத்து விசாரணை நடத்தினர். இதில் பல்வேறு முக்கிய தகவல்கள் பெறப்பட்டது. வெள்ளையப்பனை கொலை செய்தது எப்படி, பிறகு எப்படி தப்பிச் சென்றனர், எங்கு தங்கி இருந்தனர் போன்ற விவரங்களை போலீசார் சேகரித்தனர். பின்னர் இருவரும் வேலூர் ஜெயிலில் அடைக்கப்பட்டனர்.

மேலும் இந்த வழக்கில் கொலை சம்பவம் நடந்த போது சம்பவ இடத்தில் பிலால் மாலிக், போலீஸ் பக்ருதீன் இருந்ததற்கான சாட்சியங்களை போலீசார் சேகரித்துள்ளனர்.

இந்நிலையில் பிலால் மாலிக், பக்ருதீன் ஆகியோரை பல்வேறு இடங்களில் நேரில் பார்த்த சாட்சிகளை கொண்டு நாளை வேலூர் ஜெயிலில் அணிவகுப்பு நடத்தப்படுகிறது.

இதில் சாட்சிகள் குற்றசாட்டப்பட்டவர்களை அடையாளம் காட்டுவார்கள் என போலீசார் தெரிவித்தனர்.

...

shared via

[Continue reading...]

கேரளாவில் நாடார் சமுதாயத்தின் சமூக நிலைகள் பற்றி ஆராய ஓய்வு பெற்ற நீதிபதி தலைமையில் கமிஷன் Retired judge to head panel on Nadar community

- 0 comments

கேரளாவில் நாடார் சமுதாயத்தின் சமூக நிலைகள் பற்றி ஆராய ஓய்வு பெற்ற நீதிபதி தலைமையில் கமிஷன் Retired judge to head panel on Nadar community

திருவனந்தபுரம், அக். 23-

கேரளாவில் உள்ள நாடார் சமுதாயத்தினரின் பிந்தங்கிய நிலைமைகள் குறித்து ஆராய ஓய்வு பெற்ற நீதிபதி ஹரிஹரன் நாயர் தலைமையில் கமிஷன் ஒன்றை அமைக்க கேரள அமைச்சரவை தீர்மானித்துள்ளது.

குறிப்பேடுகளில் உள்ளபடி, இந்த ஆய்வானது நாடார் சமுதாயத்தினர் மற்றும் உட்பிரிவினர்களுக்கான மத்திய அரசின் இட ஒதுக்கீட்டு பயன்களை பெற வழிவகுக்கும் என்றும் கூறப்படுகிறது.

நாடார் சமுதாயத்தின் சமூக, பொருளாதார கல்வி நிலைகளில் பின் தங்கியநிலை மற்றும் அரசுப் பதவிகளில் அவர்களின் நிலைகள் பற்றி ஆராய்ந்து இந்த கமிஷன் அறிக்கை சமர்ப்பிக்கும். இந்த அறிக்கை இன்னும் ஆறு மாதங்களில் கேரள அரசுக்கு சமர்ப்பிக்கப்படும் என்று கூறப்படுகிறது. 

...

shared via

[Continue reading...]

சென்னை கோவை இடையே ஏ.சி. சிறப்பு ரெயில் முன்பதிவு இன்று முதல் தொடக்கம் Chennai to Coimbatore AC Special train booking first start today

- 0 comments

சென்னை கோவை இடையே ஏ.சி. சிறப்பு ரெயில் முன்பதிவு இன்று முதல் தொடக்கம் Chennai to Coimbatore AC Special train booking first start today

சென்னை, அக்.24-

தீபாவளி பண்டிகையை ஒட்டி சென்னை-கோவை இடையே முற்றிலும் ஏ.சி. பெட்டிகள் இணைக்கப்பட்டுள்ள சிறப்பு ரெயிலை தெற்கு ரெயில்வே அறிவித்துள்ளது. இதற்கான முன்பதிவு இன்று தொடங்குகிறது. இது குறித்து தெற்கு ரெயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறி இருப்பதாவது:-

தீபாவளி பண்டிகையை ஒட்டி தெற்கு ரெயில்வே இதுவரை 82 சிறப்பு ரெயில்களை அறிவித்துள்ளது. இந்த நிலையில் கூடுதலாக சென்னை சென்டிரலில் இருந்து கோவைக்கு முற்றிலும் ஏ.சி.(குளிர்சாதன வசதி) பெட்டிகள் கொண்ட சிறப்பு ரெயில் இயக்கப்பட உள்ளது.

அதன்படி, சென்னை சென்டிரல்-கோவை அதிவிரைவு ஏ.சி. சிறப்பு ரெயில்(வ.எண்:06009) நவம்பர் 3-ந் தேதி இரவு 10.30 மணிக்கு சென்னை சென்டிரலில் இருந்து புறப்பட்டு மறுநாள் காலை 6.20 மணிக்கு கோவை சென்றடையும்.

மறுபாதையில், இந்த ரெயில்(06010) நவம்பர் 4-ந் தேதி இரவு 11.45 மணிக்கு கோவையில் இருந்து புறப்பட்டு, மறுநாள் காலை 7.45 மணிக்கு சென்னை சென்டிரல் ரெயில் நிலையம் வந்தடையும். இந்த ரெயிலில் ஒரு முதல் வகுப்பு ஏ.சி. பெட்டி, 3 இரண்டு அடுக்கு ஏ.சி. பெட்டிகள், 8 மூன்று அடுக்கு ஏ.சி. பெட்டிகள் இணைக்கப்பட்டிருக்கும்.

இந்த ரெயில்கள் அரக்கோணம், காட்பாடி, ஜோலார்பேட்டை, சேலம், ஈரோடு மற்றும் திருப்பூர் வழியாக இயக்கப்படும். இது கோவை செல்லும் போது வடக்கு கோவை ரெயில் நிலையத்திலும், சென்னை வரும் போது, பெரம்பூர் ரெயில் நிலையத்திலும் நின்று செல்லும். இதற்கான முன்பதிவு இன்று முதல் தொடங்குகிறது.

இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் கூறப்பட்டு உள்ளது.

...

shared via

[Continue reading...]

ஆட்சியின் சாதனைகளுக்கு பதில் ஆச்சியின் மரணம் பற்றி பேசுகிறார் ராகுல் : பா.ஜனதா கிண்டல் BJP hits out at Rahul for harping on emotional issues

- 0 comments

ஆட்சியின் சாதனைகளுக்கு பதில் ஆச்சியின் மரணம் பற்றி பேசுகிறார் ராகுல் : பா.ஜனதா கிண்டல் BJP hits out at Rahul for harping on emotional issues

பாட்னா, அக். 23-

காங்கிரஸ் கட்சியின் துணைத்தலைவர் ராகுல் காந்தி, சில தினங்களாக பொதுக்கூட்டங்களில் உணர்ச்சிப் பூர்வமாக பேசி வருகிறார். வேறு வழியின்றி ராகுல் அவ்வாறு பேசுவதற்கு தள்ளப்பட்டுள்ளார் என்று பா.ஜனதா நாகையாடியுள்ளது. இதுகுறித்து அக்கட்சியின் தலைவர் ரவிசங்கர் பிரசாத் கூறியதாவது:-

ராகுல் தனது பாட்டி சுட்டுக்கொல்லப்பட்டது, அம்மாவிற்கு உடல்நிலை சரியில்லாதது குறித்து பேசியிருக்கிறார் என்பது மிகவும் துரதிர்ஷ்டமானது. மக்களின் வாக்குகளை கவர அவர் உணர்ச்சிப் பூர்வமாக பேசி வருகிறார். நாட்டிற்கு நன்றாக தெரிந்த காந்தி குடும்பத்தின் தியாகங்களைப் பற்றி மீண்டும் புகழ் பாடுவதை காங்கிரஸ் கட்சியின் துணைத்தலைவர் ராகுல் காந்தி தனது தேர்தல் பிரச்சாரத்தின் ஒரு பகுதியாக வைத்துள்ளார்.

இரண்டு முறையாக நாட்டை ஆண்டு வரும் ஐக்கிய முற்போக்கு கூட்டணியின் சாதனைகள் பற்றி பேசுவதற்கு ஒன்றுமில்லாமல், ராகுல் அவரது குடும்பத்தை பற்றி உணர்ச்சிப் பூர்வமாக விளக்கி வருகிறார்.

இவ்வாறு ராகுல் பேசி வருவது, நவீன இந்தியாவின் பிரச்சினைகளை தீர்க்க ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு ஒன்றும் செய்யவில்லை என்பதையே காட்டுகிறது. இது சட்டசபை மற்றும் பாராளுமன்றத் தேர்தல்களில் எந்த பயனையும் தராது.

கடந்த காலத்தை பற்றிய ராகுல் காந்தியின் உணர்ச்சிப் பூர்வமான பேச்சுக்களும், சுய புராணங்களும் இன்றைய காலத்து இளைஞர்களிடம் எடுபடாது. அவர்கள் வருங்கால இந்தியாவை படைக்கும் வேகத்தில் பயணித்துக்கொண்டிருக்கிறார்கள்.

கடந்த 10 ஆண்டுகால காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசால் நாட்டு மக்கள் பல்வேறு பிரச்சினைகளையும், பாதுகாப்பின்மையையும் அனுபவித்து வருகிறார்கள். இவ்வாறு அவர் பேசினார்.

...

shared via

[Continue reading...]

Oreo Cream Cookies Can be Harmful as Cocaine, Say Scientists ஒரியோ கிரீம் குக்கீகளை கோகோயின் போன்ற தீங்கு விளைவிக்கும்

- 0 comments
ஒரியோ கிரீம் குக்கீகளை கோகோயின் போன்ற தீங்கு விளைவிக்கும்
Oreo Cream Cookies Can be Harmful as Cocaine, Say Scientists

ஒரியோ, உலகம் முழுவதும் மிகவும் பிரபலமான கிரீம் பிஸ்கட் ஒன்று, மூளை, சில சட்டவிரோத மருந்துகள் போலவே பாதிக்கும், புதிய ஆராய்ச்சி வெளிப்படுத்துகிறது.

லண்டனில் கனெக்டிகட் கல்லூரி பேராசிரியர் ஜோசப் ஷ்ரோடர் மற்றும் அவரது சக எலிகள் மீதான பரிசோதனைகளை மேற்கொண்டது மற்றும் குக்கீகளை கோகோயின் போன்ற மூளையின் மகிழ்ச்சி மையத்தை உள்ள நியூரான்கள் தூண்டியது என்று கண்டறியப்பட்டது . அவர் கொழுப்பு அல்லது சர்க்கரை அதிக அளவு கொண்ட அனைத்து உணவு மூளை அதே விளைவை என்று கூறினார் .

" எங்கள் ஆய்வு உயர் கொழுப்பு / உயர் சர்க்கரை உணவுகள் மருந்துகள் செய்ய அதே வழியில் மூளை தூண்டுகின்றன கருத்தும் , " நியூரோ ஷ்ரோடர் ஒரு செய்தி வெளியீடு கூறினார் . " சிலர் அவர்கள் இன்னும் மோசமாக உள்ளது என்று உண்மையில் போதிலும் இந்த உணவுகள் எதிர்க்க முடியாது ஏன் அது விளக்க வேண்டும். "

அவர்கள் சோதனைக்கு , ஆராய்ச்சியாளர்கள் பிரமை இரண்டு பக்கங்களிலும் உள்ள பசி எலிகள் Oreos அரிசி கேக்குகள் அளிக்கலாம் . அவர்கள் விலங்குகள் பிரமை சுற்றி பிரமை இரு தங்க அனுமதித்தது. ஆராய்ச்சியாளர்கள் விலங்குகள் ஒவ்வொரு பக்கத்தில் செலவிடும் நேரத்தை பதிவு . பின்னர் , அவர்கள் கோகோயின் , மார்பின் போன்ற மருந்துகள் செலுத்தினால் எலிகள் மற்றொரு குழு அதே பரிசோதனை , மீண்டும் மீண்டும் அவர்களை உப்பு அளிக்கலாம் .

கோகோயின் மற்றும் Oreos பெற்றது அந்த செலுத்தினால் எலிகள் பிரமை மருந்தாக பக்கத்தில் சமமாக நேரம் செலவிட்டார் . மூளையின் மகிழ்ச்சி மையம் கேட்ச் - Fos என்று ஒரு புரதம் வெளிப்பாடு அளவிடும் போது வியப்பு , ஆராய்ச்சியாளர்கள் Oreos கோகோயின் அல்லது மார்பின் மேல் நியூரான்கள் தூண்டப்படலாம் என்று கண்டறியப்பட்டது . " இது எங்கள் நடத்தை முடிவு நன்றாக தொடர்புடையதாக மற்றும் உயர் கொழுப்பு / உயர் சர்க்கரை உணவுகள் போதை என்று கருதுகோள் ஆதரவு வழங்கியிருக்கிறது , " ஷ்ரோடர் கூறினார் .

" நாங்கள் கோகோயின் மற்றும் மார்பின் , உயர் கொழுப்பு / உயர் சர்க்கரை உணவுகள் , ஏனெனில் அவர்கள் அணுக மற்றும் செலவிடும் ஒரு ஆபத்து இன்னும் வழங்கலாம் போன்ற மருந்துகள் எடுத்து குறிப்பிடத்தக்க உடல் நல தொடர்பு கூட , " ஆராய்ச்சியாளர் ஜேமி Honohan சேர்க்கப்பட்டது .

கண்டுபிடிப்புகள் சான் டியாகோ , கலிபோர்னியா , அடுத்த மாதம் நரம்பியல் மாநாட்டில் சங்கம் வழங்கினார்.

குக்கீகளை உண்மையான சுகாதார அம்சம் பெரும்பாலும் பதில் விட்டு ஒரு கேள்வி உள்ளது . ஜூன் மாதம் , ராணி மேரி , லண்டன் பல்கலைக்கழகத்தில் உப்பு மற்றும் உடல்நலம் (கேஷ் ) இல் ஒருமித்த அதிரடி இருந்து ஆராய்ச்சியாளர்கள் குழு இங்கிலாந்து சந்தைகளில் கிடைக்கும் 479 பிஸ்கட் சோதனை மற்றும் பிஸ்கட் பெரும்பான்மை உப்பு ஆபத்தான நிலைகளை கொண்டிருந்தது கண்டறியப்பட்டது , மற்றும் வைக்க முடியும் பின்னர் உயர் இரத்த அழுத்தம், அதிக ஆபத்து இளைய தலைமுறை .

[Continue reading...]

தங்கம் விலை தொடர்ந்து அதிகரிப்பு: சவரனுக்கு ரூ.104 உயர்வு gold price rs 104 increase

- 0 comments

தங்கம் விலை தொடர்ந்து அதிகரிப்பு: சவரனுக்கு ரூ.104 உயர்வு gold price rs 104 increase

சென்னை,அக். 23–

கடந்த சில நாட்களாக தங்கம் விலை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. கடந்த 19–ந் தேதி ஒரு பவுன் 23 ஆயிரத்து 240 ஆக இருந்தது. பின்னர் படிப்படியாக உயர்ந்து நேற்று ஒரு பவுன் ரூ.23 ஆயிரத்து 592–க்கு விற்றது.

இன்று மேலும் பவுனுக்கு ரூ.104 உயர்ந்துள்ளது. ஒரு பவுன் ரூ.23 ஆயிரத்து 696 ஆக உள்ளது. ஒரு கிராம் ரூ.2,962–க்கு விற்கப்படுகிறது.

வெள்ளி கிலோவுக்கு ரூ.1,140 அதிகரித்துள்ளது. ஒரு கிலோ ரூ.50 ஆயிரம் ஆகவும், ஒரு கிராம் ரூ.53.50 ஆகவும் உள்ளது.

...

shared via

[Continue reading...]

வடதமிழகத்தில் பலத்த மழை நீடிக்கும்: வானிலை இலாகா அறிவிப்பு weather center announcement continue heavy rains in north Tamil Nadu

- 0 comments

வடதமிழகத்தில் பலத்த மழை நீடிக்கும்: வானிலை இலாகா அறிவிப்பு weather center announcement continue heavy rains in north Tamil Nadu

சென்னை, அக். 23–

சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குனர் ரமணன் இன்று நிருபர்களிடம் கூறியதாவது:–

வங்ககடலில் நிலைக் கொண்டிருந்த தீவிர காற்றழுத்த பகுதியால் தமிழகத்தில் அனேக இடங்களில் மழை பெய்து வருகிறது. தமிழகத்தின் வடக்கு மற்றும் தென் ஆந்திரா பகுதியில் நிலைக் கொண்டிருந்த அந்த காற்றழுத்த பகுதி இன்று மேற்கு நோக்கி நகர்ந்து செல்கிறது.

இதன் காரணமாக அடுத்த 24 மணி நேரத்துக்கு தமிழகத்தின் வடமாவட்டங்களில் பலத்த மழை பெய்யும். தென் மாவட்டங்களில் ஒருசில இடங்களில் மழைக்கு வாய்ப்பு உள்ளது. சென்னையில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். ஒருசில இடங்களில் மழை பெய்யும். மாலை நேரத்தில் இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு உள்ளது.

கடந்த 24 மணி நேரத்தில் பெரம்பலூர் மாவட்டம் செட்டிக்குளத்தில் அதிக பட்சமாக 5 செ.மீட்டர் மழை பதிவாகி உள்ளது.

...

shared via

[Continue reading...]

தீவிர குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை: ஆந்திராவில் பலத்த மழை andhra heavy rain Low level of extreme low pressure

- 0 comments

தீவிர குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை: ஆந்திராவில் பலத்த மழை andhra heavy rain Low level of extreme low pressure

காளஹஸ்தி, அக்.23–

வங்கக் கடலில் உருவான தீவிர குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி ஆந்திரா நோக்கி நகர்ந்துள்ளது. அது மத்திய மேற்கு மற்றும் தென்மேற்கு வங்கக் கடலில் ஆந்திரா அருகே மையம் கொண்டிருந்தது. இதனால் ஆந்திராவில் பலத்த மழை பெய்து வருகிறது.

ஆந்திர மாநிலத்தில் உள்ள மேற்கு கோதாவரி, காக்கிநாடா, ராஜமுந்திரி, ஸ்ரீகாகுளம், விசாகப்பட்டினம் ஆகிய மாவட்டங்களில் பலத்த மழை பெய்தது இதனால் இந்த மாவட்டங்களில் உள்ள ஆயிரக் கணக்கான ஏக்கர் பயிர்கள் நீரில் மூழ்கி சேதமடைந்துள்ளன.

மேற்கு கோதாவரி மாவட்டத்தில் பல இடங்களில் மரங்கள் சாலையில் முறிந்து விழுந்தன. இதனால் போக்கு வரத்து பெரிதும் பாதிக்கப்பட்டது.

பல மாவட்டங்களில் தேசிய நெடுஞ்சாலைகளில் மழைநீர் பெருக்கெடுத்து வெள்ளமாக ஓடியது. அனைத்து குளங்கள் மற்றும் குட்டைகளும் நிரம்பி விட்டன.

...

shared via

[Continue reading...]

My Blog List

Popular Posts

Popular Posts

 
Copyright © . தினசரி செய்திகள் - Posts · Comments
Theme Template by BTDesigner · Powered by Blogger