பெங்களூரில் வேலை வாங்கி தருவதாக
கூறி வெளிமாநில
இளம்பெண்களை விபசாரத்தில் தள்ளிய 9 பேர்
கைது செய்யப்பட்டனர்.
அவர்களிடம்
இருந்து ரொக்க பணம்,
செல்போன்களை போலீசார் பறிமுதல்
செய்தார்கள்.
பெங்களூர் கெங்கேரி உபநகர்
விஸ்வேசுவரய்யா லே-அவுட்டில் உள்ள
வீட்டில் இளம்பெண்களை வைத்து விபசார
தொழில் நடப்பதாக போலீசாருக்கு தகவல்
கிடைத்தது. உடனே அங்கு சென்ற போலீசார்,
வீட்டிற்குள்
புகுந்து அதிரடி சோதனை நடத்தினார்கள்.
மேலும் அங்கிருந்த 4
பேரை பிடித்து விசாரித்தார்கள்.
விசாரணையில் சந்திரசேகர் (வயது 33),
சிவு(25), கணேஷ்(25), மகேஷ்(23) ஆகியோர்
என்பதும், ஆந்திரா, மேற்கு வங்காள
மாநிலத்தை சேர்ந்த
இளம்பெண்களை பெங்களூரில்
வேலை வாங்கி தருவதாக
அழைத்து வந்து விபசாரத்தில் தள்ளியதும்
தெரியவந்தது.
மேலும் ஹைடெக் அளவில் விபசார தொழில்
நடத்தி லட்சக்கணக்கில் பணம்
சம்பாதித்து வந்ததும் தெரியவந்தது.
அதைத்தொடர்ந்து, சந்திரசேகர் உள்பட 4
பேரையும் போலீசார் கைது செய்தார்கள்.
அவர்களிடம் இருந்து ரூ.10,500 ரொக்கப்
பணம், 4 செல்போன்கள் பறிமுதல்
செய்யப்பட்டன. 4 பேர் மீதும்
கெங்கேரி போலீசார்
வழக்கு பதிவு செய்து உள்ளனர்.
இதுபோல, இந்திராநகர் 4-வது பிளாக்,
சி.எம்.எச் ரோட்டில் விபசார தொழில்
நடத்தி வந்த ராஜூவ்(22), ராஜேஷ்(23),
சுவாமி(22), கார்த்திக்(30), சாகர்(49) ஆகிய 5
பேரையும் குற்றப்பிரிவு போலீசார்
கைது செய்தார்கள். இந்திராநகர் போலீசார் 5
பேர் மீதும் வழக்கு பதிவு செய்தார்கள்.
கைதானவர்களிடம் இருந்து ரூ.10 ஆயிரம், 8
செல்போன்கள் கைப்பற்றப்பட்டன.