பேரறிவாளன், முருகன், சாந்தன் ஆகியோரை விடுவிக்க வேண்டும் என்று திமுக தலைவர் கலைஞர், பிரதமர் மன்மோகன் சிங் மற்றும் அகில இந்திய காங்கிரஸ் தலைவர் சோனியா காந்திக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார்.
தி.மு.க. தலைவர் கலைஞர், பிரதமருக்கு வேண்டுகோள்விடுத்து வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:
ராஜீவ் காந்தி கொலை வழக்கில் குற்றம் சாட்டப்பட்டு, தூக்கு தண்டனை விதிக்கப்பட்டு, இருபதாண்டு காலத்திற்கு மேலாக சிறையிலே வைக்கப்பட்டுள்ள பேரறிவாளன், சாந்தன், முருகன் ஆகியோரை விடுவிக்க மத்திய, மாநில அரசுகள் முன் வரவேண்டும் என்றும், அதற்காக தமிழக அரசு அமைச்சரவையில் தீர்மானம் நிறைவேற்றி ஆளுநனருக்கு அனுப்ப வேண்டும் என்றும் அனைவரும் கேட்டுக்கொண்டு பல நாட்களாகியும்,
தமிழக அரசு அதற்கு முன் வராத நிலையில், மத்திய அரசாவது இவர்கள் மூவரையும் சிறையிலிருந்து விடுவிப்பதற்கான முயற்சிகளிலே ஈடுபட்டு உதவிட வேண்டும் என்று பிரதமரையும், ஐக்கிய முற்போக்கு கூட்டணியின் வழிகாட்டும் தலைவி சோனியா காந்தியையும் தி.மு.க. சார்பில் கேட்டுக் கொள்கிறேன். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
நேற்று அப்பிள் நிறுவன ஐபோன் 5 வருமென எதிர்பார்த்து ஏமார்ந்த அப்பிள் பாவனையாளருக்கு அந்த நிறுவனத்தை இந்த நிலைக்கு உயர்த்திய ஸ்டீவ் யொப்ஸ்சின் மரணம் பேரிடியாக இறங்கியுள்ளது.
கடந்த 15 வருட காலத்தில் அப்பிள் நிறுவனத்தை உலகத்தின் அதிசயமிக்க வெளியீடுகளைத் தரும் நிறுவனமாக மாற்றிய புகழுக்குரியவர் இவரே. இவருடைய அறிவும், ஜீனியஸ்சான மூளையும் உலகத்தையே மாற்றிப்போட உதவியது என்று அப்பிள் நிறுவனம் வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளது. அப்பிளில் டச் முறையை கொண்டு வந்து இலத்திரனியல் உலகத்தின் புது வலு கொடுத்த ஸ்டீவ் ஜொப்ஸ் நேற்று தனது 56 ஆவது வயதில் காலமானார்.
கடந்த சில வருடங்களாக புற்றுநோயுடன் போராடி வந்த நிலையில் நேற்று அவர் உயிரிழந்ததாக அவரது குடும்பத்தினர் அறிவித்துள்ளனர்.
உலகில் கணனி மற்றும் நுகர்வோர் இலத்திரனியல் கருவிகளைத் தயாரிக்கும் மிகப்பெரிய நிறுவனமாக அப்பிள் இன்று திகழ்வதற்கு முக்கிய காரணம் இவரது திறமையாகும்.
இவர் 1955 ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் 24 ஆம் திகதி சான் பிரான்ஸிஸ்கோவில் பிறந்தார்.
அவர் தனது கல்லூரிப் படிப்பை முழுமையாகப் பூர்த்தி செய்யாத போதிலும் கணனித்துறையில் உலகமே திரும்பிப் பார்க்கும் அளவுக்குப் பல சாதனைகளைத் தனது வாழ்நாளில் நிகழ்த்திக் காட்டியுள்ளார்.
அவரின் மரணத்திற்கு அனுதாபம் தெரிவிக்கும் வகையில் உலகெங்கிலுமிருந்து இரங்கல் செய்திகள் குவிந்த வண்ணமுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா, பில்கேட்ஸ், ஷூக்கர் பேர்க் உட்பட அனைவரும் தங்களது அனுதாப அறிக்கைகளை வெளியிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
அப்பிள் நிறுவனத்தின் ஸ்தாபகர்களில் ஒருவரான ஸ்டீவ் ஜொப்ஸ் வரலாற்றில்...
உலகத்தலைவர்கள் பலர் இவரது மறைவிற்கு தங்களது அனுதாபங்களைத் தெரிவித்து வருகின்றனர்.
குறிப்பாக ஒபாமா " அமெரிக்காவின் சிறந்த கண்டுபிடிப்பாளர்களில் இவரும் ஒருவர் எனவும், வித்தியாசமாக யோசிக்கத் தைரியமுள்ளவர் எனவும், தன்னால் உலகை மாற்றமுடியும் என்பதை நம்புபவர் எனவும் அதை செய்து காட்டும் திறமையும் கொண்டவர் என தனது அஞ்சலி அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.
மேலும் பல பிரபலங்கள் தங்களது அனுதாபத்தினை வெளியிட்டுள்ள இத்தருணத்தில் அவரின் வாழ்க்கைப்பயணங்களை மீட்டிப் பார்ப்பது சாலப்பொருந்துவதாக அமையும்.
ஸ்டீவ் ஜொப்ஸின் வாழ்நாள் மற்றும் அப்பிள் நிறுவன வரலாற்றில் சில முக்கிய தருணங்கள்
1955: ஸ்டீவன் போல் ஜொப்ஸ் பெப்ரவரி 24 ஆம் திகதி பிறந்தார்.
1972: ஜொப்ஸ் போர்ட்லேண்டில் உள்ள ரீட் கல்லூரியில் இணைந்தார் எனினும் முதல் செமஸ்டரிலேயே அதனை நிறுத்திவிட்டார்.
1976: அப்பிள் கணனியை ஏப்ரல் முதலாம் திகதி உருவாக்கினார். த அப்பிள் ஐ கணனி 666.66 அமெரிக்க டொலர்களுக்கு விற்பனைக்கு வருகின்றது.
1977: அப்பிள் நிறுவனம் கூட்டு நிறுவனமாக்கப்படுகின்றது. த அப்பிள் ஐஐ கணனி அறிமுகப்படுத்தப்படுகின்றது.
1978: ஸ்டீவ் ஜொப்ஸின் மகள் லிஸா பிறந்தார்.
1980: அப்பிள் நிறுவனம் முதல் முறையாக தனது பங்குகளை வெளியிட்டது (ஐய்ண்ற்ண்ஹப் ல்ன்க்ஷப்ண்ஸ்ரீ ர்ச்ச்ங்ழ்ண்ய்ஞ்). 110 மில்லியன் அமெரிக்க டொலர்களை திரட்டிக் கொண்டது.
1982: அப்பிள் நிறுவனத்தின் வருடாந்த வருவாய் 1 பில்லியன் அமெரிக்க டொலர்களாய் அதிகரிக்கின்றது.
1983: அப்பிளின் லிசா கணனிகள் விற்பனைக்கு வருகின்றன.
1984: அப்பிளின் மெகிண்டொஸ் கணனிகள் விற்பனைக்கு வருகின்றன.
1985: நிறுவனத்தின் அப்போதைய பிரதம நிறைவேற்று அதிகாரி ஸ்கூலி மற்றும் ஜொப்ஸ் இடையே மோதல், ஜொப்ஸ் மற்றும் வொஸ்னிஹக் ஆகியோர் அப்பிளில் இருந்து பதவி விலகுகின்றனர்.
1986: ஜொப்ஸ் நெக்ஸ்ட் என்ற நிறுவனத்தை ஆரம்பித்ததுடன், உயர் தொழிநுட்பம் கொண்ட கணனிகளை பல்கலைக்கழகங்களுக்கென தயாரிக்கத்தொடங்குகின்றார்.
1989: முதலாவது நெக்ஸ்ட் கணனி விற்பனைக்கு செல்கின்றது. விலை 6,500 அமெரிக்க டொலர்கள்.
1991: அப்பிள் மற்றும் ஐ.பி.எம் நிறுவனங்கள் இணைந்து கணனிகளுக்கான புதிய மைக்ரோபுரசசர்கள் மற்றும் மென்பொருட்களை உருவாக்கவுள்ளதாக அறிவித்தன.
பவர்புக் என்றழைக்கப்படும் காவிச்செல்லக்கூடிய மெக்ஸ் கணனிகளை அறிமுகப்படுத்துகின்றது.
ஜொப்ஸ் லொரன் பவல் என்பவரை சட்டப்படி மணக்கின்றார்.
1996: ஸ்டீவ் ஜொப்ஸ் மற்றும் அவரது குழு இணைந்து உருவாக்கிய நெக்ஸ்ட் நிறுவனத்தின் இயங்குதளத்தினை 430 மில்லியன் அமெரிக்க டொலர்களுக்கு கொள்வனவு செய்யும் திட்டத்தினை அப்பிள் அறிவிக்கின்றது.
1997: ஜொப்ஸ் அப்பிள் நிறுவனத்தின் இடைக்கால பிரதம நிறைவேற்று அதிகாரியாக பதவியேற்கின்றார்.
2000: ஜொப்ஸ் அப்பிள் நிறுவனத்தின் நிறைவேற்று அதிகாரியாக பதவியேற்கின்றார்.
2001: முதல் ஐ பொட் விற்பனைக்கு வருகின்றது. ஐ டியூன்ஸ் மென்பொருளை வெளியிடுகின்றது.
2004: கணையப் புற்றுநோயால் பாதிக்கப்பட்ட ஜொப்ஸ் சத்திரசிகிச்சைக்கு முகங்கொடுக்கின்றார்.
2006: ஜொப்ஸ் டிஸ்னி நிறுவனத்தின் அதி கூடிய பங்குகளைக் கொண்ட தனிநபராகின்றார்.
2007: அப்பிள் தனது முதல் கையடக்கத் தொலைபேசியான ஐ போனை வெளியிடுகின்றது.
2009: ஜொப்ஸ் சிறுநீரக மாற்று சத்திரசிகிச்சைக்கு முகங்கொடுக்கின்றார்.
2011 ஜனவரி 17: ஜொப்ஸ் 2 ஆவது முறையாக மருத்துவ விடுமுறையில் செல்வதாக அறிவிக்கின்றார்.
2011 ஓகஸ்ட் 24: ஜொப்ஸ் தான் அப்பிளின் நிறைவேற்று அதிகாரி பதவியிலிருந்து விலகுவதாக அறிவிக்கின்றார்.
ஹவானா ரைம்ஸ் செய்தி இதழின் செய்தியாளர் றொன் றிடெநொயருக்கு நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் பிரதமர் விசுவநாதன் ருத்திரகுமாரன் ஒக்ரோபர் 3 ம் திகதி அன்று வழங்கிய செவ்வியின் சில முக்கியமான பகுதிகளின் தமிழாக்கம் வருமாறு:
சிறிலங்காவுக்கு உள்ளேயும் வெளியேயும் வாழும் தமிழர்களாகிய நாம் இன்னமும் நமக்கென தனியான ஒரு நாட்டையே விரும்புகிறோம்.
தமிழ் மக்கள் மீதான மகிந்த இராஜபக்ஷ அரசின் போர்க்குற்றங்களின் மோசமான குரூரத்தன்மை நன்கு அறியப்பட்டு வருவதனால் எமது கோரிக்கை உலகளாவிய அளவில் இன்று பேசப்பட்டு வருகின்றது.' இவ்வாறு விசுவநாதன் ருத்திரகுமாரன் என்னிடம் அண்மையில் நியூ யோர்க் நகரில் தெரிவித்தார்.
அதிர்ச்சி தரத்தக்க சனல் 4ன் ஆவணப்படமான சிறிலங்காவின் கொலைக்களங்கள் முதலில் யூன் மாதம் ஐ.நா.வின் மனித உரிமைகள் அமைப்பிலும் பின்னர் உலகம் முழுவதும் காண்பிக்கப்பட்டு வருவது தமிழரின் உரிமைகள் அங்கிகரிக்கப்பட்டு வருவதற்கு அடையாளமாக உள்ளது.
நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் பிரதமாரன விசுவநாதன் ருத்திரகுமாரன், புலம்பெயர்ந்த தமிழர்களின் உரிமைகளுக்காக செயற்பட்டு வருபவர்களில் முக்கியமான ஒருவர். கொழும்பு பல்கலைக்கழகத்திலும், அமெரிக்காவில் உள்ள சவுத் மெதடிஸ்ற் பல்கலைக்கழகத்திலும் சட்டத்துறையில் பட்டம் பெற்றுள்ள ருத்திரகுமாரன், ஹாவார்ட் பல்கலைக்கழகத்தில் சுயநிர்ணய உரிமை பற்றி ஆய்வு செய்து ஆய்வுரைகளை வெளியிட்டிருந்தார்.
சிறிலங்காவின் நீண்ட உள்நாட்டு போர் மே 2009ல் முடிவுக்கு வந்தபோது, தமிழரின் இறையாண்மைக்கான தேவையை ருத்திரகுமாரன் கண்டுகொண்டார். அதேவேளை சுவிற்சலாந்திலும் மலேசியாவிலும் உள்ள அறிவாளர்கள் தேசியம், தாயகம், சுயநிர்ணய உரிமை ஆகியவற்றின் அடிப்படையில் நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தை நிறுவினார்கள்.
இவ்வாறாக புலம்பெயர்ந்த தமிழர் தலைவர்கள் தமக்கான ஆதரவை திரண்டெழுப்பி வரும் நிலையில், மே 2009ல் ஐ.நா. மனித உரிமைகள் அமைப்பில் கூட்டத்தில் கியூபாவிலும் ஏனைய லத்தீன் அமெரிக்க நாடுகளிலும் உள்ள முற்போக்கான அரசுகள் சிறிலங்காவை ஆதரித்தது கண்டு அதிர்ச்சியடைந்துள்ளனர். இந்த ஆதரவு தமிழரின் விடுதலைப் போராளிகளுக்கு மட்டும் எதிரானது அல்ல முற்றான தமிழ்மக்களின் விருப்பங்களுக்கும் எதிரானதுமாகும்.
தமிழர் என்றும் பிடல் காஸ்ரோவையும் சே குவாராவையும் வீரம் செறிந்த போராளிகளாக போற்றிவந்திருக்கிறார்கள்.' என பிரதமர் குறிப்பிட்டார். மே 2009ற்கு பின்பான கியூபாவின் நிலைப்பாடு தமிழ்மக்களை அதிர்ச்சிக்கு உள்ளாக்கியுள்ளது.
ஒருவேளை இது போதிய அளவில் இடம்பெறாத கருத்து பரிமாற்றங்கள் காரணமாக இருக்கலாம். ஆகவே நாம் கியூபாவுக்கும் வெனிசியுலாவுக்கும் லத்தீன் அமெரிக்க மக்களின் பொலிவியன் கூட்டமைப்பை சேர்ந்த ஏனைய அரசுகளுக்கும் ஒரு தூதுக்குழுவொன்றை அனுப்பி எமது நிலைப்பாடு பற்றி எடுத்து கூறி கருத்துப் பரிமாற்றத்தில் ஈடுபட ஆவலாக இருக்கிறோம்' என்று பிரதமர் மேலும் குறிப்பிட்டார்.
எந்தவொரு அரசாங்கத்துடனும் அல்லது சர்வதேச சக்தியுடனும் இணைந்து நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் செயற்படவில்லை' என குறிப்பட்ட பிரதமர் ருத்திரகுமாரன் தமது நோக்கத்துக்கு ஆதரவு தருபவர்களுடன் ஒத்துழைக்க விரும்புவதாக குறிப்பிட்டார்.
மக்களின் தெரிவின் அடிப்படையில் முடிவெடுப்பதை நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் வலியுறுத்தி வருகிறது. கடந்த 2010 இளவேனிற் காலத்தில் 12 நாடுகளிலிலுந்து தேர்தல்கள் மூலம் நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்திற்கு பிரதிநிதிகள் தேர்ந்தெடுக்கப்பட்டார்கள். சில சந்தர்ப்பங்களில் பிரதிநிதிகள் போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டார்கள். பல்லாயிரக்கணக்கான மக்கள் இந்த தேர்தல்களில் பங்குபற்றினர்.
55 பிரநிதிகள் அமெரிக்காவில் உள்ள பிலடல்பியா நகரில் கூடி மே 17-19 2010ல் நாடுகடந்த அரசாங்கத்தின் சட்டசபையை உருவாக்கினர். மேலும் 30 பிரதிநிதிகள் லண்டனில் இருந்தும் ஜெனீவாவில் இருந்தும் வீடியோ மூலம் பங்குபற்றினர்.
ஹவானா ரைம்ஸின் செய்தியாளர் றொன் றிடெநொயர் கேட்ட கேள்விகளுக்கு பதிலளித்த பிரதமர் தமிழருக்கு எதிரான இனப்படுகொலைகள் பற்றியும் விபரித்தார். ஆயுதப் போராட்டத்தின் வரலாறு பற்றி குறிப்பிட்டு, தமிழ் மக்களுக்கு விடுதலைப்புலிகள் போராடுவதற்கான பலத்தையும் தன்மானத்தையும் பெற்றுத் தந்திருப்பதாகவும் இன்று போராட்டம் இராஜதந்திர தளத்தில் இடம்பெறுவதாக தெரிவித்தார்.
நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் மேலும் இரு சர்வதேச தமிழர் அமைப்புகளுடன் சிறப்பான உறவை வளர்த்துக்கொண்டு செயல்படுவதாக குறிப்பிட்ட பிரதமர் ருத்திரகுமாரன், இந்த அமைப்புகள் உலகத் தமிழர் பேரவையும், ஐரோப்பாவின் ஈழத்தமிழர் அமைப்பு எனவும் குறிப்பிட்டார்.
எமது நோக்கம் ஒன்றே அதை அடைவதற்கான எமது வழிகளும் ஒன்றே ஆயுதம் ஏந்தாத இராஜதந்திர வழிகள். நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் தேர்தல்கள் மூலம் தெரிவு செய்யப்பட்ட ஒரு அரசாங்கம் என்ற அளவிலேயே நாம் எமது நட்பு அமைப்புகளில் இருந்து வேறுபடுகிறோம் என்று பிரதமர் ருத்திரகுமாரன் தெரிவித்தார்.
தென் சூடானில் இடம்பெற்ற வாக்கெடுப்பு மூலமான விடுதலை தமக்கு உற்சாகமளிப்பதாக குறிப்பிட்ட பிரதமர் ருத்திரகுமாரன் நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் சார்பில் துணை வெளிவிவகார அமைச்சர் மாணிக்கவாசகரும் பிரதமர் செயலகத்தின் பிரதமர் அலுவலகப் பேச்சாளர் ஜெயப்பிரகாஷ் ஜெயலிங்கமும் தென் சூடானின் அதிபராக சல்வா கீர் பதவியேற்ற நிகழ்வில் பங்குகொண்டதாக குறிப்பிட்டார்.
எமது இராஜதந்திர முயற்சியின் நோக்கம் தென் சூடான் போல எமது மக்களும் ஈழத்தில் ஒரு கண்காணிக்கப்படும் வாக்கெடுப்பு மூலம் தமது எதிர்காலத்தை தீர்மானிக்க சர்வதேச சமுகம் உதவ செய்வதே என தெரிவித்தார்.
ஹவானா ரைம்ஸின் செய்தியாளர் றொன் றிடெநொயர் பிரதமர் ருத்திரகுமாரன் பற்றி தெரிவிக்கையில், அவருக்கு வல்லரசுகளினதும் இன்றைய மற்றும் முன்னாள் ஏகாதிபத்தியங்களினதும் நோக்கங்கள் பற்றி எந்த மயக்கமும் இல்லை என குறிப்பிட்டுள்ளார்.
எமது ஒன்றுபட்ட இறையாண்மைக்கான நோக்கத்தை நாம் என்றும் விட்டுக்கொடுக்க போவதில்லை. அது எமது ஆற்றலிலும் உறுதிலும் தங்கியுள்ளது. எமது போராட்டம் எமது தேசியத்துக்கானது. இது வேறு எந்த இலட்சியம் பற்றியதோ அல்லது பொருளாதார அடிப்படையிலானதோ அல்ல' என பிரதமர் ருத்திரகுமாரன் தெரிவித்தார்.
செங்கல்பட்டு, பூந்தமல்லி சிறப்பு முகாம்களில் பல ஆண்டுகளாக சிறைப்பட்டுத்தப்பட்டிருந்த ஈழத் தமிழ் அகதிகளில் 15 பேர் விடுவிக்கப்பட்டதைப்போல், மற்ற 29 பேரையும் தமிழக அரசு உடனடியாக விடுவிக்க வேண்டும் என்று கோரி நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் செந்தமிழன் சீமான் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இது தொடர்பாக சீமான் இன்று விடுத்துள்ள அறிக்கையில், செங்கல்பட்டு, பூந்தமல்லி சிறப்பு முகாம்களில் தடுத்து வைக்கப்பட்டிருந்த 44 ஈழத் தமிழ் அகதிகளில் 15 பேரை தமிழக அரசு விடுவித்திருப்பது பாராட்டிற்குரியதாகும்.
ஈழத்தில் தமிழர்களுக்கு எதிரான இனப் படுகொலை உச்ச கட்டத்தில் இருந்தபோது, அங்கே படுகாயமுற்றுக் கிடந்த மக்களுக்கு மருந்துப் பொருட்களையும், மண்ணெண்ணை உள்ளிட்ட சில அத்யாவசியப் பொருட்களையும் கடத்தினார்கள் என்ற குற்றச்சாட்டின் போரில் இங்கிருக்கும் பல ஈழத் தமிழ் அகதிகளை தமிழக காவல்துறை கைது செய்து, சிறப்பு முகாம்கள் என்று பெயரில் சிறையை ஏற்படுத்தி தடுத்து வைத்தது. அவர்களுக்கு எதிரான வழக்குகளில், பிணைய விடுதலை உள்ளிட்ட சட்ட ரீதியான நிவாரணங்களைக் கூட பெறுவதற்கு அனுமதிக்காமல் தடுத்து வைக்கப்பட்டிருந்தனர்.
இவர்கள் அனைவரையும் விடுவிக்க வேண்டும் என்று தமிழின அமைப்புகள், அரசியல் கட்சிகள் தொடர்ந்து வேண்டுகோள் விடுத்திருந்தனர். சிறப்பு முகாம்களில் அடைப்பட்டுக் கிடந்தவர்கள் பல முறை பட்டிணிப் போராட்டம் நடத்தி தங்களை உடனடியாக விடுவித்து, தமிழ்நாட்டிலுள்ள இதர முகாம்களில் வசிக்கும் தங்கள் உறவினர்களுடன் வாழ அனுமதிக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர். இதனையடுத்து அவர்களில் 15 பேர் விடுவிக்கப்பட்டுள்ளனர்.
இன்னமும் 29 பேர் பூந்தமல்லி, செங்கல்பட்டு முகாம்களில் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர். அவர்களையும் உடனடியாக விடுதலை செய்ய வேண்டும். இவர்கள் அனைவரும் இரண்டு முதல் 5 ஆண்டுகள் வரை சிறைப்படுத்தப்பட்டுள்ளனர் என்பதை கருத்தில் கொண்டு இப்பிரச்சனையை அணுக வேண்டும். தங்கள் சொந்த மண்ணிலும் சிறை, நம்பி பிழைக்க வந்த மண்ணிலும் சிறை என்றால் எப்படி? தமிழர்களாக பிறந்ததைத் தவிர, வேறு எந்தப் பாவமும் இவர்கள் செய்யவில்லை. இந்த நிலையை தமிழக அரசு நினைத்துப் பார்க்க வேண்டும்.
எனவே, 15 பேர் மீது கருணை காட்டி விடுவித்தது போல், மீதமுள்ள 29 பேரையும் உடனடியாக விடுவிக்க வேண்டும் என்று தமிழக அரசுக்கு நாம் தமிழர் கட்சி தாழ்மையுடன் வேண்டுகோள் விடுக்கிறது என்று கூறியுள்ளார்.
ஐக்கிய நாடுகள் பொதுச்சபைக் கூட்டத்தில் கலந்துகொள்ள நியூயோர்க் சென்றிருந்த மகிந்த ராஜபக்ஷ டெக்சாஸ் மாநிலத்தில் அமைந்துள்ள ஹொஸ்டன் மருத்துவமனையில் சிகிச்சைப் பெறுவதற்கு அமெரிக்க அதிகாரிகள் அனுமதி வழங்கவில்லை எனத் தெரிய வந்துள்ளது.
இது குறித்து அமெரிக்காவின் பிரதி ராஜாங்க அமைச்சர் ரொபேர்ட் ஓ பிளேக்கிடம் வெளி விவகார அமைச்சர் ஜி.எல்.பீரிஸ் முறையிட்டுள்ளார். இந்த முறைப்பாடு தொடர்பில் பதிலளித்த ரொபேர்ட் ஓ பிளேக் மகிந்த ராஜ பக்ஷவுக்கு நியூயோர்க்கில் மட்டுமே ராஜதந்திர பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.
அத்துடன் மகிந்த ராஜபக்ஷ நியூயோர்க்குக்கு வெளியே செல்லும் போது ஏற்படக் கூடிய சட்டரீதியான நடவடிக்கைகளில் தலையீடு செய்வதற்கு அமெரிக்க அரசாங்கத்துக்கு அதிகாரம் இல்லை எனவும் அவர் பீரிஸிடம் கூறியுள்ளார். அமெரிக்காவின் குயின்ஸ்லாந்து பெளத்த விகாரையில் இடம் பெற்ற நிகழ்ச்சியில் கலந்து கொள்ள விருந்த மகிந்த ராஜபக்ஷவிடம் நீதிமன்ற அழைப்பாணையை கையளிக்க அமெரிக்க அதிகாரிகள் காத்திருப்பதாக தெரிய வந்ததைத் தொடர்ந்து அவரால் அங்கு செல்ல முடியவில்லை எனவும் தெரியவந்துள்ளது.
கேணல் ரமேஷின் படுகொலை, வன்னியில் இடம்பெற்ற இறுதிக் கட்டப் போரின்போது மேற்கொள்ளப்பட்ட போர்க்குற்றங்கள் மற்றும் மனித உரிமை மீறல்களுக்கு காரணமாக இருந்தவர் என்ற அடிப்படையிலேயே மகிந்த ராஜபக்ஷ மீது வழக்குத்தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
வன்னியில் இடம்பெற்ற இறு திக்கட்டப் போரின் போது சிறீலங்கா படைத்தரப்பினரிடம் சரணடைந்த பின்னர் படுகொலை செய்யப்பட்ட கேணல் ரமேஷின் துணைவி வத்சலா தேவியின் சார்பில் இவ்வழக்கு கடந்தமாதம் 22ஆம் திகதி தாக்கல் செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
அவுஸ்திரேலியாவின் பேர்த் நகரில் நடைபெறும் பொதுநலவாய நாடுகளின் அரச தலைவர்களின் மாநாட்டில் கலந்துகொள்வதற்காகச் செல்லும் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவிற்கு எதிராக போர்க் குற்றச்சாட்டுக்களின் கீழ் நீதிமன்ற நடவடிக்கை எடுப்பதற்கு சில மனித உரிமை அமைப்புக்கள் நடவடிக்கை எடுத்து வருகின்றன.
பொதுநலவாய நாடுகளின் அரச தலைவர்கள் கலந்துகொள்ளும் மாநாடு ஒக்டோபர் 28ஆம் திகதி முதல் 30ஆம் திகதி வரை நடைபெறவுள்ள நிலையில், எதிர்வரும் 20ஆம் திகதி முதல் 22ஆம் திகதி வரை சிட்னி நகரில் உலக தமிழ் அமைப்பின் மாநாடு நடைபெறவுள்ளது.
இலங்கையில் நடைபெற்ற போர்க் குற்றங்கள், அதற்குப் பொறுப்புக் கூற வேண்டிய அரசியல்வாதிகள், அதிகாரிகள் சம்பந்தமாக எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் தொடர்பாக இந்த மாநாட்டில் கலந்துரையாடப்படவுள்ளது. ஏற்கனவே ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவிற்கு எதிராக அமெரிக்க நீதிமன்றம் அழைப்பாணை வெளியிட்டுள்ளது. எனினும், அரச தலைவர்களுக்கான ஏர்க் சேர்விஷ் சர்வதேச இணக்கப்பாடு இலங்கை ஜனாதிபதிக்கும் பொருந்தும் என்பதால் நீதிமன்ற அழைப்பாணையைப் பெற்றுக்கொள்ள முடியாது என இலங்கை அரசாங்கம் நிராகரித்துள்ளது.
இலங்கையைச் சேர்ந்த பல அதிகாரிகள் தற்சமயம் அவுஸ்திரேலியாவில் நிலைகொண்டுள்ளதால் அவர்களுக்கு எதிராகவும் ஒரு பன்முகப்படுத்தப்பட்ட பல வழக்குகளை தொடுப்பது குறித்து அவுஸ்திரேலிய தமிழர் பேரவையும் மற்றும் உலகத் தமிழர் பேரவையும்(GTF) இணைந்து ஆலோசனை நடத்திவருவதாகவும் அறியப்படுகிறது. மகிந்தர் எந்த ஒரு நாட்டிற்குச் சென்றாலும் அங்கே நெருக்குவாரங்களை ஏற்படுத்துவதில் உலகத் தமிழர் பேரவை முனைப்புக்காட்டிவருகிறது.
இது குறித்த மேலதிக தகவல்கள் மிகவிரைவில் வெளியாகும் என நம்பப்படுகிறது.
ஒரு நாள் ஏமாற்றலாம் 2 நாள் ஏமாற்றலாம் ஆனால் இங்க என்ன நடக்குது எண்டு யாருக்கும் தெரியலடா சாமி ! வாழ்க்கையில ஏமாற்றம் இருக்கலாம் ஆனால் ஏமாற்றுரதையே வாழ்க்கையா கொள்ள முடியுமா ? என்ன டயலக் கா இருக்கு என்று பார்க்கிறீர்களா ? ஆம் இதுவும் ஒரு மொக்கை போடுதான். சரி மாட்டருக்கு வருவோம்.
கடந்த 3ம் திகதி நாடுகடந்த அரசின் பிரதமர் திரு.ருத்திரகுமாரன் அவர்கள் "ஹவானா" டைம்ஸ்சுக்கு பேட்டி கொடுத்தார் ! அவர் கியூபாவின் ஆதரவை நாடியுள்ளார் என்ற செய்திகள் அடிபட்டது யாவரும் அறிந்ததே. பொங்கு தமிழ் போன்ற ஊதுகுழல் இணையங்கள் அதனை தலைப்புச் செய்தியாகப் போட்டு கீயூபா நாட்டோடு நாடு கடந்த அரசானது ஏதோ பாரிய ஒப்பந்தம் செய்தது போல மிகைப்படுத்தப்பட்ட செய்திகளை வெளியிட்டது. ஆனால் உண்மை என்ன என்று கேட்டால் எல்லோரும் கைகொட்டிச் சிரிப்பார்கள்.திரு.ருத்திரகுமாரன் அவர்கள் பேட்டியைப் பார்க்க இங்கே அழுத்தவும்:
அதாவது இந்த ஹவான டைம்ஸ் இணைய ஆசிரியர் கடந்த ஐந்து வருடங்களாக ஒரு பிளாக்ஸ்பாட் (BLOG) வைத்திருக்கின்றார் அதனை இந்த 5 வருடத்தில் மொத்தமாகப் பார்வையிட்டவர்களே 5000 பேர்தான் சரி அதுபோகட்டும். இந்த இணையத்தின் ஆசிரியர் யார் என்று சற்றுப்பார்ப்போம். ஹவான டைம்ஸ் இணைய ஆசிரியர் ராபின்சன் இவர் 2001 ஆம் ஆண்டு அமெரிக்காவில் இருந்து கியூபாவில் குடியேறி பின்னர் கியூபாவில் இருந்து நாடுகடத்தப்பட்ட அமெரிக்கராவார். (ஆதாரம்: http://edition.cnn.com/2009/TRAVEL/03/02/havana.localview/index.html) .
அதாவது கியூபா நாடு இவரை நாடுகடத்தியது. இந்த ஹவான டைம்ஸ் கியூபாவுக்கு எதிராக அமெரிக்காவில், அமெரிக்கரால் நடத்தப்படும் ஒரு பத்திரிகை. இதனைக்கூட சரிவரத் தெரிந்துகொள்ளாத பிரதமர் இதற்கு பேட்டி ஒன்றைக் கொடுத்தது மட்டுமல்லாது கியூபாவின் உதவியை தாம் நாடுவதாகச் சொல்லியுள்ளார். சும்மா போய் கியூபாவில் கேட்டால் அந்த நாட்டு அரசு சிலவேளை ஆதரவு கொடுத்திருக்கும், இப்ப ஹவான டைம்ஸ்சில் எழுதிவிட்டுப் போய் ஆதரவு கேட்டால் காஸ்ரோ அடித்துத் தான் கலைப்பார்.
ஏன் என்றால் பிரடல் காஸ்ரோ கியூபாவின் சர்வாதிகாரி. அவர் குடும்ப ஆட்சி அழிக்கப்படவேண்டும், என்றும் இன்னும் பல விடையங்களையும் அது இது என்று தாறு மாறுகாக எழுதித் தள்ளிய பத்திரிகைதான் இந்த ஹவான டைம்ஸ். போதாக்குறைக்கு இந்த பத்திரிகைக்கு கியூபாவில் தடை விதிக்கப்படுள்ளது. இது ஒன்றையும் பாராது என்ன நடக்குது என்று தெரியாது இப்படி மொக்கை போடு போட்டுள்ளார்களே இவர்கள்தான தமிழீழம் பெற்றுத்தரப் போகிறார்கள்?
சர்வதேச அளவில் தமிழர்களுக்கு தலைகுனிவையும், எங்களைப் பார்த்து ராஜதந்திரம் தெரியாதவர்கள் என்றும் சொல்லுமளவுக்கு இந்த நாடு கடந்த அரசு செயல்பட்டு வருகிறது கண்டிக்கத்தக்க விடையமாகும். இனியாவது இப் பிழைகளை விடாத நடந்துகொள்ளவேண்டும் என்பதற்காக நாம் இதனை எழுதுகிறோம். இதனை ஒரு விமர்சனமாகப் பார்த்துப் பழகவும். அதைவிடுத்து அதிர்வு நாடுகடந்த அரசின் எதிரி என்று சொல்லி உடனே எம்மீது சேறு பூசும் நடவடிக்கைகளை ஆரம்பிக்கவேண்டாம்.
எப்படியான செய்திகள் வெளியாகிறது! எதில் உண்மை இருக்கிறது! என்ன நடந்துகொண்டு இருக்கிறது என்பது போன்றவற்றை மக்களுக்கு தெளிவுபடுத்தவேண்டிய கடமை அதிர்வு இணையத்துக்கு இருக்கிறது. எனவே மக்கள் நிச்சயம் கேள்வி கேட்ப்பார்கள் அதற்கு பதில்சொல்லவேண்டும் என்ற எண்ணம் அனைவருக்கும் இருக்கவேண்டும் என்பதற்காகவே நாம் இதனைச் சுட்டிக்காட்டியுள்ளோம். தவறுகள் இருப்பின் எம்மை தொடர்புகொள்ளலாம்.
அதிக தமிழ்ப் படங்களுக்கு இசையமைக்க ஆசையாக உள்ளது என்றார் ஆஸ்கர் வென்ற இசையமைப்பாளர் ஏ ஆர் ரஹ்மான்.
வசந்த பாலன் இயக்கத்தில் ஆதி-தன்ஷிகா ஜோடி நடித்துள்ள அரவான் படத்தின் பாடல்கள் வெளியீட்டு விழா, சென்னையில் நடந்தது. டி சிவாவின் அம்மா கிரியேஷன்ஸ் இந்தப் படத்தை தயாரித்துள்ளது. பின்னணிப் பாடகர் கார்த்திக் இந்தப் படம் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமாகிறார்.
இதுவரை தமிழ் சினிமா பார்த்திராத அளவுக்கு முற்றிலும் வித்தியாசமான வரலாற்றுப் படமாக அரவான் உருவாகியுள்ளது.
இந்தப் படத்தின் இசைவெளியீட்டு விழா நேற்று முன்தினம் சென்னை அண்ணா நூற்றாண்டு விழா நூலக அரங்கில் நடந்தது. முதல் இசைத் தட்டை இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் வெளியிட, இயக்குநர் மணிரத்னம் பெற்றுக்கொண்டார்.
விழாவில், ஏ.ஆர்.ரஹ்மான் பேசுகையில், "தமிழ் ரசிகர்கள் மத்தியில் சினிமா பற்றிய ஞானம் வளர்ந்து இருக்கிறது. அவர்களின் ரசனை உயர்ந்திருக்கிறது. ஒரு படத்தின் 'டிரைலரை' பார்த்து, அது எப்படிப்பட்ட படம் என்பதை கணித்து விடுகிறார்கள்.
ஒரு சிறுவனிடம் ட்ரெய்லரைக் காட்டினால், அதுபற்றி அவன் என்ன சொல்கிறானோ அதுதான் உண்மையாகிறது. அதைவைத்தே அந்தப் படம் ஓடுமா ஓடாதா என்று கூறிவிடலாம்.
நான், தமிழ் படங்களை பார்த்து இரண்டு வருடங்கள் ஆகிவிட்டது. ஊர் ஊராக சுற்றிக்கொண்டிருக்கிறேன்.
இந்த (அரவான்) பட காட்சிகளை பார்க்கும்போது, எனக்கும் அதிக தமிழ் படங்களுக்கு இசையமைக்க வேண்டும் என்ற ஆசை வந்து இருக்கிறது," என்றார்.
தமிழ்த் திரையுலகமே ஒரே இடத்தில் குவிந்துவிட்டது போல, ஏராளமான பிரமுகர்கள் இந்த விழாவுக்கு வந்திருந்தனர். குறிப்பாக, தயாரிப்பாளர் சங்கத் தேர்தலில் போட்டியிடும் எஸ்ஏ சந்திரசேகர் மற்றும் கேயார் ஆகியோர் தங்கள் அணியுடன் வந்து விழாவில் பங்கேற்றது குறிப்பிடத்தக்கது.
பட அதிபர் டி.சிவா வரவேற்று பேசினார். இயக்குநர் வசந்தபாலன் நன்றி கூறினார்.
வலிகாமம் வடக்குப் பிரதேச செயலர் பிரிவுக்குட்பட்ட குரும்பசிட்டிப் பகுதியில் இருந்து இடம்பெயர்ந்த மக்களை மீள்குடியேற்றுவதற்காக நீண்ட காலமாக அங்கிருந்த படையினரின் காவலரண்கள் அகற்றப்பட்டுள்ளன.
இந்த மக்களின் மீள்குடியேற்றம் நேற்று செய்யப்பட்ட நிலையில் அவர்களுக்கான எந்த வித அடிப்படை வசதிகளும் செய்து கொடுக்கப்படவில்லை என மக்கள் குறைகூறியுள்ளனர்.
உயர்பாதுகாப்பு வலயமான பலாலிக்கு அண்மையிலுள்ள குரும்பசிட்டிக் கிராம மக்கள் 21 வருடங்களின் பின்னர் நேற்று மீள்குடியேற்றம் செய்யப்பட்டனர்.
தெல்லிப்பளை பிரதேச செயலர் பிரிவிலுள்ள குரும்பசிட்டி ஜே242 மற்றும் குரும்பசிட்டி கிழக்கு ஜே243 கிராம சேவையாளர் பிரிவுகளைச் சேர்ந்த 100 குடும்பங்கள் நேற்றையதினம் மீள்குடியேற்றம் செய்யப்பட்டுள்ளன.
அத்துடன், பொன் பரமானந்தா மகா வித்தியாலயம், ஆலயங்கள் என்பனவும் மக்கள் பாவனைக்காக விடுவிக்கப்பட்டுள்ளதுடன், குரும்பசிட்டி வசாவிளான் வீதியும் மக்கள் பாவனைக்காக திறந்து வைக்கப்பட்டுள்ளது.
இந்த மீள்குடியேற்ற நிகழ்வில் யாழ். அரசாங்க அதிபர் திருமதி இமெல்டா சுகுமார், யாழ். கட்டளைத் தளபதி மேஜர் ஜெனரல் மகிந்த ஹத்துருசிங்க, தெல்லிப்பளை பிரதேச செயலர் எஸ்.முரளிதரன், உதவி வலயக்கல்விப் பணிப்பாளர் எஸ்.சுந்தரசிவம் உட்பட இராணு அதிகாரிகள், பொது மக்கள் எனப் பலரும் கலந்து கொண்டனர்.
தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்க தேர்தல் சூடு பிடித்திருக்கிறது. எஸ்.ஏ.சந்திரசேகர் தலைமையில் ஒரு அணியும், கேயார் தலைமையில் இன்னொரு அணியும் மோதிக் கொள்கிறார்கள். இருவருமே முதல்வர் ஜெயலலிதாவுக்கு நன்கு அறிமுகமானவர்கள் என்பதால் அரசின் சலுகைகளை உரிமையோடு பெற்று தருவார்கள் என்ற நம்பிக்கை சங்க உறுப்பினர்களுக்கு ஏற்பட்டுள்ளது. ஆனால் இதுவே பெரும் குழப்பத்தையும் ஏற்படுத்தியிருக்கிறது.
யாருக்கு வாக்களிப்பது என்பதுதான் அந்த குழப்பம். 2007 ம் ஆண்டிலிருந்து ஒரு படத்திற்கு ஏழு லட்சம் வீதம் சுமார் 500 படங்களுக்கு அரசின் மானியத் தொகை தர வேண்டியிருக்கிறது. ஆனால் இந்த தொகை கடந்த ஆட்சியிலேயே வழங்கப்பட்டு விடும் என்று நம்பிக்கையில் இருந்த உறுப்பினர்களுக்கு தொடர்ந்து ஏமாற்றமே நிலவியது. இந்த முறை இந்த தொகையை வாங்கித்தர இருவருமே முயற்சி எடுப்பதாக தேர்தல் வாக்குறுதிகளை அளித்திருக்கிறார்கள்.
தேர்தலுக்கு முதல் நாள் கூட தங்கள் பலத்தை காண்பிப்பதற்காக தனித்தனி ஆதரவாளர் கூட்டத்தை ஏற்பாடு செய்திருக்கிறார்கள். இந்த நேரத்தில்தான் முதல்வர் ஜெயலலிதாவை இன்று சந்திக்க முன் அனுமதி வாங்கியிருக்கிறார் எஸ்.ஏ.சந்திரசேகர்.
நடைபெறவுள்ள தயாரிப்பாளர் சங்க தேர்தலுக்கும் இந்த சந்திப்புக்கும் எவ்வித தொடர்பும் இல்லை என்று எஸ்.ஏ.சி தரப்பில் கூறப்பட்டாலும், முதல்வருடனான இந்த சந்திப்பு தேர்தல் முடிவுகளை லேசாக அசைக்கும் என்பது மறுப்பதற்கில்லை.
முன்னாள் இராணுவத் தளபதி சரத் பொன்சேக்காவுக்கு எதிரான வெள்ளைக்கொடி விவகார வழக்கு கொழும்பு மேல் நீதிமன்றத்தின் மூவரடங்கிய நீதிபதிகள் குழு முன்னிலையில் இன்று மீண்டும் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது. வழங்கு விசாரணைகளின் போது பொன்சேக்காவுக்கு எதிரான குற்றச்சாட்டுக்கள் குறித்து பிரதி சொலிஸ்டர் நாயகம் புவனேக அலுவிஹாரே நீதிமன்றத்தில் தெளிவுபடுத்தினார்.
வெள்ளைக்கொடியுடன் இராணுவத்தினரிடம் சரணடைய வந்தவர்கள் மீது துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொள்ளுமாறு உத்தரவு வழங்கப்பட்டதாக அறியக் கிடைத்து எனக் கூறப்பட்டமையும் குற்றமாகும் என்று பிரதி சொலிஸ்டர் நாயகம் புவனேக அலுவிஹாரே தெரிவித்தார். அவசரகால சட்டவிதிமுறைகளை மீறி இனவாத உணர்வுகளைத் தூண்டும் மற்றும் மக்களை குழப்பமடையச் செய்யும் கருத்தினைத் தெரிவித்தமை சரத் பொன்சேக்காவுக்கு எதிராக குற்றச்சாட்டுக்களின் உள்ளடக்கமாகும்.
இத்தகைய கருத்தினை சரத் பொன்சேக்கா கூறியமை, சன்டே லீடர் செய்தி ஆசிரியர் பிரெட்ரிகா ஜேய்ன்ஸ் அளித்த சாட்சியத்தின் மூலம் உறுதிசெய்யப்பட்டுள்ளதாக பிரதி சொலிஸ்டர் நாயகம் குறிப்பிட்டார். பாதுகாப்புச் செயலாளர் மற்றும் பிரிகேடியர் ஷவேந்திர சில்வா ஆகியோரின் சாட்சியங்களின் பிரகாரம் வெள்ளைக்கொடி ஏந்தியவாறு சரணடைய வந்தவர்கள் மீது துப்பாக்கிப் பிரயோகம் நடத்த உத்தரவு வழங்கப்படவில்லை என்று தெளிவுபடுத்தப்பட்டதாகவும் புவனேக அலுவிஹாரே கூறினார்.
எனினும் அவ்வாறான உத்தரவு வழங்கப்பட்டமை குறித்து இரண்டு ஊடகவியலாளர்கள் ஊடாக தெரியவந்தது என்று சரத் பொன்சேக்காவின் பிரதிவாதி தரப்பிலிருந்து கூறப்பட்டதாக பிரதி சொலிஸ்டர் நாயகம் தெரிவித்தார். அத்துடன் தாம் அறிந்த வரையில் அவ்வாறான துப்பாக்கிப் பிரயோக சம்பவங்கள் எதுவும் இடம்பெறவில்லை என பொன்சேக்கா தெரிவித்ததாகவும் அவர் குறிப்பிட்டார்.
இதன் காரணமாக வெள்ளைக்கொடி ஏந்தியவாறு வந்தவர்கள் மீது துப்பாக்கி சூடு நடத்துமாறு உத்தரவிடப்பட்டதாக வதந்தி பரப்புவதற்கு சரத் பொன்சேக்கா முயற்சித்துள்ளமை தெரியவந்துள்ளதாகவும் பிரதி சொலிஸ்டர் நாயகம் கூறினார்.
வெள்ளைக்கொடி விவகாரம் தொடர்பான வழக்கு விசாரணை மீண்டும் எதிர்வரும் புதன்கிழமைவரை ஒத்திவைக்கப்பட்டன.
வலிகாமம் வடக்குப் பிரதேச செயலர் பிரிவுக்குட்பட்ட குரும்பசிட்டிப் பகுதியில் இருந்து இடம்பெயர்ந்த மக்களை மீள்குடியேற்றுவதற்காக நீண்ட காலமாக அங்கிருந்த படையினரின் காவலரண்கள் அகற்றப்பட்டுள்ளன. இந்த மக்களின் மீள்குடியேற்றம் நேற்று செய்யப்பட்ட நிலையில் அவர்களுக்கான எந்த வித அடிப்படை வசதிகளும் செய்து கொடுக்கப்படவில்லை என மக்கள் குறைகூறியுள்ளனர்.
உயர்பாதுகாப்பு வலயமான பலாலிக்கு அண்மையிலுள்ள குரும்பசிட்டிக் கிராம மக்கள் 21 வருடங்களின் பின்னர் நேற்று மீள்குடியேற்றம் செய்யப்பட்டனர். தெல்லிப்பளை பிரதேச செயலர் பிரிவிலுள்ள குரும்பசிட்டி ஜே242 மற்றும் குரும்பசிட்டி கிழக்கு ஜே243 கிராம சேவையாளர் பிரிவுகளைச் சேர்ந்த 100 குடும்பங்கள் நேற்றையதினம் மீள்குடியேற்றம் செய்யப்பட்டுள்ளன.
அத்துடன், பொன் பரமானந்தா மகா வித்தியாலயம், ஆலயங்கள் என்பனவும் மக்கள் பாவனைக்காக விடுவிக்கப்பட்டுள்ளதுடன், குரும்பசிட்டி வசாவிளான் வீதியும் மக்கள் பாவனைக்காக திறந்து வைக்கப்பட்டுள்ளது. இந்த மீள்குடியேற்ற நிகழ்வில் யாழ். அரசாங்க அதிபர் திருமதி இமெல்டா சுகுமார், யாழ். கட்டளைத் தளபதி மேஜர் ஜெனரல் மகிந்த ஹத்துருசிங்க, தெல்லிப்பளை பிரதேச செயலர் எஸ்.முரளிதரன், உதவி வலயக்கல்விப் பணிப்பாளர் எஸ்.சுந்தரசிவம் உட்பட இராணு அதிகாரிகள், பொது மக்கள் எனப் பலரும் கலந்து கொண்டனர்.
அஜீத்துக்கு மங்காத்தா வெற்றியைக் கொடுத்தாலும், மது விருந்தில் நடந்த சோனா விவகாரத்தில் பெயரைக் கெடுத்துக் கொண்டார் இயக்குநர் வெங்கட் பிரபு.
இப்போது, அதைச் சரிகட்டும் விதத்தில் மெகா பட்ஜெட் படம் ஒன்றை இயக்கும் வேலையில் மும்முரமாக உள்ளார்.
ஞானவேல் ராஜாவின் ஸ்டுடியோ கிரீன்தான் தயாரிப்பாளர். ஹீரோ?
சூர்யா அல்லது அவர் தம்பி கார்த்தி இருவரில் ஒருவராக இருக்கலாம் என்கிறார்கள். ஆனால் இந்த இருவரில் ஒருவரை இயக்குவது பெரிய விஷயமில்லை. இருவரையுமே ஒரு கதையில் இணைப்பதுதான் சவால். வர்த்தகமும் பெரிதாக இருக்கும் என்கிறாராம் வெங்கட் பிரபு.
ஏற்கெனவே அஜீத், அர்ஜூன் என இரு பெரிய ஹீரோக்களை திறமையாக இணைத்து வெற்றி கண்டவர் என்பதால், வெங்கட் பிரபுவின் இந்த ஐடியாவும் பரிசீலனையில் உள்ளதாம்!
விரைவில் படம் குறித்த தெளிவான விவரங்கள் வெளியாகும் என்கிறார்கள். அதுவரை, வதந்திக்கு பஞ்சமிருக்காதல்லவா!!
அமைதிக்கான நோபல் பரிசு இம்முறை 3 பேருக்கு பகிர்ந்தளிக்கபடுகிறது. லைபிரியாவின் ஜனாதிபதி எலீன்ஜான்சன் சர்லீப், லைபிரியாவை சேர்ந்த லேமா போவி, ஏமன் நாட்டை சேர்ந்த பத்திரிகையாளர் தவக்குள் கர்மன் (இவர் பெண்கள் உரிமைக்காக போராடி வருகிறார்) ஆகிய 3 பேருக்கு நோபல பரிசு அளிக்கப்படுவதாக அறிவிக்கபட்டுள்ளது. இவர்கள் மூவரும் பெண்கள் என்பது குறிப்பிட்தக்கது.
2012ம் ஆண்டுக்கான வரவு – செலவுத் திட்டம் இரண்டாம் வாசிப்பிற்காக எதிர்வரும் நவம்பர் மாதம் 21ம் திகதி பாராளுமன்றில் சமர்பிக்கப்படவுள்ளதாக அரசாங்கம் அறிவித்துள்ளது.
இது குறித்து அமைச்சரவையில் அங்கீகாரம் பெறப்பட்டுள்ளதென தெரியவருகிறது.
மீன்பிடி படகு மூலம் அவுஸ்திரேலியாவுக்குத் தப்பிச் செல்ல முயற்சித்த நிலையில் அண்மையில் கைது செய்யப்பட்டவர்களில் தமிழீழ விடுதலைப் புலி இயக்க உறுப்பினர்கள் என்று சந்தேகிக்கப்படும் 6 பேரிடம் விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
குற்றத் தடுப்புப் பிரிவால் இது குறித்து கொழும்பு நீதவான் நீதிமன்றுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.
அவுஸ்திரேலியா தப்பிச் செல்லவிருந்த 37 பேரிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகள் மூலம் குறித்த 6 பேரும் இனங்காணப்பட்டதாக குற்றத் தடுப்புப் பிரிவினர் தெரிவித்துள்ளனர்.
கடந்த காலங்களில் பல தீவிரவாத செயல்களில் இவர்கள் ஈடுபட்டுள்ளதாக தகவல் கிடைத்துள்ளதென குற்றத் தடுப்புப் பிரிவினர் தெரிவித்துள்ளனர்.
மாணவர் சிப்பாய்கள் பயிற்சியில் ஈடுபட்டிருந்த பாடசாலை மாணவி ஒருவர் திடீரென உடல்நலக் குறைவு ஏற்பட்டு உயிரிழந்துள்ள சம்பவமொன்று குருநாகல் மாவட்டத்தில் இடம்பெற்றுள்ளது.
இந்த சம்பவம் குறித்து மேலும் தெரியவருவதாவது:-
குருநாகல் – பொல்காஹவெல – ரத்மல்தொட்ட மத்திய மகா வித்தியாலய மாணவிகளுக்கு மாணவ சிப்பாய்கள் பயிற்சி ரன்டெம்பே முகாமில் இடம்பெற்று வருகிறது.
கடந்த இரண்டாம் திகதி தொடக்கம் மாணவிகள் பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.
இதன்போது திடீர் சுகயீனமுற்ற மாணவி ஒருவர் அம்பகஹபெலஸ்ஸ வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு உயிரிழந்துள்ளார்.
15 வயதுடைய மாணவியே இவ்வாறு உயிரிழந்துள்ள நிலையில் சடலம் மீதான பிரேத பரிசோதனை இன்று இடம்பெறவுள்ளது.
ஹசலக பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
செங்கல்பட்டு, பூந்தமல்லியில் சிறப்பு முகாம்களில் உள்ள 29 இலங்கை அகதிகளை விடுவிக்க வேண்டும் என்று நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் கோரிக்கை விடுத்துள்ளார்.
இது குறித்து நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் விடுத்துள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது, செங்கல்பட்டு, பூந்தமல்லி சிறப்பு முகாம்களில் தடுத்து வைக்கப்பட்டிருந்த 44 ஈழத் தமிழ் அகதிகளில் 15 பேரை தமிழக அரசு விடுதலை செய்துள்ளது பாராட்டிற்குரியது.
ஈழத்தில் இனப்படுகொலை உச்ச கட்டத்தில் இருந்தபோது, அங்கே படுகாயமுற்றுக் கிடந்த மக்களுக்கு மருந்துவப் பொருட்களையும், மண்ணெண்ணை உள்ளிட்ட சில அத்யாவசியப் பொருட்களையும் கடத்தினார்கள் என்ற குற்றச்சாட்டின் போரில் இங்குள்ள பல ஈழத் தமிழ் அகதிகளை தமிழக போலீசார் கைது செய்து, சிறப்பு முகாம்கள் என்று பெயரில் சிறையை ஏற்படுத்தி தடுத்து வைத்தனர்.
அவர்களுக்கு எதிரான வழக்குகளில், பிணை விடுதலை உள்ளிட்ட சட்ட ரீதியான நிவாரணங்களைக் கூட பெறுவதற்கு அனுமதிக்காமல் தடுத்து வைக்கப்பட்டிருந்தனர். இவர்கள் அனைவரையும் விடுவிக்க வேண்டும் என்று தமிழின அமைப்புகள், அரசியல் கட்சிகள் தொடர்ந்து வேண்டுகோள் விடுத்து வருகின்றன.
மேலும், சிறப்பு முகாம்களில் அடைப்பட்டுக் கிடந்தவர்கள் பல முறை பட்டினிப் போராட்டம் நடத்தி தங்களை உடனடியாக விடுவித்து, தமிழகத்தில் உள்ள இதர முகாம்களில் வசிக்கும் தங்கள் உறவினர்களுடன் வாழ அனுமதிக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர். இதையடுத்து அவர்களில் 15 பேர் விடுவிக்கப்பட்டுள்ளனர்.
இன்னமும் 29 பேர் பூந்தமல்லி, செங்கல்பட்டு முகாம்களில் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர். அவர்களையும் உடனே விடுதலை செய்ய வேண்டும். இவர்கள் அனைவரும் 2 முதல் 5 ஆண்டுகள் வரை சிறை வைக்கப்பட்டுள்ளதை கருத்தில் கொண்டு இப்பிரச்சனையை தமிழக அரசு அணுகி, மீதமுள்ள 29 பேரையும் உடனே விடுவிக்க வேண்டும்.
சீமான் நடிக்கும் கண்டுபிடி கண்டுபிடி படத்தின் ஷூட்டிங்கில் தருண் சத்ரியா என்ற புது நடிகர் கதவறி கிணற்றில் விழுந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
மூவி பஜார் என்ற நிறுவனத்தின் சார்பில் கல்கி யுவா என்ற இருபத்தியொரு வயது இளைஞர் தயாரிக்கும் படம் கண்டுபிடி கண்டுபிடி. மாயாண்டி குடும்பத்தார் படத்தை தயாரித்த சாமு சிவராஜ் இந்தப் படத்தின் தயாரிப்பில் இணைந்துள்ளார்.
முரளி, ஐஸ்வர்யா தேவன் என்ற கேரளா புதுவரவும் நடிக்கும் இந்தப் படத்தின் கதை நாயகன் இயக்குநர் சீமான். பிரபு சாலமனின் உதவியாளரான ராம் சுப்பாராமன் இயக்குகிறார்.
போலீஸ் விசாரணையை மையப்படுத்தி நகரும் பரபரப்பான படமாக வளர்ந்து வரும் இப்படத்தின் ஷூட்டிங் தேனி மாவட்டம் கம்பம் அருகில் நடந்தது. குங்குமப்பூவும் கொஞ்சுபுறாவும் படத்தின் இணை நாயகனாக நடித்த தருண் சத்ரியா இப்படத்தில் முக்கிய வேடமேற்று நடிக்கிறார்.
காட்சிப்படி தருண் நூறு அடி ஆழமுள்ள கிணற்றில் இறங்கி படிக்கட்டில் உக்கார்ந்திருப்பதுபோல ஒரு காட்சியை படமாக்கத் திட்டமிட்டார்கள். இதற்காக பல்வேறு பகுதிகளில் ஆழமான கிணறுகளை தேடி இறுதியாக கொஞ்சம் பழய கிணற்றைக் கண்டுபிடித்து படப்பிடிப்பை நடத்தினார்கள்.
நடிகர் தருண் சத்ரியா படிக்கட்டு வழியாக இறங்கியபோது அங்கிருந்த பாசி வழுக்கி பிடிமானம் இல்லாமல் கிணறில் தவறி விழுந்தார். தலையில் அடிபட்டு மயக்கமான தருணை, அந்த ஊரைச் சேர்ந்த இருவர் கிணற்றுக்குள் குதித்து காப்பாற்றினர்.
அருகிலிருந்த மருத்துவமனைக்கு எடுத்துச் சென்று அவருக்கு சிகிச்சை அளித்தனர் படக்குழுவினர். இயல்புக்கு திரும்பிய தருண் மீண்டும் கிணற்றுக்குள் இறங்கி நடித்துமுடித்தபோது ஒட்டுமொத்த படக்குழுவே அவருக்கு கைத்தட்டி உற்சாகமளித்தது!