
கடந்த 3ம் திகதி நாடுகடந்த அரசின் பிரதமர் திரு.ருத்திரகுமாரன் அவர்கள் "ஹவானா" டைம்ஸ்சுக்கு பேட்டி கொடுத்தார் ! அவர் கியூபாவின் ஆதரவை நாடியுள்ளார் என்ற செய்திகள் அடிபட்டது யாவரும் அறிந்ததே. பொங்கு தமிழ் போன்ற ஊதுகுழல் இணையங்கள் அதனை தலைப்புச் செய்தியாகப் போட்டு கீயூபா நாட்டோடு நாடு கடந்த அரசானது ஏதோ பாரிய ஒப்பந்தம் செய்தது போல மிகைப்படுத்தப்பட்ட செய்திகளை வெளியிட்டது. ஆனால் உண்மை என்ன என்று கேட்டால் எல்லோரும் கைகொட்டிச் சிரிப்பார்கள்.திரு.ருத்திரகுமாரன் அவர்கள் பேட்டியைப் பார்க்க இங்கே அழுத்தவும்:
அதாவது இந்த ஹவான டைம்ஸ் இணைய ஆசிரியர் கடந்த ஐந்து வருடங்களாக ஒரு பிளாக்ஸ்பாட் (BLOG) வைத்திருக்கின்றார் அதனை இந்த 5 வருடத்தில் மொத்தமாகப் பார்வையிட்டவர்களே 5000 பேர்தான் சரி அதுபோகட்டும். இந்த இணையத்தின் ஆசிரியர் யார் என்று சற்றுப்பார்ப்போம். ஹவான டைம்ஸ் இணைய ஆசிரியர் ராபின்சன் இவர் 2001 ஆம் ஆண்டு அமெரிக்காவில் இருந்து கியூபாவில் குடியேறி பின்னர் கியூபாவில் இருந்து நாடுகடத்தப்பட்ட அமெரிக்கராவார். (ஆதாரம்: http://edition.cnn.com/2009/TRAVEL/03/02/havana.localview/index.html) .
அதாவது கியூபா நாடு இவரை நாடுகடத்தியது. இந்த ஹவான டைம்ஸ் கியூபாவுக்கு எதிராக அமெரிக்காவில், அமெரிக்கரால் நடத்தப்படும் ஒரு பத்திரிகை. இதனைக்கூட சரிவரத் தெரிந்துகொள்ளாத பிரதமர் இதற்கு பேட்டி ஒன்றைக் கொடுத்தது மட்டுமல்லாது கியூபாவின் உதவியை தாம் நாடுவதாகச் சொல்லியுள்ளார். சும்மா போய் கியூபாவில் கேட்டால் அந்த நாட்டு அரசு சிலவேளை ஆதரவு கொடுத்திருக்கும், இப்ப ஹவான டைம்ஸ்சில் எழுதிவிட்டுப் போய் ஆதரவு கேட்டால் காஸ்ரோ அடித்துத் தான் கலைப்பார்.
ஏன் என்றால் பிரடல் காஸ்ரோ கியூபாவின் சர்வாதிகாரி. அவர் குடும்ப ஆட்சி அழிக்கப்படவேண்டும், என்றும் இன்னும் பல விடையங்களையும் அது இது என்று தாறு மாறுகாக எழுதித் தள்ளிய பத்திரிகைதான் இந்த ஹவான டைம்ஸ். போதாக்குறைக்கு இந்த பத்திரிகைக்கு கியூபாவில் தடை விதிக்கப்படுள்ளது. இது ஒன்றையும் பாராது என்ன நடக்குது என்று தெரியாது இப்படி மொக்கை போடு போட்டுள்ளார்களே இவர்கள்தான தமிழீழம் பெற்றுத்தரப் போகிறார்கள்?
சர்வதேச அளவில் தமிழர்களுக்கு தலைகுனிவையும், எங்களைப் பார்த்து ராஜதந்திரம் தெரியாதவர்கள் என்றும் சொல்லுமளவுக்கு இந்த நாடு கடந்த அரசு செயல்பட்டு வருகிறது கண்டிக்கத்தக்க விடையமாகும். இனியாவது இப் பிழைகளை விடாத நடந்துகொள்ளவேண்டும் என்பதற்காக நாம் இதனை எழுதுகிறோம். இதனை ஒரு விமர்சனமாகப் பார்த்துப் பழகவும். அதைவிடுத்து அதிர்வு நாடுகடந்த அரசின் எதிரி என்று சொல்லி உடனே எம்மீது சேறு பூசும் நடவடிக்கைகளை ஆரம்பிக்கவேண்டாம்.
எப்படியான செய்திகள் வெளியாகிறது! எதில் உண்மை இருக்கிறது! என்ன நடந்துகொண்டு இருக்கிறது என்பது போன்றவற்றை மக்களுக்கு தெளிவுபடுத்தவேண்டிய கடமை அதிர்வு இணையத்துக்கு இருக்கிறது. எனவே மக்கள் நிச்சயம் கேள்வி கேட்ப்பார்கள் அதற்கு பதில்சொல்லவேண்டும் என்ற எண்ணம் அனைவருக்கும் இருக்கவேண்டும் என்பதற்காகவே நாம் இதனைச் சுட்டிக்காட்டியுள்ளோம். தவறுகள் இருப்பின் எம்மை தொடர்புகொள்ளலாம்.
தமிழீழ அரசாங்கத்தின் பிரதமர் ஹவானா ரைம்ஸ் இதழுக்கு வழங்கிய செவ்வி!
அதிர்வு
http://tamilhot.blogspot.com
http://tamilhot.blogspot.com
0 comments:
Post a Comment
உங்களது கமெண்ட் என்ன ?