Monday 26 September 2011

ராஜபக்ச மீது நடவ���ிக்கை எடுக்கவேண்டும்: தமிழர் ஆதரவு ஊர்திப் பயணம் மதுரை வருகை

- 0 comments


தஞ்சை தமிழ்த்தாய் அறக்கட்டளை, தமிழக தமிழ் அமைப்புகள் ஆகியவை இணைந்து இலங்கை தமிழர் ஆதரவு ஊர்திப் பயணத்தை தொடங்கியுள்ளன.

ராஜபக்ச மீது நடவடிக்கை எடுக்கக்கோரி, தமிழக சட்டமன்றத்தில் நிறைவேற்றிய தீர்மானத்தை மத்திய அரசு உடனே நிறைவேற்ற வேண்டும் என்பதை வலியுறுத்தி, கன்னியாகுமரியில் தொடங்கிய இலங்கை தமிழர் ஆதரவு ஊர்திப்பயணம் நேற்று மதுரை வந்தது.

இலங்கைத் தமிழர்களை படுகொலை செய்ததற்காக, அதிபர் ராஜபக்சேயை போர்க்குற்றவாளியாக அறிவித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தமிழக சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இந்த தீர்மானத்தை செயல்படுத்த, மத்திய அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்' என்பது, இந்த ஊர்திப் பயணத்தின் நோக்கமாகும்.

இவர்கள் தங்கள் பயணத்தை கன்னியாகுமரியில் கடந்த 21 ந் தேதி தொடங்கினர். அங்கிருந்து, நாகர்கோவில், நெல்லை, கோவில்பட்டி, விருதுநகர், திருமங்கலம் வழியாக மதுரை வந்தனர்.

இந்த பயணக்குழுவின் தலைவராக முன்னாள் எம்.எல்.ஏ கோமுகி மணியன், செயலாளராக உடையார் கோயில் குணா (தமிழ்த்தாய் அறக்கட்டளை), ஒருங்கிணைப்பாளர்களாக பனப்பாக்கம் சீத்தா, ப.கோ.நாராயணசாமி, எசு.கே.மணி, செந்தில்தஞ்சை, புண்ணிய மூர்த்தி ஆகியோர் இடம் பெற்றுள்ளனர்.

இலங்கை தமிழர் நலன் காக்கவும், தமிழர்களை கொன்று குவித்த கொடுங்கோலன் ராஜபக்சே மீது போர்க்குற்றவாளி என்று குற்றம் சுமத்தி நடவடிக்கை எடுக்கவும், இலங்கை மீது பொருளாதார தடை விதிக்க இந்திய அரசை வலியுறுத்தியும், கச்சத்தீவை இந்திய அரசு மீட்க வேண்டும் என்ற நோக்கத்திலும் இந்த ஊர்திப்பணத்தை தொடங்கி உள்ளோம்.

நாங்கள் ஒவ்வொரு பகுதியாகச் செல்லும் போது அங்குள்ள தமிழ் ஆதரவாளர்களை சந்தித்து இலங்கை தமிழருக்காக போராட வேண்டும் என்று தெரிவித்தோம்.

எங்கள் பயணம் வருகிற 3ந் தேதி சென்னையில் முடிகிறது என்று இதன் அமைப்பாளர்கள் கருத்து வெளியிட்டுள்ளனர்.

http://actressmasaala.blogspot.com



  • http://actressmasaala.blogspot.com

  • [Continue reading...]

    நாளை பாகிஸ்தான் ���ிரும்புகிறார் ஹினா ரப்பானி

    - 0 comments


    ஐநா பொதுச்சபை கூட்டத்தில் பங்கேற்பதற்காக அமெரிக்கா சென்றுள்ள பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சர் ஹினா ரப்பானி, பொதுச்சபையில் உரையாற்றிய பின்னர் நாளை பாகிஸ்தான் திரும்ப உள்ளார்.

    முன்னதாக ஐநா பொதுச்சபை கூட்டத்துக்கு பாகிஸ்தான் சார்பில் கிலானி தலைமை வகித்துச் செல்வதாக இருந்தது. எனினும் அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா அவரை சந்திக்க அனுமதி தராததால் தனது பயணத்தை கைவிட்டார் கிலானி. இதையடுத்து ஹினா ரப்பானி பாகிஸ்தான் குழுவுக்கு தலைமையேற்றுச் சென்றார்.

    இந்த நிலையில் ஆப்கானிஸ்தானில் தாக்குதல் நடத்துவதற்கு ஹக்கானி பயங்கரவாத அமைப்புக்கு பாகிஸ்தானின் உளவு அமைப்பான ஐ.எஸ்.ஐ. ஆதரவளிப்பதாக அமெரிக்கா குற்றம் சாட்டியதையடுத்து ஹினா ரப்பானியை உடனே நாடு திரும்புமாறு கிலானி உத்தரவிட்டிருந்ததாக செய்திகள் வெளியாயின.

    எனினும் ஐநா பொதுச்சபை கூட்டத்தில் உரையாற்றிய பின்னர்தான் ஹினா ரப்பானி பாகிஸ்தான் திரும்புவார் என அந்த நாட்டின் வெளியுறவு அதிகாரிகள் விளக்கமளித்தனர்.

    http://actressmasaala.blogspot.com



  • http://actressmasaala.blogspot.com

  • [Continue reading...]

    கடந்த ஞாயிறு கொழ���ம்பில் நடந்த இந��து ராமின் மந்திர ஆலோசனை?

    - 0 comments


    கடந்த ஞாயிற்றுக் கிழமை இந்துப் பத்திரிகையின் பிரதம எழுத்தாளர் ராம் அவர்கள் கொழும்பில் நடைபெற்ற கூட்டம் ஒன்றில் கலந்துகொண்டுள்ளார் என அறிகிறது. சில காலமாக சர்ச்சைக்குரிய கருத்துக்களை தெரிவித்து சிங்கள ஆட்சியாளர்களை சஞ்சலத்தில் ஆழ்த்தியவர் இந்த இந்து ராம் ஆவார். இவர் அடிப்படையாகவே ஒரு இலங்கை அரசின் நலன் விரும்பி ஆவார். ஆனால் சமீபகாலமாக கோத்தபாயவைப் பற்றி இவர் எழுதிய சில செய்திகளும் பிற சிங்கள அமைச்சர்களைப் பற்றி எழுதிய செய்திகளும் இலங்கை அரசை சங்கடத்தில் ஆழ்த்தியது. இல்லை அப்படி அழ்த்தியது போல இலங்கை அரசு நடித்திருக்கவேண்டும். ஈழத் தமிழர்களுக்கு சற்று சாதகமாக இவர் பேசுவதுபோல ஒரு தோற்றப்பாடு கொண்டுவரப்பட்டபோதே எல்லோரும் நினைத்தார்கள் இவர் என்ன மாறிவிட்டாரா என்று.

    அது எல்லாம் ஒன்றும் இல்லவே இல்லை. அவர் இலங்கைக்கு விஜயம் ஒன்றை மேற்கொள்ளவிருந்ததும் அதன்போது அவர் தமிழர் தரப்பைச் சந்திக்க விருப்பதும் இலங்கை அரசால் ஏற்கனவே பல மாதங்களுக்கு முன்னர் திட்டம் தீட்டி வைக்கப்பட்டிருந்த விடையம். இலங்கையில் இந்திய -இலங்கை சமூகக் கூட்டம் நடத்துவது என்பது இலங்கை அரசால் பல மாதங்களுக்கு முன்னர் எடுக்கப்பட்ட முடிவு. அதற்கு ராம் அவர்கள் வருவதாக ஏற்பாடுகள் ஏற்கனவே செய்யப்பட்டு இருந்தது. அவர் சிங்கள ஆதரவு முகத்துடன் இலங்கை வந்தால் அங்கே அவர் தமிழர் தரப்புடன் பேசும் பேச்சு எடுபடாது என நினைத்த சிங்களம் ராமுடன் கலந்தாலோசித்து சில சிங்கள எதிர்ப்புச் செய்திகளை ராமின் பத்திரிகை மூலம் வெளியிட்டது.

    இதனால் இலங்கை அரசு ஏதோ கடுங்கோபம் கொண்டுள்ளது போல நடித்தது. ஆனால் இறுதியில் நேற்று முந் தினம் அவர் கொழும்பு சென்று விழாவில் கலந்துகொண்டு பல அமைச்சர்களையும் அரசியல்வாதிகளையும் சந்தித்துள்ளார். இலங்கையில் அவருக்கு ராஜ மரியாதை வழங்கப்பட்டுள்ளது. கூட்டத்தில் கலந்துகொண்ட ராம் தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர்களைச் சந்தித்து நெடு நேரமாக உரையாடி பல அறிவுரைகளையும் வழங்கினாராம். அதில் ஒன்று என்ன தெரியுமா ? பூனை கறுப்பாக இருந்தால் என்ன வெள்ளையாக இருந்தால் என்ன அது இறுதியில் எலியைப் பிடிக்கிறதா என்று பார்க்கவேண்டும் என்று சீனத் தலைவர் டெங் ஸியாம்பொங்கின் கூறியதை இந்த மணி கட்டிய பூனைகளுக்கு சொல்லிச் சிரித்தாராம்.

    யார் வெள்ளைப் பூனை யார் கறுப்புப்பூனை யார் எலி என்று எல்லாம் எங்களிடம் கேட்கவேண்டாம் வாசகர்களே ! அது இந்து ராமுக்குத் தான் வெளிச்சம்.

    அதிர்வு

    http://actressmasaala.blogspot.com



  • http://actressmasaala.blogspot.com

  • [Continue reading...]

    போர்க்குற்றங்கள் தொடர்பாக ஐ.நா. அ���மந்தமாக இருக்கக்கூடாது!: கனடிய வ��ளிவிவகார அமைச்ச���்

    - 0 comments


    இன்றைய ஐக்கிய நாடுகள் சபையின் அமர்வில் கனடாவின் சார்பில் பேசிய கனடிய வெளிவிவகார அமைச்சர் ஐ.நா.சபை நம்பத்தகுந்த சாட்சியங்களுள்ள போர்க்குற்ற விசாரணை தொடர்பாக அசண்டையீனமாக இருந்து விடக்கூடாது என வேண்டுகோள் விடுத்தார்.

    தனது உரையின் முக்கிய அம்சமாக பலஸ்தீனியத்தின் ஆட்சியதிகார பீடம் தங்களை தனிநாடாக அங்கீகரிக்கக் கோருவதை கனடா எதிர்க்கும் என்பதை ஐ.நா.அவைக்கு தெளிவான செய்தியாகத் தெரிவித்த அவர்,

    அதன் பின்னர், சிரியா, பர்மா, ஈரான் ஆகியவற்றின் வன்முறைகள், ஜனநாயக விரோதப் போக்குகள் குறித்து ஐக்கிய நாடுகள் சபை மௌனமாக இருக்கக்கூடாது என்பதைக் குறிப்பிட்டு அதேபோன்று தகுந்த சாட்சியங்கள் உள்ளதாக நம்பப்படும் சிறீலங்காவின் போர்க் குற்றங்கள் குறித்தும் ஐ.நா. அசமந்தப் போக்கைக் கடைப்பிடிக்கக் கூடாது எனக் குறிப்பிட்டார்.

    இதேவேளை கனடியப் பாராளுமன்ற வளாகத்தில் இந்த வாரம் புதன்கிழமை மாலை சிறீலங்காவின் கொலைக்களம் என்ற விவரண நாடாவை மனிதவுரிமை கண்காணிப்பு மையம் திரையிடவுள்ளது.

    இதனை ஏற்பாடு செய்துள்ள கொன்சவேட்டிவ் கட்சிப் பாராளுமன்ற உறுப்பினர் பற்றிக் பிரவுண் தான் கனடிய மனிதவுரிமை மையம் என்ற தமிழ் அமைப்புடன் இணைந்து செயலாற்றப் போவதாக நேற்றைய தினச் செய்திக் குறிப்பில் தெரிவித்திருந்தார்.

    இந்த ஒளியிழையைப் பார்வையிட தங்களுடைய தொகுதிப் பாராளுமன்ற உறுப்பினர்களிற்கு ஈழத்தமிழர்கள் அழைப்பு விடுத்து இதன் தாற்பரியத்தை உணர்த்த வேண்டுமென கனடிய தமிழ்க் காங்கிரஸ் நேற்று வேண்டுகோள் விடுத்திருந்தது.

    http://actressmasaala.blogspot.com



  • http://actressmasaala.blogspot.com

  • [Continue reading...]

    நெருங்க முடியாத��வுக்கு இன்னமும் பற்றி எரிகிறது ப���ைமுகாம்!

    - 0 comments


    வீரவில சிறிலங்கா படைமுகாமில் நேற்று மாலை இடம்பெற்ற பாரிய வெடிப்புச் சம்பவத்தை அடுத்து முகாமுக்குள் பற்றிக் கொண்ட தீ நள்ளிரவுக்குப் பின்னரும் எரிந்து கொண்டிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

    மறைந்த பிரபல சிங்கள நடிகர் காமினி பொன்சேகாவுக்கு சொந்தமான சனசும விடுதியில் அமைக்கப்பட்டிருந்த இராணுவ முகாமிலேயே இந்த வெடிவிபத்து ஏற்பட்டுள்ளது.

    அங்கிருந்து சிறிய ஆயுதக்கிடங்கிலேயே தீ விபத்து ஏற்பட்டதாக சிறிலங்கா இராணுவப் பேச்சாளர் பிரிகேடியர் நிகால் ஹப்புஆராச்சி தெரிவித்துள்ளார்.

    படையினர் தங்கியிருந்த பகுதியில் இருந்து சற்றுத் தொலைவிலேயே, ஆயுதக்கிடங்கு அமைந்திருந்ததால் பாரிய உயிர்ச்சேதங்கள் தவிர்க்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.

    இந்தச் சம்பவத்தை அடுத்து வீரவில படைமுகாமில் இருந்த படையினரும் முகாமைச் சுற்றியுள்ள பகுதிகளில் வசித்த பொதுமக்களும் பாதுகாப்பான பகுதிக்கு வெளியேற்றப்பட்டுள்ளனர்.

    இந்த ஆயுதக்கிடங்கிற்குப் பொறுப்பான அதிகாரி மேலும் இரு படையினருடன் அங்கு சென்றபோதே வெடி விபத்து ஏற்பட்டுள்ளதாகவும், கூடச் சென்ற இரு படையினரும் காயங்களுடன் திரும்பியுள்ளதாகவும் தங்காலை காவல்துறை கண்காணிப்பாளர் தெரிவித்துள்ளார்.

    ஆனால் ஆயுதக்கிடங்கிற்குப் பொறுப்பான அதிகாரி பற்றிய தகவல் ஏதும் தெரியவில்லை என்றும் அவர் மேலும் கூறியுள்ளார்.

    பற்றியெரியும் படைமுகாமுக்குள் படையினர் எவரேனும் சிக்கியுள்ளனரா என்பது பற்றி தகவல் ஏதும் தெரியவில்லை என்று கூறியுள்ள அவர், தீயினால் ஏற்பட்டுள்ள கடும் வெப்பமும், கரும்புகையும் முகாமுமைச் சூழ்ந்துள்ளதாலும், தொடர்ந்து வெடிப்புகள் இடம்பெறுவதாலும் முகாமை நெருங்க முடியாதுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

    வெடிப்பு நிகழ்ந்த முகாம் பிரதேசம் முற்றாகத் தடை செய்யப்பட்டுள்ளதுடன் அருகில் உள்ள படை முகாம்கள், காவல் நிலையங்களில் இருந்து கொண்டு வரப்பட்ட பெருமளவு படையினரும் காவல்துறையினரும் பாதுகாப்பில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

    வெடித்துச் சிதறிய ஆயுதக்கிடங்கிற்கு சற்றுத் தொலையில் உள்ள ஏனைய இரு ஆயுதக்கிடங்குகளையும் பாதுகாப்பதற்கு சிறிலங்கா இராணுவத்தின் சிறப்பு அணிகள் வீரவிலவுக்கு வான்வழியாக அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகவும் சிறிலங்கா பாதுகாப்பு வட்டாரங்கள் தகவல் வெளியிட்டுள்ளன.

    வீரவில படைமுகாமில் நேற்று் இடம்பெற்ற வெடிப்புச் சம்பவத்தில் உயிரிழந்த சிறிலங்கா படைச்சிப்பாய் ஒருவரின் சடலம் இன்று காலை மீட்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

    http://actressmasaala.blogspot.com



  • http://actressmasaala.blogspot.com

  • [Continue reading...]

    உண்மையை நிலைநாட��டவே மகிந்த மீது ��ழக்கு தொடுக்கப்���ட்டுள்ளது: பிரத��ர் (காணொளி)

    - 0 comments


    2009ம் ஆண்டு போரின் இறுதிக்கட்டத்தின் போது பா.நடேசன், புலித்தேவன் ஆகியோர் படுகொலை செய்யப்பட்ட வெள்ளைக்கொடி விவகாரம், கேணல் ரமேஸ் படுகொலை தொடர்பில் மகிந்த ராஜபக்சவுக்கு எதிராக நியூ யோர்க்கில் தொடுக்கப்பட்டுள்ள வழக்கில் முக்கிய இடத்தை வகிக்குமென, நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் பிரதமர் வி.உருத்திரகுமாரன் அவர்கள் தெரிவித்துள்ளார்.

    சிறிலங்கா அரச படைகளிடம் வெள்ளைக் கொடியுடன் சரணடைய சென்றவர்களில, கேணஸ் ரமேசும் ஒருவர் என்ற நிலையில், சர்வதேசத்தின் தொடர்புடைய இந்த 'வெள்ளைக்கொடி' விவாகாரம் முக்கிய இடத்தை வகிக்கவுள்ளது.

    சிறிலங்கா அரசுத் தலைவர் மகிந்த ராஜபக்ச மீது தொடுக்கபபட்ட, முதலாவது போர்குற்ற வழக்காக அமைந்துள்ள கேணல் ரமேஸ் படுகொலை வழக்கில் பிரதமர் வி.உருத்திரகுமாரனே சட்டவாளராக பங்காற்றுகின்றார்.

    இந்நிலையில் திங்கட்கிழமை லண்டன் பிபிசி தமிழோசைக்கு வழக்கு தொடர்பில் செவ்வியொன்றை வழங்கியுள்ளார்.

    நட்டஈடு கோருவதாக இந்த வழக்கு அமைந்திருந்தாலும், வழக்கின் நோக்கம் மக்களுக்கு என்ன நடந்தது என்பது பற்றியதான உண்மையும், மக்களுக்கு நீதியும் கிடைக்க வேண்டியுமே, கேணஸ் ரமேசின் மனைவயினால் இந்த வழக்கு தொடுக்கப்பட்டுள்ளதாக பிரதமர் வி.உருத்திரகுமாரன் அவர்கள் தெரிவித்தார்.

    நீதி விசாரணையை நடாத்துவதற்குரிய சட்ட வெளியோ அல்லது அரசியல் வெளியோ இலங்கதை; தீவில் இல்லாத காரணத்தினால்தான், புலத்தில் இந்த வழக்கு தொடரப்பட்டுள்ளதாகவும் மேலும் அந்தச் செவ்வியில் பிரதமர் தெரிவித்துள்ளார்.

    சர்வதேச சட்டங்களுக்கு அமைய, நீதிமன்ற அழைப்பாணையை மகிந்த ராஜபக்சவிடம் சேர்கப்படும் எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

    நாதம் ஊடகசேவை



    http://actressmasaala.blogspot.com



  • http://actressmasaala.blogspot.com

  • [Continue reading...]

    தமிழர் ஒருங்கிண��ப்புக் குழு பிரித்தானியா விடுக்��ும் மாவீரர் தின ��றிக்கை!

    - 0 comments


    முள்ளிவாய்க்கால் பேரவலத்தின் பின்னர் தமிழீழ மக்களின் உரிமைப் போராட்டத்திற்கான ஒரே தீர்வு தமிழீழம் மட்டுமே என்பதை காத்திரமாக வெளிப்படுத்தக் கூடியவர்கள் புலம் பெயர் தமிழர்களே என்ற வகையில் அதனை சிதைக்கும் நடவடிக்கையை சிறீலங்கா அரசாங்கம் திட்டமிட்டு மேற்கொண்டு வருகின்றது. இந்த சிதைப்பு நடவடிக்கைக்காக சில அடிவருடிகளையும் வழிதவறிப் போன சில போராளிகளையும் அது களமிறக்கியுள்ளது. இக்குழுக்கள் 'தலைமைச் செயலகம்' என்று கூறி புலம் பெயர் மண்ணில் பொய்யான பரப்புரைகளை மேற்கொள்வதுடன் வழமையாக எம்மால் நடாத்தப்படுகின்ற தேசிய நிகழ்வுகளையும் நடாத்தி வருகின்றனர். இதன் மூலமாக மக்கள் மத்தியில் குழப்பங்களை உருவாக்கி வருகின்றனர். பிரித்தானிய மக்களுக்கு மட்டுமல்ல உலகத் தமிழினத்துக்கே நிமிர்வைத் தருகின்ற பிரித்தானிய தேசிய நினைவெழுச்சி நாளை குழப்புவதற்கும் மக்களின் விடுதலை உணர்வுகளை மழுங்கடிப்பதற்குமான நடவடிக்கையை இக்குழுவினர் தீவிரமாக மேற்கொண்டு வருகின்றனர்.

    கடந்த 1990 ஆம் ஆண்டிலிருந்து தொடர்ச்சியாக எம்மால் நடாத்தப்பட்டு வரும் தேசிய நினைவெழுச்சி நாளை இம்முறையும் உணர்வு பூர்வமாக நடாத்துவதற்கான ஏற்பாடுகளை நாம் மேற்கொண்டு வருகின்றோம். அதற்காக வழமையான பிரித்தானியக் "கிளைச்" செயற்பாட்டாளர்கள் மிகத் தீவிரமாக செயற்பட்டு வருகின்றனர். ஆண்டாண்டு தோறும் மக்களின் உணர்வு பூர்வமான பங்களிப்பு அதிகரித்து வந்ததால் அதற்கேற்றவாறு நாம் மண்டபங்களை மாற்றி வந்தோம். கடந்த நான்கு ஆண்டுகளாக எக்செல் மண்டபத்தில் ஐம்பதாயிரத்துக்கும் மேற்பட்ட மக்களின் உணர்வு பூர்வமான பங்களிப்போடு மிகப் பிரமாண்டமான முறையில் தேசிய நினைவெழுச்சி நாளை நடாத்தினோம்.

    நாம் வழக்கம் போல இம்முறையும் எக்செல் மண்டபத்தில் நினைவெழுச்சி நாளை நடாத்துவதற்கான ஏற்பாடுகளை மேற்கொண்ட போது அம்மண்டபம் பிரித்தானியாவின் மிகப் பெரிய நிறுவனம் ஒன்றினால் நவம்பர் 24- 27 வரை முன்பதிவு செய்யப்பட்டுள்ளதை அறிந்தோம். எக்செல் மண்டபத்திலுள்ள சிறிய பகுதி எம் மக்களை உள்ளடக்கப் போதுமானதாக இல்லாததால் நாம் அம் மண்டபத்தைப் பெற்றுக் கொள்ளவில்லை என்பதை எமது உறவுகளுக்குத் தெரிவித்துக் கொள்கின்றோம். எனினும் நினைவெழுச்சி நாள் வழமைபோல் எம்மால் உணர்வு பூர்வமாக நடாத்தப்படும் என்பதுடன் மண்டபம் தொடர்பான விபரங்கள் உரிய நேரத்தில் வழமை போன்று எம்மால் வெளியிடப்படும் என்பதையும் தெரிவித்துக் கொள்கின்றோம்.

    பிரித்தானிய தேசிய நினைவெழுச்சி நாளை குழப்பும் வகையில் மேற்படி குழுவினர் எக்செல் மண்டபத்தில் வழமைபோல் நிகழ்வு நடைபெறுமென சில ஊடகங்கள் ஊடாகவும் துண்டுப் பிரசுரங்கள் மூலமாகவும் நேரடியாகவும் மக்கள் மத்தியில் பொய்யான பிரச்சாரங்களை மேற்கொண்டு வருகின்றனர். எக்செல் மண்படத்தில் நடாத்தப்படுவதாகக் கூறப்படும் நினைவெழுச்சி நாள் எம்மால் நடாத்தப்படவில்லை என்பதையும் அவர்களால் விநியோகிக்கப்படும் பற்றுச் சீட்டுக்கும் எமக்கும் எவ்விதத் தொடர்பும் இல்லை என்பதையும் எமது உறவுகளுக்கு
    அறியத் தருகின்றோம்.

    கடந்த சில வருடங்களாக எம்முடன் இணைந்து செயற்பட்டு வந்த ஒரு சிலர் தற்போது மேற்படி குழுவினருடன் இணைந்து செயற்பட்டு வருகின்றனர். இவர்களே சில ஊடகங்களில் தோன்றி பொய்யான பிரச்சாரங்களை மேற்கொண்டு வருகின்றனர். எனவே இந்தப் பொய்ப் பிரச்சாரங்களில் எமது உறவுகள் அவதானமாக இருக்குமாறு உரிமையுடன் கேட்டுக் கொள்கின்றோம். எமது பிரித்தானியக் கிளையின் வழமையான செயற்பாட்டாளர்களே இம்முறை எம்மால் நடாத்தப்படும் தேசிய நினைவெழுச்சி நாள் தொடர்பாக உங்களிடம் வருவார்கள். அவர்களுக்கு வழமையாக நீங்கள் வழங்கும் சகல ஒத்துழைப்புக்களையும் வழங்குமாறு நாம் அன்பாகக் கேட்டுக் கொள்கின்றோம். எமது மக்களின் ஒற்றுமையையும் பலத்தையும் எமது விடுதலையையும் சுக்குநூறாக உடைக்க முயலும் சிறீலங்கா அரசாங்கத்தின் நோக்கத்திற்கு செயல்வடிவம் கொடுக்க முனையும் குழுவினரோடு ஒரு போதும் ஒற்றுமையாக முடியாது என்பதை எமது உறவுகள் கவனத்தில் எடுக்க வேண்டும். நாட்டிலே எத்தனையோ துரோகங்கள் நிகழ்ந்தேறிய நிலையில் குறிப்பாக முள்ளிவாய்க்காலின் பின்னர் மிக அவதானமாக நாம் இருந்தாக வேண்டும்.

    பிழையானவர்களின் வழி நடத்தலிலோ அவர்களுடன் சேர்ந்தோ இயங்கும் வரலாற்று தவறை நாம் இழைத்து விடக் கூடாது. தற்காலிகமான பின்னடைவுகளை தரக் கூடிய இவர்கள் வரலாற்றில் காணாமல் போவார்கள். உன்னத இலட்சியத்துக்காக களமாடிய மாவீரச் செல்வங்களுக்கு இவ்வாறான பிழையான சக்திகளுடன் இணைந்து நினைவேந்தல் செய்வதை எம்மால் ஒரு போதும் ஏற்றுக் கொள்ள முடியாது என்பதையும் அந்த மாவீரத் தெய்வங்களே இதனை ஏற்றுக் கொள்ள மாட்டார்கள் என்பதையும் நாம் நினைவூட்ட விரும்புகின்றோம். இக்குழுவினரின் செயற்பாடுகள் பிரித்தானியா மட்டுமன்றி எமது உறவுகள் வாழும் புலம்பெயர் நாடுகள் அனைத்திலும் இடம்பெற்றே வருகின்றன. அராஜகங்களும் மிரட்டல்களும் காட்டுமிராண்டித் தனங்களும் அரங்கேறத் தொடங்கி விட்டன.

    எனவே புலம்பெயர் மக்கள் இக்குழுவினர் தொடர்பாக அவதானமாக இருக்குமாறும் நாம் வேண்டிக் கொள்கின்றோம். பிரித்தானியா மட்டுமன்றி அனைத்து நாடுகளிலும் தொடர்ச்சியாக இடம் பெற்றது போன்று இம்முறையும் தமிழர் ஒருங்கிணைப்புக் குழுவினரால் தேசிய நினைவெழுச்சி நாள் நிகழ்வுகள் நடைபெறும் என்பதனையும் அதற்கு எப்போதும் போல அனைத்து ஒத்துழைப்புக்களையும் வழங்க வேண்டுமெனவும் உரிமையுடன் கேட்டுக் கொள்கின்றோம். கடந்த 19ஆம் நாளன்று தமிழர் ஒருங்கிணைப்புக் குழுவினர்களின் ஏற்பாட்டில் ஜெனீவாவில் நடைபெற்ற பொங்கு தமிழ் நிகழ்வில் பெருமளவில் பங்கு பற்றிய அனைத்து பிரித்தானிய உறவுகளுக்கும் இச்சந்தர்ப்பத்தில் எமது நன்றிகளை தெரிவித்துக் கொள்கின்றோம். உண்மையான தமிழ் தேசிய நினைவேந்தல் அகவத்தோடு இணைந்து தேசிய நினைவெழுச்சி நாளை உணர்வு பூர்வமாக நடாத்துவதற்கு உறுதி பூணுவோம்.

    தமிழரின் தாகம் தமிழீழத் தாயகம்.

    http://actressmasaala.blogspot.com



  • http://actressmasaala.blogspot.com

  • [Continue reading...]

    உள்ளே தூக்கி போட்ருவோம்! - சோனாவை எச்சரித்த போலீஸ்

    - 0 comments
     
     
     
    எஸ்பிபி சரண் மீது நிச்சயம் நடவடிக்கை எடுப்போம். ஆனால் அதற்கு முன் தேவையில்லாமல் ஆர்ப்பாட்டம் செய்தால் உள்ளே தூக்கி போட்டுடுவோம், என நடிகை சோனாவை எச்சரித்துள்ளது சென்னை போலீஸ்.
     
    பிரபல நடிகரும், தயாரிப்பாளருமான எஸ்.பி.பி.சரண் மீது, நடிகை சோனா பாலியல் பலாத்கார புகார் கொடுத்துள்ளார். இது தொடர்பாக பாண்டிபஜார் போலீசார் எஸ்.பி.பி.சரண் மீது வழக்குப்பதிவு செய்துள்ளனர். இந்த வழக்கில் தன்னை கைது செய்யாமல் இருக்க, எஸ்.பி.பி.சரண் சென்னை உயர்நீதிமன்றத்தில் இடைக்கால முன் ஜாமீன் பெற்றுள்ளார்.
     
    இந்த நிலையில் நடிகை சோனா போலீஸ் கமிஷனர் திரிபாதியை சந்தித்து, தனது புகார் தொடர்பாக வீடியோ பட ஆதாரம் அடங்கிய சிடி ஒன்றை கொடுத்தார்.
     
    இந்த நிலையில் மகளிர் அமைப்போடு சேர்ந்து நடிகை சோனா, எஸ்.பி.பி.சரண் வீட்டு முன்பு ஆர்ப்பாட்டம் நடத்தப்போவதாக அறிவித்தார். இதற்கிடையில் நேற்று மாலையில் மீண்டும் நடிகை சோனா போலீஸ் கமிஷனர் திரிபாதியையும், தியாகராயநகர் உதவி கமிஷனர் தமிழ்செல்வனையும் சந்தித்துப் பேசினார்.
     
    அப்போது, சோனாவிடம், 'நிச்சயமாக எஸ்பிபி சரண் மீது நடவடிக்கை எடுப்போம். அதற்கு முன் தேவையில்லாமல் நீங்கள் மகளிர் அமைப்போடு சேர்ந்து ஆர்ப்பாட்டத்தில் இறங்கினால், உங்களையே உள்ளே வைக்க வேண்டி வரும்," என்று எச்சரித்தார்களாம் போலீசார்.
     
    இதனால் ஆர்ப்பாட்ட திட்டத்தை சோனா ஒத்திப் போட்டுள்ளதாகத் தெரிகிறது.
     
    ஆனால் போலீசாரின் இந்த செயல் பாதிக்கப்பட்டவருக்கு எதிராகவும், குற்றவாளிக்கு ஆதரவாகவும் உள்ளதாகக் கூறி, போராட்டத்தில் ஈடுபடத் தயாராகி வருகிறது சோனாவுக்கு ஆதரவான மகளிர் அமைப்பு.

     


    [Continue reading...]

    அதிமுகவுக்குப் போட்டியாக மதுரை திமுக வேட்பாளர்களும் மாற்றம்!

    - 0 comments
    மதுரை மாநகராட்சி கவுன்சிலர் வேட்பாளர்கள் மற்றும் பேரூராட்சி தலைவர் வேட்பாளர்களை மாற்றம் செய்து தி.மு.. அறிவித்துள்ளது.
     
    இது குறித்து தி.மு.. தலைமை கழகம் வெளியிட்ட அறிவிப்பில், மதுரை மாநகராட்சி 5 வது வார்டுக்கு முரளி கணேசுக்கு பதில், டி.ஆர்.ரவீந்திரன் போட்டியிடுவார்.
     
    அதே போல மதுரை 34 வது வார்டுக்கு நாகலட்சுமிக்கு பதிலாக புஷ்பம் போட்டியிடுவார்.
     
    மேலும், 90 வது வார்டுடில் சித்ராவுக்கு பதிலாக .ஜி.சிவக்குமாரும், 91 வது வார்டில் எஸ்.கண்ணனுக்கு பதிலாக எம்.கண்ணன் ஆகியோர் வேட்பாளராக மாற்றப்பட்டுள்ளனர்.
     
    மதுரை புறநகர் மாவட்டம் டி.கல்லுப்பட்டி பேரூராட்சி தலைவர் வேட்பாளராக அறிவிக்கப்பட்ட கண்ணனுக்கு பதிலாக பீம்ராஜ் மாற்றப்பட்டுள்ளார் என்று கூறப்பட்டுள்ளது.
     
    வழக்கமாக வேட்பாளர்களை அதிமுக தான் நினைத்தபோதெல்லாம் மாற்றும். இப்போது அந்த நோய் திமுகவையும் தாக்கியுள்ளதாகத் தெரிகிறது.
     
    மதுரை, வேட்பாளர்கள், மாற்றம், தி.மு.., அறிவிப்பு.

     


    [Continue reading...]

    கட்சி, ஆட்சி, கரு��ாநிதி

    - 0 comments


    க – 22 திமுகவின் புதிய பொதுச்செயலாளர் தேர்தல் 27 ஜூலை 1969 அன்று நடத்தப்படும் என்ற அறிவிப்பு வெளியானது. அதற்குச் சில மாதங்களுக்கு முன்னரே பொதுச்செயலாளர் பதவிக்குப் போட்டியிட இருப்பதாக அறிவித்திருந்தார் நாவலர் நெடுஞ்செழியன். அமைச்சரவையில் இடம்பெறாததால் கட்சிப் பணியில் முழுமையாகச் செயல்பட அந்தப் பதவி அவசியம் என்றார் நெடுஞ்செழியன். முதலமைச்சர் கருணாநிதி கருத்து எதையும் சொல்லாவிட்டாலும் அவருக்கு ஆதரவான காய் நகர்த்தல்கள் பலமாக நடந்துகொண்டிருந்தன. கட்சியின் பொதுச்செயலாளராக கருணாநிதிதான் வரவேண்டும்; அதுவும் போட்டி எதுவும் [...]

    http://sex-story-indian.blogspot.com



  • http://sex-story-indian.blogspot.com

  • [Continue reading...]

    ஐன்ஸ்டைனின் கண்��ீர்த்துளி

    - 0 comments


    CERN, Neutrino, OPERA, Einstein, Faster than Light, Special Theory of Relativity – கட‌ந்த இரு தினங்களாக‌ இந்த வார்த்தைகளை ஊடகங்கள் அனைத்தும் உச்சரிக்கின்றன; அச்சடிக்கின்றன‌. இவற்றில் சில ட்விட்டர் Worldwide Trending-ல் இடம் பெறுகின்றன. ஐன்ஸ்டைன் தோற்றுவிட்டார், காலாவதி ஆகிவிட்டார் என்கிறார்கள். இவற்றின் முக்கியத்துவம் என்ன? புதிதாக அப்படி என்னதான் கண்டுபிடித்திருக்கிறார்கள்? ஒவ்வொன்றாகப் பார்க்கலாம். வெற்றிடத்தில் ஒளியின் வேகம் என்பது துல்லியமாக விநாடிக்கு 29,97,92,458 மீட்டர். நாம் அறிந்த பிரபஞ்சத்தில் இதுதான் உச்ச [...]

    http://sex-story-indian.blogspot.com



  • http://sex-story-indian.blogspot.com

  • [Continue reading...]

    தேமுதிகவுடன் கூட்டணி-மார்க்சிஸ் கம்யூ. அறிவிப்பு

    - 0 comments
     
     
     
    தேமுதிக தலைவர் விஜயகாந்த்தை, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் ஜி.ராமகிருஷ்ணன் தலைமையிலான குழுவினர் இன்று மீண்டும் சந்தித்து ஆலோசனை நடத்தியதைத் தொடர்ந்து இரு கட்சிகளும் கூட்டணி வைத்து உள்ளாட்சித் தேர்தலை சந்திக்க முடிவு செய்துள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது.
     
    தமிழக அரசியல் வரலாற்றில் இதுவரை இல்லாத அளவு அதிமுக, திமுக, தேமுதிக, பாமக, காங்கிரஸ், விடுதலைச் சிறுத்தைகள், இடதுசாரிகள், புதிய தமிழகம் என அத்தனை கட்சிகளுமே தனியாக நிற்கும் நிலை ஏற்பட்டுள்ளது. பாஜக மட்டும் கொங்கு நாடு முன்னேற்றக் கழகத்துடன் கூட்டணி அமைத்துப் போட்டியிடுகிறது.
     
    நேற்று மாலை முதல் பேச்சு
     
    இந்த நிலையில் நேற்று மாலை திடீர் திருப்பம் ஏற்பட்டது. தமிழகத்தின் முக்கிய எதிர்க்கட்சியான தேமுதிகவுடன் கூட்டணி அமைப்பது குறித்து ஆலோசிக்கப்படும் என்று இடதுசாரி தலைவர்கள் திடீரென அறிவித்தனர். இதனால் புதிய அணி உருவாகும் சூழல் பிரகாசமாகியது.
     
    இதுதொடர்பாக தேமுதிக தலைவர் விஜயகாந்த்தை, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் ஜி.ராமகிருஷ்ணன் தலைமையிலான குழுவினர் நேரில் சந்தித்து ஒரு மணி நேரம் ஆலோசனை நடத்தினர்.
     
    இந்த சந்திப்பின்போது என்ன பேசப்பட்டது என்பது குறித்து ராமகிருஷ்ணனிடம் கேட்டபோது, கூட்டணி அமைப்பது குறித்து பேச்சு நடத்தினோம். திங்கள்கிழமை மீண்டும் பேசுவோம் என்றார்.
     
    இன்று காலை 2வது பேச்சு
     
    இந்த நிலையில் இன்று காலை தேமுதிக அலுவலகத்திற்கு சிபிஎம் குழுவினர் வந்தனர். 6 பேர் கொண்ட குழுவில் மாநிலச் செயலாளர் ஜி.ராமகிருஷ்ணன், டி.கே.ரங்கராஜன் ஆகியோரும் இடம் பெற்றிருந்தனர்.
     
    இந்தக் குழுவினர் தேமுதிக குழுவைச் சந்தித்து ஆலோசனைகளைத் தொடங்கினர். விஜயகாந்த், பண்ருட்டி ராமச்சந்திரன், சுதீஷ் உள்ளிட்டோர் தேமுதிக குழுவில் இடம் பெற்றிருந்தனர்.
     
    மாலையில் உடன்பாடு
     
    இன்று காலை நடந்த பேச்சுவார்த்தை விவரங்களை இரு கட்சியினரும் வெளியிடவில்லை. இந்த நிலையில் தேமுதிகவுடன் நடத்திய பேச்சுவார்த்தை குறித்து சிபிஎம் நிர்வாகிகள் கூடிப் பேசி ஆலோசனை நடத்தினர். இதில் உடன்பாடு ஏற்பட்டது.
     
    இதுகுறித்து மாலையில், ஜி.ராமகிருஷ்ணன் வெளியிட்டுள்ள அறிக்கை:
     
    இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்)யின் தமிழ்நாடு மாநிலக்குழுக் கூட்டம் சென்னையில் கட்சியின் மத்தியக்குழு உறுப்பினர் டி.கே.ரங்கராஜன் எம்.பி., தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் கட்சியின் மாநிலச் செயலாளர் ஜி.ராமகிருஷ்ணன், மத்தியக்குழு உறுப்பினர்கள் என்.வரதராஜன், உ.வாசுகி மற்றும் மாநில செயற்குழு, மாநிலக்குழு உறுப்பினர்கள் கலந்துகொண்டனர்.
     
    கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானம் வருமாறு:
     
    தமிழகத்தில் 2011 ஏப்ரலில் நடைபெற்ற சட்டப்பேரவைத் தேர்தலில் அஇதிமுகவுடன் தொகுதி உடன்பாடு ஏற்படுத்தி மார்க்சிஸ்ட் கட்சி போட்டியிட்டது. தேர்தலில் அஇஅதிமுக அமோக வெற்றி பெற்று ஆட்சிப் பொறுப்பை ஏற்றது. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி 10 இடங்களில் வெற்றிபெற்று ஆக்கபூர்வமான எதிர்க்கட்சியாக செயல்பட்டு வருகிறது.
     
    தற்போது நடைபெற உள்ள உள்ளாட்சிமன்றத் தேர்தலில் அஇஅதிமுகவுடன் தொகுதி உடன்பாடு ஏற்படுத்தி போட்டியிடுவது என்று கட்சியின் மாநிலக்குழு முடிவு செய்த அடிப்படையில் அஇஅதிமுக தலைமையுடன் உள்ளாட்சி மன்ற தேர்தலுக்கான தொகுதி பங்கீட்டு பேச்சுவார்த்தையை நடத்தியது.
     
    பேச்சுவார்த்தை நடைபெற்றுக்கொண்டிருக்கும் போதே அஇஅதிமுக தலைமை தன்னிச்சையாக வேட்பாளர் பட்டியலை அறிவித்தது. அஇஅதிமுகவின் தன்னிச்சையான வேட்பாளர் பட்டியல் அறிவிப்பிற்கு மார்க்சிஸ்ட் கட்சி தனது ஆட்சேபணையை தெரிவித்து அஇஅதிமுக தலைமைக்கு கடிதம் அனுப்பியதோடு தொலைபேசியிலும் ஆட்சேபனையை தெரிவித்தது.
     
    மார்க்சிஸ்ட் கட்சியின் ஆட்சேபனையை அதிமுக சிறிதும் கருத்தில் கொள்ளாமல் தங்கள் கட்சியின் வேட்பாளர்கள் பட்டியலை தொடர்ந்து தன்னிச்சையாக அறிவித்துக் கொண்டே இருந்தது. பேச்சுவார்த்தை தர்மம் குறித்து அதிமுக தலைமை கவலைப்படவில்லை.
     
    எனினும் உடன்பாடு காண மார்க்சிஸ்ட் கட்சி பேச்சுவார்த்தையை தொடர்ந்தது. ஆனால் அஇஅதிமுக தலைமை மார்க்சிஸ்ட் கட்சியின் பலத்திற்கு ஏற்ப இடங்களை ஒதுக்கீடு செய்ய முன்வரவில்லை. 2006 ஆம் ஆண்டு உள்ளாட்சித் தேர்தலில் மார்க்சிஸ்ட் கட்சி வெற்றி பெற்ற இடங்களைக் கூட ஒதுக்கீடு செய்ய அஇஅதிமுக தலைமை மறுத்தது. இந்த அணுகுமுறை மார்க்சிஸ்ட் கட்சியுடன் பொருத்தமான உடன்பாட்டிற்கு வர அஇஅதிமுக தலைமை தயாரில்லை என்பதையே உணர்த்தியது.
     
    இந்நிலையில் மார்க்சிஸ்ட் கட்சி நடைபெற்றவுள்ள உள்ளாட்சித் தேர்தலை இடதுசாரி மற்றும் இதர ஜனநாயக கட்சிகளோடு இணைந்து சந்திப்பது என தீர்மானித்தது. இதனடிப்படையில் தேமுதிகவுடன் உடன்பாடு காண்பதென கட்சியின் மாநிலக்குழு முடிவெடுத்துள்ளது.
     
    மேலும் காங்கிரஸ், பாஜக, திமுக, அதிமுக அல்லாத இடதுசாரி மற்றும் ஜனநாயக சக்திகளையும் தேமுதிக மார்க்சிஸ்ட் கட்சி அணியில் இணைப்பதற்கு சாத்தியமான அனைத்து முயற்சிகளை மேற்கொள்வதெனவும் கட்சியின் மாநிலக்குழு தீர்மானித்துள்ளது என்று அவர் தெரிவித்துள்ளார்.
     
    தற்காலிக பிரிவு?
     
    கடந்த சட்டசபைத் தேர்தலின்போதும் ஜெயலலிதா முரண்டு பிடித்து வந்த நிலையில் விஜயகாந்த்தை சந்தித்து புதிய கூட்டணி குறித்து இந்தத் தலைவர்கள் பேசினர். இதன் பின்னரே ஜெயலலிதா இறங்கி வந்தார் என்பது நினைவிருக்கலாம்.
     
    ஆனால் இந்த முறை எதற்காகவும் இறங்கி வருவதாக இல்லை ஜெயலலிதா. எனவேதான் வேறு வழியில்லாமல் தேமுதிகவுடன் கூட்டணிக்கு தீர்மானித்துள்ளது சிபிஎம்.
     
    இந்தக் கூட்டணியில் வேறு எந்தக் கட்சியாவது சேருமா என்பது தெரியவில்லை. ஆனால் சேரும் வாய்ப்புகளை மறுப்பதற்கில்லை என்று கூறப்படுகிறது.
     
    அதேசமயம், ஏதாவது கிடைக்கும் என்ற நம்பிக்கையில், இன்னும் அதிமுகவின் வாசற்படியிலேயே சிபிஐ தவம் இருந்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.



    [Continue reading...]

    ராஜினாமா செய்கிறேன்-சோனியாவிடம் ப.சிதம்பரம் விருப்பம்

    - 0 comments
     
     
     
    2ஜி விவகாரத்தில் சக அமைச்ராலேயே விமர்சனத்துக்குள்ளாகியுள்ள உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம் இன்று காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியை நேரில் சந்தித்துப் பேசினார். அப்போது தான் பதவியிலிருந்து விலக விரும்புவதாக தெரிவித்தார். அவரை பொறுமையுடன் இருக்குமாறு சோனியா வேண்டி கேட்டுக் கொண்டதாக தெரிகிறது.
     
    தான் பதவி விலக விரும்புவதாக பிரதமர் மன்மோகன் சிங்கிடமும் ப.சிதம்பரம் தெரிவித்துள்ளதாக கூறப்படுகிறது. இதனால் டெல்லி அரசியல் வட்டாரம் பரபரப்படைந்துள்ளது.
     
    2ஜி விவகாரத்தில் நடந்த முறைகேடுகளைத் தடுக்கத் தவறி விட்டார் அப்போது நிதியமைச்சராக இருந்த ப.சிதம்பரம் என்று மத்திய நிதியமைச்சகம் பிரதமர் அலுவலகத்திற்கு அறிக்கை அனுப்பியிருந்தது. பிரணாப் முகர்ஜியின் ஒப்புதலுக்குப் பின்னரே இது அனுப்பப்பட்டது. இதனால் அதிர்ச்சி அடைந்தார் ப.சிதம்பரம்.
     
    இதையடுத்து அமெரிக்கா சென்றிருந்த பிரதமர் மன்மோகன் சிங் அவசரம் அவசரமாக ப.சிதம்பரத்தை தொலைபேசியில் தொடர்பு கொண்டு சமரசம் பேசினார். தனது ஆதரவையும் அவருக்குத் தெரிவித்தார். அதேபோல பிரணாப் முகர்ஜியும் ப.சிதம்பரத்தைத் தொடர்பு கொண்டு பேசினார். காங்கிரஸ் தலைவர் சோனியாவும், ப.சிதம்பரத்திற்குத் தனது ஆதரவைத் தெரிவித்தார்.
     
    இந்தநிலையில் 2ஜி ஊழல் தொடர்பாக ப.சிதம்பரத்திற்கு எல்லாமே தெரியும் என்று புது குண்டைத் தூக்கிப் போட்டார். இதனால் மேலும் சலசலப்பு அதிகரித்தது. இந்த நிலையில் இன்று மாலை காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியை திடீரென சந்தித்தார் ப.சிதம்பரம்.அப்போது தான் பதவி விலக விரும்புவதாக அவரிடம் தெரிவித்ததாக கூறப்படுகிறது. இதைக் கேட்டு சோனியா காந்தி அதிர்ச்சி அடைந்ததாக தகவல்கள் கூறுகின்றன.
     
    ப.சிதம்பரத்தை சமாதானப்படுத்திய அவர் இதுகுறித்து எந்த முடிவையும் நீங்கள் எடுக்க வேண்டாம், பொறுமையாக இருங்கள் என்று கேட்டுக் கொண்டதாக கூறப்படுகிறது.
     
    இந்த நிலையில் பிரதமரையும் தொடர்பு கொண்டு தனது விலகல் விருப்பத்தை ப.சிதம்பரம் தெரிவித்துள்ளதாக தெரிகிறது.
     
    இதற்கிடையே, தன்னை வந்து சந்திக்குமாறு பிரணாப் முகர்ஜிக்கு சோனியா காந்தி அழைப்பு விடுத்துள்ளதாக கூறப்படுகிறது. பிரதமர் மன்மோகன் சிங்கை சந்திப்பதற்காக நியூயார்க் போயிருந்த பிரணாப் முகர்ஜி இன்று நாடு திரும்பினார். இன்னும் சற்று நேரத்தில் அவர் சோனியா காந்தியை சந்திக்கவுள்ளார்.




    [Continue reading...]

    சமரச பேச்சுவார்த்தையை ரகசிய கேமராவால் படம்பிடித்த சோனா!

    - 0 comments
     
     
     
    தயாரிப்பாளர் எஸ்பிபி சரண் தன்னை பாலியல் பலாத்காரம் செய்ததாக போலீசில் புகார் கொடுத்த சோனா, அந்தப் பிரச்சினையில் தன்னை சமரசம் செய்ய வெங்கட் பிரபு உள்ளிட்டோர் நடத்திய பேச்சுவார்த்தையை வீடியோவில் பதிவு செய்து போலீசில் கொடுத்துள்ளார்.
     
    அஜீத்குமார் நடித்த மங்காத்தா படத்தின் வெற்றிக்காக தி.நகரில் உள்ள நடிகர் வைபவின் வீட்டில் மது விருந்து நடை பெற்றது. இதில் நடிகை சோனா, இயக்குநர் வெங்கட் பிரபு, நடிகர்கள் பிரேம்ஜி, வைபவ், பின்னணி பாடகரும் தயாரிப்பாளருமான எஸ்.பி.பி. சரண் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.
     
    இந்த மது விருந்தின் போது, எஸ்.பி.பி. சரண், தன்னிடம் தவறாக நடந்து கொண்டதாகவும், பலாத்காரம் செய்ய முயன்றதாகவும் நடிகை சோனா பரபரப்பான குற்றச்சாட்டுகளை தெரிவித்தார்.
     
    இது தொடர்பாக பாண்டிபஜார் போலீசில் புகார் அளித்த அவர், 2 முறை போலீஸ் கமிஷனர் அலுவலகத்திலும் முறையிட்டார். எஸ்.பி.பி. சரண் தன்னிடம் தவறாக நடந்து கொண்டதற்கான வீடியோ ஆதாரத்தையும் கமிஷனர் திரிபாதியிடம் சோனா ஒப்படைத்தார்.
     
    இந்நிலையில் நேற்று இரவு 9 மணி அளவில் நடிகை சோனா, பாண்டி பஜார் போலீஸ் நிலையத்துக்கு திடீரென சென்றார். எஸ்.பி.பி. சரணுக்கு எதிரான வீடியோ ஆதாரத்தை இன்ஸ் பெக்டர் அழகுவிடம் அவர் ஒப்படைத்தார். வீடியோ ஆதாரம் தொடர்பாக சுமார் 30 நிமிடத்துக்குமேல் அவரிடம் விசாரணை நடத்தப்பட்டது. அப்போது எங்கு வைத்து அந்த வீடியோ பதிவு செய்யப்பட்டது என்பது பற்றிய விவரத்தை சோனா போலீசாரிடம் விளக்கி கூறினார்.
     
    சோனா கொடுத்த வீடியோ ஆதாரத்தை போலீசார் போட்டு பார்த்தனர். அதில் சோனாவுடன் சமாதான பேச்சு வார்த்தை நடப்பது போன்ற காட்சிகள் பதிவாகி இருந்தன.
     
    இந்த வீடியோ ஆதாரத்தால்இயக்குநர் வெங்கட் பிரபு சோனாவிடம், சரணை மன்னித்து சமரசடமாக போகும்படி கூறுவது போன்ற காட்சிகளும் இருப்பதாக கூறப்படுகிறது. பேச்சு வார்த்தை நடைபெற்ற இடத்தில் யாருக்கும் தெரியாமல் கேமராவை பொறுத்தி இந்த காட்சிகளை சோனா பதிவு செய்துள்ளார். இதனை அவர் போலீசிலும் தெரிவித்துள்ளார்.
     
    இந்த வீடியோ ஆதாரத்தை வைத்து எஸ்.பி.பி. சரண், வெங்கட் பிரபு ஆகியோரிடமும் விசாரிக்க போலீசார் திட்ட மிட்டுள்ளனர்.



    [Continue reading...]

    ப.சிதம்பரம் குறித்த கடிதம் வெளியாக பிரதமர் அலுவலகமே காரணம்- பிரணாப் குற்றச்சாட்டு

    - 0 comments
     
     
    2ஜி விவகாரத்தில் உள்துறை அமைச்சர் ப.சிதம்பரத்தைக் குறை கூறி நிதியமைச்சகத்திலிருந்து எழுதப்பட்ட கடிதம் வெளியாக பிரதமர் அலுவலகமே காரணம் என நிதியமைச்சர் பிரணாப் முகர்ஜி குற்றம் சாட்டியுள்ளதாகத் தெரிகிறது.
     
    2ஜி ஊழலைத் தடுக்கத் தவறி விட்டார் அப்போதைய நிதியமைச்சர் ப. சிதம்பரம் என்று மத்திய நிதியமைச்சகம் பிரதமருக்கு கடிதம் ஒன்றை அனுப்பியது. அதில் 2ஜி ஸ்பெக்ட்ரம் விற்பனை விவகாரத்தில் நாட்டுக்கு நஷ்டம் ஏற்படுவதைத் தடுக்க நிதியமைச்சராக இருந்த ப.சிதம்பரம் உரிய நடவடிக்கைகளை எடுக்கவில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்த கடிதம் பிரணாப் முகர்ஜியின் ஒப்புதலுக்குப் பிறகு தான் பிரதமர் அலுவலகத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டது.
     
    இதையடுத்து ப.சிதம்பரம் ராஜினாமா செய்ய வேண்டும் என எதிர்க்கட்சிகள் வலியுறுத்தி வருகின்றன. ஆனால், சிதம்பரத்தின் நேர்மையில் தனக்கு துளி கூட சந்தேமில்லை என்று கூறிவிட்ட பிரதமர் மன்மோகன் சிங், அவரை விட்டுக் கொடுக்க மாட்டேன் என்று கூறிவிட்டார்.
     
    இந்த விவகாரத்தில் பிரணாப் முகர்ஜி மீது காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியும் ப.சிதம்பரமும் கடுப்பில் உள்ள நிலையில், நேற்று அமெரிக்காவில் இருந்தபடி ப.சிதம்பரத்துடன் தொலைபேசியில் பேசினார் பிரணாப்.
     
    அப்போது தனது கடிதம் குறித்து அவர் விளக்கம் அளித்ததாகத் தெரிகிறது. மேலும் பிரதமரையும் பிரணாப் முகர்ஜி சந்தித்தார்.
     
    அப்போது, இந்தக் கடிதம் வெளியே லீக் ஆனதற்கு நான் காரணமல்ல, அதை பிரதமர் அலுவலகம்தான் வெளியிட்டுள்ளது. நிதி அமைச்சகம் வெளியிடவில்லை என்று பிரணாப் கூறியதாகத் தெரிகிறது.
     
    இந் நிலையில் இன்று நாடு திரும்பும் பிரணாப் சோனியாவையும் நேரில் சந்தித்து விளக்கம் தரவுள்ளார்.



    [Continue reading...]

    மீண்டும் ரூ 20000க்கு கீழே சரிந்த தங்கம் விலை... ஒரே நாளில் ரூ 656 குறைந்தது!

    - 0 comments
     
     
     
    தங்கத்தின் விலையில் தொடர்ந்து இரண்டாவது நாளாக சரிவுக்குள்ளானது.
     
    கடந்த சனிக்கிழமை சவரனுக்கு ரூ 688 குறைந்த நிலையில், இன்று மீண்டு ரூ 656 குறைந்து நகைப் பிரியர்கள் மனதில் தற்காலிக மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
     
    கடந்த சில தினங்களுக்கு முன் தங்கத்தின் விலை ஒரு சவரன் ரூ.22 ஆயிரத்தை நெருங்கியது. இந்த நிலையில், இந்திய ரூபாய்க்கு நிகரான அமெரிக்க டாலரின் மதிப்பு உயர்ந்ததை தொடர்ந்து சமீப காலமாக தங்கம் விலை குறைந்து வருகிறது. கடந்த வெள்ளிக்கிழமை ஒரு சவரன் ரூ.20 ஆயிரத்து 920-க்கு விற்றது.
     
    அதை தொடர்ந்து மறுநாள் (சனிக்கிழமை) ஒரே நாளில் பவுனுக்கு ரூ.688 குறைந்து ரூ.20 ஆயிரத்து 232 ஆக இருந்தது.
     
    நேற்று ஞாயிற்றுக்கிழமை என்பதால் தங்க மாற்று சந்தைக்கு விடுமுறையாகும். இந்த நிலையில் இன்று சவரனுக்கு மேலும் ரூ.656 குறைந்தது. ஒரு பவுன் ரூ.19 ஆயிரத்து 576 ஆக விற்பனையாகிறது.
     
    ஒரு கிராம் ரூ.2447 ஆக உள்ளது. கடந்த 2 நாளில் மட்டும் தங்கம் விலை பவுனுக்கு ரூ.1344 குறைந்துள்ளது. இது மக்களை மகிழ்ச்சி அடையச் செய்துள்ளது. இந்த நிலை தொடரும் என்றும், விரைவில் ரூ 18000 ஆக சவரன் விலை குறையும் வாய்ப்புள்ளதாகக் கூறப்படுகிறது.
     
    தங்கம் விலையை தொடர்ந்து வெள்ளியும் விலை குறைந்துள்ளது. இன்று ஒரு கிலோ ரூ.49 ஆயிரத்து 995 ஆகவும், ஒரு கிராம் ரூ.53.50 ஆகவும் உள்ளது.



    [Continue reading...]

    நடந்தது என்ன?: 'எல்லாம் ப.சிதம்பரத்துக்கும் தெரியும்'.. ராசா 'பகீர்'!

    - 0 comments
     
     
    2ஜி ஸ்பெக்ட்ரம் விவகாரத்தில் எடுக்கப்பட்ட எல்லா முடிவுகளும் அப்போதைய நிதியமைச்சரும் இப்போதைய உள்துறை அமைச்சருமான ப.சிதம்பரத்துக்கும் தெரியும் என்று சிபிஐ நீதிமன்றத்தில் முன்னாள் தொலைத் தொடர்புத்துறை அமைச்சர் ராசாவின் வழக்கறிஞர் குற்றம் சாட்டினார்.
     
    அதே நேரத்தில், சிதம்பரத்தை குற்றவாளியாக்க முயவில்லை என்றும், அவருக்கும் எல்லாமும் தெரியும் என்று மட்டுமே கூறுவதாகவும் ராசாவின் வழக்கறிஞர் கூறினார்.
     
    இன்று இந்த வழக்கு விசாரணை நடந்தபோது பேசிய ராசாவின் வழக்கறிஞர் சுஷில் குமார், ஸ்பெக்ட்ரம் விற்பனையில் அப்போதைய நிதியமைச்சர் சிதம்பரத்துக்கும் ராசாவுக்கும் எந்த கருத்து வேறுபாடும் இருக்கவில்லை. மேலும் ஸ்பெக்ட்ரம் விற்பனை என்பது மத்திய அமைச்சரவை ஒட்டுமொத்தமாக எடுத்த முடிவு. இந்த விஷயத்தில் ராசா குற்றவாளி என்றால் ஒட்டுமொத்த அமைச்சரவையையும் குற்றவாளிக் கூண்டில் நிறுத்த வேண்டும்.
     
    2003ம் ஆண்டு மத்திய அமைச்சரவை எடுத்த முடிவு தான், அடுத்தடுத்து வந்த அரசுகள், அடுத்தடுத்து நடந்த அமைச்சரவைக் கூட்டங்களில் வழி மொழியப்பட்டது. உண்மை இப்படியிருக்க ராசா மட்டும் எப்படி குற்றவாளியாக்கப்பட்டார்?.
     
    இதனால் பிரிவு 311ன் கீழ் அமைச்சர் ப.சிதம்பரத்தையும் அழைத்து விசாரியுங்கள். பிரதமரின் முன்னிலையில் அவர் ராசாவுக்கு அட்வைஸ் தந்தாரா இல்லையா என்பதைத் தெரிவிக்கட்டும். அதன் பின்னர் தேவைப்பட்டால் பிரதமரையும் அழைத்து விசாரியுங்கள்.
     
    அதே போல டிராய் விதிமுறைகளை ராசா மீறிவிட்டதாக எதிர்க் கட்சிகள் கூறுகின்றன. அப்படி அவர் விதிமுறையை மீறியதை நிரூபிக்க எதிர்க் கட்சிகள் ஏதாவது ஆதாரங்களை தாக்கல் செய்யத் தயாரா? என்றார் ராசாவின் வழக்கறிஞர் குமார்.
     
    சிதம்பரத்துக்கு எதிரான சுவாமியின் மனு ஒத்திவைப்பு:
     
    இந் நிலையில் 2ஜி ஸ்பெக்ட்ரம் ஊழல் வழக்கில் உள்துறை அமைச்சர் ப.சிதம்பரத்தையும் சேர்க்கக் கோரி ஜனதா கட்சித் தலைவர் சுப்பிரமணிய சாமி தாக்கல் செய்த மனுவை டெல்லி பாட்டியாலா சிபிஐ சிறப்பு நீதிமன்றம் 3 வாரங்களுக்கு ஒத்தி வைத்துள்ளது.
     
    2ஜி வழக்கில் முன்னாள் நிதியமைச்சர் சிதம்பரத்துக்கும் தொடர்புள்ளதாகவும், அவரை இந்த வழக்கில் சிபிஐ குற்றவாளியாகச் சேர்க்க வேண்டும் என்றும் கோரி சாமி மனுத் தாக்கல் செய்துள்ளார்.
     
    இந்த மனுவை விசாரித்த நீதிபதி, இதுகுறித்து அக்டோபர் 12ம் தேதி தீர்மானிக்கப்படும் என்று அறிவித்தார்.



    [Continue reading...]

    My Blog List

    Popular Posts

    Popular Posts

     
    Copyright © . தினசரி செய்திகள் - Posts · Comments
    Theme Template by BTDesigner · Powered by Blogger