சுதந்திர தமிழீழத்தை முன்னிறுத்தி நியூ யோர்க் ஐ.நா தலைமையகத்திற்கு முன்னால் வட அமெரிக்க தமிழர்களின் பொங்குதமிழ் எழுச்சி நிகழ்வு சிறப்பாக இடம்பெற்றது.
வெள்ளிக்கிழமை, ஐ.நாவின் வருடாந்த கூட்டத்தில் சிறிலங்கா அரசுத் தலைவர் மகிந்த ராஜபக்சவின் உரையாற்றிய வேளை, பொங்குதமிழர்காக எழுச்சிபூண்ட தமிழர்கள், மகிந்த ராஜபக்சவின் தமிழின அழிப்பு முகத்தை கொட்டொலிகளாலும், பதாதைகளாலும் அம்பலப்படுத்தினர்.
ஈழவிடுதலைப் போராட்டத்தில், மக்கள் எழுச்சியின் குறியீடாக உள்ள பொங்குதமிழ் பெருநிகழ்வினை நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் ஏற்பாடு செய்திருந்தது.
கொட்டு மழைக்கு மத்தியில் இடம்பெற்ற பொங்குதமிழ் மக்கள் எழுச்சி நிகழ்வில் அமெரிக்க தமிழர்களுடன் பெருந்திரளான கனடிய தமிழ் உறவுகளும் இணைந்து கொண்டனர்.
தமிழீழ தேசிய அரசாங்கத்தின் இந்த ஏற்பாட்டுக்கு வட அமெரிக்க தமிழ் அமைப்புக்கள் பலவும் உறுதுணை வழங்கியிருந்தன.
பிரதமர் விசுவநாதன் ருத்திரகுமாரன் அவர்கள் பொங்குதமிழ் சிறப்புரையினை வழங்கினார்.
பிரதமர் விசுவநாதன் உருத்திரகுமாரன் அவர்களின் பொங்குதமிழ் சிறப்புரையில், ஈழத்தமிழ் மக்களது அரசியல் அபிலாசையாவும், உலகத் தமிழர்களின் விருப்பாகவும் உள்ள தமிழீழத்தை வென்றெடுக்கும் வரை எமது விடுதலைப் போராட்டம் ஒயாதென முழக்கமிட்டார்.
சிங்கள அரசினது தமிழின அழிப்பின் சட்டபூர்வ சாட்சியமாக விளங்குகின்ற், ஐ நா நிபுணர் குழுவின் அறிக்கையை மக்கள் மயப்படுத்தியதன் அவசியத்தையும், அதன் பிரகாரம் நா.த.அரசாங்கத்தினால் முன்னெடுக்கப்பட்ட கையெழுத்துப் போராட்டம் பல லட்சம் உலகத் தமிழர்களின் ஈழவிடுதலைக்கான கையொப்ப போராட்டமாக முன்னெடுக்கப்பட்டுள்ளது என தனதுரையில் பிரதமர் அவர்கள் தெரிவித்தார்.
சர்வதேச சட்டவழிமுறைகளுடாக ஈழவிடுதலைப் போராட்டத்தின் நியாப்பாடுகளை உலக அரங்கில் முன்னிறுத்தி, விடுதலைப் வென்றெடுப்பதற்குரிய செய்பாடுகளை நா.த.அரசாங்கம் தொடர்ந்தும் முன்னெடுக்கும் என தெரிவித்தார்.
பொங்குதமிழர் நிகழ்வின் ஒருங்கிணைப்பாளர் பிரதி பிரதமர் கலாநிதி.ராம் சிவலிங்கம் அவர்கள் தனதுரையில், தமிழர்கள் மீது சிறிலங்கா பேரினவாத அரசு நடாத்திய இனப்படுகொலைக்கு, சர்வதேச சக்திகளும் துணைபோயிருந்தன.
இந்நிலையில், தமிழர்களின் இனபடுகொலைக்கு பரிகாரமாக், தமிழர் தரப்பு நியாயங்களை ஏற்றுக் கொண்டு, அவர்களது உரிமை போராட்டத்தை, இந்த சர்வதேச சக்திகள் அங்கீகரிக்க வேண்டுமென கேட்டுக்கொண்டார்.
கனடா நாட்டின் மார்க்கம் நகர கவுன்சிலர் லோகன் கணபதி அவர்கள் தனதுரையில், ஆப்ரகாம் லின்கனின் துணிவுமிக்க செயலால், சட்டமூலமாக அடிமைத்தனத்தை அகற்றிய அமெரிக்க தேசம், இராணுவ அடக்குமுறைக்குள் அடிமைகளாக தமிழர்களை நலனை கவனத்தில் கொண்டு, இன அழிப்பு, போர்குற்றங்கள், மானிடத்துக்கு எதிரான குற்றங்களை புரிந்த ராஜபக்சாவையும், உடந்தையாகச் செயற்பட்ட மற்றைய குற்றவாளிகளையும், அமெரிக்க மண்ணுக்குள் ஒபமா அரசு அனுமதிகக் கூடாது என கேட்டுக் கொண்டார்.
ஊடகத்துறை அமைச்சர் சாம் சங்கரசிவம் அவர்களினால் தொகுத்து வழங்கப்பட்ட பொங்குதமிழ் மக்கள் எழுச்சி நிகழ்வின் 'பொங்குதமிழ பிரகடனத்தை' பிரதமர் வி.ருத்திரகுமாரன் அவர்கள் முழக்கமிட்டார்.
http://naamnanbargal.blogspot.com
http://naamnanbargal.blogspot.com
0 comments:
Post a Comment
உங்களது கமெண்ட் என்ன ?