மதுரை மாநகராட்சி கவுன்சிலர் வேட்பாளர்கள் மற்றும் பேரூராட்சி தலைவர் வேட்பாளர்களை மாற்றம் செய்து தி.மு.க. அறிவித்துள்ளது.
இது குறித்து தி.மு.க. தலைமை கழகம் வெளியிட்ட அறிவிப்பில், மதுரை மாநகராட்சி 5 வது வார்டுக்கு முரளி கணேசுக்கு பதில், டி.ஆர்.ரவீந்திரன் போட்டியிடுவார்.
அதே போல மதுரை 34 வது வார்டுக்கு நாகலட்சுமிக்கு பதிலாக புஷ்பம் போட்டியிடுவார்.
மேலும், 90 வது வார்டுடில் சித்ராவுக்கு பதிலாக ஏ.ஜி.சிவக்குமாரும், 91 வது வார்டில் எஸ்.கண்ணனுக்கு பதிலாக எம்.கண்ணன் ஆகியோர் வேட்பாளராக மாற்றப்பட்டுள்ளனர்.
மதுரை புறநகர் மாவட்டம் டி.கல்லுப்பட்டி பேரூராட்சி தலைவர் வேட்பாளராக அறிவிக்கப்பட்ட கண்ணனுக்கு பதிலாக பீம்ராஜ் மாற்றப்பட்டுள்ளார் என்று கூறப்பட்டுள்ளது.
வழக்கமாக வேட்பாளர்களை அதிமுக தான் நினைத்தபோதெல்லாம் மாற்றும். இப்போது அந்த நோய் திமுகவையும் தாக்கியுள்ளதாகத் தெரிகிறது.
மதுரை, வேட்பாளர்கள், மாற்றம், தி.மு.க., அறிவிப்பு.
0 comments:
Post a Comment
உங்களது கமெண்ட் என்ன ?