Tuesday, 2 July 2013

இந்திய அணி 161 ரன்கள் வித்தியாசத்தில் படுதோல்வி

- 2 comments
முத்தரப்பு தொடரின் லீக் போட்டியில் பேட்டிங்கில் சொதப்பிய இந்திய அணி, 161 ரன்கள் வித்தியாசத்தில் படுதோல்வியடைந்தது.
வெஸ்ட் இண்டீசில் முத்தரப்பு ஒருநாள் தொடர் நடக்கிறது. நேற்று நடந்த லீக் போட்டியில் இந்தியா, இலங்கை அணிகள் மோதின. இந்திய அணியில் கேப்டன் தோனி (தொடைப்பகுதி காயம்), புவனேஷ்வர் குமாருக்கு பதில் முரளி விஜய், ஷமி அகமது வாய்ப்பு பெற்றனர். "டாஸ்' வென்ற இந்திய கேப்டன் விராத் கோஹ்லி, "பவுலிங்' தேர்வு செய்தார்.
அசத்தல் துவக்கம்:
இலங்கை அணிக்கு அனுபவ ஜெயவர்தனா, தரங்கா சேர்ந்து அசத்தல் துவக்கம் தந்தனர். இந்திய பந்துவீச்சை துவம்சம் செய்த இவர்கள், அதிவிரைவாக ரன் சேர்த்தனர். இஷாந்த் ஓவரில் வரிசையாக ஒரு சிக்சர், பவுண்டரி அடித்த ஜெயவர்தனா, ஒருநாள் அரங்கில் தனது 16வது சதம் எட்டினார். பின் அஷ்வின் பந்தில் ஒரு சிக்சர் அடித்த ஜெயவர்தனா, அடுத்த பந்தில் 107 ரன்களுக்கு(9 பவுண்டரி, 2 சிக்சர்) அவுட்டானார். தனது அபார ஆட்டத்தை தொடர்ந்த தரங்காவும் சதம் கடந்தார்.
அதிரடி ஆட்டம்:
கடைசி கட்டத்தில் அதிரடி காட்டிய தரங்கா, ஷமி அகமது ஓவரில் 3 பவுண்டரி விளாசினார். மறுபக்கம் கேப்டன் மாத்யூஸ் தன் பங்கிற்கு ரவிந்திர ஜடேஜா ஓவரில் 2 சிக்சர் அடிக்க, ஸ்கோர் "ஜெட்' வேகத்தில் உயர்ந்தது. தொடர்ந்து உமேஷ் யாதவ், ஷமி அகமது பந்துகளை சிக்சருக்கு அனுப்பினார் தரங்கா. கடைசி 16 ஓவரில் 180 ரன்கள் எடுக்கப்பட்டன. இலங்கை அணி 50 ஓவரில் ஒரு விக்கெட்டுக்கு 348 ரன்கள் குவித்தது. தரங்கா(174 ரன், 19 பவுண்டரி, 3 சிக்சர்) மாத்யூஸ்(44 ரன், 4 பவுண்டரி, 1 சிக்சர்) அவுட்டாகாமல் இருந்தனர்.
சொதப்பல் துவக்கம்:
கடின இலக்கை துரத்திய இந்திய அணிக்கு ரோகித் சர்மா (5), ஷிகர் தவான் (24) ஜோடி சொதப்பல் துவக்கம் அளித்தது. பின் வந்த முரளி விஜய் (30) நிலைக்கவில்லை. கேப்டன் கோஹ்லி (2) நீண்ட நேரம் தாக்குப்பிடிக்கவில்லை. தினேஷ் கார்த்திக் (22), ரெய்னா (33) ஓரளவு கைகொடுத்தனர். பின் வந்த ஜடேஜாவுடன் இணைந்த அஷ்வின் (4), ஷமி அகமது (0), இஷாந்த் சர்மா(2), உமேஷ் யாதவ் (0) யாரும் ஒற்றை இலக்கை தாண்டவில்லை. இந்திய அணி 44.5 ஓவரில் இந்திய அணி 187 ரன்களுக்கு "ஆல் அவுட்டாகி' 161 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது.
இலங்கை அணி சார்பில் ஹெராத் 3 விக்கெட் சாய்த்தார். ஆட்டநாயகன் விருதை இலங்கையின் தரங்கா வென்றார். பங்கேற்ற இரண்டு லீக் போட்டியிலும் தோல்வியடைந்த  இந்திய அணி புள்ளிப்பட்டியலில் கடைசி இடத்தில் உள்ளது. எஞ்சியுள்ள இரண்டு லீக் போட்டியில் வெற்றி பெற்றாலும் இந்திய அணி பைனலுக்கு முன்னேறுவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.
-----
"பீல்டிங்' ஏமாற்றம்
இந்திய அணியின் பீல்டிங்கும் மோசமாக இருந்தது. ஜெயவர்தனா 25 ரன்கள் எடுத்த நிலையில் ஜடேஜா பந்தில் கொடுத்த சுலப "கேட்ச்சை' முரளி விஜய் கோட்டைவிட்டார். இதை பயன்படுத்திய இவர், சதம் அடித்தார். இதே போல தரங்கா 2 ரன் எடுத்த நிலையில், ரன் அவுட் வாய்ப்பை ரோகித் சர்மா தவறவிட்டார்.
[Continue reading...]

மாணவியை நண்பனின் வீட்டில் அடைத்து வைத்து கற்பழித்த காமுகன்

- 0 comments
7ம் வகுப்பு மாணவியை கடத்திச் சென்று 4
நாட்களாக நண்பனின் வீட்டில்
அடைத்து வைத்து கற்பழித்த
வாலிபனை டெல்லி போலீசார்
கைது செய்துள்ளனர்.
கிழக்கு டெல்லியில் உள்ள
கல்யாண்புரி பகுதியில் வசிக்கும் ஒருவர், 7ம்
வகுப்பில் படித்து வந்த தனது 16
வயது மகளை காணவில்லை என்று போலீசில்
புகார் அளித்தார்.
இதனையடுத்து, போலீசார் அப்பகுதியில்
உள்ளவர்களிடம் தீவிர விசாரணை நடத்தினர்.
மாணவியின் வீட்டின் அருகில் வசிக்கும் சந்தன்
(24) என்பவன் மீது தங்களுக்கு சந்தேகமாக
இருப்பதாக பெற்றோர் போலீசாரிடம்
தெரிவித்தனர்.
[Continue reading...]

இந்திய கிரிக்கெட் வீரர் அசோக்திண்டா திருமணம் ,சாப்ட்வர் என்ஜினியர் ருத்ரா என்ற பெண்ணை மணக்கிறார்

- 1 comments
இந்திய கிரிக்கெட் வீரர் அசோக்
திண்டா (வயது 29), கிரிக்கெட் ஆர்வலரும்,
சாப்ட்வேர் என்ஜினியருமான
ஸ்ரேயாசி ருத்ரா என்ற பெண்ணை திருமணம்
செய்ய உள்ளார். இவர்களது திருமணம்
கொல்கத்தாவின் புறநகரான சின்சுராவில்
வரும் 22-ம் தேதி நடைபெறுகிறது.
அதன்பின்னர் 24-ம் தேதி கொல்கத்தா கிளப்பில்
திருமண வரவேற்பு நிகழ்ச்சி நடைபெற
உள்ளது.
மேற்கு வங்கத்தைச் சேர்ந்த
திண்டா தனது திருமணம்
குறித்து கூறியதாவது:-
நான்கு ஆண்டுகளுக்கு முன் என் நண்பரின்
வீட்டு நிகழ்ச்சிக்கு வந்திருந்தபோது
ஸ்ரேயாசியை சந்தித்தேன். முதல்
பார்வையிலேயே எங்களுக்குள் காதல்
மலரவில்லை. பின்னர் சில ஆண்டுகள்
கழித்து மீண்டும் அவரை சந்தித்தேன்.
[Continue reading...]

My Blog List

Popular Posts

Popular Posts

 
Copyright © . தினசரி செய்திகள் - Posts · Comments
Theme Template by BTDesigner · Powered by Blogger