Tuesday, 2 July 2013

இந்திய கிரிக்கெட் வீரர் அசோக்திண்டா திருமணம் ,சாப்ட்வர் என்ஜினியர் ருத்ரா என்ற பெண்ணை மணக்கிறார்

இந்திய கிரிக்கெட் வீரர் அசோக்
திண்டா (வயது 29), கிரிக்கெட் ஆர்வலரும்,
சாப்ட்வேர் என்ஜினியருமான
ஸ்ரேயாசி ருத்ரா என்ற பெண்ணை திருமணம்
செய்ய உள்ளார். இவர்களது திருமணம்
கொல்கத்தாவின் புறநகரான சின்சுராவில்
வரும் 22-ம் தேதி நடைபெறுகிறது.
அதன்பின்னர் 24-ம் தேதி கொல்கத்தா கிளப்பில்
திருமண வரவேற்பு நிகழ்ச்சி நடைபெற
உள்ளது.
மேற்கு வங்கத்தைச் சேர்ந்த
திண்டா தனது திருமணம்
குறித்து கூறியதாவது:-
நான்கு ஆண்டுகளுக்கு முன் என் நண்பரின்
வீட்டு நிகழ்ச்சிக்கு வந்திருந்தபோது
ஸ்ரேயாசியை சந்தித்தேன். முதல்
பார்வையிலேயே எங்களுக்குள் காதல்
மலரவில்லை. பின்னர் சில ஆண்டுகள்
கழித்து மீண்டும் அவரை சந்தித்தேன்.

அப்போது அவரை எனக்கு பிடித்திருந்தது.
ஆனால் இருவரும் செல்போன்
எண்களை பரிமாறிக்கொள்ளவில்லை. 3-
வது முறையாக சந்தித்தபோதுதான்,
ஒரு நண்பர் மூலம் ஸ்ரேயாசியின்
நம்பரை வாங்கி அவருடன் பேசி பழக
ஆரம்பித்தேன். இதுவரை நான் சந்தித்த
பெண்களை விட ஸ்ரேயாசிக் மிகவும்
சாதுவான பெண். அவரை என் தாயாரிடம்
அழைத்துச் சென்று அறிமுகம்
செய்து வைத்தேன்.
அதன்பின்னர் என் உணர்வுகளை அவளிடம்
தெரிவித்தேன். முதலில் என்
காதலை ஏற்கவில்லை. அவர் ஏற்கும்
வரை நான்
தொடர்ந்து காதலை வெளிப்படுத்தினேன்.
ஐபிஎல் போட்டி நடைபெற்றுக்
கொண்டிருந்தபோது திருமணம் செய்துகொள்ள
முடிவு செய்தோம். ஜூலை மாதத்திற்குப்
பிறகு அதிக போட்டிகள் இருக்கும் என்பதால்
ஜூலை மாதம் தான் திருமணம் செய்ய சரியான
சமயம்.
இவ்வாறு அவர் கூறினார்.
இதுவரை 13 சர்வதேச ஒருநாள் போட்டிகள், 9
டி20 போட்டிகளில்
திண்டா விளையாடியுள்ளார். டெஸ்ட்
போட்டியில் இதுவரை விளையாடியதில்லை.
ஐ.பி.எல். தொடரில் கொல்கத்தா,
டெல்லி அணிகளில் இடம்பெற்றிருந்தார்.
தற்போது புனே அணியில் உள்ளார்.

1 comments:

உங்களது கமெண்ட் என்ன ?

My Blog List

Popular Posts

Popular Posts

 
Copyright © . தினசரி செய்திகள் - Posts · Comments
Theme Template by BTDesigner · Powered by Blogger