Thursday, 26 April 2012

நான் கை கால் ஊன்றி நடக்கிறதே பெரிய விஷயம் சார்! - அஜீத் 'ஓபன் டாக்'!

- 0 comments


என் நடிப்பு, முயற்சியைப் பாராட்ட மனமில்லாதவர்கள், என் தோற்றத்தையும் உடல் அமைப்பையும் கிண்டல் செய்கிறார்கள். 15 ஆபரேஷன்களுக்குப் பிறகு நான் நடப்பதே பெரிய விஷயம், என்� ��ிறார் அஜித் குமார்.

சமீபத்தில் அவர் ஆனந்த விகடனுக்கு அளித்த பேட்டியின் சில பகுதிகள்...

செல்ப் புரமோஷன் கிடையாது...

"நான் 'மங்காத்தா'வில் இருந்து என் படங்களை புரொமோட் பண்ணிப் பேசறது இல்லைனு முடிவு பண்ணிட்டேன். அது 'பில்லா-2'-வுக்கும் பொருந்தும். ஜூன் மாசம் படம் ரிலீஸ். இதுக்கு மேல் இப்போதைக்கு எதுவும் இல்லை!''

மனதை பாதித்த விமர்சனம்...
''படம் நல்லா இருக்கா, இல்லையானு சொல்லாம, சிலர் நான் குண்டா இருக்கேன்னு பெர்சனலா கமென்ட் அடிக்கிறாங்க. 15 ஆபரேஷன்களுக்குப் பிறகு என் மெட்டபாலிஸமே மாறிடுச்சு. நான் ரெண்டு காலையும் ஊன்றி நடக்கிறதே பெரிய விஷயம் சார். அதை நினைச்சு நான் சந்தோஷப்படுறேன்.

நான் நல்ல டான்ஸரா இல்லாம இருக்கலாம். ஆனா, அதுக்காக முயற்சி பண்றேன். இவ்வளவு சிகிச்சைகளுக்குப் பிறகும் ஹெலிகாப� ��டர்ல இருந்து குதிக்கிறேன்... சண்டை போடுறேன். ஆனா, தொடர்ந்து என் பெர்சனல் தோற்றத்தை சிலர் கிண்டல் செய்றது வருத்தமா இருக்கு!''

நெகடிவ் விமர்சனங்கள் குறித்து...

''என்கிட்டயே நிறையப் பேர் சொல்லியிருக்காங்க... பொறந்தா அஜீத்குமாராப் பொறக்கணும்னு. அஜீத்குமாருக்கு என்னல்லாம் கஷ்டம் இருக்குனு, அஜீத்குமாரா வாழ்ந்து பார்த்தால்தான் தெரியும். சச்சின் டெண்டுல்க� �் இப்படி ஆடணும்னு சொல்றது ரொம்ப ஈஸி. ஆனா, கோடிக்கணக்கான ரசிகர்களின் எதிர்பார்ப்புகளைச் சுமந்துக்கிட்டு விளையாடுற சச்சின் டெண்டுல்கருக்குத்தான் அது எவ்வளவு கஷ்டம்னு தெரியும்.

கம்ப்யூட்டர் முன்னாடி உட்கார்ந்துட்டு கருத்து சொல்றது ஈஸி. களத்துல இறங்கி நின்னாதான், அது எவ்வளவு கஷ்டம்னு புரியும். 30 வயசுல நம்மால எல்லாம் முடியும்னு தோணும். இப்போ 40 வயசுக்கு மேல நம� �மளை மீறி ஒரு சக்தி இருக்கு... அதுதான் எல்லாத்தையும் தீர்மானிக்கும்னு தோணுது. என்னை விமர்சிக்கிற எல்லாருக்கும் அந்தப் பக்குவம் கிடைக்கணும்னு நான் கடவுளை வேண்டிக்கிறேன்!''

ரசிகர்களுக்கு...

''இத்தனை ஆண்டுகளில் ரசிகர்கள் பலம் கூடிக் கொண்டே இருப்பது கடவுள் ஆசீர்வாதம்தான். என் ரசிகர்களுக்கு வெறும் நன்றி சொன்னால், அது முழுமையாகாது. உண்மையைச் சொல்றேன்... த� �னமும் காலையில் கடவுளை வேண்டும்போது என் ரசிகர்களுக்காகவும் வேண்டிக்கிறேன். நான் இன்னைக்கு சினிமாவில் இருப்பேன். நாளைக்கு இல்லாமலும் போவேன். ஆனா, ஒரு அண்ணனா என் ரசிகர்களுக்கு ஒரு வேண்டுகோள். அட்வைஸ்னு தப்பா நினைக்கா தீங்க. உங்க தன்மானத்தை யாருக்கா கவும் விட்டுக்கொடுக்காதீங்க.

உங்க வேலையை 100 சதவிகிதம் ரசிச்சு செய்யுங்க. நல்லாப் படிங்க. நான் பத்தாவது வரைக்கும� �தான் படிச்சேன். வாழ்க்கையில் கஷ்டப்பட்டுத்தான் பல விஷயங்களைக் கத்துக்கிட்டேன். ஆனா, அந்த ரூட் ரொம்பக் கஷ்டம். படிச்சிருந்தா இவ்வளவு அடிபட்டு வந்திருக்க வேண்டிய அவசியம் இருந்திருக்காதே. அதனால நல்லாப் படிங்க. யாரையும் கண்மூடித்தனமா நம்பாதீங்க. யார் பின்னாடியும் போகாதீங்க. மத்தவன் காலை மிதிச்சு முன்னேறாதீங்க. சிம்பிளா சொல்றேன்... வாழு... வாழவிடு!''

-இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

நன்றி தட்ஸ் தமிழ்


http://girls-stills.blogspot.com




[Continue reading...]

தளிர் ஹைக்கூ கவிதைகள்!

- 0 comments


சங்கீதத்தில்
சங்கேதம் பேசுகின்றன
இரவு பறவைகள்!

ஓசை சத்தத்தில்
உறங்கவில்லை இரவு
புல்லினங்கள்!

சலனப்பட்டு
வாழ்க்கை இழக்கிறது
நீர்!

மரங்களின் பின்னால்
மறைந்திருக்கின்றன
ஊர்கள்!

ஓசை எழுப்பினாலும்
சுகம்தான்!
காற்று!

காற்றில் காதல்தூது!
பூத்தன
மரங்கள்!


இச்சை கொண்டன
கண்கள்
பச்சையான பூமி!

மின்னியது
கூசவில்லை!
மின்மினி!

வெட்டியதும்
பாராட்டினார ்கள்!
குளம்!

துரத்திக்கொண்டே இருக்கிறது
தெரியவில்லை!
காலம்!

 
வெள்ளை தேவதை விஜயம்
பெ� ��ுமூச்சுவிட்டது பூமி
நிலா

கட்டிவைத்தார்கள்
மணத்தது!
கூந்தலில் பூ!

தங்கள் வருகைக்கு நன்றி கருத்துக்களை பகிர்ந்து செல்லலாமே!


http://girls-stills.blogspot.com




[Continue reading...]

முன்னாள் இராணுவத் தளபதி சரத் பொன்சேகாவுக்கு விதிக்கப்பட்ட மூன்று வருட சிறை தண்டனை காலம் நேற்றுடன் முடிவு!

- 0 comments


Friday, April, 27, 2012
இலங்கை::இரண்டாவது இராணுவ நீதிமன்றத்தால் முன்னாள் இராணுவத் தளபதி சரத் பொன்சேகாவுக்கு விதிக்கப்பட்ட மூன்று வருட சிறை தண்டனை காலம் நேற்றுடன் முடிவடைகிறது. இந்நிலையில் அவருக்கு பிணை வழங்கும� ��று கோரி உயர் நீதிமன்றத்தில் நேற்று மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது

எனினும் வௌ்ளைக்கொடி விவகாரம் தொடர்பாக மேல் நீதிமன்றம் அவருக்கு மூன்று வருட சிறைத் தண்டனையை விதித்துள்ளது.

இந்த சிறைத்தண்டனை தொடர்பாக பொன்சேகா சார்பில் உயர்நீதிமன்றத்தில் நேற்று தாக்கல் செய்யப்பட்ட பிணை மனுவில் பிரதிவாதியாக சட்டமா அதிபர் குறிப்பிடப்பட்டுள்ளார்.

கொழும்பு மேல் நீதி மன்றத்தில் மூவரடங்கிய நீதிபதிகள் குழு முன்னிலையில் நடைபெற்ற வழக்கு விசாரணையை அடுத்து ஒரு நீதிபதி அனைத்து குற்றச்சாட்டுக்களில் இருந்தும் விடுவித்து தாம் நிரபராதி என தீரப்பளித்ததாகவும் ஏனைய இரண்டு நீதிபதிகளும் அந்த குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் குற்றவாளியென தீர்ப்பளித்து மூன்று வருட சிறைத்தண்டனை விதித்ததாகவும் முன்னாள் இராணுவத் தளபதி தமது பிணை மனுவில் குற� ��ப்பிட்டுள்ளார்.

இந்த சிறைத் தண்டனைக்கு எதிராக உயர் நீதிமன்றத்தில் மூவரடங்கிய நீதியரசர்கள் குழாம் முன்னிலையில் மேற்முறையீடு தாக்கல் செய்யப்பட்டுள்ளதாகவும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த மேன்முறையீடு எதிர்வரும் புதன் கிழமை விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளதாக சுட்டிக்காட்டியுள்ள பொன்சேகா, அன்றைய தினம் தமது பிணை மனுவையும் பரிசீலனைக்கு எடுத்� ��ுக்கொள்ளுமாறு வேண்டுகோள் விடுத்துள்ளார்.


http://tamil-cininews.blogspot.com




[Continue reading...]

இராசதுரைக்கு - கறுப்புக்கொடி காட்டினார் (புலி கோமாளி) சிவாஜிலிங்கம்! தந்தை செல்வா முன்நிலையில் சண்டையிட்ட (புலி)கூட்டமைப்பு தலைவர்கள்!!

- 0 comments


Thursday, April, 26, 2012
http://www.youtube.com/watch?feature=player_embedded&v=NiF_BZJbHls

இலங்கை::இராசதுரைக்கு - கறுப்புக்கொடி காட்டினார் (புலி கோமாளி) சிவாஜிலிங்கம்! தந்� ��ை செல்வா முன்நிலையில் சண்டையிட்ட (புலி)கூட்டமைப்பு தலைவர்கள்!!

யாழ்ப்பாணத்தில் தந்தை செல்வாவின் நினைவு தினம் கூட்டத்தில் முன்னாள் அமைச்சர் செல்லையா இராஜதுரை உரையாற்றுவதற்கு ரெலோ அமைப்பின் அரசியல் பிரிவு தலைவரும் முன்னாள் (புலி)கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினருமான எம்.கே.சிவாஜிலிங்கம் கறுப்பு கொடிகாட்டி எதிர்புப் போராட்டத்தில் ஈடுபட்டார். யாழிலுள்ள தந்� ��ை செல்வநாயகத்தின் நினைவு சதுக்கத்தில் இந்த நினைவு தினம் இன்று வியாழக்கிழமை நடைபெற்றது. இதன்போதே முன்னாள் (புலி)கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர் சிவாஜிலிங்கம் எதிர்புப் போராட்டத்தில் ஈடுபட்டார்.

சிவாஜிலிங்கம் தனது கறுப்பு கொடி எதிர்ப்பின் போது, "தமிழ் தேசிய துரோகி இராஜதுரையை வெயேற்று எனவும் மட்டக்களப்பு துரோகி, அரசின் அடிவருடி, துரோகியை வெளியேற்ற வேண்டு� ��்" என போராட்டத்தில் ஈடுபட்டார்.

இதன்போது தந்தை செல்வாவின் நினைவஞ்சலிக் கூட்டத்தில் குழப்ப நிலை ஏற்பட்டது. இதனையடுத்து நினைவுக் கூட்டத்திலிருந்து வெளியேறிய முன்னாள் (புலி)கூட்டமைப்பு சிவாஜிலிங்கம் ஊடகவியலாளர்களிடம் கருத்து தெரிவிக்கும் போது,

முன்னாள் அமைச்சராக இருந்த இராஜதுரை தமிழர் விடுதலைக் கூட்டணியில் போட்டியிட்டு அரசில் இணைந்து அமைச்சரானவர். பி ன்னர் பயங்கரவாத தடைச் சட்டத்திற்கு ஆதரவளித்து தமிழ் இளைஞர்களை (புலிகளை) சிறையில் தள்ளியவர். இந்த புனிதமான மண்ணில் இவரை கால் வைக்க விடமாட்டேன்" என்றார்.

எவ்வாறாயினும், சற்று நேரத்திற்கு பின்னர் தந்தை செல்வநாயகத்தின் நினைவுக் கூட்டம் தொடர்ந்து நடைபெற்றது. இதில் செல்லையா இராஜதுரை உரையாற்றும் போது,

தந்தை செல்வா ஒரு அரசியல் பாடப்புத்தகம், அவர் தமிழ் மக்கள் ப� �ரிந்து வாழ்வதை விரும்பாத ஒருவர். வடக்கு கிழக்கு தமிழ் மக்களின் உணர்வுகளில் கலந்துவிட்டு காலத்தால் அழிக்க முடியாத ஒருவர்" என்றார்.

இந்நிகழ்வில் தந்தை செல்வாவின் புதல்வர் சத்தியதாசன் மற்றும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சோலமேன் சிறில், தென்னிந்திய திருச்சபையின் முன்னாள் பேராயர் ஜெபநேசன் அடிகளார், தமிழ் தேசியக் (புலி)கூட்டமைப்பின் உள்ளுராட்சி மன்ற உறுப்ப ினர்கள் என பலர் கலந்துகொண்டனர்.


http://tamil-cininews.blogspot.com




[Continue reading...]

சென்னை பூந்தமல்லி மற்றும் செங்கல்பட்டில் உள்ள சிறப்பு அகதிகள் முகாம்களில் உள்ள இலங்கை தமிழர்களை விடுவிக்கக் கோரி சென்னையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது!

- 0 comments


Friday, April, 27, 2012
சென்னை::சென்னை பூந்தமல்லி மற்றும் செங்கல்பட்டில் உள்ள சிறப்பு அகதிகள் முகாம்களில் உள்ள இலங்கை தமிழர்களை உடனடியாக விடுவிக்கக் கோரி சென்னையில் நேற்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

தமிழக மக்கள் உரிம� ��க் கழகத்தின் சார்பில், சென்னை நினைவரங்கம் அருகே நடத்தப்பட்ட இந்த ஆர்ப்பாட்டத்திற்கு வழக்கறிஞர் (புலிவால்) புகழேந்தி தலைமை தாங்கினார்.

ஆர்ப்பாட்டத்தில் உலகத் தமிழர் பேரவையின் தலைவர் (புலிவால்)பழ, நெடுமாறன், மதிமுக துணை போது செயலாளர் (புலிவால்)மல்லை சத்தியா, விடுதலை சிறுத்தைகள் வன்னி அரசு , மற்றும் பல்வேறு இயக்கத் தலைவர்களும் கலந்து கொண்டு உரையாற்றினர்.

ஆர� ��ப்பாட்டத்தின் போது, பூந்தமல்லி சிறப்பு அகதிகள் முகாமில் உள்ள 5 இலங்கை தமிழர்களையும், செங்கல்பட்டு முகாமில் உள்ள 32 இலங்கை தமிழர்களையும், மற்ற அகதிகள் முகாம்களில் வாழும் அவர்களின் உறவினர்களிடம் சேர்க்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டது.

இதே கோரிக்கையை வலியுறுத்தி செங்கல்பட்டு முகாமில் உள்ள 17 (புலி ஆதரவு) இலங்கை தமிழர்கள் கடந்த 11 நாட்களாக உண்ணாவிரதப் போராட்டத்தி� ��ும் ஈடுபட்டு வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.


http://tamil-cininews.blogspot.com




[Continue reading...]

My Blog List

Popular Posts

Popular Posts

 
Copyright © . தினசரி செய்திகள் - Posts · Comments
Theme Template by BTDesigner · Powered by Blogger