
சென்னை::சென்னை பூந்தமல்லி மற்றும் செங்கல்பட்டில் உள்ள சிறப்பு அகதிகள் முகாம்களில் உள்ள இலங்கை தமிழர்களை உடனடியாக விடுவிக்கக் கோரி சென்னையில் நேற்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
தமிழக மக்கள் உரிம� ��க் கழகத்தின் சார்பில், சென்னை நினைவரங்கம் அருகே நடத்தப்பட்ட இந்த ஆர்ப்பாட்டத்திற்கு வழக்கறிஞர் (புலிவால்) புகழேந்தி தலைமை தாங்கினார்.
ஆர்ப்பாட்டத்தில் உலகத் தமிழர் பேரவையின் தலைவர் (புலிவால்)பழ, நெடுமாறன், மதிமுக துணை போது செயலாளர் (புலிவால்)மல்லை சத்தியா, விடுதலை சிறுத்தைகள் வன்னி அரசு , மற்றும் பல்வேறு இயக்கத் தலைவர்களும் கலந்து கொண்டு உரையாற்றினர்.
ஆர� ��ப்பாட்டத்தின் போது, பூந்தமல்லி சிறப்பு அகதிகள் முகாமில் உள்ள 5 இலங்கை தமிழர்களையும், செங்கல்பட்டு முகாமில் உள்ள 32 இலங்கை தமிழர்களையும், மற்ற அகதிகள் முகாம்களில் வாழும் அவர்களின் உறவினர்களிடம் சேர்க்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டது.
இதே கோரிக்கையை வலியுறுத்தி செங்கல்பட்டு முகாமில் உள்ள 17 (புலி ஆதரவு) இலங்கை தமிழர்கள் கடந்த 11 நாட்களாக உண்ணாவிரதப் போராட்டத்தி� ��ும் ஈடுபட்டு வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
http://tamil-cininews.blogspot.com
0 comments:
Post a Comment
உங்களது கமெண்ட் என்ன ?