சவுதியில் தடையை மீறி 60 பெண்கள் கார்களை ஓட்டிச் சென்றனர் 60 women drove cars in saudi arabia
ரியாத், அக். 27-
சவுதி அரேபியாவின் சாலைகளில் பெண்கள் கார்களையோ இதர வாகனங்களையோ ஓட்டிச் செல்ல கூடாது என மதவாதிகள் தடை செய்துள்ளனர்.
இந்த தடையை மீறும் பெண்கள் போலீசார் மற்றும் மததலைவர்களால் தண்டிக்கப்பட நேரிடும் எனவும் அவர்கள் எச்சரித்தனர். கார்களை ஓட்டுவதால் பெண்களின் கருப்பை பாதிக்கப்படுவதாகவும் அவர்கள் பயமுறுத்தினர்.
இந்த தடை அங்குள்ள பெண்ணியக்க வாதிகளிடையே கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. மதவாதிகளின் மிரட்டல்களுக்கு வலு சேர்க்கும் விதமாக அந்நாட்டில் பெண்களுக்கு ஓட்டுனர் உரிமங்களும் வழங்கப்பட்டதில்லை.
இந்நிலையில், இந்த தடையை உடைத்தெறியும் விதமாக நேற்று கடை மற்றும் அலுவலங்களுக்கு கார்களை ஓட்டிச் சென்ற சுமார் 60 பெண்கள் தாங்கள் கார் ஓட்டிச் சென்ற புகைப்படங்களையும் வெளியிட்டுள்ளனர்.
வெளிநாட்டில் எடுக்கப்பட்ட ஓட்டுனர் உரிமங்களை வைத்துள்ள இவர்களில் பெரும்பாலான பெண்கள் போலீசாரின் கண்களிலும் மதவாதிகளின் கண்களிலும் மண்ணை தூவிவிட்டு தங்களது பெண்ணுரிமையை நிலைநாட்டியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
...
shared via