மனக்குறையை நீக்கும் மாங்காடு காமாட்சியம்மன்
குன்றத்தூர்-பூந்தமல்லி சாலையில் மாங்காடு கிராமம் உள்ளது. மாமரங்கள் நிறைந்திருந்ததால் மாங்காடு என பெயர் வந்தது. சுமார் 2ஆயிரம் ஆண்டுகள் பழமைவாய்ந்த, பிரசித்திபெற்ற காமாட்சியம்மன் கோவில் உள்ளது. ஒருமுறை கைலாயத்தில் பார்வதிதேவி, விளையாட்டாக சிவனின் கண்களை மூட, உலக இயக்கமே நின்றுவிட்டது. இதனால் கோபமடைந்த சிவன் அவளை பூலோகத்தில் பிறக்கும்படி சபித்தார். செய்த தவறை உணர்ந்து பார்வதி, சிவனிடம் மன்னிப்பு கேட்டார். பாவத்தை நிவர்த்தி செய்ய இத்தலத்தில் தவமிருந்து வழிபட வேண்டும்