Wednesday, 16 January 2013

அடுத்தவர்களை குறை சொல்லும் முன்பு

- 0 comments

இளம் தம்பதிகள் ஒரு பழைய வீட்டிற்கு குடி போனார்கள்.
அது மாடி வீடு
-
பக்கத்து வீட்டு பெண்மணி அந்த அதிகாலை நேரத்தில், துணிகளை
துவைத்து முடித்து, கொடிக்கம்பியில் காயப் போட்டுக்
கொண்டிருந்தாள்
-
அதைத் தன் வீட்டு ஜன்னல் கண்ணாடி வழியே பார்த்த இளம் மனைவி
தன் கணவனிடம் சொன்னாள். ‘’பக்கத்து வீட்டுப் பெண் சரியாகவே
துவைக்கவில்லை. அங்கங்கே அழுக்கு அப்படியே நிற்கிறது. ஒரு வேளை
சோப்பை மாற்றினால் துணிகள் பளிச்சிடலாம்.
-
அதைத் தன் மனைவியின் வற்புறுத்தலுக்காகப் பார்த்த கணவன்
அமைதியாக இருந்தான். ஒன்றும் சொல்லவில்லை.
-
அது தொடர்ந்தது. அடுத்தடுத்த இரண்டு நாட்களும், ஜன்னல் கண்ணாடி
விழியே எட்டிப் பார்த்துவிட்டு அவ்வாறே குறை சொன்னாள்.
-
ஒரு மாதம் ஓடி விட்டது.
-
அன்று காலையில் ஜன்னல் வழியே அடுத்த வீட்டு மொட்டை மாடியில்
காயப்போட்டிருக்கும் துணிகளைப் பார்த்து அசந்து விட்டாள் நம் நாயகி.
அவைகள் சுதமாகவும், பளிச்சென்றும் இருந்தன!
-
ஆச்சரியம் மேலிட தன் கணவனிடம் சொன்னாள். இந்த அதிசயத்தைப்
பாருங்கள். இப்போதுதான் அடுத்த வீட்டுக்காரி சரியாகத் துவைத்து
இருக்கிறாள். அவளுக்கு யார் சொல்லிக் கொடுத்தார்கள் என்று
தெரியவில்லை?
-
அவளுடைய அன்புக் கணவன் அமைதியாகச் சொன்னான். ‘இன்று
அதிகாலையில் எழுந்து, நம் வீட்டு ஜன்னலை நான் நன்றாக
துடைத்திருக்கிறேன். Coolins Liquid போட்டுத் துடைத்திருக்கிறேன்
-
மனைவி வாயடைத்துப் போய் விட்டாள். அவளால் மேற்கொண்டு
ஒன்றும் பேச முடியவில்லை.
-
———————————————-
-
நீதி
அடுத்தவர்களைக் குறை சொல்லும் முன்பு நமது பக்கம்
ஒழுங்காக இருக்கிறதா என்று பார்த்துக்கொள்ள வேண்டும்

[Continue reading...]

My Blog List

Popular Posts

Popular Posts

 
Copyright © . தினசரி செய்திகள் - Posts · Comments
Theme Template by BTDesigner · Powered by Blogger