Tuesday, 17 September 2013

மாணவிகளிடம் சில்மிஷம் செய்த சேலம் தமிழ் ஆசிரியர் Salem Tamil teacher harassment to students blockage in jail

- 0 comments

Salem Tamil teacher harassment to students blockage in jail

சேலம் அம்மாப்பேட்டை சிவாஜி நகரில் ஒரு தனியார் பள்ளி செயல்பட்டு வருகிறது. இப்பள்ளியில் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவ-மாணவிகள் படித்து வருகிறார்கள். இப்பள்ளியில் அயோத்தியாப்பட்டணம் சந்தைப்பேட்டை பகுதியை சேர்ந்த பத்மநாபன் (45) என்பவர் தமிழ் ஆசிரியராக வேலைப்பார்த்து வந்தார்.

இவர் வகுப்பறையில் பாடம் எடுக்கும் போதும், மற்ற நேரங்களிலும் சில மாணவிகளை தொட்டு சில்மிஷம் செய்வதும், பேசுவதும், தவறான வார்த்தைகளை கூறுவதும் என பாலியல் ரீதியாக அவர்களுக்கு தொல்லை கொடுத்து வந்ததாக கூறப்படுகிறது.

இதனால் மாணவிகள் மனதளவில் பெரிதும் பாதிக்கப்பட்டனர். இது குறித்து பெற்றோரிடம் சொன்னால் தேர்வில் தோல்வி அடைய செய்து விடுவேன் என்றும் ஆசிரியர் பத்மநாபன் மிரட்டியுள்ளார். இதையடுத்து மாணவிகள் வெளியில் சொல்லவில்லை. ஆனாலும் நாளுக்கு நாள் ஆசிரியர் பத்மநாபனின் தொல்லை அதிகரித்ததால் வேறு வழியே இல்லாமல் மாணவிகள் சிலர் பெற்றோரிடம் கூறி கதறி அழுதனர்.

இது குறித்து சில மாணவிகளின் பெற்றோர் சேலம் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு நல அலுவலருக்கு தகவல் தெரிவித்தனர். அதன் பேரில் குழந்தைகள் பாதுகாப்பு நல அலுவலர் தேவகி பள்ளிக்கூடத்துக்கு சென்று மாணவிகளிடம் விசாரணை மேற்கொண்டார். இதில் 20-க்கும் மேற்பட்ட மாணவிகள் நடந்த சம்பவங்களை எழுத்து மூலமாக எழுதிகொடுத்தனர்.

விசாரணையில் தமிழ் ஆசிரியர் பத்மநாபன் மாணவிகளிடம் பாலியல் தொல்லை செய்தது உறுதியானது. இதையடுத்து நல அலுவலர் தேவகி தலைமை ஆசிரியரை சந்தித்து நடந்த விபரங்களை எடுத்து கூறினார். இதற்கிடையே இந்த சம்பவம் பற்றி கேள்விப்பட்டு பள்ளியில் படிக்கும் மாணவிகளின் பெற்றோர் அங்கு திரண்டு வந்தனர்.

அவர்கள் பள்ளியை முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. இதைப்பார்த்த பாலியல் புகார் கூறப்பட்ட தமிழ் ஆசிரியர் பத்மநாபன் ஓடிச்சென்று தலைமை ஆசிரியர் அறைக்குள் ஒளிந்து கொண்டார். அப்போது மாணவிகளின் பெற்றோர், தலைமை ஆசிரியரிடம் முதலில் தவறு செய்த ஆசிரியரை வெளியே இழுத்து வாருங்கள் என்று கோஷமிட்டனர்.

இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. பின்னர் இதுப்பற்றி தகவல் தெரிந்து அம்மாப்பேட்டை இன்ஸ்பெக்டர் கண்ணன் மற்றும் போலீசார் பள்ளிக்கு விரைந்து வந்தனர். அவர்கள் பெற்றோரை சமாதானப்படுத்தினர். இதையடுத்து அவர்கள் அங்கிருந்து சென்றனர்.

இதையடுத்து மாணவிகள் சில்மிஷம் செய்ததாக கொடுத்த புகாரின் பேரில் போலீசார் தமிழ் ஆசிரியர் பத்மநாபனை கைது செய்தனர். பின்னர் அவர் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். கைதான சில்மிஷ ஆசிரியருக்கு திருமணமாகி மனைவி மற்றும் 2 குழந்தைகள் உள்ளனர்.
[Continue reading...]

அ‌ஜீத்தின் ஆரம்பம் படத்தின் ட்ரெய்லர் ajith aarambam trailor

- 0 comments

அ‌ஜீத்தின் ஆரம்பம் படத்தின் ட்ரெய்லரை செப்டம்பர் 19 வெளியிடுகின்றனர்.

by abtamil
ஆண் நண்பருடனான ... - Tamil newsToday,

ஆரம்பம் படம் தீபாவளிக்கு வெளியாவது உறுதி செய்யப்பட்டு திரையரங்குகள் புக்கிங் நடந்து வருகிறது. கோயம்புத்தூ‌ரில் 15 திரையரங்குகளில் ஆரம்பம் வெளியாகிறது. இதுவரை எந்திரன் மட்டுமே இங்கு 15 திரையரங்குகளில் வெளியானது. இப்போது ஆரம்பம்.

படத்தின் ஆடியோ செப்டம்பர் 19 கடைகளில் கிடைக்கும். ஆடியோ வெளியீட்டு விழா என்று எதுவுமில்லாமல் நேராக சிடி-கள் கடைகளுக்கு வந்துவிடும். ஆரம்பம் படத்தின் டீஸர் மட்டுமே வெளியிட்டிருந்தார்கள்.  ஆடியோ வெளியாகும் அதேநாள் ஆன்லைனில் ட்ரெய்லரையும் வெளியிடுகின்றனர். செப்டம்பர் 18ஆம் தேதி நள்ளிரவு இந்த ட்ரெய்லர் வெளியாகும்.  விஷ்ணுவர்தன் இயக்கியிருக்கும் ஆரம்பத்துக்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்திருக்கிறார். ஆர்யா, நயன்தாரா, தாப்ஸி, ராணா நடித்துள்ளனர்.

படத்தின் வெளிநாட்டு உ‌ரிமை, கேரளா, கர்நாடகா உ‌ரிமைகள் ஏற்கனவே பொpய தொகைக்கு வாங்கப்பட்டுள்ளது.

Show commentsOpen link

[Continue reading...]

தமிழ்நாடு முழுவதும் தாது மணல் எடுப்பது நிறுத்தம்: ஜெயலலிதா உத்தரவு Jayalalithaa orders stop mineral sand taking across Tamil Nadu

- 0 comments

தமிழ்நாடு முழுவதும் தாது மணல் எடுப்பது நிறுத்தம்: ஜெயலலிதா உத்தரவு Jayalalithaa orders stop mineral sand taking across Tamil Nadu

Tamil NewsToday,

சென்னை, செப். 17–முதல்– அமைச்சர் ஜெயலலிதா வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:–ஒரு நாட்டின் தொழில் மற்றும் பொருளாதார வளர்ச்சியை மேம்படுத்துவதிலும், அரசாங்கத்திற்கு வருவாயை ஈட்டித் தருவதிலும் கனிமங்கள் முக்கியப் பங்கு வகிக்கின்றன.இப்படிப்பட்ட இன்றியமையாத்தன்மை வாய்ந்த கனிமங்களை அரசின் முறையான அனுமதியின்றியோ அல்லது அரசு அனுமதித்த அளவுக்கு மேல் வரம்பு மீறியோ சுரங்க நடவடிக்கைகளில் யாரும் ஈடுபடக்கூடாது.தூத்துக்குடி மாவட்டத்தில் சட்டத்திற்கு விரோதமாக கடற்கரை கனிமங்கள், அதாவது பீச் மீனரல்ஸ் எனப்படும் கார்னட், இல்மனைட் மற்றும் ரூட்டைல் போன்றவை எடுக்கப்படுவதாக பெறப்பட்ட அறிக்கைகளின் அடிப்படையில், அரசு உயர் அதிகாரிகளுடன் இதுகுறித்து கலந்தாலோசித்த நான், தூத்துக்குடி மாவட்டத்தில் கார்னட், இல்மனைட் மற்றும் ரூட்டைல் கனிமக் குவாரிகளில் முறைகேடுகள் நடந்துள்ளனவா என்பது குறித்து ஆய்வு செய்ய வருவாய்த் துறைச் செயலாளர் ககன்தீப் சிங் பேடி அவர்கள் தலைமையின் கீழ், வருவாய்த் துறை, சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை மற்றும் புவியியல் மற்றும் சுரங்கத்துறை அதிகாரிகள் அடங்கிய ஒரு சிறப்புக் குழுவை அமைத்து, இது குறித்து ஒரு மாத காலத்திற்குள் ஆய்வறிக்கையை அரசுக்கு சமர்ப்பிக்குமாறு உத்தரவிட்டேன்.இது மட்டுமல்லாமல், இந்தச் சிறப்புக் குழுவின் ஆய்வு முடியும் வரை சுரங்க நடவடிக்கைகளை நிறுத்தி வைக்குமாறு தூத்துக்குடி மாவட்ட ஆட்சித் தலைவருக்கும், போக்குவரத்து உரிமச் சீட்டு வழங்குவதை நிறுத்தி வைக்குமாறு தூத்துக்குடி மாவட்ட கனிமத் துறை உதவி இயக்குநருக்கும் உத்தரவிடும்படி நான் பணித்திருந்தேன்.எனது உத்தரவின் பேரில், 1957-ம் ஆண்டு சுரங்கம் மற்றும் கனிமங்களின் (மேம்பாடு மற்றும் முறைப்படுத்துதல்) சட்டத்தின் பிரிவு 24-ல் மாநில அரசுக்கு அளிக்கப்பட்டுள்ள அதிகாரத்தினைப் பயன்படுத்தி மேற்படி சிறப்புக் குழு விரிவான ஆய்வினை தூத்துக்குடி மாவட்டத்தில் மேற்கொண்டது.இந்தச் சிறப்புக் குழுவில் முது நிலை மாவட்ட வருவாய் அலுவலர், நில அளவை இணை இயக்குநர், புவியியல் மற்றும் சுரங்கத் துறை இணை இயக்குநர் மற்றும் கூடுதல் தலைமைச் சுற்றுச்சூழல் பொறியாளர் ஆகியோர் ஒருங்கிணைந்து ஆய்வுப் பணிகளை மேற்கொண்டனர்.இதைத் தவிர, முதுநிலை துணை ஆட்சியர், நில அளவை உதவி இயக்குநர், நில அளவை ஆய்வாளர் மற்றும் அலுவலர்கள், புவியியல் மற்றும் சுரங்கத் துறை உதவி இயக்குநர் அல்லது உதவி புவியியலாளர் மற்றும் தமிழ்நாடு மாசுக் கட்டுப்பாடு வாரிய மண்டல சுற்றுச்சூழல் பொறியாளர் ஆகியோர் அடங்கிய ஆறு உப குழுக்கள் அமைக்கப்பட்டு அந்தக் குழுக்களும் ஆய்வுப் பணியில் ஈடுபடுத்தப்பட்டன.மேற்படி குழுக்கள், முதற் கட்டமாக 12.8.2013, 13.8.2013 மற்றும் 14.8.2013 ஆகிய நாட்களிலும், இரண்டாவது கட்டமாக 19.8.2013 மற்றும் 20.8.2013 ஆகிய நாட்களிலும் ஆய்வுப் பணிகளை மேற் கொண்டன. மூன்றாவது கட்டமாக, 29.8.2013 மற்றும் 30.8.2013 ஆகிய தேதிகளில் கனிம பகுப்புத் தொழிற் சாலைகளில் ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டன.சிறப்புக் குழு மற்றும் உப குழுக்கள் மேற்கொண்ட ஆய்வுகளின் அடிப்படையில், வருவாய்த் துறை செயலாளர் ககன்தீப் சிங் பேடி, அவர்கள் இன்று (17.9.2013) தலைமைச் செயலகத்தில் என்னிடம் ஆய்வு அறிக்கையினை சமர்ப்பித்தார்.இதனைப் பெற்றுக் கொண்ட நான், மாநிலத்தின் மற்ற மாவட்டங்களில் கடற்கரை கனிமங்களான கார்னட், இல்மனைட் மற்றும் ரூட்டைல் ஆகியவற்றை எடுக்க அனுமதி வழங்கப்பட்டுள்ள குத்தகைதாரர்களால் பெருங்கனிமக் குவாரி களில் முறைகேடுகள் நடை பெற்றுள்ளனவா என்பதைக் கண்டறியும் வகையில், தமிழ்நாட்டில், திருநெல்வேலி, கன்னியாகுமரி, திருச்சிராப் பள்ளி மற்றும் மதுரை மாவட்டங்களில் தனியாருக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ள எஞ்சிய 71 பெருங்கனிம குவாரிகளை இந்தச் சிறப்புக் குழு ஆய்வு செய்து உண்மை நிலையை அரசுக்கு சமர்ப்பிக்க வேண்டும் என நான் உத்தரவிட்டுள்ளேன். வருவாய்த் துறைச் செயலாளர் ககன்தீப் சிங் பேடி, தலைமையில் இந்தச் சிறப்புக் குழு செயல்படும்.மேலும், மேற்படி ஆய்வு முடியும் வரை, கார்னட், இல்மனைட் மற்றும் ரூட்டைல் பெருங்கனிம குவாரிகளின் செயல்பாடுகளை நிறுத்தி வைக்கவும், போக்குவரத்து உரிமச் சீட்டு வழங்குவதை நிறுத்தி வைக்கவும் உரிய உத்தரவினை பிறப்பிக்கும்படி நான் ஆணையிட்டுள்ளேன்.இதர மாவட்டங்களில் உள்ள பெருங்கனிமக் குவாரிகள் குறித்த ஆய்வறிக்கை கிடைக்கப் பெற்றவுடன், அதன் அடிப்படையில் பெருங்கனிமக் குவாரிகள் குறித்து ஒரு கொள்கை முடிவு எடுக்கப்படும் என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன்.இவ்வாறு அதில் கூறியுள்ளார். ...
Show commentsOpen link

[Continue reading...]

மத்தாப்பூ - சினிமா விமர்சனம் - Mathappu Movie Review

- 0 comments
ஜெயன் என்னும் புதுமுகம் அசத்தியிருக்கிறார். அறிமுகம் என்றே தெரியவில்லை. அவருடைய தோற்றத்திற்கேற்ற கேரக்டர்.. சட்டென்ற கோபம்.. வெளிக்காட்டிக் கொள்ளாத கிண்டல்.. நக்கல் செய்யும் தொனி.. அம்மாவையும், சித்தியையும் மீற முடியாத பாசக்காரன்.. என்று பலதையும் இயக்குநர் சொல்லிக் கொடுத்தாரோ இல்லையோ.. நன்றாகவே செய்திருக்கிறார்..! சண்டை காட்சிகள் நிசமாகவே உண்மைபோல் எடுக்கப்பட்டிருக்கிறது.. நிறைய பயிற்சியெடுத்திருப்பார் என்று நினைக்கிறேன்..!
 
[Continue reading...]

பிரேக் எடுத்து உடம்பை ஃபிட் ஆக்கிய சீரியல் நடிகை! Body fit serial actress

- 0 comments

இரண்டு வருடம் பிரேக் எடுத்து உடம்பை ஃபிட் ஆக்கிய சீரியல் நடிகை!

by abtamil
ஆண் நண்பருடனான ... - Tamil newsToday,

குழந்தை நட்சத்திரமாக சினிமாவில் அறிமுகமாகி மெகா சீரியல்களில் நடித்து புகழ் பெற்றவர் நீலிமா.

செல்லமே, தென்றல் தொடர்களில் முக்கிய கதபாத்திரங்களில் நடித்துக் கொண்டிருந்த போது பாதியிலேயே காணாமல் போனார். இப்போது மீண்டும் திரும்ப வந்திருக்கிறார்… சீரியல் நாயகியாக அல்ல சினிமாவில் கதாநாயகியாக களமிறங்கியுள்ளார்.

சீரியல்களில் அழுது வடியும் கதாபாத்திரத்திலும், வில்லத்தனம் செய்யும் வில்லியாகவும் நடித்து போர் அடித்துப் போன நீலிமா அல்ட்ரா மாடர்ன் லுக்கில் நாயகியாகியுள்ளார். – See more at:

நீலிமா குழந்தை நட்சத்திரமா நடிச்ச முதல் படம் 'தேவர் மகன்'. அப்புறம் 'பாண்டவர் பூமி', 'விரும்புகிறேன்', 'தம்', 'பிரியசகி', 'சந்தோஷ் சுப்ரமணியம்', திமிரு, 'நான் மகான் அல்ல'னு பல படங்கள்ல நடித்திருக்கிறார்.

நடித்துக் கொண்டிருக்கும் போதே திருமணம் முடிந்து குழந்தை என செட்டில் ஆனவர் காஜல் அகர்வால் அட்வைஸ் படியே மீண்டும் ஹீரோயினாக நடிக்க வந்திருக்கிறாராம்.

கணவர், தோழிகளின் ஆலோசனைப் படி இரண்டு வருடம் பிரேக் எடுத்து உடம்பை ஃபிட் ஆக்கியுள்ளார். தோற்றம், பாடி லாங்குவேஜ், கூந்தல் அலங்காரம், ஸ்டைல்னு எல்லாத்தையும் பார்த்துப் பார்த்து மெருகேற்றியுள்ளாராம்.

நீலிமாவிற்கு சிம்ரன் மாதிரி நடிக்க ஆசையாம். இதற்காக சிம்ரன் மாதிரியே ஸ்லிம் பியூட்டி ஆகியுள்ளார். டயட்டுடன் எப்பவும் ஜாலியா சிரிச்சுட்டு மனசை சந்தோஷமா வைத்துக் கொள்வதுதான் அழகு என்கிறார் நீலிமா.

Show commentsOpen link

[Continue reading...]

My Blog List

Popular Posts

Popular Posts

 
Copyright © . தினசரி செய்திகள் - Posts · Comments
Theme Template by BTDesigner · Powered by Blogger