Img கோவாவில் டச்சு நாட்டு பெண் யோகா ஆசிரியரால் கற்பழிப்பு Goa Dutch country woman molested yoga teacher
பனாஜி, டிச. 11-
கோவா மாநில தலைநகர் பனாஜியில் வாடகை வீடு ஒன்றில் 25 வயது டச்சு நாட்டு பெண் தனியாக வசித்து வந்துள்ளார். அவர் அப்பகுதியில் கிருஷ்ணா சர்மா என்பவரிடம் யோகா கற்றுவந்தார்.
இந்நிலையில் அவர்கள் இரண்டு பேரும் நேற்று அனுஜாவில் நடந்த விருந்தில் கலந்து கொண்டுள்ளனர். விருந்து முடிந்ததும், அந்த பெண் யோகா ஆசிரியர் கிருஷ்ணா சர்மாவின் வாகனத்தில் அவரது வீட்டிற்கு வந்துள்ளார்.
அப்போது வீட்டிற்குள் சென்ற சர்மா அந்த பெண்ணை பலவந்தமாக அவர் கற்பழித்துள்ளார். பின்னர் அங்கிருந்து தப்பி ஓடி தலைமறைவாகிவிட்டார். கற்பழிப்பு தொடர்பாக பாதிக்கப்பட்ட டச்சு நாட்டு பெண் அங்குள்ள காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார்.
புகாரை அடுத்து போலீசார் சர்மாவை தேடினர். இந்நிலையில் மும்பைக்கு தப்பித்து ஓட தாபோலிம் விமான நிலையத்திற்கு சர்மா சென்றுள்ளார். அப்போது அவரை போலீசார் கைது செய்தனர்.
சர்மா உத்தரபிரதேசத்தை சேர்ந்தவர் என்று கூறப்படுகிறது. தொடர்ந்து சர்மாவிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
...