நாகர்கோவில் வடசேரி, காமராஜர் புரத்தில் டெலிபோன் ஊழியர்களுக்கான
பி.எஸ்.என்.எல். குடியிருப்பு உள்ளது. சுமார் 200–க்கும் மேற்பட்ட
ஊழியர்கள் இங்கு குடும்பத்துடன் வசித்து வருகிறார்கள். குடியிருப்பின்
மையப்பகுதியில் 150 அடி உயர செல்போன் கோபுரம் உள்ளது.
இன்று அதிகாலை 6 மணியளவில் இங்கு குடியிருக்கும் ஊழியர்கள் சிலர் பால் வாங்கவும், டீ குடிக்கவும் வீட்டை விட்டு வெளியே வந்தனர். குடியிருப்பின் மையப்பகுதி வழியாக சென்ற போது செல்போன் கோபுர உச்சியிலிருந்து ஒருவரின் கூச்சல் சத்தம் கேட்டது.
திடுக்கிட்ட ஊழியர்கள் கோபுரத்தை அண்ணாந்து பார்த்தபோது, அங்கு ஒருவர் ‘மழைக்கோட்டு’, தலையில் ‘ஹெல்மெட்’ அணிந்தபடி கையில் தண்ணீர் பாட்டிலுடன் நிற்பதை கண்டனர்.