சினிமா பிரபலங்கள் பலருக்கும் அஜித்தைப் பிடிக்கும், ஆனால் அஜித்தின் மனம் கவர்ந்த இசையமைப்பாளர் யார் தெரியுமா?. அஜித் தற்போது சிவா இயக்கத்தில் தல-56 படத்தில் நடித்து வருகிறார்.
ஸ்ருதி ஹாசன், லட்சுமி மேனன், அஸ்வின் நடித்து வரும் இப்படத்தின் படப்பிடிப்புகள் தற்போது விறுவிறுப்பாக நடந்து வருகின்றன. இப்படத்திற்கு அனிருத் இசையமைத்து வருகிறார். சமீபத்தில் இவரின் இசையை அஜித் கேட்டுள்ளார். இசை மட்டுமின்றி அனிருத் பணியாற்றும் முறையும் அஜித்திற்கு மிகவும் பிடித்து போயுள்ளது.
எனவே தல-57 படத்திற்கும் அனிருத்தையே இசையமைப்பாளராக்க அஜித் முடிவு செய்திருப்பதாக கூறப்படுகின்றது. இதற்கு முன் அஜித்தின் குட் மியூசிக் லிஸ்டில் எப்போதும் யுவன் இருப்பது நாம் அறிந்ததே. அந்த வகையில் இப்போது அனிருத்தும் இணைந்துவிட்டார்.
0 comments:
Post a Comment
உங்களது கமெண்ட் என்ன ?