பத்து வருஷம் முன்பு நடந்த சம்பவம், தொழில் தர்மத்தை மீறிவிட்டான்னு சொல்றவங்க உள்ளே போகாதீங்க, ஏன்னா...... நான் சொல்ல போறவிங்க அப்போ வெள்ளித்திரையை கலக்கிகிட்டு [[கதாநாயகி]] இருந்தவிங்க, இப்போ சின்னத்திரையில் சீரா, யோக்கியமா நடக்கணும் வாழணும்னு நமக்கு புத்திமதி சொல்றாயிங்க...!!! அவிங்க யோக்கியதை என்னான்னு நீங்களும் தெரிஞ்சிக்கோங்க, என் நெருங்கிய பதிவுலக நண்பர்களுக்கு அந்த [[சுரேஷ் கோ, சுக'மான]] நடிக, நடிகையை, அவர்கள் யாருன்னு புரியும் ஸாரி தெரியும்....!!!
பஹ்ரைன் ஹோட்டலில் நான் வெயிட்டராக பணி புரிந்த சமயம், கலை நிகழ்ச்சிக்காக வரும் மலையாளம், தமிழ் நடிக, நடிகைகள் எங்கள் ஹோட்டலில்தான் அதிகபட்சமாக தங்குவார்கள், காரணம்....... அந்த ஹோட்டல் மலையாளி மேனேஜ்மென்ட்....!!!
நடிகைகள் தனியாகவும், சிலர் அம்மாக்களோடும், பாட்டிகளோடும் [[ உதாரணம் நம்ம நடிகை லட்சுமி மகள் ஐஸ்வர்யா, பாட்டியுடந்தான் வருவார்]] இப்பிடி தனியாக வரும் நடிகைகளுக்கும் தனி அறைதான் கொடுக்கப்படும், ஹீரோக்களுக்கும் தனி அறைதான், சிரிப்பு போலீஸ் ஸாரி காமெடி நடிகர்கள் ரெண்டு ரெண்டு பேராக தங்குவார்கள்.....!!!
இப்படி அவரவர் ரேஞ்ச் அனுசரிச்சி ரூம் ஒதுக்கப்படும், அவர்கள் பஹ்ரைன் வரும் நேரம் எங்கள் ஹோட்டல், சவூதி, கத்தார், துபாய் நாட்டிலிருந்து வரும் மலையாளிகள், தமிழர்களால் ஹோட்டல் நிறைந்து காணப்படும்....!!!
என்ன...... கலை நிகழ்ச்சி பார்க்க ஆர்வமா வாராயிங்களா....? அதான் இல்லை...!!! [[ஹி ஹி கள்ள பயலுக பாஸ்]] அவிங்க பண்ணுற லூட்டியும், நடிகைங்க பண்ணுற அலம்பலும், நடிகைக்காக ஹீரோக்கள் படும் அவஸ்தையும், படு சுவாரஸ்யமாகவும், ஆச்சர்ய, அருவருப்பாகவும் இருக்கும்...!!!
இப்பிடி பட்ட ஒரு சுபநாளில் [[வெளங்கிரும்]] நான் ரூம் சர்வீசில், இரவு டியூட்டியில் இருக்கும் போது [[நேரம் இரவு ரெண்டு மணி]] போன்....கேரளாவின் ரெண்டு சூப்பர் ஸ்டார்களின் நேர் அடுத்த ஹீரோ, தமிழிலும் இவர் நிறைய படங்களில் நடித்திருக்கிறார்....!!!
ரெமிமார்ட்டின் மினியேச்சர் பாட்டல் ஐந்தும், ஐஸ் கியூப்சும், சோடாவும் கொண்டு வரசொன்னார்....[[இப்பிடி இரவு நேரம் இவர்கள் ஆர்டர் செய்யும் போது எங்களுக்கு ஜாலியா இருக்கும் ஹி ஹி]] வேகமாக எடுத்து சென்றேன், அவர் ஒரு சிங்கிள் ரூமில் தங்கி இருந்தார்....!!!
சூப்பரான ரூம், டோர் பக்கம்தான் பாத்ரூம், உள்ளே போயிட்டு வெளியே வர வேண்டுமானாலும், உள்ளே வரவேண்டுமானாலும், பாத்ரூமை தாண்டிதான் வரணும் போகணும். அப்பிடி நான் ஆர்டர் கொண்டுபோய், காலிங் பெல் அடிச்சதும், கம்மிங் என கெம்பீர சத்தம், உள்ளே போனேன் அயிட்டம் எல்லாம் எங்கே வைக்கணுமா அங்கே வைத்து விட்டு, இன்னும் ஏதாவது வேணுமான்னு கேட்டேன், நோ தேங்க்ஸ் சொன்னதும் நான் கிளம்பி பாத்ரூம் பக்கம் வந்து, மெயின் டோரை திறக்கவும்......
நடிகர் என்னை அழைத்தார், ஹலோ......என்ன சார் என கேட்டுக்கொண்டே டோர் பிடியை விடவும் அது "கிடிக்" என்ற சத்தத்துடன் லாக் ஆனது, நான் திரும்ப வந்து நடிகரிடம் ஆர்டர் எடுத்து விட்டு, டோர் நோக்கி நடக்கவும் அந்த சம்பவம் நடந்தது.......!!!
படார் என பாத்ரூம் கதவை திறந்துகொண்டு ஒரு பெண் பச்சை நிரவாணமாக என்முன் வந்து நிற்க, [[ஒரு டவலாவது கையில வச்சிருக்க கூடாதா பாவி]] அவள் வீல் என அலற, நான் ஸ்தம்பித்து நிற்க....அந்த நடிகை சுத்த தமிழ் சுக'மான நடிகை......!!!
அவர் மறுபடியும் பாத்ரூமுக்குள் ஓட, நடிகர் ஹா ஹா ஹா ஹா என பயங்கரமா இருந்து சிரிக்கிறார் [[ஹி ஹி]] சரி பாத்ரூமுக்குள் ஓடிய நடிகை கதவையாவது சாத்தியிருக்கலாம் ஹய்யோ ஹய்யோ.....!!!
சம்பவம் என்னான்னா, நான் ஆர்டர் கொண்டு வந்ததும் இந்த நடிகை பாத்ரூம் போயி ஒளிஞ்சிருக்கு, நான் ரூம் உள்ளே வந்ததும் மெயின் டோர் "கிடிக்" என லாக் ஆகும் சத்தம் பாத்ரூம் உள்ளே கேட்க்கும், அதே போல் நான் வெளியே போனாலும் இந்த "கிடிக்" சத்தம் கேட்க்கும்....!!!
அங்கேதான் விதி விளையாடி விட்டது, நான் வெளியே போக டோரை திறக்கவும், நடிகர் என்னை திரும்ப கூப்பிடவும், நான் டோர் பிடியை விடவும் அது "கிடிக்" என அடையவும், உள்ளே இருந்த சுக'மான நடிகைக்கு நான் போய்விட்டதாக நினச்சிட்டு வெளியே வந்துட்டாங்க....!!!
அப்புறம் என்ன......பத்துநாள் நான் பட்ட அவஸ்தை இருக்கே........சொல்லவும் முடியாம, மெல்லவும் முடியாம..."நம்பவும்" முடியாம ஹய்யோ ஹய்யோ....!!! இப்போ நினைச்சாலும் குலை நடுங்குது....!!!!
நன்றி : கூகுள்.