Monday, 12 August 2013

இந்தியா தென் ஆப்பிரிக்கா ‘ஏ’ அணிகள் மோதல்: ஷிகார் தவான் இரட்டைச் சதம் Shikhar Dhawan slams double ton for India A against South Africa A

- 0 comments

இந்தியா, ஆஸ்திரேலியா மற்றும் தென்
ஆப்பிரிக்க ஏ அணிகளுக்கிடையிலான
முத்தரப்பு ஒரு நாள் கிரிக்கெட் தொடர் தென்
ஆப்பிரிக்காவில் நடைபெற்று வருகிறது.
இன்று இந்தியா -தென் ஆப்பிரிக்கா ஏ
அணிகளுக்கிடையிலான
போட்டி பிரிட்டோரியாவில்
நடைபெற்று வருகிறது.
டாஸ் வென்று முதலில் களமிறங்கிய இந்திய
அணியின் துவக்க வீரர்களாக ஷிகார் தவான்,
முரளி விஜய் ஆகியோர் களமிறங்கினர்.
துவக்கம் முதலே அதிரடியாக ஆடிய இந்திய
வீரர்கள் 14 ஓவர்களில் 100 ரன்னைத்
தொட்டனர்.
37 பந்துகளில் 40 ரன்கள் குவித்த
முரளி விஜய், ஹென்ட்ரிக்ஸ் பந்தில்
ஆட்டமிழந்தார். அதன்பின்னர் புஜாராவும்,
ஷிகார் தவானும் தென் ஆப்பிரிக்க
பந்துவீச்சை அடித்து நொறுக்கினர். 86
பந்துகளில் சதம் கடந்த தவான்,
அதே வேகத்தில் இரட்டைச் சதத்தையும்
கடந்தார். 132 பந்துகளில் 24 பவுண்டரிகள், 4
சிக்சர்களுடன் இந்த சாதனையை அவர்
எட்டினார்.
இதன்மூலம் சர்வதேச அளவில் ஏ அணியில்
அதிகபட்ச ரன் குவித்த வீரர் என்ற
பெருமையை ஷிகார் தவான் பெற்றார்.
இதற்கு முன்பு 2008ம் ஆண்டு லண்டனில்
நடந்த ஆட்டத்தில் இலங்கை வீரர் உபுல்
தரங்கா 173 ரன்கள்
அடித்ததே இதுவரை சாதனையாக இருந்தது.
அதனை இப்போது தவான் முறியடித்துள்ளார்.

[Continue reading...]

ஆசிட் வீசி கொலை: வினோதினி வழக்கில் 20– ந்தேதி தீர்ப்பு நீதிபதி அறிவிப்பு acid attack vinodhini case 20th judgment judge announced

- 0 comments

ஆசிட் வீசி கொலை: வினோதினி வழக்கில் 20–
ந்தேதி தீர்ப்பு நீதிபதி அறிவிப்பு acid attack
vinodhini case 20th judgment judge announced

காரைக்காலை சேர்ந்த பெண் என்ஜினீயர்
வினோதினி. இவர் சென்னையில் சாப்ட்வேர்
நிறுவனத்தில் வேலை பார்த்து வந்தார்.
கடந்த
ஆண்டு தீபாவளி பண்டிகையின்போது காரைக்காலுக்கு வந்துவிட்டு நவம்பர்
14–ந்தேதி சென்னைக்கு புறப்பட்டார். அவர்
பஸ் நிலையத்துக்கு செல்ல
வீட்டை விட்டு வெளியே வந்தபோது காரைக்காலை சேர்ந்த
சுரேஷ் என்ற வாலிபர் அவர்
மீது ஆசிட்டை விசினார்.
இதில் வினோதினி முகம் முழுவதும்
வெந்தது. அவர் சென்னை கீழ்ப்பாக்கம்
ஆஸ்பத்திரியில்
சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார்.
அப்போது இரு கண்களும் பார்வையிழந்தது.
தொடர்ந்து 1 மாதத்துக்கு மேலாக
சிகிச்சை பெற்ற நிலையில் திடீரென அவர்
உயிரிழந்தார். இதைத்தொடர்ந்து சுரேஷ்
கைது செய்யப்பட்டார். வினோதினி காதலிக்க
மறுத்ததால் அவர் மீது ஆசிட் வீசியதாக அவர்
கூறினார். இந்த
வழக்கு விசாரணை காரைக்கால் மாவட்ட
கோர்ட்டில் நடந்து வந்தது. இன்றுடன்
வழக்கு விசாரணை முழுவதும் முடிந்தது.
அதையடுத்து வருகிற 20–
ந்தேதி தீர்ப்பு வழங்கப்படும்
என்று நீதிபதி அறிவித்தார்.

[Continue reading...]

Gold rate increase தங்கம், பவுனுக்கு ரூ.288 உயர்வு gold jewellery increase

- 0 comments

தங்கம், பவுனுக்கு ரூ.288 உயர்வு gold
jewellery increase

கடந்த சில நாட்களாக தங்கம்
விலை அதிகரித்து வருகிறது. கடந்த 7–
ந்தேதி ஒரு பவுன் 20 ஆயிரத்து 944 ஆக
இருந்த தங்கம் விலை படிப்படியாக
அதிகரித்து நேற்று முன்தினம் ரூ.21
ஆயிரத்து 432 ஆக இருந்தது.
இன்று பவுனுக்கு ரூ.288 உயர்ந்துள்ளது.
ஒரு பவுன் ரூ.21 ஆயிரத்து 720 ஆக உள்ளது.
ஒரு கிராம் ரூ.2715–க்கு விற்கிறது.
வெள்ளி கிலோவுக்கு ரூ.755
அதிகரித்துள்ளது. ஒரு கிலோ ரூ.44
ஆயிரத்து 235 ஆகவும், ஒரு கிராம் ரூ.47.30
ஆகவும் உள்ளது.

[Continue reading...]

My Blog List

Popular Posts

Popular Posts

 
Copyright © . தினசரி செய்திகள் - Posts · Comments
Theme Template by BTDesigner · Powered by Blogger