சோனாவின் அறைக்குள் நுழைந்ததும் ஆச்சர்யமாகப்பட்டது ஆங்கிலத்தில் எழுதப்பட்ட அந்த அறிவிப்பு. ‘புகைக்காமல் இருப்பதன் மூலம் எனக்கு உதவுங்கள். புகை என்னைக் கொல்கிறது!’ புகை சூழ் அறையில் விரலிடுக்கில் இம்போர்டட் டுப்ளினுடன் அட்டகாசமாகச் சிரிக்கிறார், ”என்ன தலைகீழா இருக்கேன்னு பார்க்கிறீங்களா…அதான் சோனா!” என்று பஞ்ச் அடிக்கிறார்.”சோனா செம பிஸியோ?””எனக்கு ஏழரை திசை நடக்குது. இந்த வாரம்தான் அது முடியுது. இனிமே பின்னி எடுக்க வேண்டியதுதான். 100 கிலோ வெயிட்டை 64 கிலோவாக் குறைச்சு ஸ்லிம் சோனா ஆயிட்டேன். மலையாளத்துல மோகன் லால் படத்துல வில்லி கேரக்டர் பண்றேன். தமிழ், மலையாளம்னு சோனா பாக்கெட்டுல பத்து படம் இருக்கு. ஒரு கோடி ரூபாய் செலவுல அருமையா ஒரு ஆல்பம் பண்ணி இருக்கேன். நானும் பாடி இருக்கேன். மலேசியா இல்லைன்னா, லண்டன்ல ரிலீஸ் செய்யப்போறேன். சென்னையில் நல்ல பார்ல வெச்சு ரிலீஸ் நடக்கும். ஆட்டோபயோகிராஃபி வொர்க்கும் போயிட்டு இருக்கு. இன்டர்நேஷனல் குவாலிட்டியில பத்திரிகையும் ரெடி!””சோனாவுக்கு கல்யாணம்…?”” ஹா… ஹா… ஹா… (கை தட்டிச் சிரிக்கிறார்) சான்ஸே இல்லை. கல்யாணத்து மேல எனக்கு நம்பிக்கை இல்லை. லைஃபை அருமையாஎன்ஜாய் பண்ணிட்டு இருக்கேன். எனக்கு எதுக்கு கல்யாணம்? ஒரு ஜோக் சொல்லவா? என்னையும் பொண்ணு கேட்டு நாலைஞ்சு பேர் வந்தானுங்க. லூஸுப் பசங்க. அப்படி என்கிட்ட என்னத்தக் கண்டானுங்கனு தெரியலை. போய் வேலையைப் பாருங்கடானு துரத்திவிட்டுட்டேன் நான்!””அப்ப ஒரு பொண்ணோட வாழ்க்கையில ஆம்பளையே வேணாமா?””ஆம்பளை வேணுமா, வேணாமானு முடிவு பண்றது பொண்ணோட உரிமை. ஆனா, என் லைஃப்ல ஆம்பளை வேணாம்!””அப்ப ஒரு பொண்ணுக்கான தேவைகள்..?””நான் என்ன சாமியாரா? பசி, தாகம், தூக்கம் மாதிரிதான் செக்ஸ். அது இல்லாம எப்படி இருக்க முடியும்? எனக்கு செக்ஸ் தேவைப்பட்டா ஆம்பளைங்களை யூஸ் பண்ணிப்பேன்… டிஷ்யூ பேப்பர் மாதிரி. அப்புறம் தூக்கி எறிஞ்சிட வேண்டியதுதான்!””புரியலை… லிவிங் டுகெதரா?””கல்யாணத்தைவிட பெரிய முட்டாள்தனம் அது. அதையும் நிறைய ட்ரை பண்ணிப் பார்த்துட்டேன். அதெல்லாம் எனக்கு சரிப்பட்டு வராது. யூஸ் அண்ட் த்ரோதான் பெஸ்ட்!””வெங்கட் பிரபு, பிரேம்ஜி கோஷ்டியோட இப்பவும் பார்ட்டி எல்லாம் உண்டா?””பார்ட்டிக்கு மட்டும் அந்த குரூப்புக்கு டாட்டா காட்டிட்டேன். ஆனா, அவங்க எல்லாரும் நல்ல ஃப்ரெண்ட்ஸ். இப்ப வேற ஃப்ரெண்ட்ஸ் குரூப்போட பார்ட்டிக்குப் போறேன். அவங்க எல்லாம் ரொம்ப நம்பிக்கையானவங்க. முன்ன மாதிரி வெளியே பார்ட்டிக்குப் போறதைக் குறைச்சிட்டேன். நம்பிக்கையான ஆறேழு ஃப்ரெண்ட்ஸ்கூட, என் வீட்டுல மட்டும்தான் பார்ட்டி!””சரக்கு ஓவரா அடிக்கிறீங்களா?””நோ, நோ, டயர்டா இருந்தா மட்டும் ரெண்டு பெக் ரெட் ஒயின் போடுவேன். நைட்டு தூக்கத்துக்கு ரெண்டு பெக் ரெட் ஒயின். அப்பவும் தூக்கம் வரமாட்டேங்குது. தூக்க மாத்திரை சாப்பிட்டு சமாளிக்கிறேன். பொதுவா சரக்கு எனக்கு பிரச்னை இல்லை. வேணாம்னுநினைச்சா வேணாம். ஆனா, இந்த தம்முதான் நிறுத்த முடியலை!””தினமும் சரக்கு, தூக்க மாத்திரை… உடம்பு வீணாகாதா?””என்ன செய்ய… என்னை மாதிரி நடிகைகளின் கடந்த கால வாழ்க்கை அப்படி. பட்ட கஷ்டம் அப்படி. அவ்வளவு துரோகங்களைச் சந்திச்சு இருக்கேன். எங்க ஃபீல்டுல நிறைய பொண்ணுங்க இப்படித்தான் கஷ்டப்படுறாங்க. ஆனா, பசங்க எப்படியோ ஜாலியா தப்பிச்சுடுறானுங்க!”
Bobs Haircuts Images
-
[image: Bobs Haircuts][image: Bobs Haircuts][image: Bobs Haircuts][image:
Bobs Haircuts][image: Bobs Haircuts][image: Bobs Haircuts][image: Bobs
Haircuts][...
9 years ago