Sunday, 12 February 2012

உலகின் மிக மகிழ்ச்சியான நாடுகளின் பட்டியல்

- 0 comments
 


உலகின் மிக பணக்கார நாடுகளாக திகழும் அமெரிக்கா, கனடா, பிரிட்டன் போன்ற நாடுகள் சந்தோஷத்தில் இன்னமும் ஏழைகளாகவே திகழ்கின்றனர் என்பது சமீபத்தில் நடத்திய ஆய்வொன்றின் மூலம் தெரியவந்துள்ளது.

பொருளாதார நெருக்கடி, போர், இயற்கை பேரிடர் என பல்வேறு பிரச்னைகளுக்கு நடுவில் உலக மக்களின் மகிழ்ச்சி குறித்து இப்சஸ் குளோபல் நிறுவனம் ஆய்வொன்றை நடத்தியது.

24 நாடுகளில் 18,000 பேரிடம் இந்த ஆய்வு நடத்தப்பட்டது. அதன் விவரம்: சர்வதேச அளவில் மகிழ்ச்சியானவர்களின் எண்ணிக்கை கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு இருந்ததைவிட இப்போது அதிகரித்துள்ளது.

அதாவது ஆய்வுக்கு உட்படுத்தப்பட்ட 4ல் 3 பேர் வாழ்வில் மகிழ்ச்சியாக இருப்பதாகவும், 4ல் ஒருவர் மிகவும் மகிழ்ச்சியாக இருப்பதாகவும் தெரிவித்துள்ளனர்.

உலகிலேயே மிகவும் மகிழ்ச்சியாக உள்ளவர்களில் இந்தியர்கள், இந்தோனேசியர்கள் மற்றும் மெக்சிகோ நாட்டினர் முக்கிய இடம் பிடித்துள்ளனர். ஹங்கேரி, தென்கொரியா, ரஷ்யா, ஸ்பெயின் மற்றும் இத்தாலி நாட்டைச் சேர்ந்தவர்களில் மிகவும் குறைவானவர்களே மகிழ்ச்சியாக இருப்பதாக தெரிவித்துள்ளனர்.

மண்டலவாரியாக பார்த்தால் லத்தீன் அமெரிக்காவில் அதிகம் பேர் மகிழ்ச்சியாக உள்ளனர். வட அமெரிக்கா, ஆசியா-பசிபிக், மத்திய கிழக்கு நாடுகள் மற்றும் ஆப்ரிக்கா ஆகியவை அடுத்தடுத்த இடங்கள் பிடித்தன. ஐரோப்பிய நாடுகளைச் சேர்ந்தவர்களில் 15 சதவீதம் பேர் மட்டுமே மகிழ்ச்சியாக இருப்பதாக தெரிவித்தனர்.

இதுகுறித்து இப்சஸ் குளோபல் நிறுவனத்தின் துணைத்தலைவர் ஜான் ரைட் கூறுகையில், மக்களின் மகிழ்ச்சியை கணக்கிடுவதில் கவனமாக இருக்க வேண்டும். பொருளாதார ரீதியாக வசதியாக இருப்பவர்களிடம் மகிழ்ச்சி அதிகமாக இருக்கும் என்று கூற முடியாது.

ஒருவர் மகிழ்ச்சியாக வாழ்வதற்கு பணத்தைத் தாண்டி பல்வேறு காரணங்கள் உள்ளன. குறிப்பாக உறவுமுறைகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் கலாசாரம் உள்ள மக்கள் அதிக மகிழ்ச்சியுடன் உள்ளனர் என்றார்.

[Continue reading...]

சங்கரன்கோவில் இடைத்தேர்தலில் சசிகலா பேரவை

- 0 comments
 

சசிகலா பெயரில் பேரவை அமைக்கவும், சங்கரன்கோவில் இடைத்தேர்தலில் தனித்துப் போட்டியிடவும் முடிவு செய்திருப்பதாக, மாமன்னர் பூலித்தேவர் பாசறை மாநிலப் பொதுச்செயலர் ராஜாமறவன் கூறினார்.

தென்காசியில் செய்தியாளர்களிடம் ஞாயிற்றுக்கிழமை அவர் கூறியதாவது: சசிகலா பேரவை அமைப்பது தொடர்பாக கடந்த வாரம் சென்னையில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. அதன் அடிப்படையில் அடுத்த வாரம் தென்காசியில் அதன் தொடக்க விழா நடைபெறுகிறது.

இதையடுத்து, சசிகலா மாநிலம் முழுவதும் சுற்றுப்பயணம் செய்யவுள்ளார். சங்கரன்கோவிலில் எங்களுடைய சமுதாயத்தைச் சேர்ந்த 40 ஆயிரம் வாக்காளர்கள் உள்ளனர். விரைவில் அங்கு வேட்பாளர் அறிமுகப்படுத்தப்பட்டு, சசிகலா அங்கு 5 நாள்கள் தேர்தல் பிரசாரம் மேற்கொள்ளவுள்ளார்.

அதிமுக ஜானகி அணி, ஜெயலலிதா அணி எனப் பிரிந்தபோது சசிகலாதான் ஜெயலலிதாவுக்கு ஆதரவாகச் செயல்பட்டு 1991, 2001 தேர்தலில் வெற்றியைப் பெற்றுத் தர முயற்சிகள் மேற்கொண்டார்.

2011 தேர்தலில் அனைத்து சமுதாயத் தலைவர்களையும், ஒரே கூட்டணியின் கீழ் கொண்டு வந்து தேர்தலைச் சந்தித்து வெற்றி பெறவும் அவர்தான் அனைத்து முயற்சிகளையும் மேற்கொண்டார் என்றார் அவர்.
[Continue reading...]

இணையத்தில் கலக்கிவரும் ஸ்ருதி ஹாசனின் கவர்ச்சி குளியல் (அதிர்ச்சி வீடியோ இணைப்பு)

- 0 comments
 


நவநாகரிக உலகில் எல்லாமே இப்படித்தான்.
சினிமா என்று சொல்லி உலகத்தையே சீரழிப்பவர்கள் இருக்கும் வரைக்கும், பணத்துக்காக உடம்பைக் காட்டுபவர்கள் இருக்கும் வரைக்கும் இவ்வாறான கண் குளிர் காட்சிகள் அடிக்கடி இணையத்தில் உலா வரும்.


[Continue reading...]

‘ரசிகர்கள் எல்லோரையும் என் நண்பர்களாகத் தான் பார்க்கிறேன்”

- 0 comments
 

விஜய் தற்போது நடித்து வரும் 'துப்பாக்கி" படத்தின் படப்பிடிப்பு இடைநிறுத்தப் பட்டுள்ளதால் தமிழ்நாட்டில் உள்ள முக்கிய திரையரங்குகளுக்கு சென்று நண்பன் படத்தினை விளம்பரப்படுத்தி வருகிறாராம் விஜய். இதன் ஓர் அங்கமாகவே 'நண்பன்" படத்தினை விளம்பரப்படுத்துவதற்காக மதுரைக்கு சென்ற விஜய் அங்கு நண்பன் படம் திரையிடப்பட்டுள்ள திரையரங்கொன்றில் இரசிகர்களைச் சந்தித்துள்ளாராம்.

சந்தித்தது மாத்திரமா அவர்களுடன் இரண்டொரு வார்த்தைகளையும் பேசியுள்ளாராம்!

'என்னுடைய ரசிகர்கள் எல்லோரையும் என் நண்பர்களாகத் தான் பார்க்கிறேன். இந்தப் படத்தை வெற்றி பெறச் செய்த என் நண்பர்கள் அனைவருக்கும் நன்றி. ஒரு மனிதனுக்கு எதிர்பாராதவிதமாக பெற்றோர் கூட இல்லாமல் இருக்கலாம். ஆனால் 'நண்பன்" இல்லாமல் இருக்க முடியாது.

ஒவ்வொருவரும் தங்கள் வாழ்வில் வெற்றி பெற அவர்களுக்குப் பிடித்த துறையை தேர்ந்தெடுத்துக் கொள்ளுங்கள்.

எனது ரசிகர்களுக்கும் நான் அதைத்தான் கூறுவேன். வாழ்க்கையில் முன்னேற்றம் பெற வேண்டும் என்றால் உங்களுக்கு விருப்பமான துறையைத் தெரிவு செய்தால் அதில் நிச்சயமாக வெற்றி பெறுவீர்கள்".

[Continue reading...]

நயன்தாரா பற்றி கேள்வி! பதில் சொல்லாமல் புறப்பட்ட பிரபுதேவா!

- 0 comments
 
 
 
 
 
பிரபல நடிகரும், டான்ஸ் மாஸ்டருமான பிரபுதேவா சனிக்கிழமை (11.02.2012) ஆந்திர மாநிலம் ஸ்ரீகாளஹஸ்தியில் உள்ள சிவன் கோவிலுக்கு வந்தார். அவருக்கு தேவஸ்தானம் சார்பில் வரவேற்பு அளிக்கப்பட்டது.
 
அதைத் தொடர்ந்து அவர் ராகு கேது சர்ப்பதோஷ நிவாரண பூஜையில் கலந்து கொண்டு சுமார் 1 மணி நேரம் பூஜை செய்தார். பின்னர் ஸ்ரீகாளஹஸ்தீஸ்வரர் மற்றும் ஞானபூங்கோதை அம்மையாரை தரிசனம் செய்தார்.
 
 
தரிசனம் முடிந்ததும் அவருக்கு கோவிலில் உள்ள தட்சிணாமூர்த்தி சன்னதியில் தீர்த்தப்பிரசாதங்கள், சாமிபடங்களை கோவில் நிர்வாகிகள் வழங்கினர். காலை 11.30 மணிக்கு கோவிலுக்கு வந்த அவர் பகல் 1 மணிக்கு கோவிலை விட்டு வெளியே வந்தார்.
 
 
அப்போது அவர் நிருபர்களிடம் பேசுகையில், தற்போது இந்திப்படம் ஒன்றில் நடித்து வருகிறேன். ரவுடி ராத்தோடு' என்ற அந்த இந்திபடத்தில் நான் தான் கதாநாயகன். வருகிற ஜுன் மாதம் 15ந் தேதி படம் வெளியாகிறது. ரசிகர்கள் இந்த படத்தை ஆர்வத்தோடு எதிர்பார்த்து இருக்கிறார்கள்" என்றார்.
 
 
தொடர்ந்து அவரிடம் நிருபர்கள் உங்களுக்கும், நயன்தாராவுக்கும் இடையே மனஸ்தாபம் ஏற்பட்டு இருப்பதாக கூறப்படுகிறதே என்று கேட்டதற்கு நோ கமெண்ட்ஸ்'. நான் சாமி தரிசனம் செய்ய வந்தேன். தற்போது அதைப்பற்றி பேசவிரும்பவில்லை என கூறி விட்டு வேகமாக சென்று விட்டார்.



[Continue reading...]

யாழ். சிறையில் 5 தமிழக மீனவர்கள்: விடுவிக்குமாறு உறவுகள் கண்ணீர்

- 0 comments
 

இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ள மீனவர்களை மீட்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று உறவினர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.கடந்த நவம்பர் மாதம் கடலில் மீன்பிடித்துக்கொண்டிருந்த தங்கச்சி மடத்தைச் சேர்ந்த 5 மீனவர்கள், இலங்கை படையினரால் கைது செய்யப்பட்டனர். இவர்கள் மீது போதை பொருள் கடத்தியதாக வழக்குப் பதிவு செய்துள்ள பொலிஸார், யாழ்ப்பாண சிறையில் அடைத்துள்ளனர்.

இந்நிலையில் சிறையில் இருக்கும் மீனவர்களின் உடல்நிலை பாதிக்கப்பட்டிருப்பதாக, உறவினர்களுக்கு தகவல் கொடுக்கப்பட்டுள்ளது. இனியும் காலம் தாழ்த்தாமல் மீனவர்களை மீட்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மத்திய மாநில அரசுகளுக்கு உறவினர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இலங்கை சென்று சிறையில் இருக்கும் மீனவர்களை பார்க்க உதவி செய்ய வேண்டும் என்றும் உறவினர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இலங்கை கடற்படை பொய் வழக்குப் போட்டுள்ளனர் என்றும், இதனை மத்திய அரசு கண்டுகொள்ளவில்லை என்றும் அவர்கள் குற்றம் சாட்டினர்.

[Continue reading...]

போதையால் வாழ்வைத் தொலைத்த துடிப்பான பாடகி.

- 0 comments
 

அமெரிக்காவின் பிரபல பாப் இசையின் சூப்பர் ஸ்டார் என அழைக்கப்படும் பாடகி ஒய்ட்னி எலிசபெத் ஹூஸ்டன் இன்று காலமானார். அவருக்கு வயது 48. ஹூஸ்டனின் மரணத்தை உறுதி செய்த அவரது பிரதிநிதி கிறிஸ்டன் பாஸ்டர், அவர் எவ்வாறு இறந்தார் மற்றும் எங்கு இறந்தார் என்பது குறித்த தகவல்களை வெளியிடவில்லை.அமெரிக்காவின் நியூ ஜெர்சி மாகாணத்தில் உள்ள நெவார்க் பகுதியில் 1963ம் ஆண்டு ஆகஸ்ட் 9ம் தேதி ஒயிட்னி ஹூஸ்டன் பிறந்தார். அவரது தாய் சிசி ஹூஸ்டன், சர்ச்களில் பாடல்கள் பாடுபவர். அவரைத் தொடர்ந்து ஒயிட்னி ஹூஸ்டனும் சர்ச்சுகளில் பாடி தனது வாழ்க்கையை துவக்கினார். பின்பு அவர் நியூயார்க் நகர நைட் கிளப்புகளில் பாடல்கள் பாடி பிரபலமாக துவங்கினார். இங்கு தான் பிரபல இசையமைப்பாளர் கிளைவ் டேவிஸ், ஹூஸ்டனை முதன்முதலில் பார்த்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

ஒய்ட்னியின் முதல் ஆல்பமான "ஒய்ட்னி ஹூஸ்டன்" 1985ம் ஆண்டு வெளியானது. பெரும் வெற்றி பெற்ற பெண் பாடகி ஒருவரின் முதல் ஆல்பம் என்ற பெருமையை பெற்ற "ஒய்ட்னி ஹூஸ்டன்". அவரது இரண்டாவது ஆல்பம் ஒய்ட்னி 1987ம் ஆண்டு வெளியாகி மீண்டும் ஒரு சாதனையை படைத்தது. கின்னஸ் சாதனைகளின் படி, ஒய்ட்னி மிக அதிகமான அவார்டுகளை வாங்கிய பெண்மணி என்ற சாதனையை படைத்துள்ளார். அவர் இதுவரை 2 எமி, 6 கிராமி, 30 பில்போர்டு மியூசிக், 22 அமெரிக்கன் மியூசிக் அவார்டு உள்ளிட்ட 415 விருதுகளை பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

தனது துடிப்பான பாடல்கள் மூலம் மக்களை கிறங்க வைத்த ஒய்ட்னியின் புகழ் அவர் போதைப்பழக்கத்திற்கு ஆளாகத் ஆரம்பித்ததும் மங்கத்துவங்கியது. பின்பு அவர் மற்றொரு பாப் பாடகரான பாபி பிரவுனை திருமணம் செய்து கொண்டார்.

பாப் உலகில் பிரகாசித்த ஒய்ட்னி, திரைப்படங்களில் 1992ம் ஆண்டு தி பாடி கார்டு படம் மூலம் அறிமுகமானார். இப்படத்தில் வரும் ஐ வில் ஆல்வேஸ் லவ் யூ என்ற பாடல், இசை உலகின் பெண் பாடகர் ஒருவரின் மிக அதிகமாக விற்பனையான பாடல் என பெயரை ஒய்ட்னிக்கு பெற்றுத்தந்தது. கடந்த 2000மாவது ஆண்டு மட்டும், ஹூஸ்டன் 6 கிராமி விருதுகளை பெற்றார். ஒரு மாதத்திற்குப்பிறது அவருக்கு சோல் டிரைன் என்ற விருது வழங்கப்பட்டது.

[Continue reading...]

பிரித்தானியாவின் மிகப்பெரிய இயற்கையான முலைகளுக்குச் சொந்தக்காரர்!

- 0 comments
 


இவர் தான் பிரித்தானியாவின் மிகப்பெரிய இயற்கையான முலைகளுக்குச் சொந்தக்காரர்.
ஆனால் அவருக்கு இன்னமும் முலைகள் தொடர்ச்சியாக வளர்ந்து வருகின்றனவாம்.
24 வயதான Petite Rachel தான் 2007 ஆம் ஆண்டு மிகப்பெரிய முலைகளுக்கான போட்டியில் வென்றிருந்தார்.
அப்போது இவரது முலைகளின் அளவு 30J . ஆனால் தற்போது குறித்த பெண்ணின் முலைகள் பலூனைப் போல ஊதிப் பெரிதாகி 30L என்ற அளவில் வந்து விட்டதாம்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
இரண்டு பெரிய முலைகளுடன் நடப்பதே பெரும் கஷ்டமாக இருக்கும்.
யாராவது பார்த்தால் எதுவும் நினைப்பார்களோ என்றும் யோசிப்பேன்.
தற்போது இவர் பிரித்தானியாவின் இரண்டாவது இயற்கையான பெரிய முலைகளுக்கு சொந்தக்காரராக இருக்கிறார்.
29 வயதான Donna ஜோன்ஸ் இவரது சாதனையை 2008 ஆம் ஆண்டே முறியடித்து விட்டார்.
அவரது முலைகளின் அளவு 40M ஆகும்.



[Continue reading...]

13 Feb குங்குமம், வண்ணத்திரை டவுன்லோட் செய்ய

- 0 comments
 
 

இந்த வாரத்தின் குங்குமம், வண்ணத்திரை ஆகியவற்றை விளம்பர பிரச்சனை இல்லாமல் வேகமாக டவுன்லோட் செய்ய கிழே உள்ள லிங்கில் கிளிக் செய்யவும்.


13-2-2012 குங்குமம்

13-2-2012 வண்ணத்திரை

எனது தளத்தில் வெளியிடப்படும் இதழ்கள் அனைத்தும் என்னால் நேரடியாக பதிவேற்ற பட்டவை கிடையாது. நீங்கள் தேடினாலும் கிடைக்கக்கூடியது தான். இதன் மூலமாக எந்தவிதமான வருவாயும் நான் பெறவில்லை. வெளிநாட்டில் வாழும் நண்பர்களுக்காக இணையத்தில் கிடைப்பவற்றை எனது தளத்தில் பதிவிடுகிறேன். சம்பந்தபட்ட இதழ்கள் எதிர்ப்பு தெரிவித்தால் எந்த நேரமும் நீக்கியும் விடுவேன். மறக்காமல் கருத்துக்களை பதிவு செய்யவும். அன்புடன் தாரிக்
 


[Continue reading...]

கதாநாயகனே இல்லாத திரைப்படம்

- 0 comments
 

பொதுவாக திரைப்படம் என்றாலே ஒரு கதாநாயகன், கதாநாயகி, வில்லன் என்ற கதாபாத்திரங்கள் தான் முக்கியம்.

ஆனால் தற்போது உருவாகி ஒரு புதிய படத்திற்கு கதாநாயகனே கிடையாது. களவாணி திரைப்படத்தை தயாரித்த நசீர் தான் இப்படத்தை தயாரிக்க உள்ளார். இந்தப்படத்திற்கு வதம் என்று பெயரிட்டுள்ளனர்.

சின்னத்திரையில் பணியாற்றிய அனுபவத்தை வைத்து பெரிய திரைக்கு வருகிறார் புதுமுகம் மதிவாணன்.

படத்தின் கதை முழுக்க முழுக்க கதாநாயகியை மையப்படுத்தி உருவாவதால் இதில் கதாநாயகனே கிடையாது.

மதம் திரைப்படத்தின் கதாநாயகியாக பூனம் கவுர் நடிக்கிறார். இவருடன் பாய்ஸ் மணிகண்டன், டைரக்டர் வெங்கடேஷ் உட்பட பலர் நடித்துள்ளனர். ஸ்ரீகாந்த தேவா இசையமைத்துள்ளார்.

கொடைக்கானல் பகுதியில் இப்படத்தின் படப்பிடிப்பு எடுக்கப்பட்டுள்ளது. இப்படம் பெப்ரவரி மாதம் திரைக்கு வரும் என கொலிவுட் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

[Continue reading...]

சினிமாவில் தோற்றுப் போயிருந்தால் என்னவாகி இருப்பீர்கள் - தமன்னாவின் பதில் என்ன?

- 0 comments
 


தமிழில் சிறுத்தை, சுறா என பல படங்களில் நடித்தவர் நடிகை தமன்னா.
தற்போது தெலுங்கு படங்களில் பிசியாக இருக்கிறார். ஐதராபாத்தில் அவர் அளித்த பேட்டி வருமாறு:

சினிமா உலகில் உங்களுக்கு போட்டி இருக்கிறதா?

சினிமாவில் தினமும் புதுசு புதுசாக நடிகர், நடிகைகள் வருகிறார்கள். எல்லாதுறையிலும் இருப்பது போல் இங்கும் போட்டி உள்ளது. இதில் முன்னால் ஓடுபவர்கள்தான் ஜெயிக்கிறார்கள். சினிமாவில் எனக்கு எந்த பிரச்சினையும் இல்லை. சோர்ந்து போகவும் இல்லை.

இப்போதைக்கு நீங்கள்தான் நம்பர் ஒன் நடிகையாமே?

நான் நம்பர் ஒன் இடத்தில் இருக்கிறேனோ என்றும் தெரியவில்லை. ஆனாலும் என் கைவசம் நிறைய படங்கள் உள்ளது.

சினிமாவில் தோற்றுப் போயிருந்தால் என்னவாகி இருப்பீர்கள்..?

என் படங்கள் தோற்றால் விமான பணிப் பெண் வேலைக்கு போய் விடவேண்டும் என்று முடிவு செய்து இருந்தேன். ஆனால் ஹேப்பி டேஸ் படம் ஹிட்டாகி என்னை பிரபலபடுத்தியது. நிறைய படவாய்ப்புகள் வந்தன. எனக்கு அழகு இருப்பது வரை சினிமாவில் நிலைத்து இருப்பேன்.

தற்போது கைவசம் எத்தனை படங்கள் உள்ளது?

தெலுங்கில் 5 படங்கள் கைவசம் உள்ளது. எல்லா படங்களையும் ஒப்புக் கொண்டு இருந்தால் 20 படங்கள் என்னிடம் இருந்து இருக்கும். ஆனால் நல்ல கதையம்சம் உள்ள படங்களாக தேர்வு செய்து நடிப்பதால் எண்ணிக்கை குறைவாக உள்ளது.

வரும் புத்தாண்டு தங்களுக்கு எப்படி இருக்கும்?

2012-ல் என்னை யாரும் அசைக்க முடியாது.
[Continue reading...]

மோகன் பாபு மகள் லட்சுமி மன்ச் ஹீரோயினாக அறிமுகமாகிறார்

- 0 comments
 


மணிரத்னம் இயக்கும் படத்தில் தெலுங்கு நடிகர் மோகன் பாபு மகள் லட்சுமி மன்ச் ஹீரோயினாக அறிமுகமாகிறார். இயக்குனர் மணிரத்னம் இயக்கும் புதிய படம் 'பூக்கடை'. இதில் ஹீரோவாக கார்த்திக் மகன் கவுதம் நடிக்கிறார். ஹீரோயின் லட்சுமி மன்ச். இவர் தெலுங்கு நடிகர் மோகன் பாபுவின் மகள். இதுபற்றி லட்சுமி மன்ச் கூறியதாவது:
மணிரத்னம் 2 மாதம் முன்பே என்னிடம் படத்தின் ஸ்கிரிப்ட் கொடுத்தார். படித்தேன். பிடித்திருந்தது. தற்போது தமிழ், தெலுங்கில் என் சகோதரர் மனோஜ் மன்ச் நடிக்கும் படத்தை தயாரிக்கிறேன். அதன் பூஜைக்கு இம்மாதம் 15-ம் தேதி சென்னை வந்தேன். அப்போதுதான் மணிரத்னம் படத்தில் நடிக்க ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டேன்.
இது கிராமத்து பின்னணியிலான கதை. பக்கா தமிழ் பெண்ணாக நடிக்கிறேன். சுத்த தமிழ் பேசி நடிக்க வேண்டும் என்பதால் இது எனக்கு சவாலான வேடம். ஜனவரியில் ஷூட்டிங் தொடங்குகிறது. மணிரத்னம் இயக்கிய படம் ஒன்றுவிடாமல் பார்த்திருக்கிறேன். அவர் படத்தில் நடிப்பது அதிர்ஷ்டம். ஸ்பீல்பெர்க், மணிரத்னம் படத்தில் நடிக்க ஒரே நேரத்தில் வாய்ப்பு வந்தால், மணிரத்னம் படத்தில்தான் நடிப்பேன்.
இவ்வாறு லட்சுமி மன்ச் கூறினார்.
[Continue reading...]

த்ரிஷாவை பலிவாங்கிய ஆங்கில பத்திரிகை

- 0 comments
 


தமிழ் சினிமாவில் நம்பர் ஒன் நாயகியாக சிறகடித்த த்ரிஷா தற்போது விஷால் ஜோடியாக, திரு இயக்கத்தில் 'சமரன்' படத்தில் நடித்து வருகிறார்.
தற்போது தமிழில் த்ரிஷாவுக்கு வாய்ப்புகள் குறைந்து போனதற்கு என்ன காரணம் என்ற மிக முக்கியாமான டிஸ்கஷனை நடத்தியிருகிறது பிரபல ஆங்கில நாளிதழ். அதில் த்ரிஷாவுக்கு வயதாகி விட்டதால்தான் வாய்ப்புகள் குறைந்துவிட்டதாக சொல்லியிருக்கிறது. ஏன் அந்த ஆங்கில நாளிதழுக்கு த்ரிஷா மீது இத்தனை கொலைவெறி என்று த்ரிஷா வட்டாரத்தில் கேட்டால், அவர்கள் ஹைதராபாத்தை தலைமையிடமாகக் கொண்டு நடத்திவரும் ஆங்கில சினிமா இணையத்துக்கு ஷாட் செய்ய புத்தாண்டுக்கு இரண்டுநாள் முன்பு அலுவலகத்துக்கு அழைத்தார்களாம். ஆனால் த்ரிஷா பாங்காக்கில் இருந்து ஷாட் செய்யலாம் என்றாராம். இதில் கடுப்பாகிய நாளிதழ், த்ரிஷா தெலுங்கில் பிஸியான ஹீரோயினாக இருப்பதால், தமிழில் அவருக்கு வாய்ப்புக் குறைந்த காரணத்தை தேடிப்பிடித்து எழுதி கோபத்தை தணித்துக்கொண்டிருக்கிறது. ஆனால் த்ரிஷாவிடம் இதுபற்றிக் கேட்டால், "எனக்கு வயதாகி விட்டது என்பது உண்மைதான். இப்போது எனக்கு 29 வயது. சினிமா ஃபீல்டில் இதெல்லாம் ஒரு வயதா? நாற்பது வயதைத் தொடப்போகும் ஐஸ்வர்யா ராய் இன்னும் கதாநாயகியாக நடித்துக்கொண்டிருக்கிறார். நடிகைகள் தங்கள் உடலமைப்பை ஆரோக்கியமாக, அழகாக வைத்துக் கொண்டால் போதும் ஃபிட்னஸ் இருக்கும் வரை யாரும் நமது இடத்தை பிடுங்க முடியாது. எனக்கு அந்த பிட்னஸ் அப்படியே இருக்கிறது. இன்னும் சில வருடங்கள் வரை அதைத் தக்க வைத்துக்கொள்வேன். அதுவரை நடித்துக்கொண்டே இருப்பேன். எனக்கு வாய்ப்பில்லை என்று யார் சொன்னது? தெலுங்கில் நான்கு படங்களில் நடித்துக்கொண்டிருக்கிறேன். ஒரு ஹிந்திப் படத்தில் நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டிருக்கிறேன். தமிழ் மொழியில் நடித்தால் மட்டும்தான் பிஸியான நடிகையா?" என்று கேட்கிறார் பாங்காக்கில் இருந்து. அங்குதான் தற்போது 'சமரன்' படப்பிடிப்பு நடந்து வருகிறது! அதுசரி… ஐஸ்கூடல்லாம் கம்பேர் பண்ணிக்கிறீங்களே…. ஒங்களுக்கே கொஞ்சம் ஓவராத் தெரியலையா….?
[Continue reading...]

தனது இன்றைய நிலைமையையே ஆல்பத்தின் தலைப்பாக்கிய பிரபுதேவா

- 0 comments
 


பிரபுதேவாவின் மியூசிக் ஆல்பத்தின் பெயர்தான் இந்த போருடா.. அதாவது Boruda.

இந்த ஆல்பத்தை முதலில் இசைத்தட்டாக காதலர் தினத்தில் வெளியிட விரும்பினார். முதலில் இசையை வெளியிட்டால் பிறகு வீடியோவுடன் வெளியிடும் போது பெப் இருக்காது என நலம்விரும்பிகள் அட்வைஸ் செய்ததால் பிரபுதேவா வீடியோ ஆல்பத்தின் வெளியீட்டை தள்ளி வைத்திருக்கிறார்.

காதலை மையப்படுத்தியதாம் இந்த ஆல்பம். போருடா சிச்சுவேஷன் தலைப்பாக இருக்குமோ.
[Continue reading...]

அமலா பாலுடனான காதலை மறுக்கும் விஜய்

- 0 comments
 


நடிகை அமலாபாலும், டைரக்டர் விஜய்யும் காதலிப்பதாக கிசுகிசு பரவியுள்ளது. விஜய் "மதராச பட்டணம்" படத்தை இயக்கி பிரபலமானார். பின்னர் விக்ரமை வைத்து "தெய்வத்திருமகள்" படத்தை எடுத்து வெளியிட்டார்.

இப்படத்தில் அமலா பால் முக்கிய கேரக்டராக நடித்தார். அப்போது இருவருக்கும் நெருக்கம் ஏற்பட்டதாக கூறப்பட்டது.

இதுகுறித்து அமலாபாலிடம் இரு தினங்களுக்கு முன் கேட்கப்பட்டது.

அதற்கு நேரடியாக பதில் சொல்லாமல் தவிர்த்தார். டைரக்டர் விஜய் இதற்கு பதில் அளித்துள்ளார்.

அவர் கூறியதாவது:- எனக்கும் நடிகை அமலாபாலுக்கும் காதல் என வதந்தி பரவி இருப்பது வருத்தம் அளிக்கிறது. இதனால் என் குடும்பத்தினருக்கும் சங்கடம் ஏற்பட்டு உள்ளது. எனக்கும், அமலா பாலுக்கும் இடையே வெறும் நட்புதான் உள்ளது. வேறு மாதிரி தொடர்பு எங்களுக்குள் இல்லை. நான் அப்படிப்பட்ட ஆள் இல்லை. எனது பணிகள் முழு நேரத்தையும் ஆக்கிரமித்து உள்ளது. அதிகாலை 2.30 மணி வரை வேலை செய்கிறேன். காதர் நவாஸ்கான் ரோட்டில் அமலாபாலுக்கு வீடு வாங்கி கொடுத்து இருப்பதாகவும், எனது பி.எம்.டபுள்யூ 5 சீரீஸ் காரை அமலாபால் உபயோகத்துக்கு கொடுத்து இருப்பதாகவும் வெளியான செய்திகளிலும் உண்மை இல்லை. நான் கஷ்டப்பட்டு உழைத்து எனது பெற்றோருக்கு வீடு வாங்கி கொடுத்துள்ளேன். விக்ரம், சூர்யா, அனுஷ்கா இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ் போன்றோர் இது போன்ற வதந்திகளுக்காக வருத்தப்படக் கூடாது என ஆறுதல் கூறினர்.
[Continue reading...]

நிம்மதியில் டாப்சி - கிசுகிசுக்களில் சிக்காததே காரணமாம்

- 0 comments
 


மங்காத்தா படத்தில் அறிமுகமான நடிகர் மகத்துக்கும், வெள்ளாவி பொண்ணு டாப்சிக்கும் இடையே காதல் மலர்ந்துள்ளதாக கிசுகிசுக்கப்பட்டது.
தமிழில் ஆடுகளம் படம் மூலம் அறிமுகமானவர் நடிகை டாப்சி. தமிழில் இவர் நடித்து இந்த ஒருபடம் தான் வெளியாகியுள்ளது. ஆனால் அம்மணிக்கு ஏகப்பட்ட வரவேற்பு. இந்நிலையில் இவருக்கும், மங்காத்தா படத்தில் அஜித்துடன் நடித்துள்ள நடிகர் மகத்துக்கும் இடையே காதல் ஏற்பட்டுள்ளதாக கிசுகிசு பரவியது. ஆனால் தற்போது எந்த ஒரு கிசுகிசுக்களிலும் அம்மணி மாட்டாததால் நிம்மதியாக இருப்பதாக டாப்சி கூறியுள்ளாராம்.
[Continue reading...]

ஆடையில்லாமல் நடித்த தமிழ் நடிகை - படப்பிடிப்பில் பரபரப்பு

- 0 comments
 


நடிகை சரண்யா தான் நடிக்கும் மழைக் காலம் படத்தில் ஆடையில்லாமல் ஒரு காட்சியில் தோன்றுகிறாராம்.

நடிகைகள் ஆடையில்லாமல் நடிப்பதை பெரிய விஷயமாகப் பார்த்த காலம் மலையேறிவிட்டது. முதலில் பாலிவுட் நடிகைகள் ஆடை துறக்க ஆரம்பித்தனர். அண்மையில் கன்னடத்தில் பூஜா காந்தி அவ்வாறு நடித்தார். தற்போது தமிழில் சரண்யா ஆடை இழந்துள்ளார்.

காதல் படத்தில் சந்தியா தோழியாக நடித்து புகழ் பெற்றவர் சரண்யா. அடுத்து அவருக்கு பெயர் வாங்கிக் கொடுத்த படம் பேராண்மை. தற்போது அவர் மழைக்காலம் படத்தில் நடித்து வருகிறார். அந்த படத்தின் கிளைமாக்ஸ் காட்சியில் ஆடையில்லாமல் நடித்துள்ளாராம்.

ஒரு கலைக் கல்லூரியில் தன்னை ஒரு ஓவியன் வரைய ஏதுவாக ஆடையின்றி தோன்றி நடித்தாராம். அதாவது டைட்டானிக் படத்தில் லியோனார்டோ வரைய கேட் வின்ஸ்லெட் போஸ் கொடுத்த மாதிரி. ஹாலிவுட் நடிகையான கேட் வின்ஸ்லெட் போஸ் கொடுத்தே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

தமிழில் சரண்யாவின் போஸ் விவகாரம் எவ்வளவு பரபரப்பை எற்படுத்தவிருக்கிறதோ….???
[Continue reading...]

4 வயது சிறுவனை சித்ரவதை செய்த பெற்றோர்

- 0 comments
 

குழந்தையை வலிமையானவனாக உருவாக்க தனது 4 வயது மகனை நடுங்கும் பனியில் ஓடவிட்டு பயிற்சி அளித்த சீன தந்தைக்கு பலதரப்பினரும் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
சீனாவின் நான்ஜிங் மாகாணத்தை சேர்ந்தவர் ஹி. இவர் விடுமுறையில் குடும்பத்துடன் நியூயார்க் சென்றிருந்தார். அங்கு கடும் பனிப்பொழிவு நிலவியது.
சாலைகளில் பனி மூடிக் கிடந்தது. தனது 4 வயது மகனை அந்த பனியில் ஓடவிட்டு பயிற்சி அளித்தார். அந்த சிறுவன் குளிர் தாங்காமல் தந்தையை நோக்கி ஓடுகிறான். தன்னை தூக்கிக் கொள்ளும்படி அலறுகிறான்.
ஆனால் குழந்தையின் தாயும் அதை பார்த்து சும்மா இருக்கிறார். மேலும் பனியில் கீழே உட்காரும்படி தாயும் தந்தையும் அவனை கட்டாயப்படுத்துகின்றனர். இந்த காட்சிகளை வீடியோவில் பதிவு செய்துள்ளார் ஹி. அதை இணையத்தளத்திலும் வெளியிட்டுள்ளார்.
குழந்தையை சித்ரவதை செய்ததை ஆயிரக்கணக்கானோர் இணையத்தளத்தில் பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். ஹியின் செயலுக்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
ஆனால் ஹியின் செயலாளர் ஜின் கூறுகையில், தனது மகனை வலிமையுள்ளவனாக மாற்றவே பயிற்சி அளித்தார் ஹி. இதில் தவறு இல்லை.
இன்னும் சொல்ல போனால் ஹியின் மகன் ஒரு வயதாக இருக்கும் போது, 21 டிகிரி செல்சியஸ் தண்ணீரில் நீச்சல் பயிற்சி பெற்றுள்ளான் என்று விளக்கம் அளித்துள்ளார்.
எனினும் குழந்தைகளை மகிழ்ச்சியாக இருக்க விடவேண்டும். பயிற்சி என்ற பெயரில் சித்ரவதை செய்ய கூடாது என்று பலரும் கருத்து தெரிவித்துள்ளனர்.
[Continue reading...]

My Blog List

Popular Posts

Popular Posts

 
Copyright © . தினசரி செய்திகள் - Posts · Comments
Theme Template by BTDesigner · Powered by Blogger