அமெரிக்காவின் பிரபல பாப் இசையின் சூப்பர் ஸ்டார் என அழைக்கப்படும் பாடகி ஒய்ட்னி எலிசபெத் ஹூஸ்டன் இன்று காலமானார். அவருக்கு வயது 48. ஹூஸ்டனின் மரணத்தை உறுதி செய்த அவரது பிரதிநிதி கிறிஸ்டன் பாஸ்டர், அவர் எவ்வாறு இறந்தார் மற்றும் எங்கு இறந்தார் என்பது குறித்த தகவல்களை வெளியிடவில்லை.அமெரிக்காவின் நியூ ஜெர்சி மாகாணத்தில் உள்ள நெவார்க் பகுதியில் 1963ம் ஆண்டு ஆகஸ்ட் 9ம் தேதி ஒயிட்னி ஹூஸ்டன் பிறந்தார். அவரது தாய் சிசி ஹூஸ்டன், சர்ச்களில் பாடல்கள் பாடுபவர். அவரைத் தொடர்ந்து ஒயிட்னி ஹூஸ்டனும் சர்ச்சுகளில் பாடி தனது வாழ்க்கையை துவக்கினார். பின்பு அவர் நியூயார்க் நகர நைட் கிளப்புகளில் பாடல்கள் பாடி பிரபலமாக துவங்கினார். இங்கு தான் பிரபல இசையமைப்பாளர் கிளைவ் டேவிஸ், ஹூஸ்டனை முதன்முதலில் பார்த்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
ஒய்ட்னியின் முதல் ஆல்பமான "ஒய்ட்னி ஹூஸ்டன்" 1985ம் ஆண்டு வெளியானது. பெரும் வெற்றி பெற்ற பெண் பாடகி ஒருவரின் முதல் ஆல்பம் என்ற பெருமையை பெற்ற "ஒய்ட்னி ஹூஸ்டன்". அவரது இரண்டாவது ஆல்பம் ஒய்ட்னி 1987ம் ஆண்டு வெளியாகி மீண்டும் ஒரு சாதனையை படைத்தது. கின்னஸ் சாதனைகளின் படி, ஒய்ட்னி மிக அதிகமான அவார்டுகளை வாங்கிய பெண்மணி என்ற சாதனையை படைத்துள்ளார். அவர் இதுவரை 2 எமி, 6 கிராமி, 30 பில்போர்டு மியூசிக், 22 அமெரிக்கன் மியூசிக் அவார்டு உள்ளிட்ட 415 விருதுகளை பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
தனது துடிப்பான பாடல்கள் மூலம் மக்களை கிறங்க வைத்த ஒய்ட்னியின் புகழ் அவர் போதைப்பழக்கத்திற்கு ஆளாகத் ஆரம்பித்ததும் மங்கத்துவங்கியது. பின்பு அவர் மற்றொரு பாப் பாடகரான பாபி பிரவுனை திருமணம் செய்து கொண்டார்.
பாப் உலகில் பிரகாசித்த ஒய்ட்னி, திரைப்படங்களில் 1992ம் ஆண்டு தி பாடி கார்டு படம் மூலம் அறிமுகமானார். இப்படத்தில் வரும் ஐ வில் ஆல்வேஸ் லவ் யூ என்ற பாடல், இசை உலகின் பெண் பாடகர் ஒருவரின் மிக அதிகமாக விற்பனையான பாடல் என பெயரை ஒய்ட்னிக்கு பெற்றுத்தந்தது. கடந்த 2000மாவது ஆண்டு மட்டும், ஹூஸ்டன் 6 கிராமி விருதுகளை பெற்றார். ஒரு மாதத்திற்குப்பிறது அவருக்கு சோல் டிரைன் என்ற விருது வழங்கப்பட்டது.
0 comments:
Post a Comment
உங்களது கமெண்ட் என்ன ?